சான்றிதழ்கள் எங்கே?

எனது அறிமுக வட்டத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தனது மகன் மற்றும் மகனின் உறவுக்கார இளைஞனின் மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் சான்றிதழ்களை காணவில்லை எனவும், தற்காலிக சான்றிதழ்களைக்கொண்டே கல்லூரியில் அவர்கள் இருவரும் முதலாம் ஆண்டு சேர்ந்ததாகவும், தற்போது முறையான சான்றிதழ்களை பள்ளியிலிருந்து பெற்றுவிட்ட போதிலும் அவற்றை வைத்த இடம் தெரியாது தவிக்கும் தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவரது வீடு, பணிபுரியும் பள்ளி, நகலெடுக்கும் இடம் ஆகிய அனைத்து இடங்களையும் தேடிவிட்டதாக கூறினார். கடினமான ஒரு சூழ்நிலைதான். வீட்டைத்தவிர வெளியிடத்தில் வைத்து மறந்திருந்தால் அது பரிதாபத்திற்குரியது. அதை மீட்பதும் கடினம்தான். இந்நிலையில் அவர் கேட்டுக்கொண்டதற்காக குறிப்பிட்ட சான்றிதழ்கள் எங்கே உள்ளன என பிரசன்னம் பார்ப்பது என முடிவு செய்யப்பட்டு அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

புதனின் உச்ச வீடான கன்னி உதயமே காணமல் போனவை கல்விச் சான்றிதல்கள் என்பதை குறிக்கிறது. உதயமும் ஆரூடமும் கன்னியிலேயே அமைந்து அவை இரண்டும் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்திலேயே அமைந்து உதய சந்திரன் 11 ஆமிட கடக ஜாம புதனுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளது கவனிக்கத்தக்கது. உதயாதிபதியும், உதயத்தில் நிற்கும் கிரகமும் 11 ஆமிட தொடர்பு பெற்றால் கேள்வியாளர் நல்ல பயனை அடைவார். இதர கிரகங்களைவிட விரைவாக சுற்றும் சந்திரன் உதய தொடர்பு பெற்றால் பலனும் விரைவிலேயே கிடைக்கும். உதயத்திற்கு 7 ல் மீனத்தில் நிற்கும் வெளிவட்ட சந்திரனும் உதயத்தை பார்ப்பதால் காணாமல் போன சான்றிதழ்கள் உறுதியாக விரைவிலேயே கிடைக்கும் என்பதை குறிக்கிறது. உள்வட்ட புதன் உதயத்திற்கு 12 ல் மறைந்தாலும் சான்றிதழ்களை குறிக்கும் காரகராக அவரே அமைவதாலும் அவர் உதயத்தை அடுத்து தொட உள்ளதாலும் காணாமல் போன சான்றிதழ்கள் நிச்சயம் கிடைக்கும். புதனின் உச்ச வீட்டில் ஜாம குரு (வெளிவட்ட குரு) திக்பலத்தில் அமைந்ததும், சந்திரனுடன் பரிவர்த்தனையாகி புதன் உதயத்தை தொடர்புகொள்வதாலும்   காணாமல் போனவை பள்ளிக் கல்வியில் இருந்து உயர் கல்விக்கு செல்லும்போது தேவைப்படும் சான்றிதழ்கள் (புதன்=கல்வி, சான்றிதழ்கள் & குரு=உயர் கல்வி) என்பதையும் குறிப்பிடுகிறது.  

கவிப்பு 8 ல் அமைந்துள்ளது சான்றிதழ்கள் கேள்வியாளரின் தேவைக்கு தற்போது கிடைக்காமல் மறைந்துள்ளதை காட்டுகிறது. உதயத்திற்கு 7 ஆமதிபதியும் 8 ஆமதிபதியும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் ஒரு பொருள் காணாமல் போகவோ திருடு போகவோ முடியாது. இங்கு 7 ஆமதிபதி குரு உள் வட்டத்தில் 8 ல் மேஷத்தில் மறைந்து, வெளிவட்டத்தில் உதயத்திலேயே நிற்கிறார். 8 ஆமதிபதி செவ்வாயும் உதயத்திலேயே நிற்பதால் காணாமல் போன சான்றிதழ்கள் கேள்வியாளரிடமே உள்ளது. உதயத்திலும், 2 ஆமிடத்திலும் நிற்கும் உள்வட்ட, வெளிவட்ட செவ்வாயின் முறையே 8, 7 ஆமிட பார்வை தேடும் பொருள் கேள்வியாளரிடமே இருந்தாலும் அவர் பார்வையில் இல்லாமல் மறைந்து உள்ளதை காட்டுகிறது. உதயத்திற்கு 8 ல் ராகுவோடு உள்வட்ட குரு நிற்கிறார். 2 ல் கேதுவோடு 8 ஆமதிபதி செவ்வாய் நிற்கிறார். இப்படி உதயத்தின் 7, 8 ஆமதிபதிகள் மூடி மறைக்கும் காரகம் உடைய ராகு-கேதுக்கள் தொடர்பில் இருப்பதால் பொருள் கேள்வியாளரின் பார்வையில் படாமல் மறைந்துள்ளது.  

உதயத்தை நோக்கி 8 ஆமதிபதி ஜாமச் செவ்வாய் வருவதும் காணமல் போன பொருள் விரைவில் கிடைக்கும் என்பதையே குறிப்பிடுகிறது. பொருள் உள்ள இடத்தை 4 ஆமிடம் குறிக்கும். 4 ஆமிடம் வீட்டை குறிப்பிடும். 4 ஆமதிபதி குரு உதயத்திலேயே நிற்பதால் காணாமல் போன சான்றிதழ்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை. 4 ல்  சூரியன் நிற்பதால் சான்றிதழ்களுக்கு உரியவரின் தந்தையே அவற்றை வைத்த இடத்தை மறந்துவிட்டார். காரணம் உள்வட்ட சூரியன் மறைவு ஸ்தானமான 12 ஆமிடாதிபதியாகி, அவர் மறைக்கும் தன்மையுடைய கேதுவின் மக நட்சத்திரத்தில் இருப்பதால் வைத்த இடத்தை மறந்துவிட்டார்.

காணமல் போனவை எப்போது கிடைக்கும்?

உதய சந்திரன் கன்னியில் சூரியனின் சாரத்தில் நிற்கும் 8 ஆமதிபதி செவ்வாயை கடந்து, வெளிவட்டத்தில் சுய சாரத்தில் துலாத்தில் இருந்து உதயத்தை நோக்கி வரும் செவ்வாயை நோக்கிச் செல்கிறார். சந்திரன் 11 ஆமிடத்தோடு தொடர்பாவதாலும், 11 ல் 2 ஆமதிபதி சுக்கிரன் நிற்பதாலும், உதய சந்திரன் 2 ஆமிட ஜாமச் செவ்வாயை கடக்கையில் பள்ளிச் சான்றிதழ்கள் கிடைக்கக் கூடும் என்ற அடிப்படையில் நண்பரிடம் சான்றிதழ்கள் வீட்டில்தான் உள்ளன பொறுமையாக தேடுங்கள். விரைவில் கிடைக்கும் என்று கூறினேன். நான் கணித்தபடி பிரசன்னம் பார்த்த திங்கள் கிழமைக்கு அடுத்த நாள் செவ்வைக் கிழமை கோட்சார சந்திரன் துலாத்தில் சென்ற போது சான்றிதழ்கள் கிடைத்தன. கிடைத்த நேரம் சந்திர ஹோரை சுக்கிர உப ஹோரை என்பது குறிப்பிடத்தக்கது. துலாச் சந்திரன் கடக சுக்கிரனோடு கோட்சாரத்தில்  பரிவர்தனையாவதால் குறிப்பிட்ட இரு கிரகங்களின் ஆதிக்க ஹோரையில் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
இந்தியா

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
இந்தியா

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil