குழந்தைகளின் உலகம் மகத்தானது. நாம் எல்லோரும் கவலைகளற்ற அந்த பருவத்தை கடந்து வந்திருந்தாலும் இன்னும் மனதில் ஏக்கத்தோடு பார்க்கும் பருவம் குழந்தைப்பருவம். குழந்தைப்பருவத்தின் பல்வேறு நிலைகளை ஜாதக ரீதியாக இந்தப்பதிவில் அலசுவோம்.
மனிதனின் முதல் பத்து வயது வரை ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சந்திரன் ஆகும். இப்பருவத்தில் குழந்தைகளின் செயல்பாடு சந்திரனைப்பொருத்தே அமையும்.
கீழே ஒரு பெண் குழந்தையின் ஜாதகம்.
இந்தக்குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் உச்ச வர்கோத்தமம் பெற்றுள்ளது. சந்திர திசை 7 வயதில் முடியும். அதன் பிறகு செவ்வாய் திசையின் முதல் பகுதி அதாவது 1௦ வயது வரை மிகுந்த துடிப்பான செயல்பாட்டைக்கொண்டிருக்கும்.
இச்சிறுமியின் தற்போதைய நிலையானது மிகுந்த செயல்வேகம். அதீத கிரகிப்புத்திறன் ஆகியவற்றோடு சந்திரன் வயதான பெண்ணை குறிக்கும் கிரகம் என்பதன் காரணமாக வயதுக்கு மீறிய பேச்சு சாதுர்யத்தைக்கொண்டுள்ளது.
குழந்தை மேதாவித்தன்மை எனப்படும் CHILD PRODIGY வகையை சார்ந்தது இந்த பெண் குழந்தையின் செயல்பாடு.
கீழே இரண்டாவதாக ஒரு சிறுவனின் ஜாதகம்.
சந்திரன் இங்கு ஆட்சியில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது. உடன் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாயை நீசபங்கப்படுத்துகிறது. சதுர்த்த கேந்திரம் என்பது சந்திரனுக்கு திக்பலத்தையும் தருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய ஜாதக நிலைமையானது அதீத முரட்டு சுபாவம் கொண்ட விளையாட்டுத்தனைத்தை ஏற்படுத்தும். பாதகாதிபதியும் மெதுவான செயல்பாட்டுக்குறியவருமான சனியின் திசை நடந்தாலும் கூட சனி 6 ஆமிடத்தில் அமைந்து திசை நடத்துவதால் சிறுவனின் மேற்சொன்ன சுபாவத்தில் அது பாதிப்பை ஏற்ப்படுத்த இயலவில்லை. மாறாக கல்வியில் மட்டுமே அது மந்த நிலைமையை ஏற்படுத்துகிறது.
இத்தகைய தீவிர செயல்பாட்ட குறிக்கும் நிலைமை. மருத்துவத்தில் HYPER ACTIVE என அழைக்கப்படுகிறது.
மூன்றாவதாக மற்றொரு சிறுவனின் ஜாதகம் கீழே.
இச்சிறுவனின் ஜாதகத்தில் சதுர்த்த கேந்திரத்தில் தடை மற்றும் மந்தத்தன்மையை குறிக்கும் கேது அமர்ந்து குழந்தைப் பருவத்தை குறிக்கும் சந்திரனை பார்க்கிறார். சந்திரனுக்கு இடம் கொடுத்த 2 ஆமதிபதி சுக்கிரன் உச்சமானாலும் சுக்கிரனுக்கு பாவகர்த்தாரி யோகம் ஏற்பட்டு சுக்கிர மற்றும் சந்திர கேந்திரங்களில் பாவிகள் நின்றதால் சிறுவனுக்கு செயல்பாட்டில் மந்தத்தன்மையை தருவதுடன் பேச்சுத்திறனிலும் தடையை ஏற்படுத்துகிறது. இதுவரை சிறுவனுக்கு சரியாக பேச இயலாத நிலையே தொடர்கிறது. இதற்கு 2 ஆமிடம் தொடர்புடையவற்றோடு வாக்கு காரகனும் லக்னாதிபதியுமான புதனுக்கு பாவ கர்த்தாரி யோகம் இருப்பதையும் கவனிக்கவேண்டும். நடப்பில் இருக்கும் ராகு திசை சிறுவனுக்கு பொருட்காரணிகளில் தடையை ஏற்படுத்தாவிட்டாலும் உயிர்க்காரணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
மன இறுக்கம் என்றழைக்கப்படும் இத்தகைய நிலையை இன்றைய மருத்துவ உலகம் AUTISM என குறிப்பிடுகிறது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்
அன்பன்,
பழனியப்பன்,
கைப்பேசி எண்: 07871244501