நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது கல்லறைத் திருவிழா.  உண்மையில் உருவ வழிபாடு என்பது இறந்த நம் முன்னோர்களின் பெயரால் நடு கற்கள், மரங்கள் நடுதல், அடையாளச் சின்னங்கள் இவற்றை வைத்து மனித இனம் தாங்கள் ஜீவித்திருக்க காரணமான தனது மூதாதையர்களுக்கு நன்றி கூறியவற்றை வைத்து உருவானதே. தமிழர் மரபில் இந்துக்களாகிய நமக்கு புரட்டாசி புனித மாதமாக கூறப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் பித்ரு காரகர் எனப்படும் தந்தையை குறிக்கும் சூரியனும், மாத்ரு காரகர் எனப்படும் தாயை குறிக்கும் சந்திரனும் அமாவாசையன்று இணைகிறார்கள். இவர்கள் இணையும் ராசி தகவல் தொடர்பின் காரகரும், இளவரசரை குறிக்கும் கிரகமுமான புதனின் மூலத் திரிகோண வீடாகிய கன்னி ராசியில் என்பதால் மறைந்த தந்தை, தாய் வழி முன்னோர்களை ஒரு தமையன் நன்றியோடு நினைவு கூர்ந்து வழிபாடு செய்வது மரபாகிறது. புத்தி காரகர் புதனின் கன்னி ராசியில்தான் அனைத்து கிரகங்களும் தங்கள் புத்தியை தெளிவுபடுத்திக் கொள்கின்றன. மனதில் தெளிவு இல்லாமையே அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். இதனால் கன்னி ராசியில் நிற்கும் கிரகங்கள் சாதுர்யம் மிக்கவையாகச் செயல்படும். இளவரசனை குறிக்கும் புதனின் கன்னி ராசியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தெய்வங்களாக நாம் வழிபடும் முன்னோர்கள் கூட்டாக இறங்கி பூமிக்கு வந்து தங்கள் சந்ததிகளை கண்டு அவர்களது நன்றிக் கடனை ஏற்று அவர்களை ஆசீர்வதிக்கும் நாளாக மஹாளய அமாவாசை இந்துக்கள் மரபில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஆமாவாசைக்கு முன்னதான 15 நாட்கள் மஹாளய  பக்ஷம் என்று அழைக்கப்படுகிறது. இதில் மஹாளயம் என்பது  நாம் வழிபடும் முன்னோர்களின் ஆன்மாக்கள் கூட்டாக நம்மை நோக்கி வருவதை குறிப்பிடுகிறது. பக்ஷம் என்பது 15 நாட்களுடைய சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை காலங்களை குறிப்பிடும் கால அளவாகும். பிற மதங்களிலும் இத்தகைய முன்னோர்களுக்கு நன்றி கூறும் நாட்கள் கொண்டாடப்படுகிறது என்றாலும் நமது இந்து மரபில் மேற்கூறப்பட்ட ஜோதிட ரீதியான அடிப்படைகள் பிற மதங்களில் இல்லை என்பது நமது மதத்தின்  சிறப்பாகும்.   

இந்நிலையில் வாரிசற்று இறந்துவிட்ட தனது சித்தப்பா தன்னிடம் கனவில் வந்து உணவு கேட்பதாக ஒரு பெண்மணி நம்மை தொடர்புகொண்டார். பெற்றோர்களுக்கு நீத்தார் கடமையாற்றும் நாம், ஒன்றுவிட்ட உறவுகளுக்கு உணவுப்பிண்டமளித்து நீத்தார் கடன் ஆற்றலாமா?. அதிலும் பெண்ணாகிய தான் செய்வது சரியா? என்று கேட்ட பெண்மணிக்கு நாம் ஜாமக்கோள் பிரசன்ன ரீதியாக ஆராய்ந்து கூறப்பட்ட விளக்கங்களே இன்றைய பதிவாக வருகிறது.

எந்த ஒரு பிரசன்னத்திலும் கேள்வி சரியாக சுட்டிக் காட்டப்பட்டுவிட்டால் பதில் துல்லியமாக கிடைத்துவிடும். கர்ம காரியம் பற்றிய கேள்விகளுக்கு கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரமே உதயமாக அமைந்தது கேள்வியின் துல்லியத்தை குறிப்பிடுகிறது. உதயாதிபதியும், சித்தப்பாவை குறிப்பிடும் கிரகமுமான  சனி உதயத்திற்கு மூன்றாமிடத்தில் கால புருஷனின் மோட்ச ராசியான மீனத்தில் கவிப்புடன் இருப்பது கேள்வியாளரின் சித்தப்பாவின் ஆன்மா  மோட்சமின்றி தவிப்பதை குறிப்பிடுகிறது. உதயத்தில் பித்ரு காரகர் சூரியனே உதயத்தில் சந்திரனின் திருவோணத்தில் அமைந்ததை கவனிக்க. கேள்வியாளரின் தந்தையே தனது தம்பிக்காக கர்ம காரியங்களை செய்துள்ளார். சூரியனே கனவுகளுக்கும் காரக கிரகமாவதாலும், அவர் உணவு காரகர் சந்திரனின் சாரத்தில் அமைந்து, மீனத்திலமைந்த உள்வட்ட சனியை கன்னியிலமைந்த சந்திரன் பார்ப்பதிலிருந்து சித்தப்பா கேள்வியாளர் கனவில் வந்து உணவு கேட்பது தெளிவாகிறது.

உணவை குறிக்கும் 2 ஆமிடத்தில் ஆரூடம் அமைந்தது உணவு பற்றிய விஷயத்தை குறிப்பிடுகிறது. உதயாதிபதி சனி கும்ப ராகுவை கடந்து மீனத்தில் நிற்கிறார். கர்ம ஸ்தானமான உதயத்தின் 10 ஆமிடம் துலாத்தில் நிற்கும் மாந்தியும், மீனத்திலமைந்த உதயாதிபதி சனியும் ஒரே பாகையில் (7 பாகையில்) நிற்கிறார்கள் என்பதிலிருந்து கேள்வியாளரின் சித்தப்பா மரணமடைந்துள்ளது தெரிகிறது.

மூன்றாமிடத்தில் கவிப்புடன் உதயாதிபதி சனி மோட்ச ராசியான மீனத்தில் வெளிவட்ட பாம்புடன் நிற்பதிலிருந்து மோட்சமின்றித் தவிக்கும் சித்தப்பாவின் ஆன்மா  கனவின் மூலம் கேள்வியாளரை தொடர்புகொண்டு உணவு கேட்பது புரிகிறது.

இனி பதிலுக்கு வருவோம். நமது இந்துப் பாரம்பரியத்தில் இறந்து அமைதியடையாத ஆன்மாக்களை உறவானாலும், உறவில்லாவிட்டாலும் அவர்களை சாந்தப்படுத்த விதிகள் கூறப்பட்டுள்ளன. மஹாளய அமாவாசையன்று உறவுகளுக்கு சாந்தி வழிபாடுகள் கூறப்பட்டுள்ளன. உறவு இல்லாதவர்களுக்கு, ஒன்றுவிட்ட உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, ஏன் மனிதர்களாக அன்றி நம் வாழ்வோடு இணைந்து பயணித்த வளர்ப்புப் பிராணிகள், பறவைகள் ஆகியவற்றிக்குக் கூட சாந்தி வழிபாடுகள் கூறப்பட்டுள்ளன. உறவற்றவர்களுக்கும், துர்மரணம் அடைந்தவர்களுக்கும் இந்த மஹாளய பக்ஷத்தில் குறிப்பிட்ட நாட்களில் உணவளித்து சாந்திப்படுத்தும்  முறைகள் நமது இந்து தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே கேள்வியாளர் தனது சித்தப்பாவிற்காக மஹாளயத்தில் வழிபாடு செய்யலாம். இதில் ஆண், பெண் வாரிசுகள் செய்வது என்பது பிற்காலத்தில் சமுதாயம் ஒழுங்கமைந்த காலத்தில் வரையறுக்கப்பட்டதே. முதன்மை சாஸ்திரங்களில் குறிப்பிடப்படவில்லை என்பதால் கேள்வியாளர் பெண்ணாகிலும் தனது சித்தப்பாவிற்கு நீத்தார் கடமையாற்றலாம் என்று கூறினேன்.    

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
இந்தியா

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
இந்தியா

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil