நீ வருவாயென…

வாழ்க்கைத்துணை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு ஒரு ஆசை இருக்கும். ஆசைக்கும் கொடுப்பினைக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கையும் அதன் போராட்டமும்..

பொதுவாக வாழ்க்கைத்துணையின் திசையை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர் என்பதை தவிர இப்பதிவில் ஜாதக அமைப்பை வைத்து ஒருவரது வாழ்க்கைதுனைவரின் அம்சங்களை கண்டுகொள்ளது பற்றி அலசியிருக்கிறேன். 

மேற்கண்ட ஜாதகத்தில் வாழ்க்கைத்துணைவரை குறிக்கும் ஏழாமிடத்தில் குரு இருக்கிறார். ஏழாமதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் சூரியனுடன் இணைந்திருக்கிறார்.


ஜாதகரின் மனைவி அரசு வங்கியில் பணி புரிகிறார். குடும்ப பாவம் குருவினுடையதாக இருப்பதால் குடும்ப உறவில் இணையும் மனைவி குருவின் காரகங்களுள் ஒன்றான தனம் புழங்கும் துறை சார்ந்தவர் என எடுத்துக்கொள்ளலாம். ஏழாமதிபதி சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்ததால் ஜாதகரின் மனைவி அரசுப்பணியில் இருப்பார் என அனுமானிக்கலாம்.


நவாம்சம் திருமண பந்ததிற்காகவே விசேஷமாக ஆராயப்பட வேண்டும். ராசியில் 7 ஆமிடம் என்றால் நவாம்சத்தில் 9 ஆம் பாவம் கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் ராசியில் ஒருவருக்கு அளிக்கப்படும் பாக்கியங்களை தெளிவாக கண்டுகொள்ளவே நவாம்சம். நவாம்சம் பாக்கியஸ்தானத்தின் நீட்சி என்றால் அது மிகையல்ல. அந்தவகையில் மேற்கண்ட ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தில் சூரியன் நிற்பதால் வாழ்க்கைத்துணை சூரியனோடு தொடர்புடையவர். அதாவது அரசுப்பணியில் உள்ளவர் என்பதை அறுதியிட்டு காட்டுகிறது.

  
இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகத்தை கவனியுங்கள்.

ஜல ராசியான விருச்சிகம் ஏழாமிடமாகி அதன் அதிபதி செவ்வாய் மற்றோர் ஜல ராசியான கடகத்தில் நீச நிலையில் உள்ளார். அதனை நீசமாகி வக்கிரமடைந்த ஜலக்கோளான குரு பார்வை செய்கிறார். எனவே ஜாதகிக்கு வாய்க்கும் கணவர் வெளிநாடு தொடர்புடையவர் என அனுமானிக்கலாம். செவ்வாய் நீசமும் குரு ராசியில் வலுவடைந்து நவாம்சத்தில் பலவீனமடைந்ததும்  ஜாதகிக்கு திருமணத்தில் ஏற்பட்ட தாமதத்தை குறிப்பிடுகின்றன.
நவாம்சத்தில் ஒன்பதாம் பாவத்தில் அமைந்த கேது ஒரு ஜலக்கோள் அத்துடன் ஒன்பதாம் பாவாதிபதி செவ்வாயும் வெளிநாட்டை குறிக்கும் ராகுவோடு தொடர்பில் இருப்பது கவனிக்கத்தக்கது. குடும்ப ஸ்தானமான 2 ஆமிடத்தில் ஜலக்கோள் சந்திரன் நிற்பது ஜாதகியின் குடும்ப வாழ்வு வெனிநாட்டில் என எடுத்துக்கொள்ளலாம்.
ராசியில் 7 (வாழ்க்கைத் துணை) ஆம் அதிபதியும் 12 (தாம்பத்யம் மற்றும் வெளிநாடு)  ஆம் அதிபதியுமான செவ்வாயின் திசையில் ஜாதகி திருமணம் முடிந்து வெளிநாடு சென்றார். ஜல ராசியான கடகத்தில் வெளிநாடு செல்வதை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சனியின் பூசம்-3 ல் நிற்கிறார் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.

ஜாதகி ஒரு மருத்துவர்.
ஜீவனத்தை குறிக்கும் 1௦ ஆமதிபதி புதன் சூரியன் மற்றும் செவ்வாயுடன் 9ல் கூடியுள்ளது. இம்மூன்றும் மருத்துவத்துடன் தொடர்புடைய கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன, குடும்ப பாவாதிபதியும் ஜீவன காரகனுமான சனி 7ல் மருத்துவ கிரகமான புதன் வீட்டில் நின்றது ஜாதகியின் ஜீவனம் மருத்துவம் மூலம் ஏற்படும் என்பதோடு குடும்பத்திற்கு வரும் கணவனும் மருத்துவனே என்பதை குறிப்பிடுகிறது.

ராசியில் ஏழாமதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்ததும் கணவரும் மருத்துவர் என்பதை உறுதி செய்கிறது. புதன், சூரியன், செவ்வாய் மூன்றும் மருத்துவத்தோடு தொடர்புடைய கிரகங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜாதகியின் கணவர் புகழ் பெற்ற மருத்துவர்.
நவாம்சத்தில் லக்னத்திலேயே மருத்துவக கிரகங்களுள் ஒன்றான செவ்வாய் நின்று ஒன்பதாம் பாவாதிபதியும் ஒளஷத காரகன் எனப்படும் புதனாகி தன்வந்திரி எனப்படும் பிரதான மருத்துவ கிரகமான சூரியனுடன் இணைந்து 7 ல் நின்றது ஜாதகியின் கணவர் மருத்துவர் என்பதை தெளிவாக்குகிறது.
விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்,
வாழ்த்துக்களுடன்,

அன்பன்,பழனியப்பன்.

அலைபேசி எண்: 7871244501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil