குருவைத்தேடி!

இன்றைய நவீன யுகத்தின் பல்வேறு சூழ்நிலைகளால் நிம்மதியை இழக்கும் மனிதன் வாழ்வை வெறுத்து தனது திறமை, பொருளாதாரம், பாரம்பரியத்தை மீறி ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டு இறுதியாக  நிம்மதி தேடி அடைக்கலமாகும் இடம் இறைவனின் திருவடிகளே. அதிலும் ஆயிரத்தெட்டு வழிகள் உள்ளதை எண்ணி எந்தப்பக்கம் செல்வது என திகைத்து நிற்கும் வேளையில், ஆன்மீகத்தில் சிறந்த வழிகாட்டியாக ஒரு குருவை தனது அறிவுக்கு எட்டிய வகையில் அனுமானித்து அடைக்கலமாகிறான். இவர்கள் அனைவருக்கும் நிம்மதி கிடைத்துவிடுகிறதா? அல்லது தனது ஆன்மீக குருக்களால் இவர்கள் அனைவரும் பலனடைந்து விடுகிறார்களா? என்றால் பலதரப்பட்ட நபர்கள் பலதரப்பட்ட அனுபவங்களை கூறுகிறார்கள். ஏனெனில் இன்று பெயர் புகழ், தனம் அனைத்தையும் ஒருங்கே பெற  அரசியல்வாதியாக அவதாரமெடுப்பதைவிட ஆன்மீக குருவாக அவதாரமெடுப்பது சிறந்த தொழிலாகிவிட்டது. இரு தரப்புக்குமே அடிப்பொடிகள் பலமுண்டு. வடநாட்டில் ஒரு ஆன்மீக குரு தனக்காக சொந்தமாக நாணயமே அச்சடிக்கும் நிலைக்கு சென்றதை நாமறிவோம். இப்பதிவில் உண்மை குரு யார்? போலி குரு யார்? என்று நாம் ஆராயப்போவதில்லை.. மாறாக எப்படிப்பட்ட ஜாதகருக்கு எப்படிப்பட்ட குரு அமைவார் என்பதை ஆராயவுள்ளோம்.  

ஜோதிடத்தில் நம்மை ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பதில் மனோகாரகர் சந்திரனும், அவரது ராசியான கடகமும் முன்னிலை வகிக்கிறது. சந்திரன் நீசமாகும் விருட்சிக ராசி மறைபொருளை ஆராயும் ராசியாகும். அடுத்த நீர் ராசியான குருவின் மீன ராசி இறைவனை இயல்பாக என்ன வைக்கும் ராசியாகும். மோட்ச ராசிகளான இம்மூன்று நீர் ராசிகளே மனித மனதை இறைவனை நோக்கி திருப்ப வல்லவை. காலபுருஷனின் 4,8,12 ஆகிய இம்மூன்று ராசிகளோடு குருவின் மூலத்திரிகோண ராசியும், கால புருஷனின் 9 ஆம் பாவகமுமான  தனுசும் மனிதனை நல்ல இறை தத்துவங்களை நோக்கி வழிநடத்தும் ராசிகளாகும். அதனால்தான் தனுசு பாவம் ஆசான் பாவம், குரு பாவம் என்று அழைக்கப்படுகிறது. குருவே ஜோதிடத்தில் ஆன்மீக கிரகமாகும். ராகு-கேதுக்கள் மறைபொருளை நேரடியாக குறிப்பவை. இதில்  பரிசுத்த ஞானி கேது. கெட்டபின் ஞானி ராகு. ஒரு ஜாதகருக்கு நல்ல ஆன்மீக குரு கிடைக்க குருவும், இவ்விரு மறைபொருள் கிரகங்களும் ஜாதகத்தில் நல்ல தொடர்பில், நல்ல பாவகத்தில் இருக்க வேண்டும். இதில் கடக ராசி, அதன் அதிபதி சந்திரனின் நிலையைக்கொண்டு ஒருவரின் ஆன்மீக நோக்கம்  எந்த அளவு உண்மையானது என்பதை அறியலாம். விருட்சிக ராசி சந்திரன் நீசமாகும் ராசி என்பதால் மனம் கூறுவதை ஏற்காமல் உண்மையை ஆராய்ந்து பார்க்கும் செவ்வாயின் ராசியாகும். ஆராயாமல் ஏற்பது அரைகுறை அறிவு. ஆராய்ந்து தெளிவடைவதே உண்மை ஆன்மீகம். கால புருஷனின் 8 ஆவது பாவகமான விருட்சிகமே மறைந்திருக்கும் உண்மைகளை ஆராய்ந்து தெளியும் ராசியாகும். அதன் அதிபதி  செவ்வாயே ஆராய்ச்சி காரகர் என அழைக்கப்படுகிறார். விருச்சிகத்தில் தான் ஞான காரகர் கேது உச்சமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆன்மீகவாதிகள் அனைவரின் ஜாதகங்களிலும் குருவும், தனுசு ராசியும் சுபத்துவம் பெற்றிப்பதை காணலாம். கால புருஷனின் 12 ஆமிடம் மீனம் ஒருவர் பெறும் அதிகபட்ச ஆன்மீகத் தெளிவை குறிக்கிறது. அதனால்தான் அது முக்தி பாவகம் என்று அழைக்கப்படுகிறது. மனிதனின் ஆன்மீகத்தேடல் முற்றுப்பெறும் பாவகம் மீனமாகும். மேற்சொன்ன கால புருஷனின் 4,8,9,12 ஆகிய பாவகங்களை லக்ன அடிப்படையிலும் எடுத்துக்கொள்ளலாம். 

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

தனுசே லக்னமாக அமைந்தது ஆன்மீகத்திற்கு சிறப்பு. லக்னாதிபதி குரு  கால புருஷ 12 ஆமிடமான மீனத்தில் ஹம்ச யோகத்தில் அருமையாக அமைந்துள்ளார். சந்திரன் 8 ல் ஆட்சி இவரது மனம் இயல்பாகவே ஆன்மீகத்தை சிந்திக்கிறது. ராகு-கேதுக்கள் லக்ன தொடர்பு பெற்றது ஆன்மீகத்திற்கு சிறப்பு. லௌகீகத்திற்கு சிறப்பல்ல. சூரியன், சனி, செவ்வாய் ஆகிய 3 பாவிகளும் மறைபொருள் பாவம் 8 ன் பாவத் பாவமான 3 ல் மறைவது சிறப்பு. சுக்கிரன் உச்சம் பெற்று லக்னாதிபதியுடன் இணைந்து மாளவிய யோகத்தில் இருப்பதால் இவர் சன்யாசியல்ல. இவருக்கு திருமணமாகி மனைவி,குழந்தைகளுடன் வசிக்கிறார். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது முழு இறைத்தேடலில் உள்ளார். ஜாதக அமைப்பு பிறவியிலேயே ஆன்மீக நாட்டத்தை ஏற்படுத்துகிறது. பணிபுரிந்து குடும்பஸ்தராக திகழ்ந்த காலத்தில்கூட இவர் வழிபாடுகள் எதையும் குறைத்துக்கொண்டதில்லை. நல்ல குருமார்கள் இவருக்கு இயல்பாகவே கிடைத்தார்கள். தற்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல பொருளாதார வளம் மிக்கவர். ஆனால் பணத்தின்மீது பற்றுதலில்லை. தவறான குருமார்கள் இவரது வாழ்க்கை வட்டத்திற்குள் வந்துவிடாதபடி ஜாதக அமைப்பே தடுக்கிறது. மிகச் சிறந்த ஆன்மீகவாதி. நல்ல பெயரும் புகழும் உண்டு. தற்போது 5, 12  ஆமதிபதி செவ்வாயின் தசையில் கால புருஷ 12 ல் அமைந்த சுக்கிர புக்தியில் இருக்கிறார். வாகன வசதிகளுடன் பல ஸ்தலங்களுக்கு சென்று வருகிறார். இறைவழிபாட்டை தவிர வேறு சிந்தனைகள் இல்லை. சுக்கிரன் மீனத்தில் குரு தொடர்பு பெற்றதால் மனைவியும் பக்தி ஈடுபாடுள்ளவரே. 

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

கும்ப லக்னத்தில் திக்பல குரு. இதனால் இவருக்கு ஆன்மீக நாட்டம் உண்டு. ஆனால் கும்பம் முழு பாவரான சனியின் ராசி. சிந்தனை பாவகமான ஐந்தாமிடம் மிதுனத்தில் லக்னாதிபதி சனியுடன் அவரின் பரம பகைவர் செவ்வாயுடன் இணைவு. மிதுனமும் கும்பமும் இன்ப ராசிகள். இதனால் இவரது ஆன்மீக தேடல்கள் முழுமை பெறாது. மோட்ச ராசிகளுள் முதன்மையான கடகம் 6 ஆவது ராசியாகிறது. கடகத்தின் அதிபதி சந்திரன் மோட்ச காரகர் ராகுவுடன் நீசம் பெற்ற நிலையில் விருட்சிகத்தில் இணைந்துள்ளார். மனம் எனும் சந்திரன் நீசம் பெற்ற நிலையில் தன்னுடன் இணைந்த ராகுவின் தன்மையை நீச சந்திரன் கிரகிப்பார். 10 ஆமிடம் விருட்சிகமாகி அங்கு இவ்விரு கிரக சேர்க்கை தொழிலுக்கு நல்லது. இதனால் ஜாதகர் சிங்கப்பூரில் தொழில் செய்கிறார். ஆன்மீக கிரகமான ராகு, தன்னுடன் இணைந்த நீச சந்திரனின் குற்ற மனோபாவத்தை கிரகிப்பார். இப்படி ஆன்மீக கிரகத்திற்கு நீச கிரக தொடர்பு ஏற்பட்டால் இவருக்கு கிடைக்கும் ஆன்மீக குரு குற்றமுடையவராக இருப்பார். ஆனால் அவர் வசதியானவராக இருப்பார். காரணம் 9 ஆமதிபதி சுக்கிரன் 9 க்கு 6 ல் மீனத்தில் மறைந்து உச்சம் பெறுவதால் இவர் போன்ற சீடர்களிடம் பணத்தை கறந்துவிட்டு கம்பி நீட்டிவிடுபவராக இருப்பார். இத்தகைய ஜாதக அமைப்பினர் ஆன்மீக குருக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் பொருளாதாரத்தை இழக்க நேரிடும். இங்கு சந்திரன்  நீச பங்கமடைந்திருந்தால் ஜாதகருக்கு பொருளாதா ஏமாற்றத்திற்கு பிறகு மீண்டுமொரு நல்ல குரு கிடைப்பார். ஆனால் சந்திரன் இங்கு நீச பங்கமடையவில்லை. இரண்டில் உச்சமான சுக்கிர தசை இவருக்கு வசதியான வெளிநாட்டு வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டுள்ளது. இவரது பொருளாதார நிலமையை புரிந்துகொண்ட இவரது குரு இவரிடமிருந்து பல லட்சங்களை   சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கு ஓடிவிட்டார். இதனால் இவருக்கு கடும் மன உளைச்சல். இவரது ஜாதகத்தை ஆய்வு செய்தபோது கோட்சார சந்திரன் விருட்சிகத்தில் சென்றுகொண்டிருந்தது. இவர் இன்னமும் நல்ல குருவிற்காக ஏங்கிக்கொண்டுள்ளார். 

ல்ல குரு கிடைப்பதற்கான ஜாதக அமைப்பு.

நல்ல குரு கிடைக்க ஜாதகத்தில் ஆன்மீக கிரகங்களான ராகு-கேதுக்களுக்கு குரு தொடர்பும், 9 ஆமதிபதி தொடர்பும் இருப்பது அவசியம். குரு தொடர்பு பெற்ற ராகுவிற்கு அமிர்த ராகு என்றே ஜோதிடத்தில் ஒரு பெயருண்டு. 

தனுசும் குருவும்,  ஒன்பதாம் பாவகமும்  அதன் அதிபதியும்  பாதிக்கப்பட்ட நிலையில் இவ்விரு கிரகங்களின்  தொடர்பற்ற  நிலையில், நீச மற்றும் பாவ கிரகங்களின் தொடர்பு ராகு-கேதுக்களுக்கு ஏற்பட்டால் ஜாதகருக்கு கிடைக்கும் குரு பயனற்றவராக, பாதிப்பை தருபவராக இருப்பார். 

நல்ல ஆன்மீக குரு எளிமையானவர். தனது சீடர்களை ஒருபோதும் கைவிட மாட்டார். ஏமாற்றமாட்டார். பணத்தாசை பிடித்தவராக இருக்க மாட்டார். நல்ல குரு கிடைக்கவும் ஒரு ஜாதக அமைப்பு தேவை என்பதோடு நமக்கும்  எச்சரிக்கை மிக்க ஒரு தெளிவும் பொறுமையான தேடலும் வேண்டும்.   

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன். 

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil