புதிய பணியாளர் எப்படி?

ஜோதிடமே ஒரு ஆச்சரியமான விஷயம்தான். அதிலும் ஜோதிடரிடம் வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகள் சில சமயம் ஜோதிடரையும் மிகுந்த ஆச்சரியப்படுத்தும். எனது சில வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தில் முடிவு செய்துவிட்டு நான் என்ன சொல்லுகிறேன் என்று உறுதி செய்துகொள்ள வருவார்கள். ஒருவர் ஜாதகத்தில் உள்ளதை ஜோதிடம் கூறுவது மட்டுமல்ல, ஆலோசனை பெற வரும் நபர் எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளார் என்பதையும் அவர் ஜோதிடரை சந்திக்கும் நேரமே காட்டிக்கொடுத்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பணிபுரிந்த ஒரு நிறுவன உரிமையாளர் ஜோதிடம் அறிந்தவன் என்ற முறையில் என்னிடம் நிறுவன செயல்பாடுகள் பற்றி அவ்வப்போது ஆலோசனை செய்வது வழக்கம். நான் கூறிய பல ஜோதிட விஷயங்களை அனுபவ பூரமாக உணர்ந்தவர். அதனால் என்மீது மதிப்பு மிக அதிகம். நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய காலம் வந்தபோது மிகவும்  வருத்தப்பட்டார்.  ஆனால் காலம் நம் அனைவரையும் மாறுபட்ட சூழல்களுக்கு  தள்ளுகிறது. “நாம் அனைவரும் காலம் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்றால் அது மிகையல்ல”. பெரிய சமாதானத்திற்குப் பிறகு அவரது நிறுவனத்தில் இருந்து விலகினேன். ஆனாலும் அவ்வப்போது என்னை தொடர்புகொள்வார். தற்போது  புதிதாக ஒருவரை பணியமர்த்த வேண்டிய நிலை. அவரை நிறுவனத்தில் சேர்ப்பதால் நிறுவனத்திற்கு பலன் கிடைக்குமா? என்று ஆலோசனை கேட்டார். என்னை நாடி வந்த நிறுவன உரிமையாளர் தொழில் நிமித்தம் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்பவர். இயல்பான அவரது ஜோதிட ஆர்வம் காரணமாக வெளிநாட்டில் டாரட் அட்டை ஜோதிடமும் பார்த்துள்ளார். அதில் பல ஆச்சரியங்களை உணர்ந்தவர். இதனால் மேற்குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை  தனக்கு டாராட் அட்டை ஜோதிடம் மூலம் பதிலளிக்க கேட்டுக்கொண்டார்.

 

கீழே மேற்கண்ட கேள்விக்கான டாரட் அட்டை.

 

                                           

படத்திலுள்ளவரின் ஆடையில் பல மண்டையோட்டு சின்னங்கள் உள்ளன. பல போர் அனுபவங்களை பெற்ற ஒருவரை இது குறிப்பிடுகிறது. நிறுவனத்திற்கு வரக்கூடிய நபர் அனுபவம் வாய்ந்தவர் என்பதை இது காட்டுகிறது. படத்தில் வீரனின் கையில் ஒரு கம்பும் தலையில் கவசமும் கொடியும் காணப்படுவது இது சாதாரண வீரனை குறிக்காது. அதிகாரப் பொறுப்பில் இருக்கும் சேனாதிபதியை குறிப்பிடும். இதனால்  நிறுவனத்திற்கு புதிதாக வரும் நபர் ஒரு அதிகாரப் பொறுப்பிற்கே வருகிறார். சாதாரண பணியாளர் அல்ல என்று தெரிகிறது.  பாதுகாப்புக் கவசங்களுடன் சேனாதிபதி உள்ளார் என்பதால் வரக்கூடிய பணியாளர் ஏற்கனவே பாதுகாப்பான வேலையில்தான் உள்ளார் என்பதை குறிப்பிடுகிறது. அதாவது அவர் தற்போதும் பணியில்தான் உள்ளார். கேட்டுக்கொண்டவர் நிறுவனத்திற்கு வந்தால் அவரது தற்போதைய வேலையை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வர வேண்டும்.

 

தற்போது வரக்கூடிய நபர் கேள்வியாளரின் நிறுவனத்தில் என்ன எதிர்பார்த்து வருவார்? என்று பார்ப்போம். சேனாதிபதி அணிந்துள்ள ஆடையில் பண வளமையை குறிப்பிடும் மஞ்சள் வர்ணமே பிரதானமாக உள்ளதால் புதிய பணியாளர் நல்ல சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பார். மஞ்சளை அடுத்து சிவப்பு வர்ணம் அதிகமுள்ளதால் அதிகாரம் மிக்க பொறுப்பை எதிர்பார்ப்பார். அதாவது நிறுவனத்திற்கு புதிதாக வருபவர் சாதாரண உழியராகவோ அல்லது நிறுவனத்தில் ஏற்கனவே பொறுப்பில் உள்ளவருக்கு உதவியாளராகவோ பணி  செய்ய விரும்பாமல் சுதந்திரமாக, யாருக்கும் கட்டுப்படாமல் தனிப்பொறுப்பில் பணிபுரிய விரும்புவார். அதே சமயம் வெள்ளை வர்ணமும் அதிகம் உள்ளதால் பற்றற்றவராகவும் இருப்பார்.

 

இனி புதிய நபரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை காண்போம். சேனாதிபதியின் கையில் கம்பு உள்ளது. கம்பில் வளர்ந்துகொண்டுள்ள இலைகள் உள்ளன. இது புதிதாக நிறுவனத்திற்கு வரும் நபரின் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் நிறுவனத்தில் எதிர்ப்புகள் எழும் என்று காட்டுகிறது. அல்லது அவருடன் இணைந்து செயல்பட நிறுவன ஊழியர்களில் ஐந்து பேர் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். கம்பில் உள்ள 5 செடிகள் அதை குறிப்பிடுகின்றன. சேனாதிபதி பயணத்தில் உள்ளார். மணல் குவியலுள்ள இடத்தை கடந்துகொண்டுள்ளார். இது புதிதாக வரும் நபர் அலைந்து திரியும் விற்பனை பிரதிநிதியாக இருப்பார். அவர் அலுவலகத்தில் நிலையாக அமர்ந்து செயல்படுபவர் அல்ல. ஆனால் அவருக்கு மணல் குவியல் போல குவியல் குவியலாக வேலையில் தடைகள் வரும். சேனாதிபதி பயணிக்கும் குதிரை குனிந்த தலையுடன் உள்ளது. சேனாதிபதியும் குனிந்த பார்வையிலேயே உள்ளார். இதனால் புதிதாக நிறுவனத்திற்கு வரும் நபரை நிறுவனம் முழுமையாக நம்பாது. அவரது வேலையும் நிறுவனத்திற்கு நம்பத்தக்கதாக இருக்காது என்பதை குறிப்பிடுகிறது.

 

மேற்கண்ட டாராட் அட்டை கூறிய தகவல்களை கேள்வி கேட்ட நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் “நீங்கள் கூறிய அனைத்தும் சரியானவை. வரும் நபர் ஏற்கனவே எனது நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்தவர்.  ஆனால் தற்போது பொறுப்பில் உள்ள பணியாளரின் பணிச்சுமையை குறைக்கவே அவரை மீண்டும் பணியமர்த்துகிறேன். தற்போதைய பணியாளர் புதியவரிடம் தனது வேலையை பகிர்ந்துகொள்ள மாட்டார். ஏனெனில் தனது வேலையை புதிதாக வரும் நபர் தட்டிப்பறித்து விடுவார் என்று அவர் எண்ணுவார். இதனால்தான் தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்று அவர் கூறினார். ஆனால் நான்தான் வேலையின் முக்கியத்துவம் கருதி அதே பொறுப்பில் இருந்த பழைய ஊழியரை அழைக்கிறேன் என்றார். முன்பு பணியிலிருந்த போது வேலையில் ஓரளவு நன்கு செயல்பட்டிருந்தாலும் அப்போது அவர் ஆரோக்கியத்தின் பொருட்டு நிறைய விடுப்புகள் எடுத்தார். அதனால் தற்போதும் அவரை நம்பி முழுப் பொறுப்பையும் கொடுக்க இயலாது. அதனால் தற்போதுள்ள ஊழியருடன் இணைந்து செயல்பட அவரை அழைக்கிறேன் என்றார். ஆனால் இந்த ஒரு டாரட் அட்டையை பார்த்து நீங்கள் கூறிய அத்தனை விஷயங்களும் துல்லியமானவை. ஆச்சரியமாகவும் உள்ளது” என்றார். இதை எனக்கு கற்றுத்தந்த எனது குருவிற்கு மானசீகமாக நன்றி கூறிக்கொண்டேன்.

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: +91 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான இடைவெளி

வாழ்வில் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் — வெற்றியாளர்கள் தங்களின் பலத்திற்கு ஏற்ற சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; தோல்வியாளர்களோ தங்களின் பலமறியாமல் தவறான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தங்களையே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க »
Advanced Atrology

Option Buying vs Option Selling: ஜோதிட ரீதியான ரகசியம்

வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் பங்குச்சந்தை, இன்று அனைவரையும் ஈர்க்கும் ஒரு காந்தமாக மாறியுள்ளது. உள்ளங்கையில் உலகத்தைச் சுருக்கும் எளிய ஸ்மார்ட்போன் செயலிகளும், டிஜிட்டல் கட்டமைப்புகளும் பங்கு வர்த்தகத்தைச் சாமானியர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு

மேலும் படிக்க »
இல்லறம்

திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல

மேலும் படிக்க »
கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English