Emotional Intelligence in Astrology!

Emotional Intelligence எனும் “உணர்வுச் சாதுர்யம்” இன்று கார்பரேட் உலகில் மட்டுமல்ல குடும்பங்களில் அடுப்பங்கரைகளில்கூட அலசப்படுகின்றன. குறிப்பாக மேல்தட்டு வர்க்கங்களில் அவர்களது நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் இந்த யுக்திகளை, பரிச்சார்த்தமாக அன்றாட வாழ்விலும் பயன்படுத்திப் பார்க்க கிடைத்த வெற்றிகளே அதற்கு அடிப்படையாக அமைந்தன. தனியொரு மனிதனின் வெற்றிக்கு கல்வியறிவு, அனுபவம் இவற்றை மீறிய Emotional Intelligence முக்கியம் என்று கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகு தங்களது தொடர்பு வட்ட நபர்களை எதிர்கொள்ள இது பற்றி அறிந்த அனைவரும் இன்று இதற்காக பிரத்தியோக பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கின்றனர்.

பதற்றமற்ற, நிதானமான, நட்பான, கற்றுக்கொள்ளும் மனநிலைகொண்ட, சூழலை சாதுர்யமாகக் கையாளத் தெரிந்த மனிதனே இன்று பிறரைவிட வாழ்வில் வெற்றிகரமாகத் திகழ்கிறார்கள். மெத்தப்படித்த, வசதியான, ஒழுக்கமான பின்னணியைக்கொண்டவர்கள் கூட உணர்வுகளை கையாளத் தெரியாதபோது தோல்வியடைகிறார்கள். இதற்கு வயது, பாரம்பரியமெல்லாம் தேவைப்படாது. இது   ஒரு பண்பாடாகும். நமது தமிழ்ப் பாரம்பரியத்திலேயே இது உண்டெனினும் குறுகிவிட்ட தற்காலக் குடும்பங்களில் சிறியோரை நெறிப்படுத்தி இவற்றை கையாளக் கற்றுத்தரும் பெரியோரும் அருகில் இல்லாதபோது அடைந்துவிட்ட தகுதியெல்லாம் ஒரு நொடியில் வீணாவது இந்த உணர்வுசார் நுண்ணறிவு இல்லாமையால்தான்.

சம்பாத்தியச் சூழல், உறவுச் சூழல், தொடர்பு வட்டம் என்று பல இடங்களில் நாம் சீராகச் செயல்பட இந்த உணர்வு மேலாண்மை இன்று அவசியமாகிறது. பணியிடங்களில் மனித வள மேலாளர்கள் கையாளும் இந்த விஷயம் தற்போது திருமணத்திற்கு பார்க்கும் வரனின் மனநிலை நமக்கு ஒத்திசைவாக இருக்க வேண்டுமே என்ற வகையில் கூட இது பற்றி குறிப்பிட்டு பொருத்தம் பார்க்க கேட்டுக்கொண்டு ஜாதகங்கள் வரத் துவங்கியபோதுதான் இதை ஜோதிட அடிப்படையில் விளக்குவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் இன்றைய பதிவு வருகிறது.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

ஒருவர் உணர்வுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரா? அல்லது உணர்ச்சியினடிப்படையில் செயல்படுபவரா? என்பதை லக்னம், லக்னாதிபதி நிலை மூலம் அறியலாம். இவையிரண்டும் சிறப்புற ஜாதகர் தண் உணர்வுகளை ஆள்பவர் ஆகிறார். லக்னாதிபதி கெட்டு லக்னத்தில் நீசன், பகைவர், 8 ஆமதிபதி போன்றோர் அமர்ந்துவிட்டால் ஜாதகர் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமல் சூழ்நிலைக் கைதியாவார். தசா-புக்திகள் சிறப்பாக அமைந்த காலத்தில் மட்டும் இவர்களுக்கு சமாளிக்கும் திறன் வாய்க்கும் எனலாம். பிற காலங்கள் கடுமையானவைகளாக இருக்கும் அதற்கு இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமே காரணமாக இருக்கும்.

லக்னத்திற்கு அடுத்து 2 ஆமிடம் இவர் பிறரிடம் தன் எண்ணங்களை எப்படி பகிர்ந்துகொள்வார் என்பதை குறிப்பிடும். 2 ல் சுபர் அமைய பேச்சு சிறப்புறும். 2 ல் செவ்வாய் அல்லது 2 ஆமிட கேது கடுஞ்சொல் பேச வைக்கும். 2 ல் புதன் அமைய வாக்கு வன்மை. அதே புதன் வக்கிரமடைய பேச்சு குளறுபடி.

5 ஆமிடம், 5 ஆமதிபதி, 5 ஐ பார்க்கும் கிரகங்கள் மற்றும் கால புருஷனுக்கு 5 அமதிபதி சூரியன் வலுப்பெற்றால் சிந்தனைத் தெளிவுள்ளவர். இவற்றில் பாதிப்பின் அளவிற்கேற்ப சிந்தனைத் திறன் பழுதுபடும். சிந்தனைத் திறன் பாதிக்கப்பட அவர் அறிவைவிட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராவார். இவர்களிடம் Emotional Intelligence குறைவாக இருக்கும்.

ஜாதகத்தில் கோபத்தை குறிக்கும் 8 ஆமிடம், 8 ஆமதிபதி, கோபத்தின் காரகரும் கால புருஷனின் 8 ஆமதிபதியுமான செவ்வாய் ஆகியோர் சிறப்புற இத்தகையோர் தங்கள் கோப உணர்வுகளை தெளிவாக அதே சமயம் அழுத்தமாக, பயமின்றி வெளிப்படுத்துவர். மாறாக பாதிக்கப்பட, கோப உணர்வுகளை கடுமையாக வெளிப்படுத்தி பகையை உண்டாக்கிக்கொள்வர். குறிப்பாக செவ்வாய், சூரியன் எதோ ஒரு வகையில் ஜாதகத்தில் தொடர்பு பெற்றால் உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மையற்றவர்கள். இவர்கள் எத்தகைய முக்கிய பொறுப்புகளையும், உறவுகளையும் எளிதில் தூக்கி எரிந்துவிடுவர். செவ்வாயுடன் ராகு சேர்வது இன்னும் கடுமையை கூட்டும் எனலாம். எனினும் தசா-புக்திகளில்தான் பாதிப்புகள் வெளிப்படும் என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் சுபர்கள் ஆதிக்கம் மிகுந்து பாவர்கள் ஆதிக்கம் குறைந்தவர்கள் உணர்வு மேலாண்மையில் சிறந்தவர்கள். மாறுபட்டு அமைந்தவர்கள் உணர்வின் வழியில் செல்பவர்கள் எனலாம்.  

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னமும் லக்னாதிபதி சந்திரனும் 1௦ ஆமதிபதி செவ்வாயின் 4 ஆம் பார்வையை பெற்ற 7 ஆமதிபதி சனியின் பார்வையில் உள்ளது. இது ஜாதகர் தொழில் சிந்தனை மிக்கவர் என்பதுடன் தனது உணர்வுகளை ஜாதகரால் கட்டுப்படுத்தவும்  தேவைப்படுமிடங்களில் ஆளுமை மிக்கவராக செயல்படவும் முடியும் என்பதை குறிப்பிடுகிறது. பாக்கிய ஸ்தானத்தில் குரு வீட்டிலமர்ந்து, சுக்கிரனின் நேர் பார்வையை பெறும் லக்னாதிபதி சந்திரனுக்கு இரு புறமும் குருவின் பார்வை விழுவது சிறப்பு. இது ஒரு வகையில் சுப கர்த்தாரி யோகம் போல செயல்படும் என்பதை அறிக. 2 குரு அமர்ந்தது சிறப்பே. 2 ஆமதிபதி சூரியன் புத்திகாரகர் புதனுடன் புத்தி ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமர்ந்தது ஜாதகர் தெளிந்த அறிவும், திட்டமிட்டு பேசுபவர் என்பதையும் குறிக்கிறது. கோப பாவகம் எனும் 8 ஆமிடத்தின் அதிபதி சனி ஆட்சி பெற்றுள்ளது நன்மையே. ஆனால் சனிக்கு செவ்வாயின் 4 ஆம் பார்வை விழுவது கோப உணர்வுகளை தூண்டிவிடும். ஆனால் 8 ஆமிடத்திற்கு குரு பார்வை கிடைப்பது தனது கோப உணர்வுகளை தேவைப்படும் சூழலில் மட்டும் வெளிப்படுத்துபவர் என்பதை குறிப்பிடுகிறது. அதாவது ஜாதகருக்கு Emotional Intelligence அதிகம்.

இந்த ஜாதகர் சாதாரண நிலையில் இருந்த தனது வாழ்வை தனது சாதுர்யம் மிக்க பேச்சாலும் சரியான திட்டமிடுதலாலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார். காதல் திருமணம் செய்தவர்.

கீழே இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.

விருட்சிக லக்னம் மனோ காரகர் சந்திரன் நீசமாகும் லக்னமாகும். இயல்பாகவே விஷத்தன்மை கொண்ட லக்னம். லக்னத்தில் 8 ஆமதிபதி புதன் அமர்ந்தது புதனுக்கு திக்பலத்தை தரும் என்றாலும் பரிவர்தனையாகும் செவ்வாய் தனது ஆட்சி வீட்டில் வந்தமர்வது நன்மையே. ஆனால்  அவர் வக்கிரமடைந்த நிலையில் இருப்பதால் பரிவர்த்தனைக்குப் பிறகு வக்கிரத்திலிருந்து செவ்வாய் விடுபட்டாலும் குணத்தில் வக்கிர நிலையே நீடிக்கும். இதனால் லக்னத்தில் புதன் தரும் சாதுர்யத்தை லக்னாதிபதி செவ்வாய் ஏற்காமல் பிடிவாதத்தால் பாதிப்புகளை சந்திப்பார். அதாவது ஜாதகிக்கு புதனால் புத்தியுண்டு அதை செவ்வாய் ஏற்காமல் தனது பிடிவாதத்தால் பயனற்றதாகச் செய்துவிடுவார் எனலாம். கணவரை குறிக்கும் செவ்வாய் களத்திரத்தை குறிப்பிடும் 7 ஆமிடத்துடன் பரிவர்த்தனையாவதால் ஜாதகிக்கு திருமணமாகி கணவர் வந்தவுடன்தான் இந்தவகையில் பாதிப்பு ஏற்படும்.

2 ஆமிடத்தில் சனி மாந்தியுடன் சேர்க்கை பெற்று 2 ஆமதிபதி குரு 2 க்கு 8 ல் கேதுவுடன் மறைந்து உச்சமானதால், 2 ஆமிடம் குறிக்கும் பொருளாதாரம் பாதிக்காது ஆனால் குருவின் காரகமான குடும்பம் பாதிக்கும். பரிவர்த்தனைக்கு முன் வக்கிர செவ்வாய் 2 ஆமிட சனியை தனது கடுமையான 8 ஆம் பார்வையால் பார்ப்பதால் ஜாதகிக்கு இயல்பிலேயே கடுமையாக எடுத்தெறிந்து பேசும் இயல்பை கொடுக்கும். காரணம் 2 ஆமிடத்தின் பொருள் காரகம் பாவிகள் தொடர்பால் அதீத வலுவடையும் இதனால் 2 ன் உயிர் காரகமான குடும்பம் பாதிக்கப்படும். ஜாதகியின் பேச்சில் வெளிப்படும் கடுமையை சிறு வயதிலேயே கவனித்து சரி செய்ய வேண்டிய பெற்றோர்களை குறிக்கும் சூரியனும் சந்திரனும் 2 ஆமிடத்திற்கு லாப ஸ்தானமான லக்னத்திற்கு 12 ல் மறைவதால் ஜாதகி பிறந்த பிறகு குடும்பத்திற்கு கிடைத்த பொருளாதார வளத்தால் கண்டிக்காமல் விட்டுவிடுவர். உண்மையில் ஜாதகி பிறந்த பிறகு இவரது குடும்பம் சாதாரண நிலையிலிருந்து கோடீஸ்வரர்கள் எனும் நிலைக்கு உயர்ந்தது.

ஜாதகத்தில் 5 ஆமிடம் குரு பார்வை பெறுவது சிறப்பே. ஆனால் பூர்வ புண்ணியத்தால் ஜாதகிக்கு குருவின் உயிர் காரகங்களான குடும்பம், குழந்தை வகையில் ஏற்படும் பாதிப்பை குருவோடு இணைந்த கேதுவும், 5 ஆமிடத்தை 3 ஆம் பார்வையால் பார்க்கும் ராகுவும் உறுதி செய்வதால் குரு ராகு-கேதுகளை மீறி செயல்பட இயலாதவராகிறார்.

புத்தி ஸ்தானமான 5 ஆமிடத்தின் காரகர் புதன் இந்த ஜாதகத்தில் 8 ஆமதிபதியாவதால் ஜாதகிக்கு தனது குண இயல்புகளின்படியே பாதிப்புகள் ஏற்படும். பரிவர்த்தனையால் லக்னத்திற்கு வந்தமரும் செவ்வாய் வக்கிரமாகாமல் இருந்தால் ஜாதகி Emotional Inteligence மிக்கவராக கவனமுடன் செயல்படுவார். செவ்வாய் வக்கிரம் பெற்றுவிட்டதால் அவர் லக்னத்தில் நேர்கதியிலமைந்த புதனின் சாதுர்யத்தை ஏற்காமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் செயல்படுவார்.

மேலும் துலாச் சந்திரன் செவ்வாயின் சித்திரை-3 ல் அமர்ந்து, செவ்வாய் சந்திரனின் ரோஹிணி-2 ல் அமர்ந்து நட்சத்திரப் பரிவர்த்தனை பெறுகின்றனர். இதனால் ஜாதகி தனது உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாது அதை கண்ணாடி போல பிறர் மேல் பிரயோகிப்பவராக இருப்பார் எனலாம். லக்னாதிபதி செவ்வாயுடன் நட்சத்திரப் பரிவர்த்தனை பெறும் சந்திரன் இங்கு பாதகாதிபதி என்பதால் கட்டுப்படுத்த இயலாத உணர்வுகொண்ட ஜாதகிக்கு பாதகம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.

இந்த ஜாதகத்தில் புத்தி காரகர் புதனே இங்கு 8 ஆமதிபதியாகி, அவர் சுக்கிரனுடன் பரிவர்த்தனையால் குடும்ப பாவகமான 2 க்கு விரையம் லக்னத்தில் வந்தமரும் செவ்வாயுடன் இணைவதால் ஜாதகி திருமணமாகி செவ்வாயின் அம்சமான கணவர் குடும்பத்திற்கு வந்த பிறகு, தனது கட்டுப்படுத்த இயலாத கோபத்தை கணவரிடம் காண்பிப்பதால் குடும்பம் பாதிப்படையும். ஜாதகத்தில் மனோ காரகர் சந்திரன் தனது நீச வீட்டை நோக்கிச் செல்கிறார். சூரியன் நீச நிலை பெற்றது ஜாதகியை நெறிப்படுத்த வேண்டிய நிலையில் தந்தையின் பாக்கியம் இவருக்கு இல்லை என்பதை ஜாதகம் குறிப்பிடுகிறது.

இந்த ஜாதகிக்கு குரு தசை கேது புக்தி சனி அந்தரத்தில் காதல் திருமணம் நடந்தது. தனது கட்டுப்பாடற்ற கோப குணத்தை கணவரிடம் காண்பித்ததால் கேது புக்தியை அடுத்து வந்த சுக்கிர புக்தியில் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்று குடும்ப வாழ்வை இழந்தார். காரணம் லக்னம், லக்னாதிபதி, 2 , 5, 8 ஆகிய பாவக தொடர்புகள் பாதிக்கப்பட்டுவிட்டன. சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டன. இதனால் ஜாதகிக்கு நிதானம், நற்சிந்தனை , பேச்சு சாதுர்யம், விளைவுகளை எண்ணி செயல்படும் குணம் ஆகியவை இருக்காது. இத்தகைய ஜாதக அமைப்புடையோரை மோசமான Emotional Intelligence கொண்டவர்கள் எனலாம்.

உணர்வுகளை நெறிப்படுத்தத் தெரியாதவர்களும், கண்ணாடி போல பேச்சில் தங்கள் உணர்வுகளை விளைவுகள் அறியாமல் பிரதிபலிப்பவர்களும் வாழ்வில் எளிதில் பாதிப்பை அடைகிறார்கள். இத்தகையவர்கள் சந்திரன் நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தசா-புக்திகளில் தங்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார்கள். ஏனையோர் பாதிப்பிலிருந்து மீழ இயலாமல் வாழ்வில் ஒதுங்கி விடுகிறார்கள்.

இந்த ஜாதகியின் 2 ஆவது திருமணதிற்கு பொருத்தம் பார்க்க கேட்டுக்கொண்ட ஜாதகியின் தாயார் தனது மகளின் கோப குணத்தை பொறுத்துக்கொள்ளும் வரனாக பார்த்து எடுத்துத் தருமாறு கூறி வரன்களின் ஜாதகங்களை அனுப்பினார்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு  பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil