குருப்பெயர்ச்சியும் மக்களின் எதிர்பார்ப்புகளும்

வாக்கியப்படி நேற்றும் 28.05.13 திருக்கணிதப்படி 31.05.13 அன்றும் குருப்பெயர்ச்சி .
இந்த குருப்பெயர்ச்சியாவது தங்களின் துயர்களைத் தீர்க்குமா?           தங்களால் இனியும் இந்த தேசத்தில் பாதுகாப்பாக வாழ இயலுமா?                தங்கள் குழந்தைகள் இந்த தேசத்தில் நேர்மையாக சம்பாதிக்க முடியுமா?        என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளை என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வருபவர்கள் அனைவரும் கேட்கின்றனர். வயதானவர்கள் மற்றுமின்றி சாதாரண குடும்பஸ்தன் கூட தற்போது தேசத்தில் பாதுகாப்புக்கும், நேர்மைக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகளினாலும் பெண்கள் – குழந்தைகளின் மீதான  தாக்குதல்களினாலும் அரண்டு போயிருப்பது கண்கூடு.

இந்தக் கேள்விகள் அணைத்திற்கும் பதில்  மேலே உள்ள நமது சுதந்திர பாரதத்தின் ஜாதகத்தில் உள்ளது.
என்னைப்போன்ற எண்ணற்ற ஜோதிட ஆய்வர்களாலும் தேச பக்தர்களாலும் நித்தம் அலசப்படும் ஜாதகம் இது.

தேச விடுதலையின் பொருட்டு நமது ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்கான பிரதிநிதியாக கோடானு கோடி மக்கள் காந்திஜியைப் பார்த்தனர்.காந்திஜிக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஒரு தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நிகழ்வு நேரத்தில் தனது தனிப்பட்ட அபிப்ராயங்களை விலக்கிவிட்டு தேச நலனின் பொருட்டு நல்லதொரு நேரத்தை அவர் தெரிவு செய்திருக்க வேண்டும். எந்தப் புண்ணியவான் தேர்ந்தெடுத்தானோ அந்த நேரத்தை.
லக்னத்தில் ஒரு குரூர பாவி (ராகு) உட்சம். பரம சுபக்கிரகமான குரு பகவான் லக்னத்திற்கு ஆறில் மறைந்தது மகா கொடுமை. ஏனைய கிரகங்களும் யுத்த களத்தில் (லக்னத்திற்கு மூன்றில்). லக்னத்தில் பாவியான ராகு வலுவாக அமைத்ததால்தான் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் உத்தம புத்திரர்களாக (!) இருக்கிறார்கள். அது மட்டுமா, சொந்த மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு அந்நியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் கொடுமைகளுக்கெல்லாம் ராகுவே காரணம். சூழ்ச்சிக்காரர்களும் அயோக்கியர்களும் நமது தேசத்தை ஆள்வதற்கும் ராகுவே காரணம். பல வேறு தேசங்களால் சூழப்பட்ட சிறிய நாடுகள் கூட தங்கள் தேசத்திற்கும் தேச மக்களுக்கும் பாதுகாப்பான நல்லாச்சியை வழங்கிவரும் நிலையில், தங்கள் நலனே முக்கியம், மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? என துணிந்து அரசியல்வாதிகள் இந்த தேசத்தை கொள்ளையடித்துக் கொண்டிருப்பதற்கு ராகுவே காரணம். ரிஷப லக்னத்திற்கு பரம சுபனான சனி மூன்றில் கிரக யுத்தத்தில் அமைந்து சுதத்திரமடைந்த நாளின் கூட்டுத் தொகையும் 8  ஆக (1+5+8+1+9+4+7 = 8) அமைந்தது  மக்களின் துயரங்களுக்கு விடிவே இல்லாமல் செய்துவிட்டது.நமது தேசத்தை ஆள்பவர்கள் ராகுவின் அம்சங்களாகவே இருப்பதன் காரணம் சுதந்திர இந்தியாவின் லக்னத்தில் ராகு வலுவாக அமைந்ததனால்தான்.
ராகுவானவர்  சூழ்ச்சி, பித்தலாட்டம், விதவை, தாதாயிசம், கள்ளக்கடத்தல்,இஸ்லாமியம், மறைமுக செயல்பாடு, பின்னாலிருந்து இயக்குதல் (கேது – கிறிஸ்தவர்களைக் குறிக்கும்) போன்றவற்றைக் குறிக்கும்.
இந்தியாவை அதிகக் காலம் கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர் இந்திரா பிரியதர்சினி என்ற இயற்பெயர் கொண்ட இந்திரா காந்தி. பெரோஷ்கான் என்ற இஸ்லாமியரைத் திருமணம்  செய்ய முஸ்லிமாக மதம் மாறி மைமூனா பேகம் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டவரே. காஷ்மீரி பண்டிட்கள் எந்த முஸ்லிம்களால் காஷ்மீரிலிருந்து விரட்டப் பட்டார்களோ அதே முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பெரோஷ்கானை காஷ்மீரி பண்டிட் இனத்தைச் சேர்ந்த இந்திரா மனம் புரிந்தது காலத்தின் அதிசயங்களில் ஒன்றுதான். எனவே இஸ்லாமியப் பெண்மணியாக மதம் மாறிய இந்திரா  ஒரு முழுமையான ராகுவின் அம்சமே. பிற்பாடு தனது தாய் மதத்திற்கு இந்துவாக மாறி தனது கணவர் பெரோஷ்கானையும் இந்துவாக மதம் மாற்றி பெரோஸ் காந்தியாக்கினார். ஆனால் தேசத்தை ஆட்சிசெய்பவர் தனது அம்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரை ராகு விதவைப் பெண்மணியாக மாற்றிவிட்டது கொடுமை.(விதவைப் பெண் ராகுவின் அம்சம்). இந்தியாவை தற்போது பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் சோனியா காந்தி, 13 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய் (1+3 = 4 ராகுவைக் குறிக்கும் எண்) உள்ளிட்ட அணைவரும் ராகுவின் அம்சங்கள்தான். இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் அவர்கள் ராகுவின் அம்சங்களாகவோ அல்லது ராகு திசை அல்லது ராகு புக்தியில் ஆட்சி செய்தவர்களாகவோ இருப்பதைக் காணலாம்.
இப்படி சனியாலும் ராகுவினாலும் ஆட்டுவிக்கப்பட்ட நமது தேசம் 2009 ன் மத்தியில் உலகை இயக்கும் சக்திகளுள் ஒன்றான வல்லரசாக மாறி விட்டதை சுதந்திர இந்தியாவின் ஜாதகம் உணர்த்துகிறது. தற்போது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு திசா புக்தியின் அடிப்படையிலும் கோள்சாரத்தினடிப்படையிலும் தேச மக்களுக்கு ஒரு நல்ல காலம் பிறந்துள்ளது. இந்த குருப் பெயர்ச்சி நமது தேசத்திற்கு செய்யவிருக்கும் நன்மைகள் பல.
அவற்றுள் ஒரு சில இதோ.
சூழ்ச்சி, பதுக்கல்,தாதாயிசம் படிப்படியாக ஒழிக்கப்படும்.பொருளீட்ட குறுக்கு வழியைக் கையாளுபவர்கள் ஒடுக்கப்படுவர் & தண்டிக்கப்படுவர்.
தேச விரோத சக்திகளை ஒதுக்கி சிறந்த ஒரு முடிவை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்க முன்வருவர்.
நீதித்துறை, கல்வி, மனித வளம் போன்ற துறைகள் சிறப்பாகச் சீரமைக்கப்படும்.

முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனின் பொருட்டு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு அவை உடனடியான பயன்பாட்டுக்கு வரும்.

பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகள் தீவிர முனைப்புடன் செயல்படுத்தப்படும்.

தொலைக்காட்சி, பத்திரிகை, கம்ப்யூட்டர்  போன்ற ஊடகத்  துறைகளை மத்திய அரசு புதிய சட்டங்களை இயற்றி கட்டுப்படுத்தும்.

ராணுவம், காவல், உள்நாட்டுப் பாதுகாப்பில் நவீனத்துவம் புகுத்தப்படும்.
பாரம்பரியத் தொழில்களில் நவீனமான மாறுதல்கள் ஏற்படும்.
விவசாயம், நீர் மேலாண்மை போன்ற துறைகள் அயல்நாடுகளின் ஒத்துழைப்புடன் சிறப்பான மாறுதல்களைக் காணும்.
சிறு தொழில்கள் அரசின் கனிவான பார்வையால் முன்னேறும்.
தங்கத்தின் மதிப்பு கட்டுப்படுத்தப்படும்.
பங்கு வணிகம் மேலும் சில சீர்திருத்தங்களைக் காணும்.
மேலை நாடுகள் தங்களது இந்திய பங்குச் சந்தை முதலீடுகளை பெருமளவில் குறைத்துக் கொள்ளும்.(தனகாரகன் குரு இந்தியாவின் கடக ராசிக்கு 12 ல் மறைவதால் இது ஏற்படும்)
இதனால் ஏற்படும் பாதிப்புகளை சில சிரமங்களுடன் தேசம் 

சமாளித்துவிடும்.(கடக ராசிக்கு 6 ஆமதிபதி குரு 12 ல் மறைவதால் விபரீத ராஜயோகம் செயல்படும்)

காங்கிரஸ் கட்சி  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியப்படும்.
சிறு, குறும் கட்சிகள் தலையெடுக்காமல் காங்கிரஸ் பார்த்துக் கொள்ளும்.காங்கிரசின் சூழ்ச்சியால் தாங்கள் சிதறுண்டு போவதை தடுக்க முடியாமல் சிறு மற்றும் தேச விரோத கட்சிகள் செய்வதறியாது திகைக்கும்.தேசம் இருகட்சி முறைக்கு மாறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடக்கும். (தற்போது குரு இடம் பெயர்ந்துவரும் ராசி இரட்டை ராசியான மிதுன ராசி என்பதை கவனிக்கவும்).
எனினும் தமிழ்நாடு துலாம் ராசி அமைப்பில் வருவதாலும், ஏழரைச்சனி தற்போது துலாம் ராசிக்கு நடப்பதாலும் தமிழக மக்கள் இன்னும் சில ஆண்டுகள் வேதனைப்பட நேரும். எனினும் தற்போதைய குருப்பெயர்ச்சி தமிழகத்திற்கு பல உபயோகமான நன்மைகளை அளிப்பது உறுதி. மக்கள் தமிழக அரசியல்வாதிகளால் தாங்கள் எப்படியெல்லாம் துயரங்களுக்கு ஆளாகிறோம் என்பதை உணர்ந்து கட்சி வேறுபாடின்றி நல்ல ஆட்சிமுறைக்கு ஆதரவளிக்க முன்வருவர். மின்வெட்டின் தீவிரம் பெருமளவில் குறையும் என்றாலும் 2014 டிசம்பரில் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகே தமிழகத்தில் மின்வெட்டு 90%  குறையும்.

உலக நடப்புகளைப் பொருத்தவரை தற்போதைய குருப்பெயர்ச்சி அமெரிக்காவிற்கு பெருமளவில் நன்மைகளை வழங்கும்.அமெரிக்காவின் ராசி மற்றும் லக்னம் இரண்டையும் குரு மிதுனராசிக்கு மாறியவுடன் பார்ப்பார் என்பதுதான் காரணம்.இந்தியாவின் ரிஷப லக்னம் அமெரிக்காவின் தனுசு லக்னத்திற்கு சஷ்டாஷ்டகமாக  (6 – 8 ) வருவதும் இந்தியாவின் கடக ராசிக்கு அமெரிக்காவின் கும்ப ராசி (6 – 8 ) ஆக சஷ்டாஷ்டகமாக அமைந்ததும் இவ்விரு நாடுகளும் எப்போதுமே ஒத்துப்போகாது என்பதைக் காட்டுகிறது. ஒருகையில் ரோஜாவையும் மறுகையில் ஆயுதத்தையும் கொண்டே இவ்விரு நாடுகளின் உறவும் அமையும். அதனால்தான் நமது நிம்மதியைக் குலைக்க பாகிஸ்தானிற்கு இலவசமாகவே பொருளாதார உதவிகளையும்  எண்ணற்ற ஆயுதங்களை வழங்கி வருவதும் தெரிகிறது. ஆனால் கிரகங்களில் ராகு கேதுக்கள்தான் வலுவானவை என்பது எப்போதும் உண்மை. அமெரிக்கா அவ்வாறு அளித்த ஆயுதங்களால் அதன் நிம்மதியே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் காலச் சூழ்நிலை இவ்விரு நாடுகளையும் இந்தியாவின் திசா புக்தி அடிப்படையில் கடந்த 2009 முதல் நெருங்கி வர வழி செய்துள்ளது. அது மட்டுமல்ல தற்போதைய குருப்பெயர்ச்சி இவ்விரு நாடுகளும் இணைந்து உலக நடப்புகளில் வரும் ஆண்டுகளில் பல பெரும் நிகழ்வுகளை கட்டுப்படுத்த இருப்பதை உறுதி செய்கிறது. தற்போது பல ரௌடி நாடுகள் மற்றும்  தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் நாடுகளின் அடிப்படை கட்டமைப்பை இந்தியா, அமெரிக்காவுடன் வேறு சில நாடுகளும் சேர்ந்து செயல்பட்டு மாற்றியமைக்கும் என்பது புலனாகிறது. ஸ்ரீலங்கா, மாலத்திவுகள், மொரீஷியஸ், தாய்லாந்து, வியட்நாம்  போன்ற நாடுகளில் தீவிரவாதம், மதவாதம், பிரிவினைவாதம், ரௌடிசம் தலை தூக்காமல் இந்தியாவினால் பாதுகாக்கப்படும்.தமிழகத்துப் பிரிவினை வாதிகள் கடலில் மூழ்கும் மனிதனின் கடைசி நேர கூக்குரல் போல 2016 ஜூன் வரை சப்தமிடுவார்கள் பிறகு  காணாமல் போவார்கள்.

வாழ்த்துக்களுடன்,

பழனியப்பன்.


பின்குறிப்பு:

மேற்சொன்ன கருத்துக்கள் விருப்பு வெறுப்பற்ற தன்மையுடன் எனது ஜோதிட ஆய்வுநோக்கில் கூறப்பட்டவை.. எந்த இன,மத,தேச மக்களையும் சிறுமைப்படுத்தும் எண்ணத்துடன் கூறப்பட்டவைகள் அல்ல என்பதை அறியவும்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil