விஷ்ணு-லக்ஷ்மி யோகம்

அனைத்து வசதிகளையும் பெற்று புத்தியில் மட்டும்  தெளிவு இல்லாதவர் சமூகத்திற்கு பாரமே. அனாதையாயினும் கற்ற கல்வியும், தேர்ந்த அறிவும் ஒருவரை வாழ்வின் உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் புத்திமான் பலவான் என்கிறார்கள். புத்தியை புகைபோட்டு மறைக்க முடியாது.  குலம், கோத்திரம் என்று எந்த வகையிலும் அறிஞர்களை கட்டுப்படுத்திவிட இயலாது. அறிவு என்பது குன்றிலிட்ட விளக்குபோல பிரகாசிக்கும். சாக்கிரடீசை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் மனதில் வைதிருப்பதர்க்குக் காரணம் அவர் அறிவாளி என்பதால்தான். ஜோதிடத்தில் புத்தி சாதுர்யத்திற்கு உரிய கிரகம் புதனாகும். வாக்கு வன்மை, தர்க்கம் ஆகியவற்றிற்கும் இவரே அதிபதி. ஜாதகத்தில் நல்ல ஆதிபத்தியம் பெற்ற தோஷமடையாத புதன் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம், திக்பலம் பெற ஒருவர் அனைத்து வகையிலும் தனது அறிவால் உயர்ந்திடுவார். புதனின் இந்நிலைக்கு “பத்ர யோகம்” என்று பெயர்.  ஜாதகத்தில் இதர கிரகங்கள் கைவிட்டுவிட்டாலும் கூட புதன் மட்டுமே நல்ல நிலை பெற்றிருந்தால் அவர் வாழ்வில் தனது சுய அறிவால் நல்ல நிலைக்கு உயர்ந்துவிடுவார். மகா விஷ்ணுவை அதிதேவதையாக பெற்ற புதன், லக்ஷ்மியை கடாக்ஷத்தை குறிக்கும் சுக்கிரனுடன் இணைவு பெறுவதை விஷ்ணு-லக்ஷ்மி யோகம் என்கிறார்கள்.

ஜாதகத்தில் நல்ல ஆதிபத்தியம் பெற்ற புத-சுக்கிர இணைவு கேந்திர, திரிகோணங்களில் அமைவது மிகச் சிறப்பு. 2, 11 ஆமிடங்களில் இணைவதும் சிறப்பே. இருவரும் கேந்திர திரிகோணாதிபதிகளாயினும் நன்மையே.  இவ்விருவரில் ஒருவர் ஆட்சி, உச்சம், திக்பலம் ஆகிய வகைகளில் பலம் பெற ராஜ யோகமே. கேந்திரங்களில் இவ்விருவர் இணைவு ஒருவரது ஜாதகத்தில் இதர கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் நீங்கிவிடும் வல்லமை பெற்றது என்பதை

“காணு லக்கினம் நாழேல் பத்தில் கோனு சுக்கிரன்

புந்தியும் கூடிட பாபக்கிரக தோஷம் பானுகண்ட பனிபோல் நீங்குமே”

எனும் ஜோதிட பாடல் கூறுகிறது.

விஷ்ணு லக்ஷ்மி யோகத்தின் அனுபவ அளவு. 

நல்ல ஆதிபத்தியம் பெற்ற புதன் சுக்கிரன் இணைவில் ஒன்று திக்பலம் பெற்றுவிட்டாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும் ஜாதகர் எந்தகைய தாழ்ந்த நிலையில் இருந்தாலும், குடிசையில் பிறந்திருந்தாலும் கோபுரத்திற்கு உயர்ந்துள்ளதை எனது அனுபவத்தல் பார்த்து பிரம்மித்திருக்கிறேன். புதன் லக்னத்திலும், சுக்கிரன் 4 ஆமிடத்திலும் திக்பலம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இவர்களிருவரும் கேந்திர-கோணாதிபதிகளாக 1,5,9,4,7,10 ஆகிய சுப ஆதிபத்தியம் பெற்றிருக்க வேண்டும். லக்ன பாவர்களாகவோ, பாதகாதிபதிகளாகவோ, மறைவு ஸ்தானாதிபத்தியமோ இவர்களுக்கு ஏற்படாதிருப்பின் மிகுந்த நன்மை. உதாரணமாக மீன லக்னத்தவர்களுக்கு சுக்கிரன் 3, 8 ௮திபதியாக வருவதும், புதன் பாதகாதிபதியாக வருவதாலும், இந்த விஷ்ணு-லக்ஷ்மி யோகம் மீன லக்னத்தவர்களுக்கு மிக குறைவான நன்மையே செய்கிறது.

யோகத்தை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

இந்த யோகம் பெற்றவர்கள் புதன் சுக்கிரன் இணைவின் காரக தொழிலை செய்தால் மிகுந்த நன்மை. இவ்விருவர் இணைவின் காரக தொழில்களான சுற்றுலா (Tourism), கலைத்துறை (Cine Field), வரைகலை (Archi tech), கணினி நுட்பம் (Data Science), அழகியல் (Beautician, Decoration) சொகுசு வாகனத் தொழில், கல்யாணத் தரகர், பொருளாதார ஆலோசகர்கள், நிர்வாக ஆலோசகர்கள் & செயலாளர்கள் (Corporate Secretaries & Executives) போன்ற துறைகளில் ஈடுபட மிகுந்த புகழ் பெறுகிறார்கள். இந்த யோகம் பெற்றோர் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு சிறப்பான பங்களிப்பை மனமுவந்து அளித்து அத்தகைய நிறுவனங்களில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார்கள். (இதற்கு நிறுவன முதலாளியின் ஜாதகமும் நன்கு அமைந்திருக்க வேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கது.)

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

ரிஷப லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி, உடன் புதன் திக்பலம் பெற்றிருப்பது மிகச் சிறப்பு. 8 ஆமதிபதி குரு 6 ல் அமைந்திருப்பது நன்மையே. ஆனால் 2 ஆமிடமும், 7 ல் அமைந்த நீச சந்திரனும், 5, 8  ஆகிய பாவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தோஷங்களை இவரது ஜாதகத்திலமைந்த விஷ்ணு-லக்ஷ்மி யோகம் எப்படி தவிடுபொடியாக்குகிறது என்பதை காண்போம். நீச சந்திரனை யோக கிரகங்கள் பார்வை செய்வதால் 7 ஆமிட தோஷம் நீங்குகிறது. சந்திரன் புதனின் கேட்டையில்தான் நிற்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இதனால் இவருக்கு நல்ல துணைவி. அமைந்து நல்ல இல்லறமாக வாழ்வு உள்ளது. 2, 5 ஆமிட பாவ கிரக சேர்க்கையை கவனியுங்கள் இவர் ஒரு பழம் பெரும் நிறுவனத்தில் மனித வளத்துறையில் பணிபுரிகிறார். லக்னத்திற்கு 5 ல் அமைந்த சனியும் செவ்வாயும் கால புருஷனுக்கு 6 ல் நிற்பதாலும் நிறுவனத் தலைவரை குறிக்கும் சூரியன் ராகு சேர்க்கை பெற்று 2 ல் நிற்பதாலும் இவரது நிறுவனம் கடனிலும் வழக்கிலும் தடுமாறுகிறது. ஜாதகத்தில் ராகு சூரியனை கடந்து புதனை தொடுகிறார் என்பதை கவனிக்க. ஆனால் உச்ச வீட்டை நோக்கி வரும் ராகுவை இந்த கிரக இணைவு சிறப்பாக கையாளுகிறது. 5 ல் அமைந்த சனி-செவ்வாய் சேர்க்கை இவரை தொழிலில் ஏற்படும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள சட்டம் பயில வைத்துள்ளது. 5 ல் அமைந்த  கிரக சேர்க்கையானது 5 ஆமிடாதிபதியான புதனை சார்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்குகிறது. 5 ஆமிடம் வழக்கில் வெற்றியை குறிக்கும் என்பதோடு செவ்வாயும் சனியும் கேந்திராதிபதிகள் என்பதாலும் ஜாதகர் தனது சாதுர்யத்தால் கடன் வழக்குகளிலும் சட்ட நடவடிக்கைகளிலும் சிறந்த ஆலோசனைகளை வழங்கி நிறுவனத்தை பாதிப்புகளில் இருந்து மீண்டு எழ வைத்துக்கொண்டுள்ளார். குறைவற்ற புத்திரமும் ஜாதகருக்கு உள்ளது. தற்போது நிறுவனத்தின் நம்பகமான, அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.

கீழே மற்றொமொரு பெண்மணியின் ஜாதகம்.

ரிஷப லக்னத்திற்கு 4 ல் திக்பல சுக்கிரனுடன் புதன் இணைவு பெறுவது சிறந்த வீடு வாகன வசதிகளை ஏற்படுத்தும். சிம்ம ராசியில் இச்சேர்க்கை ஏற்படுவது அதில் உயர்ந்த அந்தஸ்தையும் சேர்த்துத் தரும். 4 ஆமிடம் அழகு, கலை நயம் ஆகியவற்றை குறிப்பிடும். 4 ஆமிடம் ஆரோக்கியம், உடலின் கட்டுக்கோப்பு ஆகியவற்றை குறிப்பிடும். கால புருஷனுக்கு 5 ஆமிடமான சிம்ம ராசியில் விஷ்ணு-லக்ஷ்மி யோகம் ஏற்படுவது உடலின் கட்டுக்கோப்பையும், ஆரோக்கியத்தை பேண முக்கியத்துவம் கொடுப்பதையும் குறிப்பிடுகிறது. 4 ஆமிட கிரக இணைவு 10 ஆமிடத்தை பார்வை செய்வதால் தனது இயல்பான மன எண்ணங்களை தொழிலாக மாற்றி சுயமாக, கௌரவமாக திறம்பட பொருளீட்டுவதை குறிப்பிடுகிறது. சிம்மம் சுய உழைப்பு என்பதால் ஜாதகி சுய உழைப்பை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அது உடல் உழைப்பாக இருக்காது. இந்த ஜாதகத்திலும் 1, 2, 7, 12 ஆகிய பாவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குடும்பம், வருமானம், விரையங்கள் வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் ஜாதகத்தில் அமைந்த விஷ்ணு லக்ஷ்மி யோகமானது தோஷங்களை திறம்பட கையாள வைக்கிறது. இவர் உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளகூடிய உடலியல், உணவு, பயிற்சி முறைகளை சொல்லித்தரும் உலகளாவிய நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார். தனது தொழில் திறமையால் சிறப்பாக பொருள் ஈட்டுகிறார். அதே சமயம்,  ஜாதகப்படி தனது குடும்ப, பொரளாதார பாதிப்புகளை திறம்பட கையாள்கிறார். இங்கு யோகம் சிறப்பாகவே உள்ளது. லக்னத்தில் ஒரு பாவி உச்சம். லக்னம் ஜாதகரை வழிநடத்தும் பாவம் என்பதால் லக்ன ராகு இந்த ஜாதகியின் வாழ்க்கையிலும் அணுகு முறையிலும் தனது சுபாவப்படி வழிநடத்துவார். தனித்த லக்ன ராகு சிறப்பே. ஏனெனில் அவர் லக்னாதிபதியை சார்ந்தே செயல்பட வேண்டும். அதே சமயம் லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தில் அமைந்த ராகுவை சார்ந்தே செயல்பட வேண்டும். லக்னத்திலும் 7 ஆமிடதிலும் அமைந்த பாவ கிரக அமைவால் யோகத்தில் வீரியம் பொருளாதார வகையில் சிறப்பாக இருக்கும். ஆனால் உயிர் காரகத்துவங்கள் வகையில் சிறப்பல்ல. கால புருஷனுக்கு காதல் பாவகமான சிம்ம ராசியில், கால புருஷனின் களத்திர காரகர் சுக்கிரன், காதல் காரகர் புதனுடன் சேர்ந்து அமைந்துள்ளதை கவனிக்க. இது காதல் திருமணத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஜாதகி காதலித்து திருமணம் புரிந்தவர். 1-7 ல் அமைந்த பாவ கிரக அமைவு இதற்கு மற்றுமொரு முக்கிய காரணம்.

விஷ்ணு-லக்ஷ்மி யோகத்தை மதன கோபால யோகம் என்றும், லக்ஷ்மி நாராயண யோகம் என்றும் அழைப்பர். சிற்றின்ப ஆசையும், ஆன்மீக ஒழுக்கமும் ஒருங்கே ஏற்படும் ஒரு விசித்திரமான  ஒன்றுக்கொன்று முரணான நிலை இது. இந்த யோகத்தை வாழ்வின் உயர்வுகளுக்கு பயன்படுத்தாமல் சிற்றின்பத்தில்  திளைப்பவர்களை கடன், வியாதி, வழக்கு என்ற வகையில் வாழ்வின் பிற்பகுதியில் இதே கிரக அமைவு தண்டிக்கவும் செய்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். கால புருஷனுக்கு தன ஸ்தானாதிபதி சுக்கிரன் என்பதும், கால புருஷனுக்கு 6 ஆமிடாதிபதி புதன் என்பதும் இதற்குக் காரணம். உயர்ந்த ஒழுக்கமும், நிறைவான, அளவான இல்லறத்தையும் ஏற்பவர்களுக்கு வாழ்வின் பிற் பகுதியில் இந்த யோகம் உயர்ந்த புகழையும் ஏற்படுத்துகிறது.

மீண்டும் விரைவில் மற்றொமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

ஒரு வீட்டை விற்று மறுவீடு வாங்கும் அமைப்பு யாருக்கு?

கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வாழ்க்கையில் தனக்காக ஒரு குடும்பத்தையும் வீட்டையும் உருவாக்கிக்கொள்பவர்களையே உலகம் இன்று மதிக்கிறது. சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெறுபவர்கள்கூட சிறப்பான வீடு வசதிகளை பெற முடிவதில்லை. கட்டிடம் என்பது

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நில், கவனி, காதலி!

இன்றைய திருமண எதிர்பார்ப்பானது கல்வி, வசதி, அந்தஸ்து என்பனவற்றை முன்னிட்டே அமைகிறது. உண்மையான காதல் தங்களுக்கிடையேயான புரிதலைவிட இதர விஷயங்களை கண்டுகொள்ளாது. இரு மனம் இணைவில் மூன்றாவது நபர் தலையிடும்போதுதான் இதர விஷயங்கள் பேசப்பட்டு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

வேலையும் அங்கீகாரமும்!

திறமையும் வேலையும் ஒருங்கிணையும்போது அதில் ஒரு நேர்த்தி வெளிப்படும். அப்படி நேர்த்தியான வேலையில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களின் திறமை பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொதுவானது. அப்படி பாராட்டப்படவில்லை எனில், அது தங்களது திறமையை

மேலும் படிக்க »
காதல்

சலனம்.

மனித வாழ்வு இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை வளமாக்கிக் கொள்வதும் பாழ்படுத்திக்கொள்வதும் நம் கையில்தான் உள்ளது. வாய்ப்புகள் கல்வி, சம்பாத்தியம், திருமணம் போன்ற எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதன் தனது

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

கிரக வக்கிரம் – எது முக்கியம்?

வக்கிர கிரகங்கள் தமது காரகப் பலன்களை வழங்குவதில் தடைகளையும், தாமதத்தையும் கொடுத்தாலும் பலன்களை மறுப்பதில்லை. பலன் வழங்க அவை ஜாதகரின் தீவிர முயற்சியை எதிர்பார்க்கின்றன. தீவிரமாக முயலும் ஜாதகருக்கு தனது காரக அறிவை சிறப்பாக

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

ஹரே கிருஷ்ணா!

ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil