🎓 படித்தவுடன் பணி தரும் ஜாதக அமைப்புகள்: ஓர் அலசல்! 💼

“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.”

ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு பணியில் அமர்வதுதான். இன்றைய போட்டி நிறைந்த உலகில், லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் சூழலில், ஒரு சிலருக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே வேலை கிடைத்துவிடுகிறது. இது வெறும் அதிர்ஷ்டம் தானா? அல்லது அவர்களின் உழைப்பு மட்டும்தானா?

ஜோதிட ரீதியாகப் பார்த்தால், ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் அணிவகுப்பும், தசா புத்திகளும் கச்சிதமாக அமையும் போதுதான் இத்தகைய ‘உடனடி வேலை’ எனும் யோகம் வாய்க்கிறது.

முக்கிய கிரக இணைப்புகள்:

நமது கர்ம வினைப்படி தொழிலைத் தீர்மானிக்கும் 10-ம் அதிபதி, புத்தியைத் தீர்மானிக்கும் 5-ம் அதிபதி, மற்றும் லாபத்தைத் தரும் 11-ம் அதிபதி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் சுபத் தொடர்பில் இருக்கும்போது, அந்த ஜாதகர் எவ்விதத் தடையுமின்றி வெற்றிக் கொடியை நாட்டுகிறார்.

வெறும் வேலை கிடைப்பது மட்டுமல்லாமல், படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் தொடர்பு இருக்கிறதா? அல்லது வேறு துறையில் சாதிக்கப் போகிறாரா? என்பதையும் ஒருவரின் ஜன்ம ஜாதகத்தைக் கொண்டு துல்லியமாகக் கணித்துவிட முடியும்.

உதாரண ஜாதக ஆய்வு: வங்கிப் பணி யோகம்

அடுத்த மாதம் தனது கல்லூரி இறுதியாண்டுத் தேர்வை எழுதவுள்ள ஒரு மாணவியின் ஜாதகத்தை உதாரணமாகக் கொள்வோம்.

  • லக்ன அமைப்பு: துலாம் லக்னம். லக்னாதிபதி சுக்கிரன் மூலத்திரிகோண வலுவுடன் லக்னத்திலேயே அமர்ந்துள்ளார்.
  • சுப கிரக சேர்க்கை: லக்னத்தில் 9, 12-க்கு அதிபதியான புதனுடன் இணைந்து திக்பலம் பெற்றுள்ளார். இவர்களை பாக்கிய ஸ்தானத்தில் (9-ம் இடம்) ராகுவுடன் இணைந்து நிற்கும் குரு தனது 5-ஆம் பார்வையால் பார்க்கிறார்.
  • துறை சார்ந்த கிரகங்கள்: தனகாரகர் குரு, செல்வ வளமை காரகர் சுக்கிரன், கணக்கன் என்றழைக்கப்படும் புதன் ஆகிய மூவருமே வங்கிப் பணியோடு தொடர்புடைய கிரகங்கள். ஜாதகி இளங்கலையில் B.Com முடித்து தற்போது முதுகலையில் MBA இறுதித் தேர்வை எழுதவுள்ள நிலையில், ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக (Assistant Manager) வேலை கிடைத்துள்ளது.

தசா புத்தி பலன்கள்:

  1. கல்வி காலம்: பொருளாதாரத்தைக் குறிக்கும் 2-ஆம் இடமான விருச்சிகத்தில், குருவின் விசாகம்-4  இல் நின்ற சூரிய தசையில் ஜாதகி B.Com படித்தார். சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சமானதால் இளங்கலையில் சிறப்பாகத் தேறினார். சூரிய தசையை அடுத்து வந்த தசாநாதர் தனுசு சந்திரனை அதன் அதிபதி குரு இரட்டை ராசியான மிதுனத்தில் இருந்து பார்ப்பதால் ஜாதகி மற்றுமொரு பட்டம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
  2. வேலை உறுதி: தற்போது 10-ஆம் அதிபதியான சந்திரனின் தசை நடக்கிறது. சந்திரன் வளர்பிறையாக இருப்பது கூடுதல் சிறப்பு.
  3. விரைவான வாய்ப்பு: ஜீவன காரகர் சனி, சந்திரனின் சாரத்தில் (ரோகிணி-3) நின்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பது வேலை விரைந்து கிடைப்பதை உறுதி செய்கிறது.
  4. தற்போதைய நிலை: கோட்சார சனி தற்போது 6-ஆம் இடமான (வேலைக்கான பாவகம்) மீனத்தில் இருப்பதால் வேலை கிடைத்துவிட்டது. அடுத்து வரும் புதன் புக்தியில் இவர் பணியில் சேருவார்.
  5. எதிர்காலம்: தசாநாதர் சந்திரன் ராகு-கேதுக்களுடன் தொடர்பாவதால், எதிர்காலத்தில் வெளிநாட்டு வரவு செலவுகளைக் கவனிக்கும் பொறுப்பு இவருக்குக் கிடைக்கும்.

முடிவுரை:

“கல்வி உங்கள் தகுதியைத் தீர்மானிக்கிறது; கிரகங்களின் கதி உங்கள் விதியைத் தீர்மானிக்கிறது! சரியான நேரத்தில் அமையும் ஜாதக யோகமே, உங்கள் உழைப்பிற்குரிய வெற்றியை அரியணையில் அமர்த்துகிறது.” ✨💼

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

 கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

சோற்றுக் கூட்டணி தேறுமா?

நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு.

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

அதிர்ஷ்டம் தரும் லாட்டரி யோகம்.

மனித வாழ்க்கையில் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கதவைத் தட்டும் ‘அதிர்ஷ்டம்’ என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்ததாமே!” என்ற செய்தியைக்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

சுயதொழில் எனும் புதிய பயணம்: அடிமைத் தளையிலிருந்து ஆளுமைப் பாதைக்கு!

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிப் பயணிக்கத் தொடங்குகிறான். வேறொருவரின் கனவுகளுக்காக உழைப்பதைக் காட்டிலும், தனது சொந்த உழைப்பும் திறமையும் நேரடிப் பலன் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது

Loading

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

🎓 படித்தவுடன் பணி தரும் ஜாதக அமைப்புகள்: ஓர் அலசல்! 💼

“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.” ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

பழையன கழிந்து புதியன புகும்!

வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களின் சாவியைப் பிடித்த கைகளுக்கு, இன்று புத்தம் புதிய வாகனத்தின் வாசம் நுகரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பும், பழைய வாகனங்கள் கொடுத்த அனுபவங்களும் இன்று

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கோள்களின் நகர்வும் பொருளாதாரப் பாதுகாப்பும்

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English