வைரம் அணிவது வளம் தருமா?

நவ கிரகங்களுக்கும் அவை ஆளுமை செய்யும் ரத்தினங்கள் பற்றி  ரத்தின சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரத்தினத்திற்கும் தனிப்பட்ட அதிர்வுகள் உண்டு. ரத்தினங்களை நமது எண்ணங்களை சமநிலைப்படுத்த, ஆரோக்யத்தை சிறப்பாக்கிக்கொள்ள அணியலாம். ஆனால் நமது எண்ணங்களும் உடலின் ஆரோக்கிய நிலையும் மனிதர்க்கு மனிதர் மாறுவதைப்போல ரத்தினங்கள் பலனளிக்கும் விதத்திலும் மாறுதல்கள் உண்டு. எனவே ரத்தினங்களை தனிப்பட்ட நபரின் ஜாதக அமைப்பிற்கு தக்கபடி, உடலின் தாங்கு திறனுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்து அணிவது அவசியம். ரத்தினங்களைக்கொண்டு ஒருவரது எண்ணங்களை மேம்படுத்தி அவரது வாழ்வை சரியான பாதையில் வெற்றிகரமாக செலுத்தலாம் என ரத்தின சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு ரத்தினத்திற்கு ஒத்திசைவற்ற உடல் அதிர்வுகளைக்கொண்ட ஒரு நபருக்கு அந்த ரத்தினத்தை அணிவதால் உடலில் பாதிப்புகளும், வாழ்வில் வீழ்ச்சிகளும் ஏற்பட அது வகை செய்யும். பண்டைய காலத்தில் மன்னர்களுக்கு தவறான ரத்தினத்தை பரிசளித்து அணியச் செய்து அவர்கள் ஆட்சியை அகற்றியிருக்கிறார்கள். ரத்தினங்களை ஜாதக அடிப்படையில் தேர்ந்தேடுப்பதவிட எண் கணித அடிப்படையில் தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்ற கருத்தை இன்று பெரும்பாலோனோர் முன்மொழிகின்றனர். ஒரு ரத்தினத்தை அணியும்போது அது அவருக்கு நன்மை செய்யுமா? தீமை செய்யுமா? என இத்துறையில் தெளிந்த அறிவுகொண்ட ஜோதிடர்களிடம் ஜாதக ரீதியாகவும், பிரசன்ன ரீதியாகவும் அறிவுரை பெற்று அணிந்துகொள்வதே சிறந்தது. இது பற்றிய இன்றைய பதிவில் உதாரணங்களுடன் இங்கு காண்போம்.  

நூதன பொருட்களை குறிக்கும் ராகு-கேதுக்கள், ரத்தினங்களின் பொதுவான காரக கிரகங்களாகும். ராகு-கேதுக்கள் ஒருவரது  ஜாதகத்தில் சிறப்பாக அமைந்து, ஒரு குறிப்பிட்ட ரத்தினத்தின் காரக கிரகத்திற்கும் அவை சிறப்பான அமைவில் இருந்தால், அந்த குறிப்பிட்ட கிரகத்தின் ரத்தினத்தை அணிவது அவருக்கு நன்மையை செய்யும். சாதகமற்று அமைந்தால் அது தீமையில் முடியும். ஜாதகத்தில் புத்தி காரகர் புதனே ஒரு ஜாதகரது கர்மாவை தனது புத்தியைக்கொண்டு மாற்றி அமைக்க முயலும் கிரகமாகும். அப்படிப்பட்ட புதன் அனுமதி அளித்தால்தான் ஒருவர் ரத்தினங்களை அணியவேண்டும் என்ற எண்ணத்திற்கே வர இயலும். ஒருவர் ரத்தினங்களை அணிந்துகொள்ள அவரது ஜாதகத்தில் புதன் தசா, புக்தி, அந்தரம் நடக்க வேண்டும். அப்போதைய கோட்சார வருட கிரகங்களின் நிலையும் தசா-புக்தி நாதர்களும் புதனுடன் சிறந்த தொடர்பில் இருக்க வேண்டும். அம்மாதிரியான சூழலில் தகுந்த ரத்தினத்தை தேர்வு செய்து அணிவது பலனளிக்கும். இவ்விதிக்கு  மாறுபட்ட சூழலை ஜாதகமோ அல்லது பிரசன்னமோ சுட்டிக்காட்டினால் அவர் ரத்தினங்களை அணியக்கூடாது. பெயர் மாற்றம் செய்வதற்கும் இவ்விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வைரம் இருப்பதிலேயே மிகவும் விலையுயர்ந்த ரத்தினம். வைரம் சுக்கிரனுக்கான ரத்தினமாகும். சுக்கிரன் பகட்டான ஆடம்பர வாழ்விற்கு அதிபதி. இதனால்  தங்களது வளமையை பறைசாற்றிக்கொள்ள வைரத்தை அணிவோர் சிலர்.  வைரம் வைராக்கியம் தரும். இதனால் சலனமுள்ள மனத்தினர் தங்களது மனச்சலனத்தை  சமப்படுதிக்கொள்ள வைரத்தை அணிவதும் உண்டு. குறிப்பாக சுக்கிரன் குடும்பப்பெண்களை குறிப்பவர் என்பதால் 4, 5 ஆகிய பாவங்களும் சந்திரனும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது மிகுந்த பலனளிப்பதாக சொல்லப்படுகிறது. 

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம். 

ஜாதகிக்கு சுக்கிர தசை நடப்பில் உள்ளது. சுக்கிரன் லக்னத்திற்கு 3 ல் அணிகலன் பாவமான 3 ஆமிடத்தில் அமைந்துள்ளார். ஜாதகிக்கு சுக்கிர தசையில் செவ்வாய் புக்தியில் வைர அணிகலன்கள் வாங்கத் துவங்கினார். புக்தி நாதன் செவ்வாய் கேதுவின் சாரத்தில் இருக்க, கேது கால புருஷனுக்கு அணிகலன் பாவமான மிதுனத்தில் இருக்கிறார்.  மிதுனத்தில் அதிபதி புதன் செவ்வாயை இரண்டில் இருந்து பார்ப்பது பொருளாதாரத்தை கொடுத்து வைரம் வாங்க புக்தி நாதனுக்கு கட்டளையிடுவதை குறிக்கிறது. பார்க்கும் கிரகம், பார்க்கப்படும் கிரகத்திற்கு கட்டளை இடும் என்ற அடிப்படையில் ஜாதகி வைரத்தில் காதில் அணியும் ஆபரணம் வாங்கினார். புதன் தொடர்பில் ஒன்று நடந்தால் மற்றொன்றும் நடக்கும் என்பதற்கேற்ப வைரத்தில் கழுத்தணியும் வாங்கினார். தற்போதும் ஜாதகி சுக்கிர தசையில்தான் உள்ளார். சுக்கிரன் கால்களை குறிக்கும் சனியின் அனுஷத்தில் இருப்பதால், வைரத்தில் காலில் அணியும் ஆபரணத்தையும் ஜாதகி வாங்கியுள்ளார். தன ஸ்தானமான 2ல் லக்னாதிபதி புதன் அமைந்து தன வரவை சிறப்பாக்குகிறார். ஒரு கிரகம் அதன் வீட்டில் நின்ற கிரக குணத்தையும் ஏற்று செயல்படும் என்பதற்கேற்ப, ஆசையை தூண்டும் 8 ஆமதிபதி செவ்வாயின் பார்வையில் இருக்கும் புதனது அணிகலன் எண்ணத்தை சுக்கிரன் ஏற்று நிறைவேற்றுகிறார். தசாநாதன் சுக்கிரனை நோக்கி தன காரகர் குரு வீட்டில் இருந்து   பிரம்மாண்ட காரகர் ராகு வருகிறார். இதனால் பெரும் பொருட்செலவில் நகைகள்  வாங்குகிறார். 

கீழே ஒரு ஜாமக்கோள் பிரசன்னம்.

உதயமே கால புருஷனுக்கு அணிகளை குறிக்கும் 3 ஆம் பாவம் மிதுனத்தில் அமைந்துள்ளது. அதில் புதனுடன் உதயத்தின் மூன்றாம் அதிபதி சூரியன் அமைந்துள்ளார். என்னை அணுகிய பெண்மணி சமீபத்தில் ஒரு வைர அணிகலன் ஒன்றை அணிந்து அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். தனது பாதிப்பிற்கு காரணம் தான் சமீபத்தில் அணிந்த வைர அணிகலன்தானா? என உறுதிப்படுத்திக்கொள்ள என்னை தொடர்புகொண்டார்.  அவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே நீங்கள் மேலே காண்பது.   

உதயாதிபதி புதன் உள்வட்டத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும் ஜாம புதன் நீசம் பெற்று குருவுடன் இணைந்து நீச பங்கமும் அடைந்துள்ளார். இது கேள்வியாளர் பாதிக்கப்பட்டு பிறகு அதில் இருந்து மீழ்வதை கூறுகிறது. ஜாம புதன் நீசமாகியுள்ளது ஜாதகி ரத்தினங்களை பயன்படுத்த உரிய காலம் இது  அல்ல என்பதை குறிப்பிடுகிறது. நடந்த சம்பவத்தை ஆரூடம் சுட்டிக்காட்டுகிறது. ஆரூடம் ராகுவின் சதய நட்சத்திரத்தில் உதயத்தின் 9 ஆமதிபதி சனியுடன் சிறப்பாக அமைந்திருந்தாலும், சனி வக்கிரம் பெற்று 8 ஆமிடம் நோக்கி திரும்பி வருகிறார். ஜாமச்சனி உதயத்திற்கு பாதக ஸ்தானமான 7 ஆமிடம் தனுசுவில் நிற்கிறார். இது ஜாதகிக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறுகிறது. உதயத்தில் 6 ஆமதிபதி ஜாம செவ்வாய் அமைந்து, தனுசுவில் நிற்கும் 8 ஆமதிபதி சனியின் நேர்  பார்வையை பெறுவது ஜாதகி  உடல்நலம் பாதிக்கப்படுவதை கூறுகிறது.  

கவிப்பு உதயத்திற்கு 3 ல் அமைந்துள்ளது. கவிப்பின் அதிபதி சூரியன்  காலபுருஷனுக்கு 3 ஆம் பாவமான மிதுனத்தில் அதன் அதிபதி புதனுடன் உதயத்தில் இணைந்துள்ளார். 3 ஆம் பாவம் காது, கழுத்து, கைகள் ஆகியவற்றை குறிப்பதுடன் ஒருவர் அணியும் அணிகலன்களையும் குறிக்கும் பாவம் என்பதால் ஒரு அணிகலனால் ஜாதகி பாதிக்கப்படுவதை பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஜாதகி ஒரு வைர மோதிரத்தை அணிந்ததால் வயிற்றில் செரிமானக் கோளாறு ஏற்பட்டு  அடிக்கடி வாந்தி எடுக்கும் நிலைக்கு ஆளானார். கவிப்பு சிம்மத்தில் வைரத்தின் அதிபதி சுக்கிரனின் பூரம்-2 ல் அமைந்துள்ளது. கவிப்பு சுக்கிரன் சாரம் பெற்றால் சுக்கிரனுக்குடைய வைரத்தை அணிவது நிச்சயம் பாதிப்பை தரும். சுக்கிரன் உள்வட்டத்தில் கால புருஷனுக்கு உணவு பாவமான ரிஷபத்தில், உதயத்திற்கு உணவு பாவமான 2 ஆமிடம் கடகத்திற்கு பாதகத்தில், உணவை குறிக்கும் சந்திரனின் ரோஹிணியில் உதயத்திற்கு விரையத்தில் உள்வட்டத்திலும், வெளிவட்டத்தில் அதே சந்திரனின் திருவோணத்தில் உதயத்திற்கு 8 லும் அமைந்துள்ளார். வைரத்தை குறிக்கும் சுக்கிரன் இரு நிலைகளிலும் உதயத்திற்கு 12, 8 ல் சாதகமற்று அமைந்து உணவு காரகர் சந்திரன் தொடர்பு பெற்ற நிலையில், கால புருஷனுக்கு வயிற்றை குறிக்கும் சிம்மத்தில், கவிப்பு சுக்கிரன் சாரத்தில் அமைந்ததால் இந்த ஜாதகிக்கு வைர மோதிரம் அணிந்ததும் வயிற்றில் உணவு செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டு  வாந்தி பாதிப்பிற்கு உள்ளானார். இவர் வைர மோதிரம் அணிவதை தவிர்ப்பது சிறந்தது என்பதை பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. 

ரத்தினங்கள் வாழ்வின் உயர்வு தாழ்வுகளோடு தொடர்புடையவை என்பதோடு அவை நமது ஆரோக்கியத்தோடும்  தொடர்புடையவை. எனவே ரத்தினங்களை தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. ஒரு ரத்தினத்தை ஒருவர் அணிந்த பிறகு பாதிப்பு ஏற்பட்டாலும் அல்லது பலனளிக்கவில்லை  என்றாலும் அதை பயன்படுத்தக்கூடாது. கணிசமான தொகையை செலவழித்து ஒரு ரத்தினத்தை வாங்குமுன் ஒரு தகுந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. 

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன், 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil