கனவுகளே கனவுகளே …

சாதனை வாழ்க்கைக்காக இளைஞர்களை கனவு காணச் சொன்ன நமது முன்னாள்  குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் “நம்மை தூங்கச் செய்வதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதுதான்  கனவு” என்றார். நமது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் தவிப்புகளும், ஆசைகளும்,  பயங்களுமே கனவுகளாக உருவெடுக்கின்றன என்ற கருத்து பொதுவாக கனவுகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிவியலாளர்களால் முன் வைக்கப்படுகிறது. நல்ல  கனவுகள் நமக்கு நம்பிக்கை  ஊட்டுகின்றன. தீய  கனவுகள் நம்மை திகிழுரச் செய்கின்றன. இவை நமக்கு வரவுள்ள நல்ல அல்லது தீய நிகழ்வுகளின் முன்னறிவிப்புகள் என பொதுவாக நம்மப்படுகிறது. ஜோதிடத்தில் சூரியன் கனவுகள் மற்றும் கற்பனைகளுக்கு உரிய கிரகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பொதுவாக சூரியன் வலுவாக அமைந்த  ஜாதகர்களுக்கு நல்ல கற்பனா சக்தியும் ஆன்ம  பலமும் உண்டு. ஜாதகத்தில் சூரியன் தீய  பாவக ஆதிபத்தியம் பெற்றாலும், பாதிக்கப்பட் சூரியனாக  இருந்தாலும் கனவுகள் பயமுறுத்தும். இந்நிலையில் லக்னாதிபதி வலுவோடு இருப்பின்  அத்தகைய ஜாதகர் கனவுகளை  பொருட்படுத்த மாட்டார்.  லக்னாதிபதி, சூரியன், சந்திரன், செவ்வாய் 5 ஆமிடம் மற்றும் கால  புருஷனுக்கு 5 ஆமிடமான சிம்ம ராசி ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் ஒரு ஜாதகரின் மன உறுதியை எடைபோட்டுவிட இயலும். மன உறுதியோடு தொடர்புடைய இதே அமைப்புகள்தான் கனவுகளையும் ஆராய  பயன்படுகின்றன. இவ்விதிகளை பிரசன்னத்திலும் பயன்படுத்தலாம். இன்றைய பதிவில் ஒரு நபர் கண்ட கனவின்  காரணிகளை ஒரு பிரசன்ன உதாரணம் மூலம்  ஆராய்வோம்.

ஒரு பெண்மணிக்காக பார்க்கப்பட்ட கனவுகள் பற்றிய ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.

மகர உதயத்தில் சூரியன் அமைந்து ஆரூடம் 5 ல் அமைந்தது கனவு பற்றிய பிரசன்னம் என்பதை மேற்கூறிய விதிப்படி உறுதி செய்கிறது. மகர உதயத்திற்கு சூரியன் 8 ஆமதிபதியாகி உதயத்திலேயே வெளிவட்டத்தில் நிற்பதால் பிரசன்னம் பார்க்கப்பட்ட பெண்மணி கண்ட கனவு நல்ல கனவு அல்ல. 8 ஆமதிபதி மரணம், விபத்து, கண்டம், பிரிவு போன்ற தீமைகளை சுட்டிக்காட்டுபவர். மேலும் மகர உதயமே சுடுகாட்டை குறிப்பதால் பெண்மணி கண்ட கனவு நிச்சயம் அவரை பயப்படுத்திய கனவாகத்தான் இருக்கும். உள்வட்டத்தில் சூரியன் கர்ம காரகர் சனியின் உத்திரட்டாதியில் நிற்கிறார். வெளிவட்டத்தில் சூரியன் 7 ஆமதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் நிற்கிறார். உதயம் 12 ஆமிட செவ்வாயை கடந்துதான் வந்துள்ளது. உதயத்தை உதயாதிபதி சனியுடன் இணைந்த செவ்வாய் 8 ஆம் பார்வையாக மிதுனத்தில் இருந்து பார்ப்பதால் கனவில் செவ்வாய் முக்கியத்துவம் பெறுகிறார். மேலும் உதயமும் ஆரூடமும் சூரியனின் நட்சத்திரங்களான உத்திராடம் மற்றும் கார்த்திகையில் அமைந்த நிலையில் பாதிப்பை கூறும் கவிப்பு செவ்வாயின் அவிட்டத்தில் இருப்பதால் இது செவ்வாயின் காரக உறவு வகையில் இழப்பை சொல்லும் கனவாக இருக்கும். ஏனெனில்  இரு செவ்வாயுமே உதயத்திற்கு 12 ஆமிடத்தோடு தொடர்பாகிறார்கள். செவ்வாயின் காரக  உறவு என்றால் அது கணவர், சகோதரர், மைத்துனர் ஆகியோரை குறிப்பிடலாம்.

உதயத்திற்கு 5 ஆமதிபதி சுக்கிரன் உதயத்திற்கு 7 ல், உதயாதிபதி சனி சாரத்தில் உள்வட்ட குருவின் பார்வையை பெற்று நிற்கிறார். இதனால் 7 ஆமிடம் கெடவில்லை. அதே சமயம் 7 ஆமதிபதி சந்திரன் உள்வட்டத்திலும் உதயத்திற்கு 4ல் உதயத்திற்கு திக்பலம் தரும் வகையில் நிற்கிறார்கள். இரு சந்திரனும் ராகு-கேதுக்களின்  தொடர்பில் நின்றாலும் இருவரும்  துலாத்தில் நிற்கும் ஜாம குரு பார்வை பெறுவதும் உள்வட்ட சந்திரன் மேஷத்தில் ராகுவை கடந்து தனது மூலத்திரிகோண வீடான ரிஷபத்தை   நெருங்குவதும் கணவர் வகையில்  பாதிப்பை தெரிவிக்கவில்லை.  இதனால் பிரசன்னம் பார்க்கப்பட்ட பெண்மணியின் சகோதரர்  மற்றும் மைத்துனர் வகையில்தான் கனவு பயப்படுத்தியிருக்க வேண்டும். இரு செவ்வாயும் சனி தொடர்பு பெற்று உதயத்திற்கு 6, 12 தொடர்பில் இருப்பதால் செவ்வாய் சுட்டிக்காட்டும் காரக உறவுகள் தற்போது கடின வேலை சூழலிலும், விரையங்கள், வெளிநாட்டு முயற்சிகளில் பாதிப்புகள் என்றுதான் இருக்க வேண்டும்.

கணவரின் சகோதரர்கள் பற்றி அறிய உதயத்திற்கு 7 ஆமிடமான கடகத்தின் 3, 11 ஆகியவற்றை ஆராயலாம். ஜாமக்கோள் பிரசன்னத்தில் உச்ச நீச்ச கிரகங்கள் பிரசன்னத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளை கூறும். இந்த பிரசன்னத்தில் புதன் உள்வட்டத்தில் நீச பங்கம் அடைந்துள்ளார். ஜாம புதன் உச்சமாகியுள்ளார். உள்வட்ட புதன் சுய சாரமான ரேவதியில் 8  ஆமதிபதி சூரியனை கடந்து மாந்திக்கு நெருக்கமாக நிற்கிறார். வெளிவட்ட கன்னி புதனும் உதயத்தின் 8  ஆமதிபதி சூரியனின் உத்திரத்தில்தான் மீனத்திலமைந்த  மாந்தி பார்வையை பெற்று நிற்கிறார். உதயத்திற்கு 7 ஆமிடம் கணவர் என எடுத்துக்கொண்டால் 7 ன் 3 ஆமிட அதிபதியாக கன்னி ராசிக்குரிய புதன் அமைகிறார். இது கணவரின் கடைசி சகோதரரை குறிக்கும். புதன் கடைசி சகோதரரை குறிக்கும் காரக கிரகமாகும். இதனால் கணவரின் கடைசி சகோதரர் மரணமடைந்தது போன்ற தீய கனவு இந்தப்பெண்மணியை பாதித்திருக்க வேண்டும். மரணம் பற்றிய கனவு என இங்கு கூற காரணம் இரு புதனுக்கும் சூரியன் (கனவு), மாந்தி (மரணம்) தொடர்பு ஏற்படுவதுதான். இதற்கான  நிலைகளை விவரித்துச் சொல்லிய  பிறகு குறிப்பிட்ட பெண்மணி தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு.

பிரசன்னம் தொடர்புடைய பெண்மணியின் கணவருக்கு வேலையில் பாதிப்புகள் உள்ளது. கணவரின்  கடைசி சகோதரர் கொரானா காலத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியவர் இன்னும் சரியான வேலை அமையாமல் தடுமாற்றத்தில் உள்ளார். அவர் மரணமடைந்ததாகவே இப்பெண்மணி கனவு கண்டு கலக்கமடைந்துள்ளார். இப்பெண்மணி சார்பாக இவரது சொந்த சகோதரர் பிரசன்னம் பார்க்கக் கேட்டு என்னை அணுகினார். அவருக்கும் சுய தொழிலிலும்  முடக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரசன்னம் மிகத் தெளிவாக சூழலை சுட்டிக்காட்டுகிறது. பிரசன்னம் சுட்டிக்காட்டியபடி பிரசன்னம் பார்க்கப்பட்ட பெண்மணிக்கு தகுந்த ஆலோசனைகள், வழிபாடுகள் பரிந்துரைக்கப்பட்டன.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி:8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கைநிறையச் சம்பளம், காணாமல் போன தூக்கம்: ஜாதகக் கட்டங்கள் உணர்த்தும் கார்ப்பரேட் உண்மைகள்!

குளிரூட்டப்பட்ட அறைகள், கைநிறையச் சம்பளம், ‘கார்ப்பரேட்’ உலகின் கம்பீரமான பதவி என பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) வேலை பலருக்கும் ஒரு மிகப்பெரிய கனவாகவே இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு ஆடம்பரமான வாழ்க்கையாகத்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil