சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர் முதலீடுகள் மூலம் பெருக்குவதற்கு பங்குச் சந்தையை அணுகினர் என்றால், தற்காலத்தில் தினசரி சம்பாத்தியத்திற்கு பங்குச் சந்தையை அணுகுவோர் அதிகம். என்னுடன் பணிபுரிந்த எனது நீண்ட கால நண்பர் ஒருவர் தற்போது பங்கு வணிகத்தில் முனைப்பாக ஈடுபட்டுள்ளவர். அவ்வப்போது என்னிடம் முதலீடுகள் பற்றி பேசுவார். எனக்கு இந்த நண்பர் மூலம்தான் பங்கு வணிகம் என்பதே தெரிய வந்தது. பல காலங்களாக பங்கு வணிகத்தில் முதலீடு செய்து வருபவர். அவ்வப்போதைய ஏற்ற இறக்கங்களை பல்வேறு செய்திகள் மூலமாகவும், உலகளாவிய நடப்புகள் மூலமாகவும் அறிந்து வெகு எச்சரிக்கையாக முதலீடு செய்து வருபவர். ஜோதிடம் மூலமாக ஒரு குறிப்பிட்ட பங்கை வாங்குவதன் மூலமாக தனக்கு குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று எனது ஜோதிட அறிவை பங்கு வணிகத்தை ஆராயத் தூண்டியவர். அதன் பிறகுதான் பங்கு வணிக ஜோதிடம் பற்றி நூல்களை தேடிக் கற்றேன். பங்கு வணிகத்தில் வென்றவர்களும் தோற்றவர்களும் பற்றி என்னிடமிருந்த ஜாதகங்கள் மூலம் சுய ஆய்வுகளும் செய்துள்ளேன். அதில் சில பதிவுகளும் அவ்வப்போது நமது வலைதளத்தில் பதிவிட்டு வந்துள்ளேன். இந்நிலையில் தற்காலத்தில் இறங்குமுகமாக உள்ள சந்தை நிலவரத்தில் தான் தொடர்ந்து கவனித்து வரும் சில பங்குகள் இறங்கியுள்ளன. அவற்றில் தற்போது முதலீடு செய்யலாமா? என்று நண்பர் கேட்டார். அவரது ஜாதகத்தை பார்த்து தசா-புக்திகளின் அடிப்படையில் பொருளாதார வெற்றிகள் எப்போது சாத்தியம் என்பனவற்றை கூறினேன் என்றாலும் அவை பொதுக் கணிப்புகளே. பொதுவான பொருளாதாரக் கணிப்புகள் 2, 5, 8, 11 தொடர்புடைய தசா-புக்திகளை வைத்துக் கூறப்படுபவை. அவை பொருளாதார யோகங்களை குறிப்பிட்டாலும் பங்கு வணிகம் மூலமாகத்தான் அவை வரும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. இதனால் கேள்விக்கான தெளிவான பதிலை ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் பெறலாம் என்று முடிவு செய்யப்பட்டு பார்க்கப்பட்ட பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

உதயமும் ஆரூடமும் ஒன்றே என்றால் கேள்வியாளர் தனக்காக கேள்வி கேட்கிறார் எனப் பொருள். ரிஷப உதயமே பொருளாதார விஷயங்களை பொதுவாக குறிப்பிடும். கால புருஷனுக்கு 2 ஆமிடம் என்பதுதான் அதன் காரணம். பங்கு வணிகத்தை குறிப்பிடும் மிதுன ராசி 2 ஆமிடமாகி அங்கு கவிப்பு அமைத்தது பங்கு வணிகம் பற்றி கேள்வி என்பதை பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறது. பங்கு வணிக வருமானத்தை சுட்டிக்காட்டும் பாவகமான 8 ஆமதிபதி குரு உதயத்தில் நிற்பது கேள்வியாளர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர் என்பதை தெரிவிக்கிறது. பிரசன்னம் இப்படி கேள்வியை தெளிவாக சுட்டிக்காட்டிவிட்டால் பதில் சுலபம். பிரசன்னம் சுட்டிக்காட்டாத விஷயங்களுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதே நலம். உச்ச, நீச்ச கிரகங்கள் கேள்வியோடு தொடர்பாகி பின்னணியின் இயங்கிக் கொண்டிருக்கும். இங்கு கடகத்தில் செவ்வாய் நீசம், ஜாம (வெளிவட்ட) குரு உச்சம். துலாத்தில் வெளிவட்ட சூரியன் நீச்சம். இம்மூன்று கிரகங்களையும் ஆராய்ந்தே பதிலை கூற வேண்டும்.

உதய குரு, 8 ஆமிட சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகிறார். இது கேள்வியாளர் தனது எண்ணத்தை கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டுவிடுவார் என்பதை குறிப்பிடுகிறது. ஜாம சுக்கிரன் 12 ல் மறைந்துள்ளதால் கேள்வியாளரின் முதலீடுகள் தற்போது விரையத்தில் உள்ளன என்பதை தெரிவிக்கிறது. மேலும் 12 ஆமிட சுக்கிரனை 1௦ ஆமிடத்திலிருந்து சனி 3 ஆம் பார்வையாக பார்ப்பதால் விரையத்தின் வேகம் குறைவாகவே இருக்கும். அதாவது இவர் வாங்கி வைத்துள்ள பங்குகள் விரைவாக கீழே இறங்கவில்லை. மெதுவான இறக்கத்தில் உள்ளது. முதலீட்டை குறிக்கும் உதயத்திற்கு 4 ஆமதிபதி சூரியன் துலாத்தில் வெளிவட்டத்தில் சனி சாரத்தில் நீசமடைந்ததும் முதலீடுகள் தற்போது மெதுவாக குறைந்து வருவதை குறிப்பிடுகிறது. உள்வட்ட சுக்கிரன் பரிவர்த்தனைக்குப் பிறகு உதயத்தில் ஆட்சி பெறுவதால் விரையம் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பதும் புரிகிறது. எனவே இவருக்கு ஏற்பட்டுள்ள விரையம் தற்காலிகமானதே. ஆனால் உதயம் 2 ஆமிட கவிப்பை நோக்கி நகர்கிறது. இதனால் கேள்வியாளர் உடனடி முடிவுகளை தவிர்த்து பின்வாங்குவார். மேஷ உதயாதிபதி சுக்கிரனுக்கு சனி பார்வை உள்ளதாலும் இவர் முடிவுகளில் மிகுந்த நிதானம் காட்டுவார் எனலாம். உதயாதிபதி சுக்கிரன் பரிவர்த்தனைக்குப் பிறகு உதயத்தில் ஆட்சி பெறாவிட்டால் கேள்வியாளர் உடனடி முடிவெடுத்து அதனால் பாதிப்பை எதிர்கொள்வார் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

உதயாதிபதி சுக்கிரன் பரிவர்த்தனையாகி உதயத்திலும் விரையத்திலும் இருப்பதால் இறங்கும் சந்தையில் கூடுதல் பங்குகள் வாங்கி இறங்கிய தனது பங்குகளை average செய்யும் எண்ணமும் கேள்வியாளருக்கு இருக்கும். கடகத்தில் உச்ச குருவுடன் இணைந்துள்ள நீச்ச செவ்வாய் அடுத்த ஆண்டு ஜனவரியில் வக்கிரமாகி மிதுனத்திற்கு திரும்புகையில் சந்தையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் அதுவரை மொத்தமாக குறையும் பங்குகளை வாங்காமல், குறைவான எண்ணிக்கையில் சந்தை சரியச் சரியாய் பங்குகளை நிதானமாக வாங்கி average செய்துகொள்ளலாம். மேலும் உதயத்தில் நிற்கும் வக்கிர குரு அடுத்த ஆண்டு மத்தியில் மிதுனம் செல்கையில் கேள்வியாளருக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்பட்டது.

உதயம் ரிஷபமாக இருப்பதால் கேள்வியாளர் பொதுவாகவே நிதானமாகவே முடிவெடுப்பார். நான் தற்போது கூறியபடி செயல்பட ஏற்கனவே தீர்மானித்திருந்ததாகவும் கூறினார். ஆனால் உதய கிரகம் பரிவர்த்தனையில் உள்ளதால் கேள்வியாளர் சூழ்நிலையை பொறுத்து தனது தீர்மானத்தை மீறி செயல்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் மனோகாரகர் சந்திரன் வாயு ராசியான மிதுனத்தில் கவிப்புடன் நிற்பதாலும், வெளிவட்ட சந்திரன் மகரத்தில் நின்று கடக  செவ்வாயின் பார்வையை பெறுவதாலும் கேள்வியாளரின் மனம் கொந்தளிப்பில் இருக்கும். அப்போது சூழ்நிலையின் அழுத்தத்தால் அவசரப்பட்டு தவறாக முடிவெடுக்கும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை செய்யப்பட்டது.  

மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இந்தியா

நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »
இந்தியா

Run… Run….

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய  காலத்தில் ஓய்வெடுத்தால்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுதந்திரம் கிடைத்ததா?  

நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil