மாமா உன் பொண்ணக்கொடு

ஒருவரது ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அவருக்கு அமையவிருக்கும் வாழ்க்கைத் துணைவரின் லக்ஷணங்களை தெளிவாகக் கூற முடியும். அதற்கான தெளிவான வழிகாட்டு முறைகள் பண்டைய ஜோதிட நூல்களின் உள்ளன. இப்பதிவில் நாம் அதில் ஒருவகையான சொந்தங்களுக்குள் திருமண உறவு பற்றி ஆராய்வோம்.


பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.

குடும்ப ஸ்தானத்தில் மாதுல காரகன் (தாய் மாமாவைக் குறிக்கும் கிரகம்) புதன் உச்ச குருவின் நட்சத்திரம் பூரட்டாதியில் அமர்ந்து நீசபங்க ராஜ யோகத்தில் உள்ளார். புதனுடன் லக்னாதிபதியும் விரையாதிபதியுமான சனி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி சூரியனும் அமைந்துள்ளனர். குடும்ப காரகனும் குடும்ப பாவாதிபதியுமான குரு தாய்   மாமனைக் குறிப்பிடும் 6 வது பாவத்தில் உச்சத்தில் உள்ளார். மாதுல காரகன் குடும்ப   ஸ்தானத்திலும் குடும்ப காரகன் தாய்மாமனைக் குறிப்பிடும் 6 வது பாவத்திலும் அமர்ந்ததால் இந்த ஜாதகிக்கு மாமன் வகையில்தான் திருமணம் அமையும் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது. ஜாதகி அத்தை மகனை மணம் முடித்தவர்.


இது தவிர சூரியன் களத்திர பாவாதிபதியாகி குடும்ப பாவத்தில் அமர்ந்ததால் கணவர் அரசுத் துறையோடு தொடர்புடையவர். மேலும் சூரியன் புள்ளிவிவரம், விஷய, ஆவணத் தொகுப்பு போன்றவற்றைக் குறிப்பிடும் புதனுடன் இணைந்து தனகாரகனின் (குரு) வீட்டில் அமர்ந்ததால் கணவர் பணத்தோடு தொடர்புடைய விஷயத் தொகுப்பு தொடர்பான பணி புரியலாம் என அனுமானிக்கலாம். கணவர் கூட்டுறவு வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார்.


தன, போதனை காரகன் குருவின் வீடு 2 வது பாவமாகி அதில் அரசுத் துறையைக் குறிப்பிடும் சூரியனானவர் வித்யாகாரகன் புதனுடன் அமர்ந்ததால் ஜாதகிக்கு கல்வித்துறையில் அரசுப்பணி அமையும் என அனுமானிக்கலாம். அதுவே உண்மையும் கூட. நான் மிகச்சரியாகவே இதைக்  குறிப்பிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். சனி 2 வது பாவத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதபடலாம் என்பது ஜோதிட விதி. நடந்ததும் அப்படியே..


பின்வரும் இரண்டாவது ஜாதகத்தைக் கவனியுங்கள். ஜாதகர் ஒரு பெண்.

தாய் மாமனைக் குறிக்கும்  6 ஆம் பாவ அதிபதி சந்திரன் மாதுலகாரகன் புதனின் சாரத்தில் கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார். உச்சன் புதனின் சாரம் பெற்றதால் சந்திரன் நீச பங்க ராஜஜோகத்தில் உள்ளார். அது மட்டுமல்ல குடும்ப காரனும் குடும்ப பாவாதிபதியுமான குருவுடன் சந்திரன் இணைந்து உள்ளதால் மாமன் வகையில்தான் குடும்பம் அமையவேண்டும். இந்த ஜாதகியும் அத்தை மகனை மணம் முடித்தவர்தான்.


புதனும் சனியும் உச்சம். சந்திரன் உச்ச புதனின் சாரம் பெற்றதோடு குருவும் உச்சனான சனியின் சாரம் (அனுஷம்) பெற்றது சிறப்பு. சூரியன் வித்யாகாரனான உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து 2 வது பாவத்தைப் பார்ப்பதால் இவருக்கும் ஆசிரியர் பணி அரசுத்துறையில் அமையும் என்பது உறுதி. ஜாதகியின் உடல் எண் 1 ஆகவும் உயிர் எண் 5 ஆகவும் அமைந்தது ஜாதகிக்கு அமையவிருக்கும் அரசு ஆசிரியைப் பணியில் தலைமைப் பொறுப்புக்கு முன்னேறுவார் என்பதைக் குறிப்பிடுகிறது. உச்சம் பெற்ற சனியும் புத- ஆதித்ய யோகமும் இதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. புத-ஆதித்ய யோகம் மற்ற பாவங்களைவிட 1,4,8 பாவங்களில்தான் மிகச் சிறப்பான பலனை அளிக்கும் என்பது அனுபவ உண்மை.


முதல் மற்றும் இரண்டாம் ஜாதகத்திற்கு உள்ள ஒற்றுமை, இரண்டுமே கும்ப லக்னம் என்பதோடு புதனும் குருவும் 2,6 ஆம் பாவ சம்பந்தம் பெற்றதால் இரு ஜாதகியரும் அத்தை மகனைத் திருமணம் புரிந்துள்ளனர் என்பதோடு இருவருக்கும் அரசு ஆசிரியர் பணி அமைப்பு உள்ளது.

கவனிக்கத்தக்கது. முதலாம் ஜாதகிக்கு அரசு ஆசிரியர் பணி அமைந்துவிட்டது. இரண்டாமவருக்கு அமையும் வாய்ப்பு உறுதியாக உள்ளது.


பின்வரும் சற்று மாறுபட்ட மூன்றாவது ஜாதகத்தை கவனியுங்கள். இவரும் பெண்தான்.

லக்னாதிபதியும் மாத்ரு ஸ்தானதிபதியுமான குரு, தாய் மாமனைக் குறிக்கும் 6 வது பாவத்தில் உள்ளார். குடும்ப காரனுமாக லக்னாதிபதி திகழ்வதால் குடும்பம் தாய் மாமன் வகையில் அமையும் என்பதை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. மாத்ரு (தாய்) ஸ்தானாதிபதி 6 வது பாவத்தில் அமர்ந்தால் தாய்மாமன்தான் கணவன் என்பதை அனுமானிக்கலாம். இது மட்டுமல்ல குரு நின்ற 6 வது பாவத்திற்கு 6 ல் மாதுல காரகன் புதன் நிற்பது இதனை உறுதிப்படுத்துகிறது.
குரு, புதன் மற்றும் செவ்வாய் மூன்றும் வக்ரகதியில் இருப்பதும், விருட்சிக-தனுசு ராசி சந்தியில் சனி நின்று களத்திர பாவத்தை பார்ப்பதும், நான் ஜாதகிக்கு தாய்மாமன் மணமகனாக வருவார் என்பதை கணக்கிடத் தவறினேன் என்பதை இவ்விடம் ஒப்புக் கொள்ள வேண்டும். மாதுல காரகன் புதன் பஞ்சமாதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நின்றது, ஜாதகிக்கு தாய்மாமனின் மேல் ஈர்ப்பு உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. சனி களத்திர பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத் துணைவர் வயது வித்தியாசமானவராக அமைவார் என்பதைக் குறிக்கிறது.
அடுத்த பதிவில் சந்திப்போம். 
வாழ்த்துக்களுடன்,அன்பன்,
பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இந்தியா

உறவுத் திருமணங்களுக்கு பொருத்தம் அவசியமா?

பாதுகாப்பும் பரஸ்பர அரவணைப்பும் கருதி, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊருக்குள் அருகருகே வாழ்ந்த காலம் கடந்த நூற்றாண்டு வரை நம் கண்முன்னே பழக்கத்தில் இருந்தது. அந்தந்த சமூகத்திற்கே உரித்தான பாரம்பரியத் தொழில்கள், ஆழமான உறவுப்

மேலும் படிக்க »
இந்தியா

வில்லாளன்

பண்டைய காலத்தில் அரச குமாரர்களுக்குப் பால்ய பருவம் கடந்த பிறகு குதிரையேற்றம், யானையேற்றம், வில்வித்தை போன்ற தற்காப்பு மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை முறைப்படி கற்பிப்பது வழக்கமாக இருந்தது. இன்றைய நவீன காலத்தில், மேல்தட்டு மற்றும்

மேலும் படிக்க »
Advanced Atrology

எலியும் பொறியும்! – உங்கள் வேலை நிலை எப்படி?

இன்றைய சவாலான பொருளாதாரச் சூழலில் ‘வேலை மாற்றம்’ (Job Change) என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சியை நோக்கியோ அல்லது தற்போதைய பணியிடத்தில் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தத்தின்

மேலும் படிக்க »
இல்லறம்

காதல், மரபு மற்றும் காலத்தின் மாற்றம்!

ஆசையும் காதலும் இல்லையேல் இந்த உலகத்தில் ஏது வளர்ச்சி? ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவரையும் இங்கு வளர்த்தெடுத்து வழிநடத்துவது காதலின் பேராற்றலே ஆகும். கடந்த நூற்றாண்டு வரை நமது இந்தியச்

மேலும் படிக்க »
Advanced Atrology

‘A காத்தா’ – ‘B காத்தா’ வீடுகளும் பெருநகர வாழ்க்கையும்: உங்கள் ஜாதகம் சொல்வது என்ன?

சொந்த வீடு… இது வெறும் செங்கற்களாலும் சிமெண்டினாலும் கட்டப்படும் ஒரு கட்டிடம் அல்ல; ஒவ்வொரு சராசரி மனிதனின் வாழ்நாள் உழைப்பு, வியர்வை, லட்சியம் மற்றும் எதிர்காலக் கனவுகளின் பிம்பம். ஆனால், இன்றைய பொருளாதாரச் சூழலிலும்,

மேலும் படிக்க »
Advanced Atrology

“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பா?” — தற்கால உலகப் பொருளாதாரமும் வெளிநாட்டு யோகமும்!

“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” ஔவையாரின் இந்த வாக்கு பல தலைமுறைகளாக நாம் போற்றி வந்த மகத்தான உண்மை. “நன்கு படித்திருந்தால், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தலைநிமிர்ந்து வாழலாம்; நல்ல வேலை தேடி

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil