சாதனைச் சிகரம் சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவில் அதிகம் அலசப்பட்ட ஜாதகங்களுள் ஒன்று நமது சச்சினின் ஜாதகம். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தேசத்தில் பிரச்சனைகள் பல இருக்க, பெரும்பாலான ஜோதிடர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஜாதகத்தை நாமும் அலசுவது அரைத்த மாவையே அரைப்பது போன்றிருக்கும்  என்ற எனது எண்ணத்தையும் மீறி அவரது ஜாதகத்தை இங்கு நான் ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பது, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதோடு மற்றுமின்றி எனது பள்ளி நாட்களிலிருந்து என்னை வசீகரித்த கிரிக்கெட் வீரர் சச்சின் என்பதும் அவரது ஜாதகத்தை எனது நோக்கில் ஆராய வேண்டும் என்பதும் ஒரு காரணம். அவரது கடைசி டெஸ்ட்டின் போது இப்பதிவை எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதும் மற்றொரு முக்கிய காரணம்.

இந்தியர்களால் மட்டுமல்ல எதிரணி வீரர்களாலும் கூட மிகவும் நேசிக்கப்பட்டவர் சாதனைச் சிகரம் நமது சச்சின் டெண்டுல்கர் என்றால் அது மிகையல்ல. பின்வரும் அவரது ஜாதகத்தைக் கவனியுங்கள்.

சிம்ம லக்னம் என்பது சாதனையாளர்களுக்கான லக்னம் சென்றால் அது மிகையல்ல. பொதுவாகவே ஒருவர் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் தான் சாரத்த துறையில் சாதிக்க வேண்டும் எனில் அவர் சிம்ம லக்னத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். இது ஒரு முக்கியமான பொது விதி.
சாதனையாளர்களுக்கே உரித்த சிம்ம லக்னத்தில்  பிறந்த சச்சினின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில் உச்சம். லக்னாதிபதியைப் பாக்யாதிபதி பார்ப்பதே சிறப்பு என்ற நிலையில், சூரியனுக்கு வீடு கொடுத்த பாக்யாதிபதி செவ்வாயும் உட்சமடைந்து தனது வீட்தில் உட்சமடைந்த சூரியனைப் பார்ப்பது கூடுதல் சிறப்பு. கூடவே இரு கிரகங்களும் நட்பு என்பது அபரிமிதமான ராஜயோகத்தை ஏற்படுத்தும் அமைப்பு.  ராஜ்யத்தைக் குறிக்கும் சூரியனுடன் ராஜ்ய ஸ்தானாதிபதி (10 ஆம் அதிபதி) சுக்கிரன் கூடியிருப்பது மற்றுமொரு சிறப்பு.

விளையாட்டுத்துறையில் ஒருவர் ஜொலிக்க வேண்டுமெனில் அதற்கு1.காரகத்துவம் பெற்ற புதன் சிறப்பாக இருக்க வேண்டும்.2.துடிப்பான செயல் வேகத்திற்கு சந்திரன் சிறப்பாக இருக்க வேண்டும்.3.போர்க்குணத்திற்கும் விடா முயற்சிக்கும் உரிய  செவ்வாய் சிறப்புற்றிருக்க வேண்டும்.
இந்த மூன்று விதிகளும் ஒருங்கே அமைந்த ஜாதகம் சச்சினுடையது.
உட்சன் செவ்வாயுடன் கூடியதால் நீச குரு தனது நீச நிலையிலிருந்து விடுபட்டு  ராஜ யோகத்தைத் தரவேண்டியவராகிறார்.
ஒரு கிரகம் நீச நிலையிலிருந்து விடுபடும்போது அக்கிரகத்திற்குரிய பாவங்களும் வலுவடையும். அதனால் அந்த அக்கிரகத்தினது பாவத்திலமைந்த கிரகங்களும் வலுவடையும் என்பது விதி.
அந்த வகையில் சந்திரன் வலுவடைந்தார். மேலும் புதனும் தனது நீச நிலையிலிருந்து விடுபட்டுள்ளார்.
புதன் தனது நீச நிலையில் இருந்து விடுபட்டதால் ஜாதகர் தான் சார்ந்த துறையில் ஜொலிக்க உதவி புரிந்தார். தன, குடும்ப காரகன் குருவும் தன குடும்ப பாவதிபதி புதனும் ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் அபரிமிதமான செல்வச் செழிப்பையும் கொடுத்தார்கள். ஜாதகரின் செல்வச் செழிப்பிற்கு, குரு ராஜயோகத்தில் அமைந்து தனஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகப் பார்ப்பதும் குருவின் வீட்டில்  தன ஸ்தானாதிபதி அமர்ந்ததும் முக்கிய காரணம். ரேவதி நட்ச்திரத்தில் தனது சுய சாரத்தில் அமைந்த புதன் தனது பாவத்தையே பார்த்து அதனை சிறப்புச் செய்கிறார்.
புதன் தனது நீச நிலையில் இருந்து விடுபட்டாலும் அது குருவினது நீச பங்கத்தைப் போல (உச்சனுடன் கூடி நீச பங்கப்பட்டது போன்ற) மிக வலுவான நிலையில் இல்லை. மேலும் அவர் அஷடமத்தில் மறைந்துவிட்டார். புதன் ஜாதகருக்கு நற்பலன்களை வழங்கும்படி  இக்கட்டில் குருவால் தள்ளப்பட்டார். அதனால் தனது காரகத்துவங்களில் ஒன்றான கல்வியில் ஜாதகரை கைவிட்டு விட்டார்.  (சச்சின் பள்ளி இறுதியில் தோல்வியுற்று படிப்பை நிறுத்தினார். அதற்கு காலச் சூழ்நிலையும் ஒரு காரணம்). புதன் வாக்குகாரகனும் கூட என்பதால் சச்சின் வாக்கு வன்மை இன்றி சற்றே பெண்மைத்தனமாகப் பேசுவார் என்பது அனைவரும் அறிந்ததே.
இவ்விடத்தில் ஒரு ஜோதிட நுட்பத்தினை ஜோதிட ஆர்வலர்கள் கவனிக்க வேண்டும். ஒரு கிரகம் தோஷப்பட்டு ஜாதகருக்கு நன்மை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டால் அக்கிரகமானது அதன் காரகங்களில் ஒன்றைக் கை விட்டு அதன் மற்ற காரகங்களில் நன்மை செய்யும்.பாக்கிய ஸ்தானமும் வலுவடைந்து பாக்கியாதிபதியும் வலுவடைந்ததால் ஜாதகர் தான் விரும்பிய காதல் மனைவியை அடைந்தார். 5 ஆம் இடத்தில் ராகுவுடன் நல்ல நிலையில் அமைந்த சந்திரன் ஜாதகருக்கு காதல் உணர்வுகளை தூண்டினார். லக்னாதிபதியுடன் கூடிய காதல்காரகன் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த 7 ஆமதிபதி சனியும் ஜாதகரின் மனதில் இருந்த காதலை வெளிக்கொணர்ந்தார்கள் எனலாம். திருமணத்தோடு தொடர்புடைய 12, 2 மற்றும் 7 ஆவது பாவங்களுடன் சனி செவ்வாய் சம்பந்தம் பெற்றால் தனது குலத்தை (ஜாதியை) விட்டு வேறு குலத்தில் காதல் திருமணம் புரிவார் என்பது ஒரு ஜோதிட விதி. இந்த ஜாதகத்தில் சனி களத்திர பாவாதிபதியாகி 12 ம் பாவத்தை பார்வை செய்கிறார். அதே 12 ஆம் பாவத்தை  செவ்வாயும் பார்த்ததால் காதல் மணம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பில் குடும்ப காரகன் குருவும் இணைந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறியுள்ளது. குடும்ப பாவாதிபதி ல் மறைந்தால் குடும்பம் அமையும் போது சில வருந்தமான, அவமானகரமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது ஒரு ஜோதிட விதி

இந்த ஜாதகத்தில் புதன் 8ல் குரு வீட்டில் மறைந்துள்ளார். குருவினது வீடு என்பதாலும் குரு வலுவடைந்தார் என்பதாலும் பெரிதாக அவமானகரமான சூழ்நிலை திருமணத்தில் ஏற்படவில்லை எனினும் சச்சினின் மனைவி வயதில் மூத்தவர் என்பது இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. சனி 10 ஆம் பார்வையாக தனது களத்திர பாவத்தை பார்த்ததால் ஜாதகரைவிட அவரது மனைவி  வயதில் மூத்தவர் என்பது இதற்கு முக்கியமான காரணமாகும்.
சச்சினின் சாதனைகளுக்கு சூரியன், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன், கர்ம ஸ்தானத்தில் நட்புவீட்டில் அமைந்த சனி, ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்த ராகு – கேதுக்களுமாகும். மேலும் வீர, தீர , வெற்றி ஜெயங்களைக்குறிக்கும் 3 ஆம் இடத்தின் அதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் பாக்கியஸ்தானத்தில் கூடியது ஜாதகரின் பல சாதனைகளுக்கும்  வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்தது.
ராகு – கேதுக்கள் இரண்டுமே நல்ல நிலையில் அமைந்துள்ளன. இவை தாங்கள்  அமர்ந்த பாவங்களின் அதிபதிகளை அடியொற்றியே தங்கள் பலன்களை வழங்குவர். ராகு மற்றும் கேது இரண்டுமே ல் சுபர்களின் வீட்டில் இருப்பது குறையல்ல. அவர்கள் அமைந்த வீட்டில் சுபர்கள் கெட்டல் மட்டுமே பாவத்தைக் கெடுப்பார்கள். அதுவே பாவிகள் வீடானால் அவ்வீட்டின் பலன் கெட்டுவிடும். (இது ஒரு முக்கியமான ஜோதிட விதி. இவ்விதியை சரியாகப் புரிந்துகொள்ளாமல் சில அரைகுறை ஜோதிடர்கள் திருமணப் பொறுத்த விஷயத்தில் விளையாடுவது வேதனைக்குரியது.)
சச்சினின் ஜாதகத்தில் வலுவடைந்த கிரகங்களால் பெரும்பாலும் அணைத்து பாவங்களுமே வலுவடைந்திருப்பத்தைக் காணலாம்.இப்படி வலுவடைந்த கிரகங்களும் பாவங்களும் சச்சினின் சாதனைகளுக்கு, செல்வச் செழிப்பிற்கு,குடும்ப வாழ்க்கை உள்ளிட்டவற்றிற்கு காரணமாகும்.
அதோடு லக்னம் கேதுவின் மக நட்சத்திரத்தில் அமைந்ததால் சச்சின் உலகின் ஒப்பற்ற சந்யாசி ஸ்ரீசத்யசாய்பாபாவின் சீடராக உள்ளார்.
ஜீவன காரகன் சனி நட்பு வீட்டில் அமைந்தால் ஜாதகர் தான் செய்யும் கர்மாவை (வேலையை) ரசித்துச் செய்வார் என்பது ஒரு ஜோதிட விதி. சச்சின் கிரிக்கெட்டை தனது உயிர் மூச்சாக நினைப்பதால்தான் அதை அவரால் ரசித்து அனுபவித்து விளையாட முடிகிறது. இதனால் அவருக்கு பல சாதனைகள் தேடி வந்தன.
சச்சின் போன்ற சாதனையாளர்கள் படைத்தவனால் ஆசீர்வதிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்.
சச்சின் ஒரு சகாப்தம்.
நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ.
இதனை நான் அவர்மீதுள்ள அபிமானத்தால் குறிப்பிடவில்லை.
நாம் அலசிய அவரது ஜாதகத்திலிருந்து இவ்வாசகங்கள் மிகையல்ல என்பது புரியும்.
அவரது சாதனைகளை விடுங்கள்.
அவர் ஒரு நல்ல மனிதர்.
முறையாக வருமான வரி செலுத்துபவர்.
மனிதாபிமானி என்பதால் அவர் பல்லாண்டு வாழ உலகில் அனைவராலும் வேண்டப்படுகிறது.
சச்சின் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமையாக நினைக்கும் அவரது பலகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன் என்று இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இதற்கு மேலும் அவரது தொழில், உறவுகள், ஆரோக்கியம், ஆயுள் போன்றவற்றை ஆராய இயலும் என்றாலும் அது விரும்பத்தக்கது அல்ல என்பதால் இத்துடன் பதிவை நிறைவு செய்கிறேன்.
வாழ்க சச்சின்!
மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.


வாழ்த்துக்களுடன்.

அன்பன்.

பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

கைநிறையச் சம்பளம், காணாமல் போன தூக்கம்: ஜாதகக் கட்டங்கள் உணர்த்தும் கார்ப்பரேட் உண்மைகள்!

குளிரூட்டப்பட்ட அறைகள், கைநிறையச் சம்பளம், ‘கார்ப்பரேட்’ உலகின் கம்பீரமான பதவி என பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) வேலை பலருக்கும் ஒரு மிகப்பெரிய கனவாகவே இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு ஆடம்பரமான வாழ்க்கையாகத்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

பதில் சொன்னது டாரோட்… திருப்திப்படுத்தியது ஜாதகம்! – ஒரு ஜோதிட அனுபவம்

ஜோதிடக் கலையில் மனிதர்களின் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் விடையளிக்கப் பல அற்புதமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று, மேலை நாடுகளில் பெரிதும் கொண்டாடப்படும் டாரட் (Tarot) முறை. “எனக்கு வேலை மாறுமா? எடுக்கப்போகும் முடிவு சரியா?”

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English