காதல், மரபு மற்றும் காலத்தின் மாற்றம்!

ஆசையும் காதலும் இல்லையேல் இந்த உலகத்தில் ஏது வளர்ச்சி? ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவரையும் இங்கு வளர்த்தெடுத்து வழிநடத்துவது காதலின் பேராற்றலே ஆகும்.

கடந்த நூற்றாண்டு வரை நமது இந்தியச் சமூகத்தைக் இறுக்கமாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்த மொழி, இனம் மற்றும் சாதிய முரண்பாடுகளை, இன்றைய நவீனப் பொருளாதார யுகத்தின் “காதல்” வெகு இயல்பாக உடைத்தெறிந்துவிட்டது.

ஆனால், இந்த வேகமான சமூக மாற்றத்தைக் கண்டு, கடந்த நூற்றாண்டின் சிந்தனைகளில் வாழும் இன்றைய பெற்றோர்கள் திகைத்து நிற்கின்றனர். ஒருபுறம் தங்களுடைய குடும்ப மரபுகளையும் கலாச்சாரத்தையும் காக்க வேண்டும் என்ற எண்ணம்; மறுபுறம் பிள்ளைகளின் திருமண ஆசைகளையும் மகிழ்ச்சியையும் நிறைவேற்ற வேண்டும் என்ற தவிப்பு. இதில் சுவாரசியம் என்னவென்றால், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் பொருளாதார மேன்மைக்காகவும் தங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தி, மரபுகளை விட்டுத்தரப் பெரும்பாலான பெற்றோர்கள் இன்றைக்குத் தயாராகவே இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பெருந்தன்மையான ஒரு தாய், தனது மகளின் திருமண எதிர்காலம் குறித்த குழப்பத்தோடு, மகளையும் அழைத்துக்கொண்டு எனது வீட்டிற்கு நேரில் வந்திருந்தார். அவர்கள் வந்திறங்கிய வாகனமும் தோரணையும் பெரும் தனவந்தர்கள் என்பதைப் பறைசாற்றியது. உண்மையில், அவர் என்னிடம் முழு மனதோடு வரவில்லை; ஒருவித அரைமனதுடனேயே வந்திருந்தார். அதற்கு ஒரு பின்னணியும் உண்டு.

சில வருடங்களுக்கு முன்பு, ஜாதகம் எதுவும் இல்லாத காரணத்தால் திருமண வாய்ப்பு அமையாமல் தவித்த அவருடைய நண்பரின் மகனுக்கு, நான் ‘ஜாமக்கோள் பிரசன்னம்’ பார்த்துச் சொன்ன ஆலோசனைகளின்படி அண்மையில் திருமணம் மிகச் சிறப்பாக முடிந்திருந்தது. அந்த நிகழ்வு தாயின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் மெத்தப் படித்தவர்; ஜோதிடத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கையோ, உயர்வான அபிப்பிராயமோ இல்லாதவர்.

“தனது வீட்டிற்கு வந்து ஜாதகம் பார்த்துத் தர வேண்டும்” என்று அவர் முன்னதாகக் கேட்டுக்கொண்டதை நான் தவிர்த்திருந்தேன். அதனால், “ஒரு ஜோதிடர் கோடீஸ்வரியாகிய தன்னை தனது வீட்டிற்கு வரவைத்துவிட்டாரே!” என்ற எரிச்சல் அவரது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

கையோடு மகளின் ஜாதகத்தைக் கொண்டு வந்திருந்தாலும், நேரடியாக அதைக் கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை. நண்பரின் விஷயத்தில் நடந்தது உண்மையா அல்லது தற்செயலா என்று என்னைச் சோதித்துப் பார்த்துவிட எண்ணியவர், “ஜோதிடரே! எனது மகளின் திருமண வாய்ப்பைப் பற்றி முதலில் பிரசன்னம் பார்த்தே கூறிவிடுங்கள், பிறகு ஜாதகத்தைப் பார்க்கலாம்” என்று ஒரு சவாலைப் போலக் கூறினார்.

அவரது வேண்டுகோளை ஏற்று, நான் ஜாமக்கோள் பிரசன்னக் கட்டத்தைக் கணித்து, அதில் தென்பட்ட விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைக்கத் தொடங்கினேன். சில நிமிடங்களிலேயே, ஜோதிடத்தைச் சாதாரணமாக எண்ணிய அந்தத் தாயும் அருகே அமர்ந்திருந்த மகளும் அளப்பரிய திகைப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கிப்போயினர்.

அவர்களை அத்தனை தூரம் வியப்பில் ஆழ்த்திய அந்த ஜாமக்கோள் பிரசன்னம் சுட்டிக்காட்டிய ரகசியம் என்ன? பிரசன்னக் கட்டத்தில் உதயம், ஆருடம் மற்றும் கவிப்பு ஆகியவை வெளிப்படுத்திய அந்த உண்மை என்ன?

வாருங்கள், விரிவாகப் பார்ப்போம்…

பிரசன்ன அமைப்பு:

  • உதயம்: மிதுன உதயம். உதயமும் உதயத்தில் அமைந்த ஜாமச் (வெளிவட்ட) சனியும், ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் நிற்கிறார்கள்.
  • ஆரூடம் & சுக்கிரன்: 5-ஆம் இடமான துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரனும் அரூடமும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நிற்க, அங்கு அங்கு நிற்கும் 7 ஆமதிபதி குரு சுயசாரமான விசாகத்தில் நிற்கிறார்.
  • கவிப்பு: 8-ஆம் இடத்தில் அமைந்த கவிப்பு 2 ஆமதிபதி சந்திரனின் திருவோணத்தில்  கவிப்புடன் இணைந்த ஜாமச் செவ்வாயின் அவிட்டத்தில் அமைந்துள்ளார்.

பிரசன்ன விதியும் ஜோதிட ஆய்வும்:

  1. பிரசன்ன விதிகள்:
    • உதயமும் உதய கிரகமும் மகளைக் குறிக்கும்.
    • உதயாதிபதி மகளின் நிலையை உணர்த்தும்.
    • உதயத்திற்கும் ஆரூடத்திற்குமான தொடர்பானது, வந்த விஷயம் என்ன என்பதைக் குறிக்கும்.
    • கவிப்பு என்பது அந்த விஷயத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் தடைகளையும் சுட்டிக்காட்டும்.
  2. காதல் அமைப்பு: இங்கு ஆரூடம் காதல் பாவகம் எனப்படும் உதயத்திற்கு 5-ஆம் இடத்தில் அமைந்துள்ளது. மேலும் கடகத்தில் நிற்கும் வெளிவட்ட 5-ஆம் அதிபதி சுக்கிரன், உச்சம் பெற்ற உதயாதிபதியும் காதல் காரகனுமான புதனின் சாரம் ஆயில்யத்தில் அமைந்துள்ளார். இதனால் மகள் தீவிரக் காதலில் இருப்பது தெளிவாகிறது.
  3. திருமணத் தடை: கவிப்பு குடும்ப ஸ்தானாதிபதி சந்திரனின் திருவோணத்தில் நிற்பதால் ஜாதகியின் குடும்ப வாழ்வு தடையாகியுள்ளது தெரிகிறது.
  4. தந்தையின் எதிர்ப்பு: 8-ஆம் இடமே பாதிப்பு, தடை, அவமானம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். அங்கு சூரியன் கவிப்பில் இணைந்தது, மகளின் காதலுக்குத் தடையே தந்தையாகத்தான் இருப்பார் என்பதை உணர்த்துகிறது.
  5. மகளின் பிடிவாதம்: “தந்தை தடை போட்டால் மகள் மனம் மாறிவிடுவாரா?” என்றால்… நிச்சயமாக இல்லை! இதற்கு உதயாதிபதியின் நிலையை ஆராய வேண்டும். உதயாதிபதி புதன் உள்வட்டத்திலும், வெளிவட்டத்திலும் 4-ஆம் இடத்தில் (கன்னியில்) உச்சம் பெற்று அமைந்துள்ளார். உதயாதிபதி அதீத வலுவுடன் இருப்பதால் மகளின் மனதை யாராலும் மாற்ற முடியாது.
  6. பிரசன்னத்தின் கூடுதல் நகர்வுகள்: பிரசன்னச் சூழலை விவரித்துக் கூறும் 10-ஆம் இடமான மீனத்தில், உதயத்தில் நிற்கும் சனியே வக்கிரம் பெற்று உதயாதிபதி புதனின் சாரத்தில் நின்று, கன்னி புதனின் நேர்பார்வையைப் பெறுகிறார்.

ஜோதிட விதி: உதயாதிபதியோ அல்லது உதய கிரகமோ வக்கிர கிரகத் தொடர்பு பெற்றால், கேள்வியாளர் அதீத பிடிவாதமான மனநிலையில் இருப்பார். “தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்” எனும் நிலைதான் இது.

மேலும் உதயமும், உதய சனியும் ராகுவின் சாரம் பெறுவதால் அது சூரியனை (தந்தையை) அலட்சியப்படுத்தும். இங்கு உச்சம் பெற்ற உதயாதிபதி புதன் மீது சூரியன் உள்வட்டத்தில் நிற்பதால், தந்தை மகளைக் கட்டுப்படுத்த எண்ணுகிறார்; ஆனால் உதயாதிபதி உச்ச வலுவுடன் உள்ளதால் மகள் தந்தைக்கு கட்டுப்பட மாட்டார்.

  1. காதலனின் தகுதி: கால புருஷனுக்கு 10-ஆம் இடமான மகரத்தில் சூரியன் மருமகனை குறிப்பிடும் செவ்வாய் சாரத்தில் நின்று உடன் நிற்கும் கவிப்பு கடகத்தில் நீசமான செவ்வாயை பார்க்கிறது. இதனால் மகளின் காதலன் பார்க்கும் வேலை அல்லது அவரது சம்பாத்தியத் தகுதி தந்தைக்குப் பிடிக்காமல் இருக்கக்கூடும்.

நான் கூறிய பலன்:

மேற்கண்ட விவரங்களை விரிவாக ஆராய்ந்துவிட்டு அவர்களிடம் பின்வருமாறு கூறினேன்:

“உங்கள் மகள் தனது காதலில் இருந்து பின்வாங்க மாட்டார். தந்தை மகளின் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார். மகளை விட அவரது காதலனின் சம்பாத்தியத் தகுதி குறைவாக இருப்பதுதான் தந்தையின் எதிர்ப்பிற்குக் காரணம். தந்தை தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்வதுதான் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி. ஏனெனில், மகள் உங்களை மீறிச் செயல்படவும் வாய்ப்புள்ளது.”

நான் கூறியதைக் கேட்ட தாயும் மகளும் அதிர்ச்சியில் திகைத்துவிட்டனர்!

மகள் தனது தாயைப் பார்த்து, “Mom I’ve won!” என்று சிரித்தபடியே என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். தாயின் முகத்திலோ ஈயாடவில்லை! ஜாதகத்தைக் கூட வாங்காமல், தங்களை முன்பின் அறியாத ஒரு ஜோதிடரால் எப்படித் தங்கள் மகளின் நிலையை துல்லியமாகக் கூற முடிந்தது என்பதை அவரால் ஜீரணிக்கவே இயலவில்லை.

பிறகு, “You are right! That’s why we came here… But I can’t believe this!” என்று வாடிய முகத்துடன் கூறினார். தொடக்கத்தில் என்னைச் சாதாரண ஜோதிடராகப் பார்த்த மகள், இப்போது நெகிழ்ச்சியுடன் “Thanks Uncle!” என்றார்.

அதன்பின் அவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

பின்புலம் & பிண்ணனிச் சூழல்:

பெண்ணின் தந்தை புகழ்பெற்ற ஒரு மருத்துவர் (Doctor). தனது மகளையும் MBBS படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். மகள் தற்போது MD படிக்கும் முயற்சியில் உள்ளார். மகள் ஒருவரைக் காதலிக்கிறார்; அந்தக் காதலன் IT துறையில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஒரு மென்பொறியாளர் (Software Engineer).

தனது மகளுக்கு மற்றொரு மருத்துவரையே மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த தந்தையால், ஒரு ஐடி ஊழியரை மருமகனாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதுவே அந்த வீட்டில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தாய், கணவருக்கும் மகளுக்குமான போராட்டத்திற்கு நடுவில் சிக்கிக்கொண்டு வழிகாட்டல் தேடி இங்கு வந்திருக்கிறார்.

“தனது மகள் மனம் மாற வாய்ப்புள்ளதா? அதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?” என்று தாய் மீண்டும் மீண்டும் கேட்டார். அந்த நேரத்தில் மகள் “Mummy…” என்றபடி தாயை முறைத்ததைப் பார்க்க எனக்கு சிரிப்பே வந்துவிட்டது.

எனினும், தாயின் வேண்டுகோளுக்கிணங்க மகளது ஜாதகத்தையும் ஆராய்ந்தோம். பிரசன்னத்தில் சுட்டிக்காட்டப்படுவதுதான் ஜாதகமும் பிரதிபலிக்கும் என்பதை நானறிவேன்.அதன்படி ஜாதகம் பிரசன்ன விபரங்களை பிரதிபலிக்கிறதா என்று ஆராய்ந்தேன்.

ஜாதக ஆய்வு:

பிரசன்னம் தெரிவித்ததைத்தான் ஜாதகமும் சுட்டிக்காட்டும் என்பதை மகளின் ஜாதகம் அப்படியே உறுதிப்படுத்தியது:

  1. காதல் திருமணம் உறுதி: கோச்சார லக்னம் 5-ஆம் அதிபதி செவ்வாய் மீது மகரத்தில் செல்கிறது. இது ஜாதகி காதலித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தசாநாதர் ராகு, 5-ஆம் அதிபதி செவ்வாயின் சாரத்தில், 7-ஆம் இடமான மிதுனத்தில் லக்னாதிபதி குருவுடன் இணைந்து தசை நடத்துகிறார். இது ராகு தசையில் ஜாதகி காதலித்துத்தான் திருமணம் செய்வார் என்பதை 100% உறுதி செய்கிறது.
  2. தந்தையின் மனநிலை: தந்தையைக் குறிக்கும் 9-ஆம் அதிபதி சூரியன் நீசமாகி, 5-இல் நிற்கும் 8-ஆம் அதிபதி சந்திரனின் பார்வையைப் பெறுவதால், தந்தை ஜாதகியின் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். ஆனால் சூரியனும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில்தான் துலாமில் நிற்கிறார். இதனால் ராகு தசை நடக்கும் ஜாதகி, தந்தையின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
  3. திருமண காலம்: கோச்சார சந்திரன், ஜனன லக்னத்தில் இருந்து 7-ஆம் இடத்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார். ராகு தசாநாதராக இருப்பதால் ஜாதகியின் காதல் நிறைவேறுவது உறுதி. கோச்சார சந்திரன் அடுத்து 2-இல் நிற்கும் 5 ஆமதிபதி செவ்வாயைத் தொடவுள்ளதால், ஜாதகி காதலனையே கரம் பிடிப்பார்.

ஆனால், கோச்சார ராகு கணவனைக் குறிக்கும் செவ்வாய் மீது வரவுள்ளதாலும், கோச்சார சந்திரனுக்கு ஜனன மற்றும் கோச்சார சனியின் 10-ஆம் பார்வை கிடைப்பதாலும், ஜாதகியின் காதல் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் சற்றுத் தாமதமாகவே நடக்கும் என்று தெளிவுபடுத்தினேன்.

ஜோதிடத்தின் மீது பெரிய மதிப்பு இல்லாமலும், “ஒரு சாதாரண ஜோதிடர் நமது மகளின் வாழ்க்கையை எப்படி முடிவு செய்ய முடியும்?” என்ற எண்ணத்தோடும் வந்த அந்தத் தாய், மகளின் ஜாதகத்தைக் கையில்கூட வாங்காமல் அவரது காதலையும் தந்தை அதை எதிர்ப்பதையும் கூறியதை கேட்டு வியந்துபோனார். விடைபெறும்போது மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் என்னை வணங்கிச் சென்றார்.

இதுவே நமது பாரம்பரிய ஜோதிடத்தின் பேராற்றல்! இத்தகைய அற்புதக் கலையை எனக்கு அருளிய எனது ஆசான்களுக்கு மனப்பூர்வமாக நன்றி கூறிக்கொண்டேன்.

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துகளுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இந்தியா

வில்லாளன்

பண்டைய காலத்தில் அரச குமாரர்களுக்குப் பால்ய பருவம் கடந்த பிறகு குதிரையேற்றம், யானையேற்றம், வில்வித்தை போன்ற தற்காப்பு மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை முறைப்படி கற்பிப்பது வழக்கமாக இருந்தது. இன்றைய நவீன காலத்தில், மேல்தட்டு மற்றும்

மேலும் படிக்க »
Advanced Atrology

எலியும் பொறியும்! – உங்கள் வேலை நிலை எப்படி?

இன்றைய சவாலான பொருளாதாரச் சூழலில் ‘வேலை மாற்றம்’ (Job Change) என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சியை நோக்கியோ அல்லது தற்போதைய பணியிடத்தில் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தத்தின்

மேலும் படிக்க »
இல்லறம்

காதல், மரபு மற்றும் காலத்தின் மாற்றம்!

ஆசையும் காதலும் இல்லையேல் இந்த உலகத்தில் ஏது வளர்ச்சி? ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவரையும் இங்கு வளர்த்தெடுத்து வழிநடத்துவது காதலின் பேராற்றலே ஆகும். கடந்த நூற்றாண்டு வரை நமது இந்தியச்

மேலும் படிக்க »
Advanced Atrology

‘A காத்தா’ – ‘B காத்தா’ வீடுகளும் பெருநகர வாழ்க்கையும்: உங்கள் ஜாதகம் சொல்வது என்ன?

சொந்த வீடு… இது வெறும் செங்கற்களாலும் சிமெண்டினாலும் கட்டப்படும் ஒரு கட்டிடம் அல்ல; ஒவ்வொரு சராசரி மனிதனின் வாழ்நாள் உழைப்பு, வியர்வை, லட்சியம் மற்றும் எதிர்காலக் கனவுகளின் பிம்பம். ஆனால், இன்றைய பொருளாதாரச் சூழலிலும்,

மேலும் படிக்க »
Advanced Atrology

“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பா?” — தற்கால உலகப் பொருளாதாரமும் வெளிநாட்டு யோகமும்!

“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” ஔவையாரின் இந்த வாக்கு பல தலைமுறைகளாக நாம் போற்றி வந்த மகத்தான உண்மை. “நன்கு படித்திருந்தால், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தலைநிமிர்ந்து வாழலாம்; நல்ல வேலை தேடி

மேலும் படிக்க »
Advanced Atrology

கர்மா நம்மை ஆட்டுவிக்கிறதா? அல்லது பயம் நம்மைத் தடுத்து நிறுத்துகிறதா? – ஒரு ஜோதிடப் பார்வை!

வாழ்வில் அனைவருக்கும் அனைத்துவிதமான பாக்கியங்களும் பரிபூரணமாக அமைந்துவிடுவதில்லை. சம்பாத்தியம் சிறப்பானால் குடும்பத்தில் பிரச்சனை; குடும்பம் சிறப்பானால் ஆரோக்கியத்தில் சிரமங்கள் என, எதையாவது ஒன்றை இழந்துவிட்டுத்தான் மனிதன் வாழ வேண்டியிருக்கிறது. அனைவரையும் ஏதோ ஒருவித கண்ணுக்குத்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil