தடய அறிவியல் துறை!

எண்பதுகளில் இரும்பு, பூமி, நீர், அரசுத்துறை, கட்டுமானம், வாகனம், வெளிநாடு, கல்வி, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளே முக்கிய துறைகளாக இருந்தன. இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு நுட்பமான பிரிவுகளாக வளர்ந்து வருகிறது. சாதாரணமான கணினிக்கல்வி என்பது அடிப்படைக் கல்வியின்  ஒரு அங்கம் என்ற நிலை இன்று  வந்துவிட்டது. இந்நிலையில் தகுந்த கல்வியை தேர்ந்தெடுப்பதற்கு நுட்பமான ஜாதக அலசல் தேவைப்படுகிறது. ஒருவரது ஜாதக சந்திரனை ராசி, நவாம்சம், சதுர்விம்சாம்சம் (உயர்கல்விக்கு ஆராய வேண்டிய வர்க்கச் சக்கரம்) ஆகியவற்றில் ஆராய்ந்தால் ஒருவரது கல்விச் சிந்தனை, கிரகிக்கும் திறன் ஆகியவற்றை அறியலாம். லக்னத்தோடும் லக்னாதிபதியோடும் தொடர்புகொண்ட கிரகங்களை வைத்து ஒருவர் என்ன வகையான அனுபவங்களை அடையவிருக்கிறார் என்பதையும்,   தசா-புக்திகள் அந்த அனுபவங்களை எப்போது அனுபவிப்பார் என்பதையும் சுட்டிக்காட்டும். தசா-புக்திகள் தொடர்பாகாத அனுபவங்களை ஒரு ஜாதகர் அனுபவிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருவர் தான் கற்ற கல்வியை பொருள் ஈட்டுவதற்கு பயன்படுத்துவாரா? இல்லையா? என்பதை அவரது தசாம்சம் சுட்டிக்காட்டும். இன்றைய காலத்தில் கல்வி என்பது அறிவை பெருக்கிக்கொள்ள என்பதை தாண்டி பணம் சம்பாதிப்பற்குத்தான் என்ற நிலையில் நாம் இருக்கிறோம் . எனவே ஒருவரது கல்வியை ஆராய ராசி, நவாம்சம், சதுர்விம்சாம்சம் ஆகியவற்றோடு தசாம்சத்தையும் ஒப்பிட்டு ஆராய்வது அவசியம்.  இன்றைய பதிவில் நாம் தடய அறிவியல்துறை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணிகளை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசவிருக்கிறோம்.

தடய அறிவியல் துறையின் காரக கிரகங்கள். 

தடய அறிவியல் துறை என்பது ஒரு குற்றவியல் சார்ந்த   துறையாகும். இத்துறைக்கு காரக கிரகங்கள் ராகு-கேதுக்களாகும். காவல்துறையோடு இணைந்து செயல்படும் துறை என்பதால் இவற்றிற்கு செவ்வாயின் தொடர்பு இன்றியமையாததாகும். திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் செயல்படும் துறை என்பதால், தகவல் காரகர் புதனை நம்பியே இந்தத்துறை செயல்படுகிறது. அறிவியலின் ஒரு அங்கமானது இத்துறை என்பதால், அறிவியலின் காரக கிரகம் சுக்கிரன் தொடர்பும் அவசியமாகும். எனவே இத்துறையில் ஒருவர் ஈடுபட புதன், சுக்கிரன்,செவ்வாய்,ராகு-கேதுக்கள் ஏதோ ஒருவகையில் ஜாதகத்தில் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். 

கீழே நீங்கள் காண்பது, தடய அறிவியல் கல்வி பயின்று அதிலேயே பணிபுரிந்துகொண்டிருக்கும் ஒரு ஆணின் ஜாதகம்.

இந்த ஜாதகருக்கு கல்லூரி செல்லும் காலத்தில் ராகு தசை துவங்கியது. ராகு நவீன மின்னணு மென்பொருள்களுக்கு காரக கிரகம் என்பதால் தசை துவங்கியதுமே  இயல்பாகவே இவரது நாட்டம் கணினித்துறை மீது ஏற்படுகிறது. இளங்கலையை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் தரவுகளை குறிக்கும் புதன், அறிவியலை குறிக்கும் சுக்கிரனுடன் இணைந்து உச்சம் பெற்றுள்ளது. இதனால் இவர் இளங்கலையில் கணினி அறிவியல் படித்தார். 

முதுகலை கல்வியை குறிக்கும் 9 ஆமிடத்தில் உள்ள ராகுவிற்கும், 9 அதிபதி சனிக்கும் காலபுருஷ 9, 12 ஆமதிபதி குருவின் தொடர்பு ஏற்படுவதால் இவர் உயர்கல்விக்கு கடல் தாண்டிச் செல்ல வேண்டும்.  உயர்கல்விக்கு ஆராயவேண்டிய சதுர்விம்சாம்சத்தில் வெளிநாட்டுக்கல்வியை குறிக்கும் 12 ஆமிடத்தில்   தசாநாதன் ராகு, புதன் மற்றும் கேதுவுடன் இணைந்துள்ளதால் ஜாதகர் வெளிநாடு சென்று தடய அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். 

கடல்தாண்டி செல்வதை குறிக்கும் கால புருஷனின் 12 ஆமிட அதிபதியும் ஜீவன பாவாதிபதியுமான குரு,  லக்னத்தில் திக்பலத்தில் அமைந்து, 7ல்  திக்பலம் பெற்று, லக்ன 12 ஆமதிபதி சுக்கிரனின் சாரத்தில் நிற்கும் சனியின் பார்வையை பெறுகிறார்.  இவர்களோடு தசா நாதன் இணைந்தால்  ஒருவரது ஜீவன கர்மா வெளிநாடு சார்ந்ததாக அமையும். இந்த ஜாதகத்தில் குரு, ராகு சாரத்தில் நிற்கிறார். பாக்ய ஸ்தானத்தில் நின்று தசை நடத்தும் ராகு வேலை பாவமான 6 மற்றும் 11 ஆமதிபதி செவ்வாயின் சாரம் பெறுகிறார். 1௦ ஆமதிபதி குரு, 9 ல் நிற்கும் ராகு சாரத்தில் அமைந்து 9 ஆமதிபதியை பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகத்தின் ஒரு வகை ஆகும். இந்த அமைப்பால் இந்த ஜாதகருக்கு தான் படித்த வெளிநாட்டிலேயே தடய அறிவியல் துறையில் அரசுப்பணி கிடைத்தது. தசா நாதனுக்கு சூரியனின் தொடர்பு அரசுப்பணியை பெற்றுத்தந்துள்ளது. 

மேற்சொன்னபடி இத்துறைக்கு கிரக அமைப்பு  இருந்து தசா-புக்திகள் வந்தால் மட்டுமே இத்துறை சார்ந்த கல்வி பயில்வது பயன்தரும். எனவே எந்தக்கல்வி பயின்றாலும் தசா-புக்திகளின் தொடர்பை கவனிப்பது அவசியமாகும். 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன், 

அதுவரை வாழ்துக்களுடன், 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான இடைவெளி

வாழ்வில் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் — வெற்றியாளர்கள் தங்களின் பலத்திற்கு ஏற்ற சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; தோல்வியாளர்களோ தங்களின் பலமறியாமல் தவறான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தங்களையே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க »
Advanced Atrology

Option Buying vs Option Selling: ஜோதிட ரீதியான ரகசியம்

வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் பங்குச்சந்தை, இன்று அனைவரையும் ஈர்க்கும் ஒரு காந்தமாக மாறியுள்ளது. உள்ளங்கையில் உலகத்தைச் சுருக்கும் எளிய ஸ்மார்ட்போன் செயலிகளும், டிஜிட்டல் கட்டமைப்புகளும் பங்கு வர்த்தகத்தைச் சாமானியர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு

மேலும் படிக்க »
இல்லறம்

திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல

மேலும் படிக்க »
கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil