இயற்கையின் மொழி!

நிமித்தம் என்பது நல்ல முறையில் நாடி சுத்தியுடன், சரக்கலை, பிரணாயாமம், தியானம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு எளிதில் கிட்டும். இத்தகைய பயிற்சிகளை  பெற்றவர்களுக்கு இயற்கையை திறந்த மனதுடன் பார்க்கும் மனநிலை ஏற்பட்டுவிடும் என்பதுதான் இதன் அடிப்படை. ஆன்ம பலம் மிக்க ஏனையவர்களும் தெளிந்த மனதுடன் இயற்கையை கவனிக்கும்போது, பிரபஞ்சம் அவர்களுக்கு காட்டும் வழிகாட்டிக் குறிப்புகளே நிமித்தமாகும்.

எனது நீண்ட நாள் வாசகர் ஒருவர் சமீபத்தில் எனது பதிவுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். எனது பதிவுகள் அனைத்தையும் படித்தவர் அவர். அவ்வப்போது பதிவுகள் பற்றி விளக்கங்கள் கேட்பார். சமீபத்தில் “நீங்கள் நிமித்தம் பற்றி பதிவே இடவில்லையே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என கேட்டிருந்தார். எனது பதிவுகள் சிலவற்றில் நிமித்தங்கள் பற்றிய சில குறிப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக பூப்போல தூவியிருப்பேன். ஆனால் நிமித்தம் பற்றி முழுமையான பதிவுகள் எழுதியதில்லை. நிமித்தங்களில் நுட்பமான அறிவை பெற்றிருந்தால் ஜாதகமின்றி பலன் கூறலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனது பதிவுகள் அனைத்துமே நானே அனுபவ ரீதியாக ஆராய்ந்து உறுதி செய்தவைகளே என்பதால் எனது நிமித்த அனுபவங்களில் ஒன்றை இங்கு வாசகர்களுக்காக பதிவிடுகிறேன். எனவே இந்த பதிவு வருவதற்கு மூல காரணமாகவிருந்த தொடர்புடைய எனது வாசகருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் நேரடியாக சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். என்னை உலுக்கிய அனுபவமும் கூட என்று இதைக் கூறலாம். இச்சம்பவம் நடந்த பிறகே எனது வாழ்வில் நிமித்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக மாறின.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு வார இறுதியில் காவிரிப் படுகை அணை ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றுவர எண்ணிக் கிளம்பி அணைப்பகுதியை அடைந்தோம். மரங்களைப் பார்த்து ரசிப்பது எனக்குப் பிடிக்கும். அணையின் அருகில் இருந்த சிறு வனத்தில் மரங்களையும், மலர்கள், செடி, கொடிகள் ஆகியவற்றை ரசித்த பிறகு நீர்த்தேக்கத்திற்கு சென்று குளித்து வரலாம் என்று அணையை நோக்கி நடந்தோம்.

அணைக்கு செல்லும் வழியில் அங்கு பிடித்த மீன்களை உடலைக் கீறி, மசாலா தடவி சுவையாக வறுத்து வைத்திருந்தனர். முன்பணம் கட்டிச் சென்றால் திரும்புகையில் மீன் வறுவலுடன் சுவையான மீன்கறி உணவை சுவைக்கலாம். குழந்தைகளுக்காக சில விளையாட்டு உபகரணங்கள் இருந்தன. அதில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை பார்த்துக்கொண்டே அவ்விடத்தை கடந்து சென்றோம்.

சற்று தொலைவில் ஒரு காவல்துறை வாகனம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அணையிலும், நீர்ப்படுகையிலும் குளிப்பது தடுக்கப்பட்டுள்ளது என்றொரு பதாகை வாசகம் கண்ணில் பட்டது. எதிரே அணைப்படுகையில் குளித்துவிட்டு சிலர் எங்களை கடந்து சென்றனர். இவர்களை எப்போதும் தடுக்க முடியாது என்ற மனநிலையோ என்னவோ? வாகனத்தில் அமர்ந்திருந்த காவல்துறை உயரதிகாரி கைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.

அணைப்பகுதிக்கு நுழையும் வழியில் அணையின் தடுப்புச் சுவரை ஒட்டி ஒரு Grill Gate  போடப்படிருந்தது. அதில் சிரமப்பட்டு ஏறினால் அணைப்பகுதியினுள் சென்றுவிடலாம். கவனமாக அதை கடக்காவிட்டால் Gate ன் மீது நீட்டிகொண்டிருந்த அதன் கூரிய அம்புகள்  உடலைக் கிழித்துவிடும் அபாயமிருந்தது. ஒரு வழியாக அதை சமாளித்து சாகசம் செய்த பிறரைப் போலவே நாங்களும் அணைப்பகுதிக்குள் சென்றோம். அபாயங்களை கடந்து செல்லும்போது கிடைக்கும் சாகச உணர்வை அனுபவித்தவர்களிடம்தான் கேட்ட வேண்டும். அணையிலிருந்து படுகை வழியாக நீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருந்தது. பலர் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் வந்திருந்தனர். அங்கு ஆனந்தமாக ஓரிரு மணி நேரங்கள் செலவிட்டோம். குறிப்பாக குழந்தைகள் இத்தகைய அனுபவங்களை மிகவும் விரும்புவர். பாதுகாப்பை உறுதி செய்துகொண்டால் ஆனந்தமே.

அணையிலிருந்து வெளியேற மனமின்றி ஒரு வழியாக திரும்பினோம். வழியில் பார்த்த காவல்துறை உயரதிகாரியின் வாகனத்தை தற்போது காணவில்லை. புறப்பட்டுச் சென்றுவிட்டார் போலும். அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் பின்னால் சில மரங்களும் செடிகளும் தென்பட்டதால் அங்கு சென்று பார்த்தோம். அங்கு மூன்று கீரிகள் விளையாடிக்கொண்டிருந்தன. பள்ளி நாட்களில் பாம்பாட்டி கிரியையும் பாம்பையும் மோதவிட்டு வேடிக்கை காண்பித்தது நினைவுக்கு வந்தது. கடும் விஷப் பாம்பானாலும் பயமின்றி அதை கடித்து துவம்சம் செய்ய முனைப்பு காட்டும் கீரியின் துணிச்சலும், பாம்பின் கொத்தலில் இருந்து கீரி தனது கால்களால் குதித்து  தப்பும் சாகசமும் பள்ளி நாட்களில் என்னை பிரம்மிக்கச் செய்திருந்தன. இன்று அத்தகைய வித்தைகளை காணமுடியாது. ஒரு வினாடி கவனம் சிதறினாலும் தனது உடல் கீரியால்  துண்டாகிவிடும் எனும் நிலையில் பாம்பும், ஒரு வினாடி கவனம் சிதறினாலும் தனது உயிருக்கு பாம்பால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் எனும் நிலையில் கீரிக்கும் அங்கே நடப்பது ஒரு மரண சாகச விளையாட்டு. திரும்பும் வழியில் மீன் கடையில் சிலர் மீன் உணவு சுவைத்துக்கொண்டிருந்தனர்.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பிறகே பிரச்சனை ஆரம்பித்தது.  முதலில் உடல் அரிப்பு ஆரம்பித்தது எனக்குத்தான். ஷாஜஹான் படத்தில் பிச்சைக்காரி கோவை சரளா தொடர்பால்  விவேக்கிற்கு உடல் அரிக்குமே அதெல்லாம் எனக்கு ஜுஜுபி என்ற நிலை. மகளுக்கு பெரிய பாதிப்பு தெரியவில்லை. மனைவிக்கு எந்த அறிகுறியுமில்லை. வீடு வந்து சேரும் வரை பேருந்தில் உடல் அரிப்பை நாகரிகமாக பிறர் முன்னிலையில் சமாளிப்பது பெரும் சோதனையாக இருந்தது. வீடு வந்ததும் எனது பள்ளி ஆசிரியரின் மகன் ஒருவர் தனது குல தெய்வம் பற்றிய கேள்வியுடன் எனக்காக காத்துக்கொண்டிருந்தார். “என்ன கொடும சரவணா” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன்.  வீட்டில் நாகரீகமாவது ஒன்னாவது. உடல் அரிப்பு தாளவில்லை. மனைவி எதோ ஒரு லோஷனை பக்கத்து வீட்டிலிருந்து வாங்கிவந்து கொடுத்தார். ஆசிரியரின் மகன் அந்த குறிப்பிட்ட அணையில் திருப்பூரின் சாயக் கழிவுகளுடன் வந்து சேரும் காவிரி நீரைத்தான் தேக்கி வைத்திருப்பார்கள். “அங்கு சென்றா குளித்தீர்கள்?” என்றார். “வாய்யா இவ்வளவு நேரம் எங்கிருந்தே” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு காரணம் தெரிந்துவிட்டதால் அவரை அனுப்பி வைத்த பிறகு விழுந்தடித்துக்கொண்டு மருத்துவரை அணுகினேன். சட்டையை கழட்டுங்கள் என்றார் மருத்துவர்.

எனது முதுகைப் பார்த்த மருத்துவர் “காவல்துறை உபசரிப்பா” என்று கடுப்பேற்றினார். நான் சென்று வந்த மூன்றாவது நாள் எனது மகளை அவரிடம் இதற்காக கூட்டிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 5 ஆவது நாள் மனைவியும் சிகிச்சை பெற வேண்டி வந்தது. எனது வாழ்வில் மாறாத வடுவை ஏற்படுத்திய சம்பவம் இது.

அணைக்கு செல்லும்போது வழியில் இருந்த மீன் கடையில் உடலில் கீறி மசாலா தடவி மீனை வறுத்து வைத்திருந்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அணைக்கு சென்று குளித்து வந்தால் உனது உடலும் இதுபோல கீறப்படும் என்பதன் நிமித்தம் அது.

அணைக்கு செல்லும் வழியில் பார்த்த ஆனால் தடுக்காத காவல் துறை உயரதிகாரியும், எச்சரிக்கைப் பதாகையும் மீறிச் சென்று குளித்தால் அதன் விளைவுகளுக்கு பொறுப்பு நீதான், எச்சரிப்பது மட்டுமே எங்களது வேலை என்பதன் நிமித்தம் அது.     

அணைக்குள் நுழைவு வாயிலில் கூரிய அம்புகளுடன் இருந்த Grill Gate ஐ மீறிச் சென்றால் உடல் அம்பு கிழிவதுபோல பாதிக்கப்படும் என்பதன் நிமித்தம் அது.

திரும்பி வரும் வழியில் பார்த்த கீரிகள் அணையில் குளித்துவிட்டதால் உடல் பாம்பு கடிபடுவதுபோல பாதிக்கப்படவுள்ளது. தோல் பாம்பின் விஷம் போன்ற ரசாயனத்தால் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதன் நிமித்தம். .

பிரபஞ்சத்தை நேசமுடன் கவனிக்கும்போது அது நம்முடன் பேச முயல்வதை தெளிவாக உணர முடியும். அதை உணர்வதற்கு ஞானிகளின் தூய, பற்றற்ற மனநிலை நமக்கு இருக்க வேண்டும். தெளிந்த ஞானிகள் தனது ஆன்ம பலத்தால் பிரபஞ்சப் பேராற்றலை உணர்ந்து, எந்தவித ஜனனக் குறிப்புகளையும் பார்க்காமல் துல்லியமாக நமது பிரச்சனையறிந்து நமக்கு வழிகாட்டுவர். நிமித்தம் என்பது அசரீரி போல நமக்கு பிரபஞ்சம் அறிவிக்கும் தகவலாகும். நிமித்தம் நாம் கேட்காமல் நமக்கு தெரிவிக்கப்படும் செய்தி. சகுனம் என்பது நாம் பிரபஞ்ச ஆற்றலை நாடி எனக்கு வழிகாட்டு என்று பிரபஞ்சத்திடம் வேண்டுவதாகும். சகுனம் நாமாக விடை தேடி பிரபஞ்ச அறிகுறிகளை ஆராய முற்படுவதாகும். நிமித்தத்தில் கிடைக்கும் தகவல் முழுமையானது. சகுனத்தில் நமது கேள்விகளுக்கு பிரபஞ்சம் பதில் அளிக்கலாம் அல்லது மௌனம் காக்கலாம். சகுனத்தில் பதில் உறுதியில்லை. நிமித்தம் அறிவிக்கும் தகவல் உறுதியானது. நிமித்தம் பிரபஞ்சத்தின் மொழி. நிமித்தத்தை புரிந்துகொள்வதற்கு நமக்கு ஆன்ம பலமும், பற்றற்ற தூய மனமும் வேண்டும்.

மீண்டும் விரைவில்மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,   

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil