மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு ஆணின் ஜாதகத்தில் பத்தாம் இடம் எனப்படும் கர்ம ஸ்தானம் தற்காலிகமாகப் பலவீனம் அடையும்போதோ அல்லது ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற காலக்கட்டங்களிலோ அவனது உழைப்பிற்கும் வருமானத்திற்கும் முட்டுக்கட்டைகள் ஏற்படுவதுண்டு.

ஒரு குடும்பத்தின் ஆணிவேராகக் கருதப்படும் கணவன், தனது பணியை இழந்து தவிக்கும் தருணம், பொருளாதார வீழ்ச்சியை விடவும் மனரீதியான சோர்வையே அதிகம் தருகிறது. “யார் அந்தத் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களோ, அவரே உண்மையான வாழ்க்கைத்துணை” என்கிறது சாஸ்திரம்.

ஜோதிட ரீதியாகப் பார்த்தால், கணவனின் ஜாதகத்தில் கிரகங்கள் சோதிக்கும் வேளையில், மனைவியின் ஜாதகத்தில் உள்ள சுபத்துவமான கிரக நிலைகள் (குறிப்பாக வலுவான சந்திரன் மற்றும் செவ்வாய்) அந்தப் பேரிடரைத் தாங்கும் சக்தியைத் தருகின்றன. “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்பதைத் தாண்டி, “கணவன் தடுமாறும்போது அவனது கரம் பிடித்து, ‘நான் இருக்கிறேன்’ என்று பணிக்குச் சென்று குடும்ப பாரத்தைச் சுமக்கும் பெண், அந்த வீட்டின் மகாலக்ஷ்மியாகவே மாறுகிறாள்.”

காலச்சக்கரம் சுழலும்போது, கணவனின் கர்ம வினைகளைத் தன் அன்பாலும் உழைப்பாலும் சரிசெய்யும் ஒரு மனைவியின் பங்களிப்பு வெறும் பொருளாதார உதவி மட்டுமல்ல; அது அந்த இல்லறத்தின் அஸ்திவாரத்தைச் சிதையாமல் காக்கும் ஒரு புனிதமான அறம்.

இந்தப் பதிவில், கணவனுக்குப் பணியிழப்பு ஏற்படும் காலங்களில் கிரகங்களின் தாக்கம் எப்படி இருக்கும்? அப்படியொரு சூழலில் மனைவி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காக்கும் உன்னதமான நிலை யாருக்கு அமையும்? இது போன்ற சூழல்களைக் கடக்க ஜோதிடம் காட்டும் வழிமுறைகள் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

இது ஒரு மீன லக்ன ஜாதகம். அத்துடன் 1-7 ஆகிய இடங்களில் ராகு-கேதுக்கள் இருப்பதால் இது சர்ப்ப தோஷ ஜாதகம் என்பதும் உறுதி.

  1. லக்னாதிபதி நிலை: லக்னாதிபதி குரு பகவான் விரைய ஸ்தானமான 12-ஆம் இடத்தில் வக்கிரம் பெற்று மறைந்துள்ளார். பொதுவாகச் சுப கிரகமான குரு மறைவதை விட, லக்னாதிபதி மறைவது ஜாதகருக்கு அதிகப் பாதிப்பைத் தரும்.
  2. பரிவர்த்தனை யோகம்: 2-ஆம் அதிபதி செவ்வாய் 11-ல் உச்சம் பெற்றுள்ளார். விருச்சிகத்தில் உள்ள சனியோடு செவ்வாய் பரிவர்த்தனை பெறுவது சிறப்பு.
  3. தொழில் நுட்ப அறிவு: 1 மற்றும் 7-ஆம் இடங்களில் சர்ப்ப கிரகங்கள் (ராகு-கேது) அமைந்துள்ளதால், தம்பதியர் இருவருமே தொழில்நுட்ப அறிவு (Technical Knowledge) உடையவர்களாக இருப்பார்கள்.
  4. இடமாற்றம்: இந்த ஜாதகத்தில் பரிவர்த்தனையின் பங்கு முக்கியமானது. ஜாதகர் 9-ஆம் இடம் குறிப்பிடும் தொலைதூர ஊருக்கு (அல்லது வெளி மாநிலத்திற்கு) வேலை நிமித்தமாகச் செல்லும்போது, சனி தொடர்பாவதால் இருப்பிடத்தை விட்டு வேலைக்காக விலகிச் செல்ல நேரிடும். லக்னாதிபதி பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக தொலைதூர வாழிடங்களில் சிறப்படைகிறார்கள்.
  5. பணி பாதிப்பு: 12-ல் மறைந்த குரு வக்கிரமாகி 4, 6, 8 ஆகிய பாவகங்களைப் பார்ப்பதால் சொத்து (4), வேலை (6), மற்றும் அவமானம் (8) ஆகிய ரீதியில் பாதிப்புகளைத் தருகிறார். குறிப்பாக, வேலையைக் குறிக்கும் 6-ஆம் அதிபதி சூரியன், அவமான ஸ்தானமான 8-ல் நீசம் பெற்று மறைந்துள்ளார். சூரியன் கௌரவ காரகர் என்பதால், வேலையில் ஏற்படும் பாதிப்புகளால் ஜாதகர் மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளாவார். சூரியனுடன் இணைந்த சுக்கிரன் வக்கிரமாகியுள்ளதால், இங்குச் சூரியனுக்கு நீச பங்கமும் கிடைக்கவில்லை.

தசாம்ச வர்க்கம் (D10) ஆய்வு:

ஜீவனத்தை ஆராய வேண்டிய தசாம்சத்தில் தனுசு லக்னம் பாவ கர்தாரி அமைப்பில் (இரு பாப கிரகங்களுக்கு இடையில்) சிக்கியுள்ளது. இது வேலை வாய்ப்புகளில் தொடர் பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் தெளிவாக்குகிறது.

  • 2-ஆம் இடத்தில் கேது அமைந்தது வருமானத் தடையைக் குறிப்பிடுகிறது.
  • 2-ஆம் அதிபதி சனி நீசம் பெற்ற 8-ஆம் அதிபதி சந்திரனுடன் 12-ல் மறைந்தது, வேலைவாய்ப்பில் ஜாதகர் கடும் போராட்டங்களைச் சந்திப்பார் என்பதைக் காட்டுகிறது.
  • வேலை பாவகமான 6-ஆம் இடமான ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும், அவர் வக்கிரமானது வேலை வாய்ப்பில் முட்டுக்கட்டைகளை உருவாக்குகிறது.

நடப்பு நிலை: இத்தகைய அமைப்பால் ஜாதகர் வேலைவாய்ப்பில் நிம்மதியற்ற நிலையிலேயே உள்ளார். ஒரு வருடம் வேலை பார்த்தால், அடுத்த இரண்டு ஆண்டுகள் வேலை இல்லாத நிலை இவருக்கு ஏற்படுகிறது. சொந்த மாநிலமான தமிழகத்தை விட்டு அண்டை மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நிலையில், பொருளாதாரத்திற்காகப் போராடும் ஒரு குடும்பஸ்தனின் நிலை கடினமானது.

மனைவி மூலம் யோகம் உண்டா?

ராசிச் சக்கரப்படி மீன லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி புதன் ‘பாதகாதிபதி’ ஆகிறார். களத்திர காரகர் சுக்கிரன் 8-ஆம் அதிபதி ஆகிறார். இந்நிலையில் மனைவியால் வருமானம் வருமா?

  • அதிர்ஷ்டவசமாக சுக்கிரன் 8-ஆம் இடத்தில் வக்கிரம் பெற்றுள்ளதால், அவர் இயல்புக்கு மாறான அதாவது தீய பலன்களைச் செய்யாமல் நற்பலன்களைச் செய்வேண்டிய நிலையில் உள்ளார்.
  • 7-ஆம் அதிபதி புதன், 9-ஆம் இடமான விருட்சிகத்தில் சனி தொடர்பு பெறுகிறார். சனியுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு 2, 9 அதிபதியான செவ்வாயுடன் தொடர்பு பெறுவதால், மனைவி பணிக்குச் செல்வதற்கும், மனைவியால் குடும்பத்திற்கு லாப வரவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மனைவியின் உதவிகளை மேலும் தெளிவாக நவாம்சம் மூலம் ஆராய்வோம்.

நவாம்சத்தில் சிம்ம லக்னாதிபதியும் கௌரவ காரகருமான சூரியன், மனைவியைக் குறிப்பிடும் 7-ஆம் இடத்தில் ராகுவுடன் இணைந்துள்ளார். ஜாதகர் கௌரவம் பார்க்காமல் மனைவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தால் (சரணடைந்தால்) மனைவி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்பது தெளிவாகிறது.

7-ஆம் அதிபதி சனி, தனது 10-ஆம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதாலும், லக்னாதிபதி சூரியனுக்கு 10-ல் நிற்பதாலும், ஜாதகர் தனது மனைவியைக் கேட்டுக்கொண்டால் அவர் நிச்சயம் பணிக்குச் சென்று குடும்ப பாரத்தைத் தாங்குவார்.

முடிவுரை:

கணவன்-மனைவி இருவருமே மென்பொருள் துறையில் வல்லுநர்கள் என்றாலும், கணவரின் ஜாதக அமைப்பு அவரைச் சம்பாதிக்க விடுவதில்லை. ஆனால், அந்த இடத்தைத் தனது உழைப்பால் நிரப்பும் மனைவி தான் வேலைக்குச் சென்று  கணவரையும் இரு குழந்தைகளையும் காக்கிறார். ஒரு ஆண் வாழ்வில் சோர்வடையும் போது அவனைத் தாங்கிப் பிடிக்கும் இத்தகைய பெண்கள் இறைவனால் ஆணுக்கு வழங்கப்பட்ட வரம்.

அனைத்து ஆண்களுக்கும் இத்தகைய மஹாலக்ஷ்மிகள் அமைவதில்லை. அமைந்தாலும் அவர்களைப் போற்றும் பக்குவம் அனைவருக்கும் இருப்பதில்லை. இல்லறம் சிறக்கப் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவதே சிறந்த ஜோதிடப் பரிகாரம்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
இந்தியா

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
இந்தியா

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil