குலம்

நமது முன்னோர் வகை பரம்பரையில் பலவித சூழ்நிலைகளைக் கடந்துதான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நமக்கான அடையாளம் என்று கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சுய குல பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வந்தன. ஆனால் இன்று உலகமயமாக்கலின் விளைவாக உலகம் நெருக்கமாகிவிட்டது. இதனால் தேச, சமூக, இன, மொழி, ஜாதீய அமைப்புகள் பல நூற்றாண்டுக்களாக கட்டிக்காத்து வந்த தங்களது கட்டமைப்பை இழந்து வருகின்றன. நமது சமூக ஜாதீய கட்டமைப்புகள் முன்பே ஆட்டம் காணத் துவங்கிவிட்ட நிலையில் மொழி பேதங்களும் இன்று ஒருங்கிணைந்து வருகின்றன. மதங்கள் தங்களது கட்டமைப்பை பாதுகாக்க இன்று போராடுகின்றன. அடுத்த தசாப்தத்தில் பெரும்பாலான அனைத்து பேதங்களும் தேசம் மற்றும் மதம் தவிர இதர வகைகளில் ஒருங்கினைந்துவிடக்கூடிய சூழ்நிலை தெரிகிறது. இந்நிலையில் ஒரு தத்தெடுக்கப்பட்ட பெண் தனது கணவனுடன் என்னிடம் வந்து எனது ஜாதீய அடையாளம் என்ன? என்று என்னிடம் எழுப்பிய கேள்வி என்னை நிலை குலைய வைத்தது என்று சொல்லலாம். இதற்கு முன் இந்து-இஸ்லாமிய கலப்பில் வந்த ஆண் ஒருவர் தான் எந்த வகை வழிபாட்டை பின்பற்ற? என்ற கேள்வியுடன் வந்ததற்கு ஜாதக ரீதியாக பதிலளித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இப்பெண் தனக்கு பிறந்த நாள் மட்டுமே தெரியும். நேரம் தெரியாது என்று  கூறினார். ஜாதகமில்லா நிலையில் பிரசன்னத்தில்தான் இதற்கு விடை காண இயலும். ஜாமக்கோள் பிரசன்னத்தில் பதிலளிக்க முடியாத கேள்வி என்பதே இல்லை என்று கூறலாம். ஆனால் இந்த வகை கேள்வி எனக்கு புதிதாகவும் சவாலாகவும் இருந்ததால் சவாலை ஏற்பது என்று முடிவு செய்து அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

கேள்வியாளப் பெண்மணி தான் பிறக்கும் முன்பே தனது தந்தை மரணித்துவிட்டதால் 4 ஆவதாக பெண்ணாக பிறந்த தன்னை வளர்க்க விருப்பமில்லாத தனது தாய் தன்னை தத்துக்கொடுத்துவிட்டதாக கூறினார். பெற்ற தாய் இன்னும் உயிரோடு உள்ளார் என்றாலும் தன்னை பார்க்க மனமில்லாததால் தான் தொடர்புகொள்ளவில்லை என்று கூறினார். தன்னை தத்தெடுத்த தந்தையும் மரணித்துவிட்டதாகவும் வளர்ப்புத்தாய் உயிரோடு உள்ளதாகவும் கூறினார். பிறந்த நாள்படி தான் விருட்சிக ராசி என்றும் என்ன நட்சத்திரம், லக்னம், பிறப்புப்படியான தனது ஜாதி ஆகிய எதுவும் தெரியாது என்றும் கூறினார். விருட்சிக ராசி என்று கூறியதால் கோட்சாரத்தில் உச்ச சந்திரன் தனது நீச வீட்டை பார்ப்பதால் நீங்கள் விருட்சிக ராசி கேட்டை நட்சத்திரம் என்று கூறினேன். புதன் தத்துக்கு உரிய காரக கிரகமாகும். ஒருவரை வேறொரு இடத்தில் இடம்மாறி வாழவைக்கும் கிரகம் புதன் என்பதால் புதனது கேட்டை நட்சத்திரத்தை கூறினேன். அவர் தெரிந்து வைத்திருந்த தேதிக்காண கிரக நிலைகளை கணினியில் பதிவிட்டபோது கேட்டை நட்சத்திரம் ஜாதகி பிறந்த நாளுக்கு முந்தைய நாள் நள்ளிரவில் துவங்கி ஜாதகி பிறந்த நாள் நள்ளிரவில் முடியும்படி இருந்தது. இடையில் நட்சத்திரம் மாற வாய்ப்பில்லை எனவே கேட்டை என்று நான் கூறியது மிகச் சரி. மேலும் கேள்வியாளரின் பெயர் சரஸ்வதி என்பதாகும். இது புதன், சந்திரன் தொடர்பின் பெயராகும். சந்திரன் விருட்சிகத்தில் புதனின் நட்சத்திரத்தில் அமைவதால் சரஸ்வதி என்ற பெயர் அமைந்துள்ளது.

விருட்சிக ராசி கால புருஷனின் 8 ஆவது ராசி என்பது கவனிக்கத்தக்கது. விருட்சிகத்தில் கால புருஷனுக்கு 4 ஆமதிபதியான தாய்க்கு காரக கிரகம் சந்திரன் நீசம் என்பதாலும், கால புருஷனுக்கு தந்தையை குறிக்கும் 9 ஆமிடமான தனுசுவிற்கு விரைய ராசியாக அமைவதால் சந்திரன் நீச பங்கப்பட்டு, சூரியன் வலுப்பெறாவிட்டால் பெற்றோரை பாதிக்கும் ராசியாகும். உதயாதிபதி சனி உதயத்திற்கு 4 ல் மேஷத்தில் வெளிவட்டத்தில் நிற்பது கேள்வியாளர் குடும்பத்தின் நான்காவது குழந்தை என்று கூறியதை உறுதி செய்கிறது. இப்போது கேள்விக்கு வருவோம். தான் ஒரு இந்துப்பெண் என்பது தெரியும் என்றாலும் தனது பிறப்புப்படியான குலம் என்ன? என்பதே வந்த பெண்மணி எழுப்பிய கேள்வி. பொதுவாக என்னிடம் காதலர்கள் வந்து தங்களது ஜாதகங்களை ஆராய்ந்து பொருத்தம் பார்க்கும்படி கூறினால் நான் திருப்பி அனுப்பிவிடுவது வழக்கம். காதல் உண்மையாக இருந்தால் கசப்புகள் சகித்துக்கொள்ளப்படும் என்பதால் அப்படி அனுப்புவது வழக்கம். ஜாதீய மரபுகள் மறைந்துவரும் இன்றைய காலத்தில் ஜாதியை தெரிந்துகொண்டு பலனடைவது ஒன்றுமில்லை என்பதால் கேள்விக்கான ஆய்வுக்கு போகாமல் அனுப்பிவிட எண்ணினாலும் வந்திருந்த பெண்மணியின் பின்னணியும் வாடிய முகமும் என்னை பதிலுக்கு தள்ளியது என்றே கூற வேண்டும். மேலும் இது போன்ற கேள்வி எனக்கு புதிது என்பதும் மற்றொரு காரணம். கேள்வியை கேள்வியாளர் நேரடியாக கேட்டுவிட்டதால் உதயம், உதயாதிபதி நிலையே பதிலை கூறிவிடும்.

இங்கு உதயம் சனியின் மகரத்தில் அமைந்துள்ளது. எனவே இந்து தர்மப்படி வந்திருந்தவரின் பூர்வீக குலம் சனி குறிப்பிடும் 4 ஆம் வகையான தாழ்ந்த குலமே ஆகும். ஜாமச்சனி மேஷத்தில் நீசம் பெற்று நிற்பது இதை உறுதி செய்கிறது. மகரத்திற்கு முந்தைய ராசியான தனுசு காட்டை குறிக்கும் ராசியாகும். மகரத்திற்கு அடுத்த ராசியான கும்பம் மலையடிவாரத்தை குறிக்கும் ராசியாகும். இவ்விரண்டிற்கும் நடுவில் அமைந்த உதயமான மகரம் பலர் புழங்கக்கூடிய மற்றும் சேறும் சகதியுமான நீருள்ள இடங்களை குறிக்கும் ராசியாகும். எனவே கேள்வியாளரின் பூர்வீகம் காடு, மலை சார்ந்த பகுதியில்  வசித்து வந்து பூர்வகுடிகளாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். உதயம் செவ்வாயின் அவிட்டத்தில் அமைந்துள்ளது. உதயாதிபதி சனி உதயத்திற்கு 4 ல் மேஷத்தில் வெளிவட்டத்தில் நீசம் பெற்று நிற்கும் நிலையில், சனி துலாத்தில் நிற்கும் செவ்வாயின் நேர் பார்வையை பெற்று தனது 10 ஆம் பார்வையாக உதயத்தை பார்க்கிறார். 10 ல்  திக்பலம் பெற்ற செவ்வாயும் உதயத்தை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். கன்னி குரு 5 ஆம் பார்வையாக உதயத்தை பார்க்கிறார். 4 ஆமிடம் கால்நடைகளை குறிப்பிடும் பாவகமாகும். குறிப்பாக மேஷம் ஆட்டை குறிக்கும் ராசியாகும். அங்கு உள் வட்டத்தில் ராகு, குருவோடு உதயாதிபதி சனி வெளிவட்டத்தில் இருப்பதால் கேள்வியாளர் ஆடுகளை மேய்த்து வாழும் சமூகத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆட்டு ராசியிலமைந்த சனி வியாபாரத்தை குறிக்கும் 10 ஆமிட துலாச் செவ்வாயை பார்ப்பது, ஆடுகளை மேய்த்து அதை பொருளாதாரத்திற்காக பிற சமூகத்துடன் வியாபாரம் செய்து வாழும் சமூகமாகும். ராகு-கேதுக்கள் இவர்களோடு தொடர்புகொள்வது உணவிற்காக அவை விற்கப்படுவதும். குரு இச்சேர்க்கையில் தொடர்பாவது இந்த வியாபாரத்தின் மூலம் அடையப்படும் பொருளாதாரத்தையும் குறிக்கிறது. 9 ஆமிட குரு கன்னியில் 10 ஆமதிபதி சுக்கிரனின் பூரத்தில் இருந்து உதயத்தை பார்ப்பது இதை உறுதி செய்கிறது. மேலும் அதுவே  அந்த சமூகத்தின் முக்கிய வருமானமாக இருந்திருக்கும். உதயத்திற்கு 7 ல் கடகத்தில் நிற்கும் 2 புதனும் வியாபாரம் மற்றும் பண்டமாற்றை குறிகிறது. கடக புதன் சரஸ்வதி என்ற கேள்வியாளரது பெயரையும் சுட்டிக்காட்டுகிறது.

உதயாதிபதி சனி மேஷத்தில் அமைந்து ராகு-குரு-செவ்வாய் தொடர்பு பெற்று நிற்பதால் இவர்கள் குல தெய்வமாக உறுதியாக காவல் தெய்வமே இருக்கும். உதயத்தில் பாம்பு நின்று உதயாதிபதி ராகுவோடு இணைந்து நிற்பதால் இவர்கள் பூர்வீகத்தில் சர்ப்பங்களையும் வழிபட்டிருப்பர். பொதுவாக காடு சார்ந்த பகுதிகளில் வசிப்போர் சர்ப்பங்களை வழிபடுவது இயல்பு. உதயம் அவிட்ட நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் அவிட்டத்திற்குறிய நாம எழுத்துக்களான க, கி, கு, கே என்ற எழுத்துக்களில் இவர்கள் வணங்கி வந்த தெய்வத்தின் பெயர் இருக்கலாம். கவிப்பு சிம்மத்தில் உதயத்திற்கு 8 ல் இருப்பது கேள்வியாளருக்கு தந்தை வகை கொடுப்பிணை இல்லை என்பதையும்,  4 ஆமிடம் கடுமையாக பாதிக்கப்பட்டு கடக ராசி, மற்றும் உள்வட்ட, வெளிவட்ட சந்திரனுக்கு பாவ கர்த்தாரி யோகம் உள்ளதாலும் தாயாரின் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதை குறிக்கிறது. உள்வட்ட உதயாதிபதி சனி ராகு சாரத்தில் நின்று வக்கிரமாகி உதயத்தை நோக்கி வருகிறார். நீச சனி, ராகு-செவ்வாய் தொடர்புடன் உதயத்தை பார்க்கிறார் இதனால் உதயத்திற்கு இருள் தன்மை அதிகம். ஒளித்தன்மை குறைவு. இதனால் இவர்கள் பூர்வீகத்தில் திறந்த வெளி சமூக அமைப்பினர் வாழுமிடங்களை விட்டு விலகி  காடுகளில் வாழும் வகையினராக இருக்கக்கூடும் என்பதோடு தாங்கள் வளர்க்கும் விலங்குகளை பண்டமாற்று செய்வதற்காக வியாபார இடங்களுக்கும் சென்று வருபவர்களாக இருப்பர் என்பதை குறிப்பிடுகிறது.

மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்து தெரிந்த வகையில் நான் கேள்வியாளருக்கு தெரிவித்த பதிலாவது “நீங்கள் மலைப்பகுதிக் காடுகளில் கால்நடைகளை மேய்த்து வாழ்த்த கீழ்நிலை ஜாதியை சார்ந்தவர்கள். குல தெய்வம் காவல் தெய்வமாக இருக்கும் அதே வேளையில் அதன் பெயர் க, கி, கு, கே என்று துவங்கும் பெயரிலும் இருக்கும். சனியின் நிலைகொண்டு பார்க்கையில் அனேகமாக உங்கள் பூர்வ குடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை சார்ந்ததாக  இருக்கும்”  என்று கூறினேன். சில நிமிட மௌனத்திற்குப் பிறகு கேள்வியாளப் பெண்மணி என்னிடம் கூறியதாவது தன்னை பார்க்க விருப்பமில்லாத தன்னைப் பெற்ற  தாயின் அக்கம் பக்கத்து தொடர்புகளின் மூலம் தான் அறிந்து கொண்ட எனது பூவீக ஜாதியானது மலைப்பகுதி காடுகளில் ஆடுகளை மேய்த்து வாழும் ஜாதியாகும். குறிப்பாக குறும்ப ஆடு என்று அழைக்கப்படும் ஒருவகை ஆடுகளை அதிகம் வளர்ப்பதால் அந்த ஆட்டின் பெயராலேயே தங்கள்  சமூகம் “குறும்ப கவுண்டர்கள்” என அழைக்கப்படுகிறது என்றும், தங்கள் வாழ்விற்கு ஆதாரமாக விளங்கிய ஆட்டையே இவர்கள் குறும்ப சாமி என்று குல தெய்வமாக வழிபடுவதாகவும் கூறினார். தான் விசாரித்து அறிந்துகொண்ட இத்தகவல்கள் உண்மையா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவே தங்களிடம் வந்தேன் என்று கூறினார்.

பிரசன்னம் சுட்டிக்காட்டிய தகவல்கள் எத்தனை உண்மை என்று எனக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது. இதை எனக்கு கற்றுக்கொடுத்த எனது குருநாதருக்கு மானசீகமாக நன்றி கூறிக்கொண்டேன்.  எனது மனம் கணக்கச் செய்த பிரசன்ன அனுபவம் இது.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி; 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil