உத்தம கிரஹ யோகம்.

பெரும் சாம்ராஜ்யத்தின் வாரிசுகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரண்மனை போன்றொரு வீடு அன்றைய கால கட்டத்தில் இயல்பாகவே அமையும். இன்று ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களது குண்டர் படையுமே அரண்மனை போன்றதொரு வீட்டை கட்டிக்கொள்ள இயலும். அது அடுத்த ஆட்சியில் பிடுங்கப்பட்டுவிடுவது கண்கூடு. நேர்மையாக ஒருவர் தனது தனித்  திறமையால் முன்னேறி தனக்கான அரண்மனை போன்றதொரு வீட்டை உருவாக்கிக் கொள்வதும் இன்றும் நடந்துகொண்டுதான் உள்ளது. பெரும் பண்ணை வீடுகளை இன்று அரண்மனைக்கு ஒப்பிடலாம். ராஜா அரண்மனையில் இருந்து ஆட்சி செய்வார் என்பது ஒரு புறமிருக்க, அரசர் போரில் தோல்வியுற்றால் அவர் அரண்மனையில் இருக்க இயலாது என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது அரண்மனை போன்றதொரு வீட்டில் வசிக்க இன்று ஒருவர் பெரிய வணிக நிறுவனத்தின் அதிபராக இருக்க வேண்டும். அந்த வணிகம் மூலம் அவருக்கு தனவரவு தடையின்றி வந்துகொண்டு இருக்க வேண்டும். தனவரவு தடை பட்டால் அரண்மனையை பராமரிக்க இயலாது. இத்தகைய அரண்மனையை போன்றதொரு வீட்டை கட்டியவர்களின் அடுத்த தலை முறைதான் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது. வாரிசுகளின் ஜாதகத்தில் அரண்மனையில் வசிக்கும் அமைப்பு இல்லையென்றால் அந்த சொத்தை வீணாக்கிவிடுவர். அதனால்தான் பெரும் அரசர்களும், தனவந்தர்களும் ஜாதகப்படி தங்கள் குடும்ப வாரிகளில் யாருக்கு தாங்கள் உருவாக்கிய சொத்தை பராமரிக்கும் அல்லது பெருக்கும் அமைப்பு உள்ளதோ அவர்களுக்கே தங்களது சொத்தை எழுதி வைக்கின்றனர். கவனிக்க இங்கிலாந்து அரசர் பரம்பரையில் அரண்மனையில் வசிக்கும் அமைப்பு இல்லாத வில்லியம் ஹாரி திருமணக் காரணத்தை முன்னிட்டு அரச குடும்பத்தை விட்டு விலகி விட்டார். பெரும் அரண்மனை போன்ற வீடு அமையும் ஜாதக அமைப்பையும், அதில் வசிக்கும் அமைப்பையும் பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.

4 ஆமதிபதி சுபர்களுடன் இணைந்து கேந்திர, திரிகோணங்களில் வலுவாக அமைந்திருப்பது உத்தம கிரஹ (வீடு) யோகம் எனப்படும். இந்த யோகம் உள்ள ஜாதகர்களுக்கு அழகான, வசதியான வீட்டில் வசிக்கும் அமைப்பு  ஏற்படும். இதே யோகத்தில் சூரியன் மற்றும் ராகு தொடர்பானால் அத்தகைய ஜாதகர்களுக்கு பிரம்மாண்டமான அரண்மனை  போன்ற வீட்டில் வசிக்கும் அமைப்பு ஏற்படும்.

கீழே நீங்கள் காண்பது ஒரு பெண்ணின் ஜாதகம்.

வீடு பாவகம் என்பது லக்னத்திலிருந்து நான்காமிடமாகும். மேற்கண்ட ஜாதகத்தில் லக்னம் கால புருஷனுக்கு நான்காமிடமாகி லக்னத்திற்கு 4 ஆமதிபதி சுக்கிரன், பாக்கிய ஸ்தானமான மீனத்தில் உச்சம் பெற்றது, சிறந்த வீடு பாக்கியத்தை குறிப்பிடும். 4 ல் கேது அமைந்தது சிறப்பல்ல என்றாலும், 4 ஆமதிபதி 9 ல் உச்சம் பெற்றதால்  நான்காமிட கேது நன்மை செய்யும் அமைப்பை ஏற்படுத்தும். பூமி காரகர் செவ்வாய் உச்சம் பெற்ற சுக்கிரனின் ரிஷபத்தில் லக்னத்திற்கு 11 ல் நின்றது மிகச் சிறந்த அமைப்பாகும். மேலும் செவ்வாயின் மூலத் திரிகோண வீடான மேஷத்தில் உச்ச சூரியன் அமைந்ததால் செவ்வாய் கூடுதல் வலுவடைகிறார். உச்ச சூரியனுடன் ராகு அமைந்துள்ளதால் ராகு உச்ச சூரியனின் வலுவை தனதாக்கிக்கொண்டு ஜாதகருக்கு நன்மை செய்யும் அமைப்பில் உள்ளார்.   சூரியன் இந்த ஜாதகத்தில் உச்சம் என்பதுடன் திக்பலம் என்பதையும் கவனிக்க. இது ஜாதகிக்கு தொழில் வகையில் மிக உயர்வான நிலையில் இருந்து செயல்பட வைக்கும் அமைப்பாகும். வீடு யோகங்கள் சிறப்பாக உள்ள இந்த ஜாதகிக்கு, அதை சிறப்பாக பராமரிக்கும் பொருளாதாரத்தை வலுப் பெற்ற 2 ஆமதிபதி சூரியன் வழங்குவார். 4 ஆமதிபதி உச்சம் பெற்ற ஜாதகத்தில் 4 ஆமிடத்தை பிரம்மாண்ட கிரகம் ராகுவோடு இணைந்த சூரியன் பார்ப்பது ஜாதகிக்கு உத்தம கிரஹ யோகம் உள்ளதோடு ராகு-சூரியன் இருவரும் 4 ஆமதிபதி சுக்கிரனின் பரணியில் இருந்து 4 ஆமிடத்தை பார்ப்பதால் அரண்மனை போன்றதொரு வீட்டில் வசிக்கும் அமைப்பு உள்ளதையும் குறிப்பிடுகிறது. 7ல் நீசமடைந்த குரு, மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரனால் நீச பங்கமடைகிறார். இப்படி நீச பங்கமடைந்த குரு தனது உச்ச வீடான லக்னத்தை பார்ப்பது, அதுவும் பாக்யாதிபதியாகி லக்னத்தை பார்ப்பது சிறப்பான அமைப்பாகும். லக்னாதிபதி சந்திரன் 6 ல் மறைந்தது சிறப்பில்லை என்றாலும் சந்திரனின் வீட்டதிபதி குரு நீசபங்கப்பட்டுவிட்டதால் சந்திரன் வலுவாக உள்ளதாகவே கணக்கிட வேண்டும்.

சந்திரன் 4 ஆமிட கேதுவின் மூலம்-4 ல் நிற்பதால் சந்திரனுக்கும் 4 ஆமிடத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. கேது பாட்டியையும் சந்திரன் தாயையும் குறிக்கும் கிரகம் என்பதை கவனத்தில் கொள்க. இந்த ஜாதகிக்கு தாய் வழிப் பாட்டியின் அரண்மனை போன்றதொரு பெரிய வீடு தாயாரால் கொடுக்கப்பட்டது. ராகு பிரம்மாண்டத்தை குறிப்பிட்டால் கேது சிறியதை குறிப்பிடுவார். இந்த ஜாதகிக்கு தாய் கொடுத்த பெரிய வீட்டை விற்றுவிட்டு சிறிதாக ஒரு வீடு வாங்கிக்கொள்ள விருப்பம். ஜாதக அமைப்பு அரண்மனை போன்றதொரு வீட்டில் வசிக்கும் அமைப்பை காட்டுகிறது. ஆனால் ஜாதகியின் மனம் சிறிய வீட்டை எண்ணுகிறது என்ன காரணம்?

காரணத்தை வீட்டிற்கு ஆராய வேண்டிய வர்க்கச் சக்கரமான சதுர்த்தாம்சம் மூலம் காண்போம்.

ராசியிலும் சதுர்த்தாம்சத்திலும் லக்னம் கடகமாகி வர்கோத்தமம் பெற்றுள்ளது வீடு பாக்கியத்திற்கு சிறப்பான அமைப்பாகும். ஜாதகி தனது பெரிய வீட்டை சிறிதாக மாற்றிக்கொள்ள செவ்வாய் தசை குரு புக்தி வந்தது முதல் எண்ணுகிறார். சதுர்த்தாம்சத்தில் தசா நாதர் செவ்வாய் சிம்மத்தில் இருக்க புக்தி நாதர் குரு உச்சம் பெற்று கேதுவுடன் இணைந்து லக்னத்தில் திக்பலம் பெற்று நிற்கிறார். ராசியிலும் கேது விசாகம்-2 ல் குருவின் தொடர்பில்தான் நிற்கிறார். 4 ஆமதிபதி சுக்கிரன் ராசியில் உச்சமானாலும்  சதுர்த்தாம்சத்தில் நீசம் பெற்று 9 ல் அமைந்த சந்திரனை பார்ப்பது சிறப்பல்ல. மீனத்தில் நிற்கும் சந்திரன் லக்னத்தில் நிற்கும் குருவுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு  கேதுவுடன் வந்து இணைவார். இப்படி மனோ காரகர் சந்திரன் எளிமைக்குக் காரகர் கேதுவுடன் லக்னத்தில் இணைவதால்  ஜாதகி மனதளவில் வீடு விஷயத்தில் சிரியதானதையே விரும்புவார். தசாநாதர் செவ்வாய் 4 ஆமிடத்திற்கு பாதகத்திலும், 4 ஆமதிபதி சுக்கிரனுக்கு விரையத்திலும் நின்று திசை நடத்துகிறார். இதனால் இவர் தனது வீட்டை தனது விருப்பப்படி மாற்றியமைத்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுக்கிரன் கன்னியில் சூரியனின் உத்திரம்-2 ல் நிற்க சூரியன் தசாநாதர் செவ்வாய்க்கு 6 ல் ராகுவுடன் இணைந்து நிற்பதை கவனிக்க. இது பெரிய வீட்டை பராமரிக்க இயலாமல் வீட்டை மாற்றியமைத்துக்கொள்ளும் நிலையை குறிப்பிடும்.

இந்த ஜாதகி அரசுப் பள்ளிக்யொன்றில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார். தலைமை ஆசிரியை பொறுப்பும் விரைவில் கிடைக்கவுள்ளது. இவரது பெரிய வீட்டை பராமரிக்க இயலாமல் அதன் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளனர். தங்கள் தேவையைவிட பெரிதாக உள்ள வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கேற்ற அளவான புதிய வீடு கட்டிக்கொள்ள எண்ணுகிறார். வீடு விஷயத்தில் இவருக்கு கொடுப்பிணை சிறப்பானது. ஆனால் அதை பராமரிக்க இயலா நிலையில் மாற்றியமைத்துக்கொள்ள விரும்புகிறார்.

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil