குல தெய்வமாக திருப்பதி பெருமாள்!

நமது குலத்தை காப்பதில் முன்னிலை வகுக்கும் தெய்வம் குலதெய்வம். பிழைப்புக்காக பல்வேறு தேசங்களுக்கு இடம்பெயரும் நிலையில் உள்ள இன்றைய சூழலில், குல தெய்வ வழிபாடுகள் பற்றி பல்வேறு குழப்பங்கள் உள்ளன. புதிய தேசங்களில் சென்று தொழில் செய்யும் நிலையில், அடிக்கடி சொந்த ஊர் வர இயலாத சூழலில் குல தெய்வ அனுக்கிரகத்தை பெற, தங்கள் குல தெய்வ கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துசென்று அதைக்கொண்டு தங்கள் வாழிடங்களிலேயே குல தெய்வத்தை நிர்மாணித்து வழிபடுவது ஒரு பொது மரபு. இடம் பெயர்த்து பல ஆண்டுகளாகி கலாச்சார மாறுதலை அடைந்தவர்கள் கூட மீண்டும் அவர்கள் குல தெய்வத்தை அறிந்து வழிபடுவதே சிறப்பு. அவர்களது குல தெய்வம் வழிபாடு விடுபட்டு போன பிறகும் 166 ஆண்டுகள் வரை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கும். குல தெய்வமே தெரியாமல் போனவர்கள் தாங்கள் பிழைக்கும் ஊரின் தேவதையையே குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுவர். ஊர் தேவதையை வழிபட மனமற்றவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் முக்கியமாக வழிபடப்படும் தெய்வத்தையே குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுவர். குல தெய்வம் அறியாமல் ஆனால் சைவம், வைணவம் என மரபு வழி வழிபாட்டை பின்பற்றும் அன்பர்கள் சிவனையோ, பெருமாளையோ குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுவர். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் கடவுளான தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வெளியிடங்களில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அன்பர்கள் வழிபடுகிறார்கள். பொதுவாக குடும்பத்தில், பொருளாதாரத்தில் சங்கடங்கள் எழும்போதெல்லாம் தங்கள் குல தெய்வ அனுக்கிரகம் பற்றி சந்தேகிப்போர் பலர். அவர்களில் இப்படி மாற்று குல தெய்வத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு எழும் சந்தேகம் அதிகம். இது பற்றிய சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையிலானதே இன்றைய பதிவு.

நானூறு வருடங்களுக்கு முன் முன்னோர்கள் வட இந்திய பூர்வீகத்தைவிட்டு தமிழகத்தில் குடியேறினோம். எனவே குல தெய்வ வழிபாடு விடுபட்டுவிட்டது அதனால் திருப்பதி பெருமாளையே குல தெய்வமாக வழிபடுகிறோம். எங்களுக்கு பெருமாள் அனுக்கிரகம் உள்ளதா? அல்லது வேறு தெய்வத்தை வழிபடலாமா? என்று கேட்ட அன்பருக்காக பார்க்கப்பட ஜாமக்கோள் பிரசன்னமே நீங்கள் கீழே காண்பது.

மகர உதயம். உதயத்தில் சனி இருப்பது குல தெய்வ பிரசன்னம் என்பதை தெளிவாகக் கூறும். உடன் 8 ஆமதிபதி சூரியன் இருப்பது தற்போது செய்துவரும் தெய்வ வழிபாட்டை நிறுத்திவிடலாமா? என்ற கேள்வியாளரின் விரக்தி மனோபாவத்தை கூறுகிறது. இரண்டில் ஆரூடம் குருவின் சாரத்தில் இருப்பது கேள்வியாளரின் இந்த மனோபாவத்திற்கு பொருளாதார சூழலே காரணம் என்பதை கூறுகிறது. பத்தாமிடம் துலாத்தில் அமைந்த கிரகச் சேர்க்கைகள் பொருளாதார நெருக்கடி தொழில், முதலீடுகள், கடன் சார்ந்தது என்பதை தெரிவிக்கிறது. உதயத்தில் சூரியன் சனி சேர்க்கை. உதயத்திற்கு 10 ல் அமைந்த சூரியனை உதய சனி 10 ஆம் பார்வையாக பார்க்கிறார். சூரியன் சனி தொடர்பு கட்டுப்படுத்த இயலாத நிர்வாகச் செலவை குறிக்கிறது. 10 ஆமிட புதன், கேது இணைவுகள் கேள்வியாளர் IT துறையில் உள்ளதை கூறுகிறது. (புதன், கேது = IT). உதயாதிபதி சனி வெளிவட்டத்தில் 6 ல் நிற்கிறார். உதயத்திற்கு 10 ல் குரு கேது இணைவு நிர்வாக செலவை ஈடுகட்ட கேள்வியாளர் கடன் வாங்க எண்ணம்கொண்டிருப்பதை காட்டுகிறது.  பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் நமது பரிதவிப்பை தெய்வத்திடம் காட்டுவது இயல்பு. இவருக்கு தனது குல தெய்வத்தின்மீது அதிருப்தி எழுந்தது ஆச்சரியமல்ல. இங்கு கேள்வி பெருமாள் அனுக்கிரகம் பற்றியதே என்றாலும் அதன் பின்னணியையும் பிரசன்னம் தெளிவாகக் கூறுகிறது.

உதயத்தில் சூரியன். கேள்வியாளர் சௌராஷ்டிரர். சௌரம் என்பது சூரியனை குறிக்கும். அதாவது கேள்வியாளர் சூரியனை கடவுளாக வழிபடும் பண்டைய சௌராஷ்டிரா (இன்றைய ஒடிஷா) தேசத்திலிருந்து தமிழகத்தில் குடியேரியவர்கள். ஜாதகரது தாய்மொழி சௌராஷ்டிரம். உதயத்திற்கு நான்காமிடம் விட்டுப்போன மற்றும் அறிய இயலாத குல தெய்வத்தை குறிப்பிடும். நான்கில் கவிப்பு அமைந்தது, உதயத்தின் நான்காமதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் 6ல் அமர, வெளிவட்டத்தில் 12 ல் மறைந்தது ஆகியவை, முன்னோர்கள் காலத்தைய குல தெய்வ வழிபாடு மறக்கப்பட்டுவிட்டது என்பதை தெளிவாக கூறுகிறது. நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் இனி முந்தைய குல தெய்வத்தை வழிபட இயலாது என்பதை கவிப்பு தெளிவாக்குகிறது. அங்கு அமைந்த சந்திரன் ராகு சேர்க்கை முன்னோர்களின் பூர்வீக குல தெய்வம் பெண் தேவதையாக இருக்க வேண்டும் என்பதை கூறுகிறது. 4, 11 க்கு உரிய செவ்வாய் திருப்பதி பெருமாளை குறிக்கும் புதன் வீடான மிதுனத்தில் வக்கிரம் பெற்று அமைந்துள்ளார். இதனால்தான் கேள்வியாளர் திருப்பதி பெருமாளை குல தெய்வமாக வழிபடுகிறார்.  

தெய்வ அனுக்கிரகத்தை குறிக்கும் உதயத்திற்கு 9 ஆமிடத்தில் உச்சமான புதனை, மீன குரு நேர் பார்வை பார்க்கிறார். இது கேள்வியாளருக்கு அவரது தற்போதைய குல தெய்வமான திருப்பதி பெருமாளின் அனுக்கிரகம் பரிபூரணமாக உள்ளதை காட்டுகிறது. புதன் = பெருமாள். உச்ச புதன் = திருப்பதி பெருமாள். 9 ல் அமைந்த உச்ச புதன் கேள்வியாளரின் பரிசுத்த வழிபாட்டின் பலன் கேள்வியாளருக்கு தெய்வானுக்கிரகமாக திருப்பி அளிக்கப்படுகிறது என்பதை குறிப்பிடுகிறது. திருப்பதி பெருமாளை வழிபட்ட பிறகே உணவு உண்ணுதல், முக்கிய குடும்ப செயல்களை செய்கின்றனர் கேள்வியாளரின் குடும்பத்தினர்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

உங்கள் ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil