கடவுளும் மனிதனும்

பகுதி:1       
குருவணக்கம் 

மஞ்சுக்குடி எனும் ஒரு எளிய கிராமத்து அக்ரஹாரத்தில் அவதரித்த இம்மகானைப்பற்றி அறியும் வாய்ப்பு எனது நண்பரும் கோவையில் பிரபல ஆடிட்டருமான திரு.வெங்கட்டரமணன் – பானுமதி தம்பதியரால் எனக்குக் கிட்டியது நான் செய்த பாக்யமே.  அர்ஜுனனுக்கு சாரதியாய் விளங்கிய கண்ணனைப் போல் நமது நல்வாழ்வுக்கு சாரதியாக இம்மகான் விளங்கி வருகிறார். நமது தர்மத்தைத் தழைக்கச் செய்ய தமது நல் வாழ்வை சிறு வயதிலேயே துறந்து இறை பணிக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழகம்,ரிஷிகேஷ், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இம்மகானின் ஆஸ்ரமங்களின் மூலம் இந்த தள்ளாத வயதிலும் நமது சனாதன வேத தர்ம நெறிகளை பரப்பிக்கொண்டிருப்பவர். பல்வேறு கல்வி நிலையங்கள், பெண்கள் மற்றும் ஏழை எளியோர்களுக்காண வாழ்வாதார அமைப்புகளை ஏற்படுத்தி செயல்படுத்திவருபவர். வாழும் தெய்வமான இம்மகானை இந்தச் சிவராத்திரி நன்னாளில் வணங்கி எனது இத்தொடரை எழுதத் துவங்குகிறேன். நமது நெறிகளைப்பற்றி இத்தொடரில் நான் கூறும் கருத்துகளில் உள்ள நிறைகள் இம்மகான் போன்ற நமது முன்னோர்களைச் சார்ந்தது. பிழைகள் முழுக்க என்னையே சார்ந்த்தது.

மகான் தயானந்த சரஸ்வதி அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு கீழுள்ள இணைபைச் சுட்டவும்
http://www.arshavidya.in/index.html

சனாதன தர்மத்தின் தோற்றம்,  உபநிஷத்துக்கள் மற்றும் வேதங்கள் 
பல ஆண்டுச் சிந்தனை இது. இது  போன்ற தீவிர விஷயங்களை எனது கோணத்தில் எழுத வேண்டும் என்பது. ஒரு பெரும் தொடராக அவ்வப்போது வரும். என்னுடன் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கு வாசகர்களை அழைக்கிறேன்.
 எனது சிறுவயது முதல்  நானறிந்த  நமது வேத தர்ம வழிபாட்டு முறைகளுக்கும்  தற்போதைய காலகட்டத்தில் அவை பார்க்கப்படும் முறைகளுக்கும் உள்ள விகிதாச்சார இடைவெளி மிக அதிகம். அதுமட்டுமல்ல தவறான பிரசாரங்களிலிருந்து  நமது நெறிமுறைகளை மீட்டெடுக்க எனது பங்களிப்பை கொடுக்காமலிருப்பது நான் நடந்து வந்துகொண்டிருக்கும் வேத தர்ம வழிக்குச் செய்யும் துரோகம் என்ற எண்ணமும் ஒரு காரணம்.
எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு காலகட்டத்தில் ‘இந்த சூரிய சந்திரர்கள் உள்ளிட்ட கோடானுகோடி நட்சத்திரங்களுடன் அமைந்த இந்த மகா பிரபஞ்சத்தைப் பதைத்தது யார்? என்ன காரணங்களுக்காகப் படைக்கப்பட்டது இப்பிரபஞ்சம்? இதன் விஸ்தீரணம் என்ன? இவற்றைப் படைத்தவன் எப்படி இருப்பான்?’ போன்ற சிந்தனைகள் எழும். கூடவே இவற்றைப் படைத்த அந்த ஒரு மகா சக்தியின் மீது ஒரு பிரமிப்பு ஏற்படும். அத்தகைய ஒரு மனிதன் தன் நிறை, குறைகளை குழந்தை தன்  தந்தையிடம் கூறுவது போல் அந்தச் சக்திடம் கூறி தன் வாழ்வியல் சிக்கல்களை களைய முற்படுவான்.
நமது முன்னோர்கள் இப்படிச் சிந்தித்து பல பிரமிக்கத்தக்க உண்மைகளை கண்டறிந்தனர். அதோடு அவ்வுண்மைகள் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக அமைவதையும் கண்டுபிடித்தனர். அவ்வாறு தாங்கள் கண்டறிந்தவற்றை  குறிப்புகளாக பதிவு செய்தனர். இத்தகைய பதிவுகள் உபநிஷத்துக்கள் என அழைக்கப்பட்டன. இத்தகைய பதிவுகளின் தொகுப்பே வேதங்கள் என அழைக்கப்பட்டன. இவற்றை இயற்றிய ஞானிகள் முனிவர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் கடைபிடிக்கக் கோரிய வாழ்வியல் மற்றும் வழிபாட்டு நேரிமுறைகளே  சனாதன தர்மம் (வேத தர்மம்) என அழைக்கப்படுகிறது. பிற்பாடு அந்நியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது நம்மை நமது தர்மத்தை பெயர்சொல்லி அழைக்க சிந்து நதிக்கு அப்பால் வாழுவோர் கடைபிடிக்கும் வழிபாட்டு முறை என்ற முறையில் சிந்து நாகரிகம் என அழைத்து பிற்பாடு அது இந்து தர்மம் என்று அழைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

இம்மண்ணில் தோன்றிய அனைவருமே பிறப்பால் இந்துக்களே என்பதை யாருக்கும் நாம் விளக்க வேண்டியதில்லை. ஏனெனில் யாராலும் பெயர்குறிப்பிட்டு தோற்றுவிக்கப்படாத, சாமான்யர்களால் உணர்ந்து கடைபிடிக்கப்பட்டு  வருவதே நமது தர்மம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல அன்னியர்களால் அழிக்க முயன்றும் முடியாமல் போனதற்குக் காரணம் இது சாமான்யர்களின் மதம்  , சாதாரண மக்களால் உணர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட தர்மம் என்பதே இதன் தனிச்சிறப்பு.

இதிகாச புராணங்களும் மக்கள் வாழ்வில் அவை ஏற்படுத்திய தாக்கமும்
ஞானிகள் தாங்கள் அறிந்த பிரபஞ்ச, வாழ்வியல்  சூட்சுமங்களை  சாமான்ய  மனிதனுக்கு விளக்கிச்சொல்ல இயலாத அக்கால கட்டத்தில் அவர்களுக்கு இவற்றை புரிய வைக்க இதிகாச, புராணங்கள் உள்ளிட்ட கதைகள் உருவாக்கப்பட்டன. மேலும் அறிய பிரமிப்பான இத்தகைய உண்மைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த அவை இதிகாச புராண கதாபாத்திரங்களாலேயே தங்களுக்குச் சொல்லப்பட்டதாக குறிப்பிட்டனர்.
இவ்வுண்மைகள் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, மக்கள் தங்களின் மூதாதையர்களை வழிபடுவதோடு புராண கதா பாத்திரங்களையும் வழிபடத் துவங்கினர். புராண காதபாத்திரங்கள் தங்களையும் தங்கள் மூதாதையர்களையும் படைத்தவர்கள் என குறிப்பிடப்பட்டதால் தங்களது மூதாதையர் வழிபாட்டை விட புராண கதா பாத்திரங்களை உருவகப்படுத்தி உருவான உருவ வழிபாடு முதலிடம் வகித்து பிரசித்தமானது. இவை பிரசித்தமானதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.
நமது முன்னோர்கள் ‘பிரபஞ்ச இயக்க சூட்சுமங்கள் உயிரினங்களின் வாழ்வில் தாக்கத்தை   ஏற்படுத்துவதை கண்டறிந்தனர்’ என குறிப்பிட்டேன் அல்லவா?. அத்தகைய பிரபஞ்ச இயக்கங்களை  மக்கள் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை காண உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தாங்கள் கண்டறிந்த உண்மைகளிலிருந்து அதற்கான வாழ்வியல் நெறிமுறைகளையும் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். ஏனெனில் நமது இதிகாச புராணங்கள் முழுமையிலும் வாழ்வியல் கருத்துக்கள் காணப்படுகின்றன. மகா பாரதத்தில் கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்ன கீதை, விதுரர் திருதராஷ்டிரனுக்கு உரைத்த விதுர நீதி, தர்மன் தனது தம்பிகளின் உயிரை  மீட்டெடுக்க சர்ப்பத்திற்கு சொன்ன விளக்கங்கள் என அனைத்துமே நமது வாழ்வைச் செம்மைப்படுத்த நமது முன்னோர்கள் கூறிச்சென்ற கருத்துகள்தாம்.   வேதத்தின் கண் எனக் குறிப்பிடப்படும் ஜோதிடத்தில் ஒரு உதாரணம் குறிப்பிட வேண்டுமெனில் ஆடிமாதம் புதுமணத் தம்பதிகளை பிரித்து வைக்கும் நடைமுறையைக் கூறலாம். (இது  தொடர்பான எனது பதிவை படிக்க கீழுள்ள  இணைப்பைச் சொடுக்கவும்).
http://jothidanunukkangal.blogspot.in/2013/02/blog-post_22.html

 இத்தொடரின் அடுத்த பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,பழனியப்பன். 

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »
இந்தியா

Run… Run….

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய  காலத்தில் ஓய்வெடுத்தால்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுதந்திரம் கிடைத்ததா?  

நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil