உங்களது வாழ்க்கை எங்கே?
சிலர் எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க்கம் என சொந்த ஊரிலேயே தமது வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்.
ஜாதகத்தில் இரண்டாம் பாவம் கெட்டுவிட்டால் அந்த ஜாதகர் சொந்த ஊரில் இருந்தால் வாழ்க்கை மிக கடினமானதாக இருக்கும். அத்தகையவர்கள் சொந்த மண்ணை விட்டு வெளியூர் சென்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பல வேதனைகளை தவிர்க்கலாம்.
மறைந்த முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் ஜாதகம் கொண்டு இதை ஆராய்வோம்.(ஜெயலலிதா பற்றிய எனது முந்தைய பதிவை தவறவிட்டவர்கள் இங்கே சென்று காண்க.)
ஜாதகத்தில் இரண்டாம் பாவம் அஷ்டமாதிபதியான சனியால் கெட்டுவிட்டது. இரண்டாம் அதிபதி சந்திரன் மூன்றாமிடத்தில் ஆறாமதிபதி செவ்வாயுடன் இணைந்ததால் கெட்டுவிட்டது.
இதன் பாதிப்புகள் என்ன?
ஜாதகியின் சொந்த மற்றும் வளர்ந்த ஊரைவிட்டு வெளியேறி தமிழ்நாடு வந்த பிறகே வாழ்க்கை அவரை வசீகரித்து என்பது அணைவரும் அறிந்ததே.
28.12.1932
வளைகுடா நாடுகளுக்கெல்லாம் சென்று தனது வாழ்க்கையை தேடினார் திருபாய் அம்பானி. பாவ கர்தாரி யோகத்தில் அமைந்துவிட்டாலும் ஆட்சியில் அமைந்து குரு பார்வை பெற்றுவிட்ட இரண்டாம் அதிபதி சனி. இறுதியில் அவருக்கான வாழ்க்கையை அவரது மண்ணிலேயே அமைத்துத் தந்தது.
22.12.1887
இரண்டாம் பாவம் பாவிகளால் கெட்டுவிட்டாலும் இரண்டாம் பாவத்தையும் தன் வீட்டில் லக்ன கேந்திரத்தில் அமைந்த இரண்டாம் பாவாதிபதி சந்திரனையும் குரு பார்க்கிறார். ஆறாம் பாவம் சுபக்கிரகங்களால் சூழப்பட்டு அதன் அதிபதி செவ்வாய் இரண்டாம் பாவாதிபதியான வளர்பிறை சந்திரனை பார்ப்பது சிறப்பான குரு – மங்கள யோகமாகும். ஜாதகர் தனது மண்ணிற்கு வெளிநாட்டினர் அளித்த நோபல் பரிசால் புகழ் சேர்த்த கணித மேதை ராமானுஜம் அவர்கள். சிறிய வயதில் மறைந்துவிட்டாலும் தான் பிறந்த மண்ணிற்கு அழியாத புகழை அளித்துவிட்டு சென்ற உலகின் மிகச்சிறந்த கணித மேதைகளுள் ஒருவர்.
11.12.1931எட்டில் மறைந்துவிட்ட இரண்டாம் அதிபதி. ஜாதகர் இந்தியாவில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாது அமெரிக்காவிலும் ஜப்பானிலும் புகழ்பெற்ற சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த ஞானி ஓஷோ என அழைக்கப்பட்ட ரஜ்னீஷ்.
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்,
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501