H1B கனவுகள்.

உலகில் ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு விதமான தனிச்சிறப்பை கொண்டிருக்கின்றன. சீனா அபூர்வ வகை  கனிமங்களைக்கொண்டு (Rare Earth Minerals)  உலகை ஆட்டுவிக்க நினைக்கிறது. தைவான் சீனாவின் அபூர்வ வகை கனிமங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்னணுச் சில்லுகளின் (Micro Chips) உற்பத்திக் கேந்திரமாக உள்ளது. நமது இந்தியா மின்னணுச் சில்லுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் மின்னணுப் பொருட்களுக்கான கட்டளை நிரல்களை எழுதும் சேவைத்துறையில் (IT) முன்னணியில் உள்ளது. அமெரிக்கா இவற்றை ஆய்வு செய்து கண்டுபிடித்து ஒருங்கிணைக்கிறது. இப்படி ஒருங்கினைக்கப்பட்டவற்றை நவீன மின்னணுச் சாதனங்களாக உற்பத்தி செய்து உலகிற்கு அளிப்பதில் ஜப்பான் முன்னணியில் உள்ளது. உண்மையில் ஒன்றில்லாமல் மற்றொன்று தனித்து செயல்படாது எனும் சூழலில் இந்தியா பெருமளவு தனது மென்பொருள் சேவைகளை உலகின் மென்பொருள் கட்டமைப்பை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கே அளிக்கிறது. அமெரிக்கா தனது மின்னணு  மென்பொருள் கட்டமைப்புகளின் மூலம் உலகை கட்டுப்படுத்த நினைக்கும் வேளையில் இதர நாடுகள் ஒரு தரப்பான அமெரிக்க ஆளுமையை ஏற்க மறுக்கின்றன.

 

இத்தகைய சூழலில் அமரிக்காவில் தனது மென்பொருள் திறமைக்கேற்ற நல்ல சம்பாத்தியம் பெறலாம்  என்ற கனவுகளுடன் அங்கு சென்றுள்ள நபர் ஒருவர் அங்கே தனது வேலை, விசா பற்றிய வாய்ப்புகளை ஜோதிடம் மூலம் அறிய எண்ணி என்னை தொடர்புகொண்டார். அமெரிக்காவில் வேலையுடன் அங்கு நிரந்தரமாக தங்கிப் பணிபுரிய தேவையான H1B விசா கிடைகுமா? என்பதுவே அன்பரின் கேள்வி. அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

 

                          

 

வெளிநாட்டை குறிக்கும் பாவகம் என்பது 12 ஆமிடமாகும். பிரசன்னத்தில் கால புருஷனுக்கு 12 ஆமிடமான மீனமே உதயமாக அமைந்தது கேள்வியின் உண்மைத்தன்மையை குறிக்கிறது. 12 ஆமதிபதி சனியாகி, மீன உதயத்தில் அமைந்ததும் கேள்வி வெளிநாட்டு வேலை தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்துகிறது. உதயமும் அங்கு நிற்கும் சனியும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்க, ஜாமச் செவ்வாய் (வெளிவட்ட செவ்வாய்) 12 ஆமிட ராகுவின் சதையத்தில் நிற்பது கேள்வியாளர் வெளிநாட்டு வேலை விஷயத்தில் பிடிவாதமான நிலையில் இருப்பதை குறிப்பிடுகிறது. உள்வட்ட உதயாதிபதி குரு வக்கிரம் பெற்ற நிலையில் அமெரிக்காவை குறிப்பிடும் மிதுனத்தில் நிற்பது கேள்வியாளர் அங்கு வசிப்பதை வைராக்கியமாகக்கொண்டுள்ளதை குறிப்பிடுகிறது.

 

 

வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்க நல்ல சம்பாதியமுள்ள வேலை கிடைக்க வேண்டும். பிறகே விசாவிற்கான நடைமுறைகளை துவங்க முடியும் என்ற நிலையில் தற்போது அங்கு அனுதினமும் பல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. முதலில் வேலைக்கான சூழலை அலசுவோம். உதயத்தில் செவ்வாயும் சனியும் அமைந்து 7 ஆமிடமான கன்னியிலும் ஜாமச் சனி அமைந்தது தற்போது வேலை கிடைக்க  கடுமையான தடை உள்ளதை குறிப்பிடுகிறது. 7 ஆமிடம் சிறப்பான நிலையில் இருந்தால்தான் ஒருவர் வெளிநாட்டில் நல்ல வேலையில் அமர முடியும். இங்கு 7 ஆமிட சனி உதய செவ்வாயின் பார்வையில் இருப்பது வேலை கிடைக்க கடும் தடைகள் உள்ளதை குறிப்பிடுகிறது. ஒரு நல்ல விஷயம் லாப ஸ்தானமான 11 ஆமிடம் மகரத்தில்  நீசம் பெற்ற உதயாதிபதி குரு, உதய சனியுடன் பரிவர்த்தனையாகி உதயத்திற்கு வந்து வலுவடைகிறார். இதனால் கேள்வியாளர் பலனடைவது உறுதி. இதனால் கேள்வியாளருக்கு தாமதமானாலும் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. குரு-சனி பரிவர்த்தனை கேள்வியாளர் கிடைக்கவுள்ள வேலையால் தற்போதைய இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதை குறிப்பிடுகிறது. வேலையை குறிப்பிடும் 6 ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் மேஷத்தில் உச்சம் பெற்ற நிலையில் உதயத்தை நோக்கி வருகிறார். இதனால் இவருக்கு வேலை கிடைக்க ஒரு வாய்ப்பு உள்ளதை குறிப்பிட்டாலும் 6 ஆமதிபதி சூரியன் 6 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் அஸ்வினி-2 ல் நிற்பதால் கேள்வியாளருக்கு அமெரிக்க அரசின் கொள்கை முடிவில் மாற்றம் ஏற்பட்ட பிறகே வேலை கிடைக்கும் என்பது புரிகிறது. கேது சட்ட விதிமுறைகள். சூரியன் அரசு.

 

வெளிநாட்டு வேலையின் சிறப்பை குறிப்பிடும் 7 ல் ஜாமச் சனி அமைந்தது வேலை கிடைக்க தடை, தாமதங்கள் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது.  7 ஆமதிபதி புதன் உள்வட்டத்தில் மகரத்தில் சூரியனில் அஸ்தங்கமாகியுள்ளார். இதனால் வேலை தற்போது அரசின் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது புரிகிறது. தற்போது மிதுனத்தில் நிற்கும் உள்வட்ட உதயாதிபதி குரு இன்னும் சில மாதங்களில் கடகத்திற்கு பெயர்ச்சியாகி வந்து உதயத்தை பார்க்கும் காலம் கேள்வியாளர் வேலைக்கான வாய்ப்புகளை எதிர் பார்க்கலாம்.

 

இனி இவருக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணிபுரிய தேவைப்படும் H1B விசா கிடைக்க வாய்ப்புகள் உண்டா? என்பதை காண்போம். இதற்கான காரக பாவகம் 12 ஆமிடமாகும். காரக கிரகம் ராகு. விசாவை புதன் நேரடியாக குறிப்பிடுகிறார். பிரசன்னத்தில் 5 ஆமிட கவிப்பு புதனின் ஆயில்யத்தில் அமைந்திருப்பதால் இவருக்கு H1B விசா தற்போது கிடைக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. 12 ஆமிட ராகுவிற்கும் உதயத்துடனோ, உதயாதிபதியுடனோ தொடர்பு இல்லை என்பதால் கேள்வியாளர் H1B விசா பெற வாய்ப்பில்லை. வெளிநாட்டு சூழலை அனுபவிக்க மட்டுமே தற்போது முடியும்.

 

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்.

 

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
இந்தியா

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
இந்தியா

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil