இறைவனின் விளையாட்டு பொம்மைகள்

இறைவனின் விளையாட்டு பொம்மைகள்

மனிதன் வாழ்வில் துயரங்களை தாங்கமுடியாதபோது கடவுளே என்று கதறுகிறோம். என்னை பைத்தியமாக்கிவிடேன் எந்த மனோ வலிகளையும் உணரமாட்டேன் என மன்றாடுகிறோம்.
உடல் ரீதியான வேதனைகளைக்கூட பொறுத்துக்கொள்ள இயலும் மனிதனால் மனோ ரீதியான வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
மனிதன் கர்ம வினைகளை அனுபவித்துத்தீர்க்க பிறவி எடுக்கிறான் என நமது தர்மங்கள் கூறுகின்றன. அப்படியானால் சராசரி மனிதன் உடல் மற்றும் மன வேதனைகளை அனுபவிக்கிறான். முற்றிய நிலையிலுள்ள பைத்தியங்கள் உடல் ரீதியான வேதனைகளை மட்டுமே உணர்கிறார்கள்.
கடவுள் சராசரி மனிதனுக்கு செய்த ஒர வஞ்சனை இது எனக்கொள்ளலாமா?.
இந்தச் சிந்தனையில் விளைவே இப்பதிவு.
மனித வாழ்வில் மிகக் கடுமையான பாதிப்புகளை தரவல்லவை பாபக்கிரகங்கள். அவை கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருப்பது நல்லது. சுபர் பார்வை சேர்க்கை இருந்தால் நலம். இல்லாவிட்டால் கேந்திரமாக இருந்தாலும் அவை அமைந்த பாவம் மற்றும்  காரக அடிப்படையில் பாதிப்புகளை தரும்.
மனித மன நிலையை  நிர்ணயிப்பதில் பின்வருபவை ஜாதகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.
1.மனோ காரகன்           – சந்திரன்2.புத்திகாரகன்              – புதன்3.மேற்சொன்ன இருவரின் வீடுகள் கடகம், மிதுனம், கன்னி.
மேலும் லக்னம், ஐந்தாம் பாவம், லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி.
மனோ நிலையில் பாதிப்புகளைத் தரும் கிரகங்களில் முக்கியமான கிரகங்கள் பின்வருமாறு.

1.சந்திரனின் சக்தியை பிரதிபலிக்கும் கேது. இவர் சந்திரனுடன் சேர்ந்திருந்து சிந்தனை தொடர்புடைய இதர பாவங்கள் பாதிப்படைந்தால் மனோ நிலை பாதிப்படைவது நிச்சயம்.2.சூரியனின் ஆற்றலை பிரதிபலிக்கும் ராகு. இவர் மனோ நிலை தொடர்புடைய கிரகங்களுடனும் பாவங்களுடனும் சேர்ந்திருந்தால் அது தொடர்புடைய தீவிரத் தன்மையை தூண்டிவிடும். உதாரணமாக ஐந்தாமிடத்தில் ராகு நட்பில் அமர்ந்து சுபர் பார்வை பெற்று ஐந்தாம் பாவாதிபதி வலுப்பெற்றால் ஜாதகர் விஞ்ஞானியாகவும் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இருப்பார்.3.சகல துன்பங்களுக்கும் காரகத்துவம் பெற்ற சனி.      சனி – சந்திர

னுடன் இணைந்தால் ஞானி. சனி-சந்திர யோகம் என்று இதற்குபெயர். துறவு மனோபாவம் ஏற்படும். ஞானிகளின் ஜாதகங்களில் சனி-சந்திர யோகம் இருப்பதை காணலாம்.  
சனி-சந்திர இணைவு, பார்வை, பரிவர்த்தனை & சந்திரன் சனியின் நட்சத்திரங்களிலும் சனி சந்திரனின் நட்சத்திரங்களிலும் அமைவது போன்றவை புனர்பூ தோஷம் எனப்படும். திருமணத்தடை, திருமண வாழ்வில் பிரச்சனைகளை இதனால் ஏற்படும்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.

5.10.1986 –  12.25 PM சென்னை.
ஜாதகர் மனோ நிலை பாதித்த திருமணமாகாத ஒரு ஆண். சில சமயம் கடுமையாக (சங்கிலியால் கட்டப்படுமளவு) நடந்துகொள்வார். அவ்வப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிவரும். பெரும்பாலான சமயங்களில் பயந்த சுபாவம். குழந்தை மனம்.

தனுசு லக்னம் இருபுறங்களிலும் பரிவர்த்தனை பெற்ற பாவிகள் சனி-செவ்வாயால் பாவ கர்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. ஐந்தாமதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை. லக்னாதிபதியின் மற்றோர் வீடான மீனத்தில் ராகு நின்றுவிட்டார். அதற்கு 12 ஆமிடமான கும்பத்தில் குரு பாவி வீட்டில் வக்கிரகதியில் மாந்தியுடன் நின்று கெட்டுவிட்டார். குரு நின்ற இடம்,  சிந்தனை ஸ்தானமான ஐந்தாமிடம் மேஷத்திற்கு பாதகஸ்தானம் என்பதை கவனிக்கவும்.   
பாக்யாதிபதி சூரியன் சிறப்பாக கேந்திர பலம் பெற்றாலும் கேது இணைவு கெடுத்துவிட்டது.
6, 8 ஆமதிபதிகள் இணைந்து 11 ல் நிற்பது சிறப்பென்றாலும் இவர்களுடன் 7 ஆமதிபதியான புத்திகாரகன் புதன் இணைவு புத்தி பேதலிப்பதையும் திருமண வாழ்வு  கேள்விக்குறியாவதையும் குறிப்பிடுகிறது.   
பாவத்தில் சந்திரன் கேதுவுடன் இணைவு கவனிக்கத்தக்கது. 
முழுமையான கால சர்ப்ப தோஷ ஜாதகம் இது. ஜாதகரின் கர்மவினையை இது தெளிவாகக் குறிப்பிடுகிறது.
ஜாதகருக்கு 5 க்கு 11 ல் நின்ற குரு திசையில் 6 ஆமதிபதி சுக்கிரனின் புக்தியில் மனோ நிலை பாதிப்பு துவங்கியது. அப்போதைய கிரக நிலைகள் கீழே.

1.கோட்சார குரு லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் (ராசிக்கு 7 ல்) 6 ஆமிபதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நின்று வக்ரமடைகிறது.
ஜனன ஜாதகத்தில் ஒரு பாவத்திற்கு பாதகத்தில் வக்கிரகதியில் நிற்கும் கிரகம் கோட்சாரத்தில் அக்குறிப்பிட்ட பாவத்தில் நின்று வக்ரகதியை பெறும்போது பாதகத்தை உறுதியாக செய்யும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   
2.கோட்சார ஏழரை சனி முன்பே துவங்கிவிட்டாலும் சனி ஐந்தாமதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்திற்கு வந்ததும்தான் மனோநிலை பாதிப்பு துவங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.  
3.கோட்சார செவ்வாயான ஐந்தாமதிபதி நீசமடைகிறார் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது.
4.புக்தியை நடத்தும் சுக்கிரன் ஆட்சியடைந்து  அதனிருபக்கமும் கடுமையான பாவகர்த்தாரி யோகம்.
5. கோட்சார ராகு-கேதுக்கள் ஜனன நிலையை ஒட்டியே அமைந்துள்ளன.ஜனனத்தில் கால சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி கர்மவினையை அனுபவிக்கும்படி அமைந்துள்ள ராகு-கேதுக்கள் கோட்சாரத்தில் அதே ஸ்தானங்களுக்கு வரும்போது அதை அனுபவிக்கும்படி செய்யும். (இது மிக முக்கிய ஜோதிட விதி. ஜோதிடம் பயில்வோர் குறிப்பெடுத்துக்கொள்ளவும்.)
ஜாதகர் தேறுவாரா?
கோட்சார ஏழரை சனி தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது.
எப்படிப்பட்ட தோஷங்களானாலும் பெரும்பாலும் சனி தனது முதல் சுற்றிலேயே அதை அனுபவிக்கும்படி செய்துவிட்டால் இரண்டாவது சுற்றில் வேதனைப்படுத்தமாட்டார். ஜாதக தோஷங்களை சனியின் முதல் சுற்றில் அனுபவிக்க விடாமல் நல்ல திசா-புக்திகள் வந்து தடுத்துவிட்டால் சனியின் இரண்டாம் சுற்று கடுமையைத்தரும் என்பதே இதில் உள்ள சூட்சுமம்.
தற்போது ஜனனத்தில் நின்ற விருச்சிக ராசியை சனி கடந்துகொண்டிருக்கிறது.
கோட்சார குருவானவர் ஜனனத்தில் தாங்கள் நின்ற இடத்தில் தற்போது நின்றுகொண்டிருக்கும் ராகு-கேதுக்களை கடந்து போகும்போது ஜாதகரின் மனோ நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவேண்டும். ராகு-கேதுக்களால் ஜனன காலத்தில் ஏற்பட்ட கால சர்ப்ப தோஷம் விலக வேண்டும். அதன் பிறகே ஜாதகர் ஓரளவு நல்ல தெளிவை பெற இயலும்.

மீண்டும் மற்றொரு பதிவில் ஆராய்வோம்.
வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil