Chip

இன்றைய நவீன மின்னணு யுகம் நாளும் பல புதிய  கண்டுபிடிப்புகளுடன் விரைந்து மாற்றங்களடைந்து வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ற திறமைகளை பெற்றிருந்தால் மட்டுமே இன்று நல்லபடியாக வாழ இயலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக தகவல் தொடர்புத்துறை ஏற்படுத்தித் தந்த வாய்ப்புகளால் மனித வாழ்வு பெருமளவு மாறிவிட்டது. கணினி, கைபேசி, மென்பொருள் போன்ற துறைகள் இவற்றிற்கு முன் கோலோச்சிய உற்பத்தி, விவசாயம், ஆகிய பாரம்பரிய துறைகளை பின்னுக்குத்தள்ளி எண்ணற்ற வேலை வாய்ப்புகளையும் வழங்கின. இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது Micro Electronics Chips எனப்படும் நுண்மின்னனுச் சில்லுகளாகும். இன்று கணினிகள், கைபேசிகள் என்பனவற்றை தாண்டி வானியல், பாதுகாப்பு, சுகாதாரம், நுகர்பொருள் போன்ற பல துறைகளில் நம் வாழ்வை எளிமைப்படுத்தவும் துல்லியப்படுத்தவும் இந்த மின்னணுச் சில்லுகளின் ஆற்றல்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அமெரிக்காவின் முன்னணி நுண்மின்னணுச் சில்லு நிறுவனமான NVIDIA என்ற ஒரு நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே நமது தற்போதைய இந்திய ஆண்டு பொருளாதார மதிப்பான நான்கு லட்சம் கோடியை விட அதிகமாகும் என்பதிலிருந்து இதன் மதிப்பை அறியலாம். இனி அடுத்து வரும் சில  தசாப்தங்களின் பொருளாதாரம் இந்த சில்லுகளின் திறன், உற்பத்தி அடிப்படையிலேயே அமையும் என்பது நிச்சயம். இதில் கோலோச்சும் தேசங்களே உலகை  ஆட்டுவிக்கும் என்பது நிச்சயம்.

இன்று உலகின் நாட்டாமையாக தன்னை கருதிக்கொண்டிருக்கும் அமெரிக்க தேசம் இந்தியா, சீனாவை போன்ற நாடுகளை கண்டு அஞ்சுவது இந்த நுண்மின்னணுச் சில்லுகளின் வளர்ச்சியில் தங்களை இவ்விரு நாடுகளும் வீழ்த்திவிடும் என்பதனாலேயே ஆகும். சீனாவைவிட இந்தியாவில் உழைக்கும் வயதுடைய மனித வளமும், அறிவு வளமும் அளப்பரியதாக உள்ளது நமக்கு சாதகமான அமைப்பு. ஆனால் தற்போதைய நிலையில் நாம் சீனர்களைவிட இத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளோம் என்பதே நிதர்சனம். தற்போது சுமார் நானூற்றைம்பது கோடி ரூபாயாக இருக்கும் இந்திய மின்னணுச் சில்லுச் சந்தை 2030 ஆம் ஆண்டு வாக்கில் 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இதனால் இத்துறையை நோக்கி பலரும் படையெடுக்கிறார்கள். நமது தேசமும் கல்வி, ஆய்வு மேம்பாடு போன்றவற்றில் இத்துறையில் பல கட்டமைப்புகளை விரைந்து எடுத்து வருகிறது.

ஜாதக அமைப்பு சாதகமாக இல்லாத பலர் தாங்கள் கற்ற கல்விக்கும் சம்பாத்தியத்திற்கும் தொடர்பற்ற துறைகளில் இருப்பதால், எத்தகைய ஜாதக அமைப்புடையோருக்கு இந்த நுண்மின்னணுச் சில்லுகள் துறை கைகொடுக்கும் என்பதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

காரக கிரகங்கள்:

Chip என்று சுருக்கமாக அழைக்கப்படும் Semiconductor இன் காரக கிரகங்கள் ராகுவும்-கேதுவுமாகும். குறிப்பாக சிறிய வடிவத்தில் அளப்பரிய திறன்களை உடையதால் கேது இதன் முதன்மை காரக கிரகமாகவும் எண்ணற்ற செயல்களை  ஒருங்கிணைத்து செய்யக்கூடியது என்பதால் ராகு இதன் இரண்டாவது காரக  கிரகமாகவும் அமைகிறார்கள். புதிதாக ஒன்றை உருவாக்குதல் என்பது சூரியனின் ஆதிக்கத்தில் வரக்கூடியதாகும். வடிமைத்தல் (Designing) என்பது புதன், சுக்கிரனின் ஆதிக்கத்தில் வரும். மனோ காரகர் சந்திரனின் தொடர்பில் ராகு-கேதுக்களும் வடிவமைப்பு கிரகங்களும் தொடர்பாவது சிறப்பானது. எட்டாமிடம் இயல்புக்கு மாறான புதியனவற்றை குறிப்பிடக்கூடிய பாவகமாகும். லக்னமோ, லக்னாதிபதியோ ராகு-கேதுக்களின் தொடர்பில் அமைவது நன்று. படைப்பாற்றலை குறிப்பிடக் கூடிய 5 ஆமிடமும் புதுமைகளுக்குரிய எட்டாமிடமும் தொடர்பாவது சில்லுகள் துறையில் ஒருவர் கோலோச்ச சிறப்பை சேர்க்கும்.    

பிரிவுகள்:  

Chip துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. VLSI என்று சுருக்கமாக அழைக்கப்படும் Very LargeScale Integration பிரிவில் பல லட்சம் குறைகடத்திகளை (Transistors) ஒரு சில்லுக்குள் (Chip) அதன் பயன்பாட்டிற்கேற்றபடி வடிவமைத்து, ஒருங்கிணைத்து அடைக்கிறார்கள். சில்லுகள் பிரிவிலேயே இதுதான் முதன்மையானது. இதன் பிறகு இச்சில்லுகளின் பயன்பாட்டை உறுதி செய்யும் Embedded போன்ற சில துறைகள் உண்டு.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னம் ஆராய்ச்சியை குறிப்பிடும் கால புருஷனுக்கு எட்டாமிடமான விருட்சிகத்தில், லக்னத்திற்கு எட்டாமதிபதி புதனின் கேட்டையில் அமைந்துள்ளது. வக்கிர கிரகங்கள் ராகு-கேதுக்களுடன் இணைந்து செயல்படும் எனும் விதிப்படி, ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் படைப்பாற்றலை குறிப்பிடும் 5 ஆமிடம் மீனத்தில் வக்கிரம் பெற்று ராகு-கேதுக்களின் புதுமை குணத்தை பெற்றுள்ளார். 5 ல் அமைந்த வக்கிர செவ்வாய்  எட்டாமிடத்தை நான்காம் பார்வையாகவும், எட்டாம் அதிபதி புதனை எட்டாம் பார்வையாகவும் பார்க்கிறார். இது புதுமை படைப்பாற்றலுக்கு மிகச் சிறப்பு. செவ்வாய் சனியின் உத்திரட்டாதியில் அமைந்ததால் ஜாதகரது ஜீவனம் புதுமையான வகையில் படைப்பாற்றலை வெளிப்படுத்தி அமையக்கூடியது என்பதை குறிப்பிடும். 5 ஆமதிபதி குரு ரிஷபத்தில்  சந்திரனின் ரோஹிணியில் நின்று லக்னத்தையும் சந்திரனையும் பார்ப்பது சிறப்பு.

முயற்சி ஸ்தானமான மூன்றாமிடத்தில் சூரியனின் உத்திராடத்திலமைந்த சந்திரனை நோக்கி காரக கிரகம் ராகு வருகிறார். இதனால் இவர் மனம் சில்லுகள்  உருவாக்கத்திற்கு தேவையான சிந்தனையை பெறும். மற்றொரு காரக கிரகமான கேது புதியன உருவாக்கத்தை குறிப்பிடும் சூரியனின் சிம்ம ராசியில், வடிவமைப்பின் காரக கிரகங்களுள் ஒன்றான சுக்கிரனின் பூரத்தில் அமைந்துள்ளார். பாகிய ஸ்தானமான கடகத்தில் நின்று சந்திரனின் நேர் பார்வையை பெறும் சுக்கிரன் தன் வீடு துலாத்திலமைந்த புதனுக்கு தசம கேந்திரத்தில் புதனின் ஆயில்யத்தில் அமைந்துள்ளதால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் வடிவமைத்தலில் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படும். சிம்மத்தில் சுக்கிரன் சாரத்தில் நின்று சுக்கிரனை நோக்கிச் செல்லும் கேது Chip  வடிவமைத்தலில் நல்ல நுட்பத்தை ஜாதகருக்கு வழங்குவார் எனலாம்.  

மேற்கண்ட அமைப்புகள் ஜாதகர் Chip வடிவமைத்தல் எனும் VLSI துறையில் செயல்பட மிகச் சிறந்த அமைப்பாகும். ஆனால் ஜாதக அமைப்புகள் எல்லாம் ஒரு ஜாதகருக்கு செயல்படுவதில்லை. அதற்கு ஜாதகத்தில் தொடர்புடைய தசா-புக்திகள் வர வேண்டும். இந்த ஜாதகருக்கு ராகு தசை 2009 முதல் நடப்பில் உள்ளது. ஜாதகர் புகழ் பெற்றதொரு Chip நிறுவனத்தில் முதன்மை வடிவமைப்பாளராக VLSI துறையில் ராகு தசை துவக்கம் முதல் பணிபுரிந்து வருகிறார். ஏழரை சனி ஜாதகருக்கு எண்ணற்ற சிரமங்களை கொடுத்தாலும் ராகுவின் காரக தொழிலை செய்வதால் தொழிலில் மட்டும் ஜாதகருக்கு பெரிய சிரமங்கள் ஏதுமின்றி பணிபுரிந்து வருகிறார். தசா நாதர் ராகு ஸ்திர ராசியான கும்பத்தில் இருந்து தசை நடத்துவதால் ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நல்ல நிலையில் பணிபுரிந்து வருகிறார்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான இடைவெளி

வாழ்வில் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் — வெற்றியாளர்கள் தங்களின் பலத்திற்கு ஏற்ற சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; தோல்வியாளர்களோ தங்களின் பலமறியாமல் தவறான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தங்களையே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க »
Advanced Atrology

Option Buying vs Option Selling: ஜோதிட ரீதியான ரகசியம்

வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் பங்குச்சந்தை, இன்று அனைவரையும் ஈர்க்கும் ஒரு காந்தமாக மாறியுள்ளது. உள்ளங்கையில் உலகத்தைச் சுருக்கும் எளிய ஸ்மார்ட்போன் செயலிகளும், டிஜிட்டல் கட்டமைப்புகளும் பங்கு வர்த்தகத்தைச் சாமானியர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு

மேலும் படிக்க »
இல்லறம்

திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல

மேலும் படிக்க »
கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil