துல்லியமாக குழந்தையின் ஜனன நேரம் குறிப்பது எப்படி?

துல்லியமாக குழந்தையின் ஜனன நேரம் குறிப்பது எப்படி?

நமது முன்னோர்கள் நமக்களித்த அறிய பொக்கிஷமான ஜோதிடக்கலையை எப்படி பயன்படுத்துவது என்பதை தற்கால ஜோதிடர்கள் கூட ஓரளவே அறிவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. ஜோதிடர்களே இப்படி என்றால் மக்களின் நிலை இன்னும் பரிதாபம்தான். ஜோதிடம் எனும் அரிய கலையின் வெற்றி என்பது அதை மிகச்சரியாகக் கையாண்டு நமது வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வதில்தான் உள்ளது. அதற்காகத்தான் நமது முன்னோர்கள் இக்கலையை நமக்கு அருளியுள்ளார்கள். அதிலும் குழந்தைக்கு ஜனன நேரம் குறித்தலில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்கின்றன.
நமதுசனாதன வேத தர்மம் (இந்து என்பது மதத்தின் பெயரல்ல நம்மை குறிப்பிட இதர வகையினர் அழைத்த பெயரே ஆகும்) கிருத யுகத்தில் நிச்சயதார்த்த லக்னமே ஜனன லக்னம் என்றும் திரேதா  யுகத்தில் திருமண லக்னமே ஜனன லக்னம் என்றும் துவாபர  யுகத்தில் தாயின் யோனியில் இருந்து குழந்தை வெளிப்படும் நேரமே ஜனன லக்னம் எனவும் கலியுகத்தில் குழந்தை ஜனனமாகி பூமியில் முழுமையாக விழும் நேரமே ஜனன லக்னம் எனவும் கூறுகிறது (பல்வேறு புராண இதிகாசங்கள், உபநிஷத்துக்கள், ஜோதிட நூல்களில் இதில் சில வேறுபாடுகளும் காணக் கிடைக்கின்றன).
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான ஜோதிட அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை என்பது சுகப்பிரசவமானால் குழந்தையின் கண்கள் வெளியே தெரியும் நேரமாகும். இதுவே சிஷேரியனானால் கத்தி மூலம் வயிற்றைக் கிழித்த பிறகு தெரியும் குழந்தையின் முதல் தரிசன (பார்வை) நேரமே (First sight of child) ஆகும்.
பிற்சேர்க்கை:   இரண்டு கடிகாரங்கள் எப்படி ஒரே நேரத்தைக் காட்டதோ அதேபோல் இரு ஜோதிடர்கள் ஒரே மாதிரியான பலன்களை கூறமாட்டார்கள் என வேடிக்கையாகக் கூறப்படுவதுண்டு.கடிகார நேர வேறுபாட்டைத் தவிர்க்க டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பிரசவ அறைக் கடிகாரத்தை  பிரசவ அறைக்கு தாயை அழைத்துச் செல்லுமுன் ஒரே நேரம் காட்டுவதை உறுதி செய்து கொள்வது உதவும்.
(இது சொந்த அனுபவம். அதற்க்கு எங்கள் டாக்டர் டென்ஷன் ஆனது தனிக்கதை)வாழ்வின் பொக்கிஷமான தருணங்களில் ஒன்று மருத்துவரிடமிருந்து நமது மழலையை ஈரமான பச்சை வாசனையுடன் வாங்கும் நேரமும் ஆகும். ஒரு தந்தை எனும் முறையில் ஒரு ஆண்மகன் தவறவிடாது அனுபவித்து உணரவேண்டிய தருணம் அது. எனவே ஒருபோதும் அத்தருணத்தை தவறவிடாதீர்கள்.
வாழ்துக்களுடன்,
ஜோதிடர்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil