பலா!

முக்கனிகளில் பலாவிற்கு மூன்றாமிடமே கொடுக்கப்பட்டுள்ளது. பலாவை அப்படியே சுவைக்க முடியாது. கடினமான முட்கள் நிறைந்த அதன் மேற்பகுதியை நீக்கிவிட்டே அதன் உட்புறதிலுள்ள பலாச்சுளைகளை ருசிக்க முடியும். சில மனிதர்களும் பலாவை போன்றவர்கள்தான். பார்ப்பதற்கு கரடு முரடாகத் தெரியும் சிலர், பழகியபிறகு அட என்ன மனுஷன்யா என அசத்துவதும் உண்டு. உடனிருக்கும் உறவுகளுக்குக்கூட இத்தகைய மனிதர்கள் முரடாகவே  வாழ்நாள் முழுதும் காட்சியளிப்பதுண்டு. அதன் காரணம் இத்தகையவர்களின் வெளி அடையாளமான மூர்க்க சுபாவத்தை கைவிட மறுப்பதுதான். இவர்களது முரண்கொண்ட மனோநிலைக்கு, இவர்கள் வாழ்வில் சந்திக்கும் கடினமான சூழல்களே காரணமாக அமைந்துவிடுகின்றன. பிறவியிலேயே இத்தகைய முரண்பட்ட மனநிலையுடைய இரண்டாம் வகை மனிதர்களும் உண்டு. முதல் வகையினரை காலம் மாற்றிக்காட்டும். இரண்டாம் வகையினர் காலத்தால் அபூர்வமாகவே மாறுகின்றனர். அல்லது இவர்கள் வயதாகி பேரன்-பேத்தி எடுத்த பிறகு இயல்பான மனநிலைக்கு மாறுகின்றனர். எப்படிப் பார்த்தாலும் இவர்களை நேசிக்கும் வாழ்க்கைத் துனைவர், குழந்தைகள் போன்ற உறவுகள் பதிலுக்கு இவர்களிடமிருந்து நேசம் கிடைப்பதில்லை எனும் சூழலில் மனம் வெறுத்த நிலையை அடைகின்றனர் என்பது கசப்பான உண்மை. ஜோதிடத்தில் முரண்பட்ட மனநிலையுடைய உறவுகளை ராகு-கேதுக்களும், வக்கிர கிரகங்களும் பொதுவாகக் குறிப்பிட்டாலும், பலவீன கிரகங்களும் கசப்பான அனுபவங்களால் தங்கள் மனநிலையை இறுக்கமான நிலையில் பராமரிக்கும் மனிதர்களை குறிப்பிடுகின்றன. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறையினர் போன்றோர் தங்கள் தொழில் நிமித்தம் எளிதில் நேசம் பெற இயலா வண்ணம் தங்கள் மனநிலையை பொதுவெளியில் பராமரிகின்றனர். இத்தகையவர்களை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

மீன லக்னத்திற்கு பொதுவாகவே சூரியன் 6 ஆமதிபதி என்பதால் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால் சூரியன் ஒரு பாவ கிரகம் என்பதால் 6 ஆமிட தோஷம் இந்த லக்னத்திற்கு செயல்படாது. ஆனால் அவர் 8 ல் மறைந்தது தோஷமே. 6 ஆமதிபதி 8 ல் மறைவது ஒரு வகையில் யோகமும் கூட. இதனால் இந்த ஜாதகிக்கு பெரிய எதிரிகளில்லாத வாழ்வு அமையும் எனலாம். இவரது எதிரி இவர் மீது வழக்குத் தொடுத்தால் காணாமல் போய்விடுவான். ஆனால் தந்தையை குறிக்கும் காரக கிரகம் சூரியன் நீசமாவதால் இவரது தந்தையின் பாசம் ஜாதகிக்கு கிடைக்காது அல்லது தந்தை ஜாதகி மீது வெளிப்படுத்தும் பாசம் தரமற்றதாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் தந்தையின் பாசத்தை ஜாதகி உணரவே முடியாது. இங்கு 8 ஆமதிபதி சுக்கிரன் வக்கிரமடைந்தது சூரியன் நீசபங்கப்படுவதை தடைசெய்கிறது. ஒருவேளை சுக்கிரன் வக்கிரமடையாமலிருந்து அதனால் சூரியன் நீசபங்கம் பெற்றால் ஜாதகிக்கு தந்தையின் பாசம் கிடைக்கும். ஆனால் மறைவு ஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால் பாசமிகு தந்தை ஜாதகியின் அருகாமையில் இல்லாத நிலை இருக்கும். 8 ல் முழுமையான மறைவு பெற்ற சூரியன் இங்கு நற்பலன் தரமாட்டார். இரண்டாவதாக சூரியன் நீச பங்கப்படாமல் இருப்பதால் தந்தை மோசமான குணமுடையவராக ஜாதகிக்கு தெரிவார். மூன்றாவதாக சூரியன் துலாத்தில் வக்கிர கிரகமான ராகுவின் சாரத்தில் (சுவாதி-1) இருப்பதால் ஜாதகிக்கு தந்தை மிகுந்த முரண்பாடுகளின் உச்சமாகத்தான் தெரிவார். எப்படிப் பார்த்தாலும் தந்தையின் பாசம் இந்த ஜாதகிக்கு இல்லை. லக்னத்திலும் ஏழாமிடத்திலும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் அமைந்த ஜாதகர்களுக்கு இயல்பாகவே ஒளி கிரகங்களான சூரிய-சந்திரர்களை குறிக்கும் காரக உறவுகளான பெற்றோர் பாசம் குறைவாகவே கிடைக்கும் என்பது நடைமுறை உண்மை. ஒளி கிரகங்களுக்கு கிரகண தோஷத்தை நிழல் கிரகங்கள்தான் வழங்குகின்றன என்பதே இதற்குக் காரணம்.

இங்கு ஒரு ஆச்சரியம் உள்ளது. தந்தைக்கு காரக கிரகம் சூரியன்தான் ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தந்தையை குறிக்கும் 9 ஆமிடமான விருட்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று உச்ச குருவின் பார்வையில் உள்ளார். இது ஒரு முரண்பாடான நிலை. காரக கிரகம் சூரியனின் பாதிப்பு தந்தை வெளிப்படுத்தும் பாசத்தை ஜாதகியால் உணர முடியாதபடி  செயல்படும். ஆனால் 9 ஆமிடமும், அதன் அதிபதியும் சிறப்புற்றதால் தந்தையின் செயல்கள் ஜாதகிக்கு நற்பலன்களை கொடுக்கும். தந்தையின் செயல்களின் விளைவுகளை ஜாதகியால் உணர முடியும். சூரியனின் நிலை இங்கு பலாக்கனியின் மேற்புறம் போன்ற கடுமையான நிலை. ஆனால் தந்தையின் செயல்கள் அதன் உள்ளிருக்கும் சுளைகள் போல ஜாதகியை உணர வைக்கும். அதாவது தந்தை பாசத்தை உணரவியலாத ஜாதகியால் தந்தை அவருக்கு கொடுத்த பாதுகாப்பு, கல்வி, ஆடை-அணிகலன்கள், பொருளாதாரம் இவற்றை உணர முடியும். நவாம்சத்தில் சூரியன் லக்னத்திற்கு 11 ல் அமைந்தது தந்தையால் ஜாதகிக்கு லாபங்கள் உண்டு என்பதை உறுதி செய்கிறது.

எல்லோரும் விரும்புவது பொருளாதாரத்தைத்தான். ஆனால் அதை வெளியிடத்தில்தான் நாம் அதை அதிகம் எதிர்பார்ப்போம். வெளியிடத்தில் பணம் கிடைப்பதால்தான் நாம் பணிக்குச் செல்கிறோம். பாசத்திற்காக அல்ல. ஆனால் குடும்பத்தில் நாம் பொருளாதாரத்தைவிட உண்மையான அன்பு, பாசம், நேசம் ஆகியவற்றையே விரும்புகிறோம்.

ஜாதகிக்கும் தந்தைக்குமான உறவு நிலையை ஒரு ராசியை 45 கூறுகளாக்கி ஆராயும் அக்ஷவேதாம்சம் எனும் வர்க்கத்தில் மேலும் நுட்பமாகக் காணலாம்.

அக்ஷவேதாம்சத்தில் 9 ஆமதிபதி சூரியன் தனுசு லக்னத்திற்கு 6 ல் மறைவது சுபாவ பாவி என்ற அடிப்படையில் பெரிய பாதிப்பல்ல. ஆனால் சூரியன் பாதகாதிபதியும் 1௦ ஆமதிபதியுமான புதனுடன் இணைவு பெற்றது பாதிப்பே. புதன் சூரியனுக்கு நண்பரானாலும் வக்கிரமே அடையாத சூரியன், வக்கிரம் பெற்ற புதனுடன் இணைவதால் பாதிப்பின் விகிதம் இங்கு அதிகம். மேலும் கன்னியிலிலிருந்து ரிஷபத்திற்கு பரிவர்த்தனையில் சூரியனுடன் இணையும் சுக்கிரனும் வக்கிரம் பெற்றுள்ளதால் சூரியனுக்கு உடன் இணைந்த வக்கிர கிரகங்களின்  மனநிலைதான் இருக்கும். அதாவது தந்தையின் முரண்பட்ட மனநிலைதான் ஜாதகிக்குத் தெரியும். ஆனால் 9 ஆமதிபதி சூரியன் தன் வீடு சிம்மத்திற்கு பத்தில் திக்பலம் பெற்று ராகு-கேதுக்களுடன் இணைத்த குருவின் 5 ஆம் பார்வையை பெறுவதால் தந்தை கொடுக்கும் உயிரற்ற காரகங்களை ஜாதகியால் உணரமுடியும். இது தனது தந்தை வாங்கிக்கொடுத்த ஆபரணம் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளலாம். ஆனால் “நீங்கள் அப்பா செல்லமா?” என்று யாராவது கேட்டால் ஜாதகிக்கு கண்களில் நீர் வழிகிறது. இந்த முரண்பட்ட நிலைக்கு காரணம் என்னவென்று இங்கு ஆராய்வோம்.

ராசிச் சக்கரத்திலேயே வியாபார ராசியான துலாத்தில் சூரியன் கடுமையாக பாதிப்பட்டிருந்ததை பார்த்தோம். அக்ஷவேதாம்சத்தில் பாதகாதிபதியும் 1௦ ஆமதிபதியுமான புதனுடன் கடன், வழக்குகளை குறிக்கும் 6 ஆமிடத்தில் சூரியன் இணைந்து, லாப ஸ்தானமான துலாத்தில் உச்ச சனியுடன் இணைந்த செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெறுகிறார். இதனால் தந்தை தொழில் செய்பவராக இருந்தால் தனது லாபத்தை அடைய கடுமையாக போராட வேண்டும். அதற்காக நீதிமன்றம் கூட செல்ல வேண்டியிருக்கும் என்பதை அறியலாம். செவ்வாய் இங்கு விரையாதிபதியுமாகி கடுமையான அவரது 8 ஆம் பார்வையும் சூரியனுக்குக் கிடைப்பதால் தொழில் வழக்குகளுக்காக தந்தை நீதிமன்றம் சென்றாலும் பல லாபங்களை விட்டுக்கொடுத்து சில லாபங்களை மட்டுமே அடைய இயலும் என்ற பரிதாபகரமான நிலை.  ஜாதகியின் தந்தை தனது தொழில் வாழ்வில் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர் என்று ஜாதகி கூறினார். தனது தொழில் கூட்டாளிகளால் பல ஏமாற்றங்களை சந்தித்தவராகவும் அவர் இருந்திருப்பார். தந்தையின் இத்தகைய கடும் தொழில் நிலையும், வழக்குகளும் அவரது மனதை கடுமையான முரண்பட்ட நிலைக்கு மாற்றியிருக்கும் என்பது புரிகிறது. இதை ராசிச் சக்கரத்தில் கால புருஷனுக்கு வழக்குகளை குறிக்கும் 6 ஆமிடத்தில், லக்னத்திற்கு பாதக ஸ்தானமான கன்னியிலமைந்த ராகுவை கடந்து சூரியன் அமைந்ததாலும், அக்ஷவேதாம்சத்தில் லக்னத்திற்கு 5 ல் அமைந்த மனோகாரகரும் 8 ஆமதிபதியுமான சந்திரனை கடந்து சூரியன் அமைந்தது உறுதி செய்கிறது.

தனது தந்தை தனக்குச் செய்த செயல்களை ஜாதகி நன்றியோடு நினைவு கூறுகிறார். ஆனால் தந்தை பிறரைப்போல தன்னை கொஞ்சவில்லையே, எப்போதும் சிடுசிடுப்போடுதானே இருந்தார் என்ற வருத்தத்தை விழியோரத்தில் வழியும் கண்ணீரோடு கணினி அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்று, தற்போது வெளிநாடு ஒன்றி நல்ல வசதியான குடும்ப வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜாதகி நினைவு கூறுகிறார். தனது தந்தை பாசத்தை பொறுத்தவரையில் ஒரு மாங்கனியல்ல, கரடு-முரடான மேற்புறத்தையுடைய பாலப்பழம்தான்.  தனக்கு அதுதான் கிடைத்து என்கிறார் ஜாதகி.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil