புது மாப்பிள்ளை மோதிரம்

திருமண நிகழ்வுகள் எப்போதும் இனிமையானவை. பெற்றோர்களுக்கு உறவு, பொருளாதாரம் சார்ந்த பல வகை சிரமங்கள் இருந்தாலும் தங்கள் குடும்பத் திருமணம் சிறப்பாக நடந்திட வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருக்கும். திருமணத்தில் எதிர்பாரா நிகழ்வுகளும் உண்டு. நகைச்சுவைகளும் உண்டு. நல்ல உறவுகளை அருகில் வைத்துக்கொண்டால் அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள தகுந்த ஆலோசனைகளை கூறி நிகழ்வுகள் சிறப்படைய உதவிகரமாக இருப்பர். திருமண நிகழ்வில் பல்வேறுபட்ட சமுதாய மக்களுக்கேற்ற பல்வேறு வகை நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்றாலும் வளர்ந்து வரும் சமூகத்தில் பல நிகழ்வுகள் இன்று பொதுவானவைகளாகிவிட்டன. அப்படியான ஒரு பொது நிகழ்வு தம்பதிகளுக்கு மோதிரம் அணிவித்தல் . பெற்றோர் அணிவிக்கும் நகைகளை முந்தைய கால பணக்கார குடும்பங்களில் பொற்கொல்லரை வீட்டிற்கு அழைத்து அளவு எடுத்து ஆபரணங்கள் செய்யும் நடைமுறைகள் இருந்தன. இன்று அனைத்தும் Ready Made நகைகளாகிவிட்டன. இதில் மோதிர அளவு சிறிது என்பதற்காக சண்டைகள் நடந்ததும் உண்டு. ஒரு சுற்று அதிக அளவுகொண்ட மோதிரத்தை தற்காலிக ஏற்பாடாக நூல்கொண்டு சுற்றிவிடுவதும் உண்டு. இன்றைய பதிவில் அப்படி அளவு அதிகமான மோதிரம் பற்றிய ஒரு பிரசன்னத்தை காண்போம்.

எனது ஜோதிட நண்பர் ஒருவர் தங்கள் குடும்பத் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அணிவித்த மோதிரத்தை காணவில்லை என்றும் அதை பிரசன்னத்தில் கண்டுபிடித்து தருமாறும் கைபேசியில் வேண்டினார். அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே நீங்கள் கீழே காண்பது.

கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருச்சிகத்தில் உதயம் அமைந்தது 8 ஆமிடம் குறிக்கும் மறைவு, இழப்புகளை குறிக்கிறது. உதயாதிபதி செவ்வாய் வெளிவட்டத்தில் 8 ஆமிடமான மிதுனத்திலும், உள்வட்டத்திலும் 12 ஆமிடமான துலாத்திலும் மறைந்துள்ளார். இது கேள்வியாளர் பொருளை தொலைத்ததை உறுதி செய்கிறது. விருச்சிகம் சந்து, பொந்துகளை குறிக்கும். 8 ல் அமைந்த ஜாம (வெளிவட்ட) செவ்வாய் திருவாதிரையிலும், உள்வட்டத்தில் சுவாதியிலும் அமைந்துள்ளார். ராகுவின் நட்சத்திரங்களான இவை இரண்டும் சந்து-பொந்துகள், ஓட்டை, குழாய் ஆகியவற்றையே குறிக்கும்.

மோதிரம் தொலைந்ததா? திருடப்பட்டதா?

உதயத்திற்கு 7 ஆமிடமும் 8 ஆமிடமும் தொடர்பில் இருந்தால் பொருள் திருடப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம். 7, 8 தொடர்பு இல்லையேல் பொருள் தொலைந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு 7, 8 தொடர்பாகவில்லை. உதயாதி செவ்வாய் மட்டுமே 8 ல் நிற்கிறார். எனவே பொருள் தொலைந்துள்ளது. திருடப்படவில்லை.

தொலைந்த பொருள்.

ஆரூடம் 3 ல் அமைந்தது 3 ஆமிடம் குறிக்கும் கையில் அணியும் அணி என்பதை உறுதி செய்கிறது. எனவே மோதிரம் தொலைந்தது உண்மையே

பொருள் உள்ள இடம்.  

உதயத்திற்கு 4 ஆமிடமே பொருள் உள்ள இடத்தை காட்டும். 4 ல் சனி கழிவை குறிக்கும், அங்கு அமைந்த சந்திரன் நீரை குறிக்கும். கவிப்பும் மீனத்தில் அமைந்துள்ளதை கவனியுங்கள். கால புருஷனுக்கு 12 ஆமிடமான மீனமும் கழிவு நீர் நிலையை குறிக்கும்.

மேற்கண்ட ஆய்வுகள் அனைத்தும் மோதிரம் கழிவறையில் தொலைத்துவிட்டதை தெளிவாக குறிப்பிடுகிறது. 8 ஆமதிபதி புதன் உள்வட்டத்தில் உதயத்திற்கு 12 ல் மறைந்துவிட்டதாலும், ஜாம புதன் மீனத்தில் கவிப்புடன் இருப்பதாலும் பொருளை மீட்க முடியாது. பிரசன்னம் சுட்டிக்காட்டிய இந்த விபரங்களை என்னை தொடர்புகொண்ட நண்பரிடம் தெரிவித்த பிறகு நண்பர், மாப்பிள்ளை கழிவறைக்கு சென்று வந்த பிறகுதான் மோதிரத்தை காணவில்லை என்று கூறியதாக தெரிவித்தார். பிரசன்னம் சூழலை தெளிவாக்கியதால் திருமண வீட்டில் மனவருத்தம் மட்டுமே. திருடு போனதாக மனக்கசப்பில்லை.

இக்கலையை எனக்கு கற்றுக்கொடுத்த எனது குருவிற்கு நன்றிகள்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இந்தியா

வில்லாளன்

பண்டைய காலத்தில் அரச குமாரர்களுக்குப் பால்ய பருவம் கடந்த பிறகு குதிரையேற்றம், யானையேற்றம், வில்வித்தை போன்ற தற்காப்பு மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை முறைப்படி கற்பிப்பது வழக்கமாக இருந்தது. இன்றைய நவீன காலத்தில், மேல்தட்டு மற்றும்

மேலும் படிக்க »
Advanced Atrology

எலியும் பொறியும்! – உங்கள் வேலை நிலை எப்படி?

இன்றைய சவாலான பொருளாதாரச் சூழலில் ‘வேலை மாற்றம்’ (Job Change) என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சியை நோக்கியோ அல்லது தற்போதைய பணியிடத்தில் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தத்தின்

மேலும் படிக்க »
இல்லறம்

காதல், மரபு மற்றும் காலத்தின் மாற்றம்!

ஆசையும் காதலும் இல்லையேல் இந்த உலகத்தில் ஏது வளர்ச்சி? ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவரையும் இங்கு வளர்த்தெடுத்து வழிநடத்துவது காதலின் பேராற்றலே ஆகும். கடந்த நூற்றாண்டு வரை நமது இந்தியச்

மேலும் படிக்க »
Advanced Atrology

‘A காத்தா’ – ‘B காத்தா’ வீடுகளும் பெருநகர வாழ்க்கையும்: உங்கள் ஜாதகம் சொல்வது என்ன?

சொந்த வீடு… இது வெறும் செங்கற்களாலும் சிமெண்டினாலும் கட்டப்படும் ஒரு கட்டிடம் அல்ல; ஒவ்வொரு சராசரி மனிதனின் வாழ்நாள் உழைப்பு, வியர்வை, லட்சியம் மற்றும் எதிர்காலக் கனவுகளின் பிம்பம். ஆனால், இன்றைய பொருளாதாரச் சூழலிலும்,

மேலும் படிக்க »
Advanced Atrology

“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பா?” — தற்கால உலகப் பொருளாதாரமும் வெளிநாட்டு யோகமும்!

“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” ஔவையாரின் இந்த வாக்கு பல தலைமுறைகளாக நாம் போற்றி வந்த மகத்தான உண்மை. “நன்கு படித்திருந்தால், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தலைநிமிர்ந்து வாழலாம்; நல்ல வேலை தேடி

மேலும் படிக்க »
Advanced Atrology

கர்மா நம்மை ஆட்டுவிக்கிறதா? அல்லது பயம் நம்மைத் தடுத்து நிறுத்துகிறதா? – ஒரு ஜோதிடப் பார்வை!

வாழ்வில் அனைவருக்கும் அனைத்துவிதமான பாக்கியங்களும் பரிபூரணமாக அமைந்துவிடுவதில்லை. சம்பாத்தியம் சிறப்பானால் குடும்பத்தில் பிரச்சனை; குடும்பம் சிறப்பானால் ஆரோக்கியத்தில் சிரமங்கள் என, எதையாவது ஒன்றை இழந்துவிட்டுத்தான் மனிதன் வாழ வேண்டியிருக்கிறது. அனைவரையும் ஏதோ ஒருவித கண்ணுக்குத்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil