டிரம்பாட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தால் மட்டும் போதும், தாய் நாட்டில் இல்லாத வளமைகளை மேலை நாடுகளுக்கு சென்று நமது கல்வியறிவால் நல்ல பணியில் அமர்ந்து வாழ்வின் அதிக பட்ச வசந்தங்களை அனுபவித்துவிட வேண்டும் என்பது பொதுவாக அனைவரின் கனவாக இருக்கும். மேலை நாடுகளை பற்றிய நம் அனைவரின் கனவுகளும் சமீபத்திய ஆண்டுகள் வரை அப்படித்தான் இருந்தது. தங்கள் நாடுகளில் குறைவான ஊதியத்தில் கிடைக்காத மனித உழைப்பையும், அறிவையும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து பெற்ற நாடுகள் அதனால் பெரிதும் ஆதாயங்களை அடைந்தது மறுக்க இயலாத உண்மை. இன்று அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் மின்னணுவியலிலும், தகவல் தொழில் நுட்பவியலிலும் மிகப்பெரும் கட்டமைப்புகளை கொண்டிருக்கின்றன என்றால் அது இந்தியர்களால்தான் என்பதை கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டுள்ளவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பதிலிருந்து அறியலாம். தாங்கள் அடைந்த வளர்ச்சியை உலகின் நன்மைக்கு பயன்படுதுவதைவிட்டு தங்கள்  போட்டியாளர்களை ஒழித்துக்கட்ட பயன்படுத்த மேலை நாடுகள் முனைந்ததால் இன்று உலகின் காட்சி மாறுகிறது. காலம் நம்மை கலைத்து விளையாடுகிறது என்றால் அது மிகையல்ல. நிலையில்லாது மாறிக்கொண்டே இருப்பதற்குப் பெயர்தான் காலம். ஒரே வெயில் காலத்திலோ அல்லது மழை காலத்திலோ நம் வாழ்வை கழித்துக்கொண்டிருந்தால்  அது சுவாரஸ்யமாக இருக்குமா?. ஒரே மாதிரி வாழ்வு விரைவில் வெறுப்புத் தட்டிவிடும். மாற்றங்கள்தான் நமது வாழ்வை சுவையாக்குகிறது.

கடந்த நூற்றாண்டு வரை பெண் என்பவள் குடும்பத் தலைவியாக மட்டும் இருந்துகொண்டு ஒரு கணவனுக்கு மனைவியாகவும், தனது குழந்தைகளைகளுக்கு தாயாகவும், இல்லத்துப் பெரியவர்களுக்கு தாதியாகவும், சமையல்காரியாகவும் பணியாற்றிய காலம் போய், தற்காலத்தில் வீடு, வசதிகளுடன் வாழ வேண்டுமெனில் தானும் பணிக்குச் சென்று பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளாள். அதிக பொருளாதாரத் தேவை கணவன்-மனைவி இருவரையும் ஒரே ஊரில் பணி செய்ய விடுவதில்லை. இதனால் வேலையையும் விட இயலாமல், குடும்பத்தை பிரிந்தும் பணிக்குச் செல்வது காலத்தின் கொடுமைதான் என்பதைத் தவிர வேற என்ன சொல்ல?. இப்படியான சூழலில் தேவைகளை பெருக்கிக்கொண்டு கடன் எனும் சூழலில் சிக்கிவிட்ட  மென்பொருள் துறையில் பணிபுரியும் குடும்பத் தலைவி ஒருவர் அமெரிக்காவிற்கு செல்ல வாய்ப்பு வந்தபோது அதை ஏற்றுக்கொண்டு நல்ல சூழலில் பணிபுரியலாம், தமிழ்நாட்டில் பணிபுரியும் தனது கணவரையும் பிற்பாடு அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். நமது எண்ணங்கள் எண்ணியபடியே நிறைவேறினால் படைத்தவன் இங்கே பணியற்றுப் போய்விடுவான் அல்லவா?. தற்போது அமெரிக்க நிலை என்னவென்று நமக்குத் தெரியும் அமெரிக்க அதிபர் டிரம்பாட்டம் தப்பாட்டம் என்று நாம் கூற, இந்தியர்கள் ஆட்டம்தான் தப்பாட்டம் என்று டிரம்ப் கூற, எனது ஜாதகம் என்ன சொல்லுகிறது? என்று கணவரையும், குழந்தையையும் பிரிந்து அமெரிக்காவில் மன உழைச்சலில் பணிபுரிந்துகொண்டு இருக்கும் ஜாதகியின் ஜாதக ஆய்வே இன்றைய பதிவாக வருகிறது.

நீர் ராசியான விருட்சிகத்தில் லக்னம் அமைந்து அங்கு திக்பல குருவுடன் கேது அமைந்துள்ளார். சர்ப்ப தோஷ ஜாதகம் என்பதாலும் குடும்ப காரகர் குரு பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஜாதகிக்கு குடும்ப வகையில் பாதிப்பு இருக்கும். ஆனால் பொருளாதார வகையில் பாதிப்பு இருக்காது. காரணம் லக்னாதிபதி செவ்வாய் பத்தாமிடமான சிம்மத்தில் திக்பலம் பெற்றுள்ளார். 10 ஆமதிபதி சூரியனும் 7 – 12 அதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனைக்குப் பிறகு ஆட்சியுடன் திக்பலம் பெறுவார். 2 ன் திரிகோணங்களில் இப்படி வலுவான திக்பல கிரகங்கள் நிற்பதால் ஜாதகிக்கு பொருளாதாரத்தில் பாதிப்பு வராது. ஆனால் லக்னத்தில் தனகாரகர் குருவுடன் கடன் கிரகம் கேது இருப்பதால் ஜாதகிக்கு கடன் பாதிப்பு  இருந்துகொண்டே இருக்கும். அதை சமாளிக்க பணியை குறிக்கும் 6, 10 ஆமிட கிரகங்கள் செயல்பட்டுக்கொண்டே  இருக்கும். 10 ல் நிற்கும் திக்பல செவ்வாய் ஜாதகிக்கு  உத்தரவிடும் பணியை வழங்கும்.

பரிவர்த்தனைக்கு முன் களத்திர காரக கிரகங்கள் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்து பிருகு மங்கள யோகத்தை வழங்குகின்றன. பரிவர்த்தனைக்குப்  பிறகு சூழல் மாறுகிறது. ஜாதகிக்கு 12 ஆமிட கிரகங்கள் தொடர்புடைய கிரக தசா-புக்திகள் செயல்படத் துவங்குகையில் 10 – 12 கிரக பரிவர்த்தனை ஜாதகிக்கு வெளிநாட்டு வேலையை வழங்கும். காரணம் வெளிநாட்டை குறிக்கும் 12 ஆமிடத்தில் ஜீவன காரகர் சனி உச்சம். அதே சமயம் பரிவர்த்தனையில் சூரியன் 10 ஆமிடத்தில் திக்பலம் பெறுவதால் வேலையில் உயர்வான நிலையும் ஏற்படும். வீட்டை குறிக்கும் காரக கிரகம் செவ்வாய் தசை நடப்பதாலும்  பரிவர்த்தனை கிரகங்கள் செவ்வாயுடன் தொடர்பாவதாலும் வீடு கட்ட ஜாதகிக்கு பெரும் பணம் தேவை எனும் சூழலும் ஜாதகியை வெளிநாடு செல்ல உந்தித் தள்ளுகிறது. ஆனால்  வருத்தமான நிலை என்னவெனில் கணவரை குறிக்கும் செவ்வாயை மனைவியை குறிக்கும் சுக்கிரன் பரிவர்த்தனையில் பிரிவதால் வெளிநாட்டு வேலை கிடைத்ததும் ஜாதகி கணவரை பிரிய வேண்டியிருக்கும். வீடு கட்ட பணம் தேவைப்படும் சூழலில் வேலையால் கணவரை பிரியும் நிலை.  

மென்பொருள் துறையில் பணிபுரியும் இந்த ஜாதகி 10 ஆமிட செவ்வாய் தசையில் 12 ஆமிட சனி புக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் பணிபுரியும் நிறுவனம் சார்பாக ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக அமெரிக்கா அனுப்பப்பட்டார். மேற்குறிப்பிட்ட விதிப்படி கணவரை பிரிந்துதான் அமெரிக்கா சென்றுள்ளார். கணவரை குறிக்கும் செவ்வாயின் மீது கோட்சாரத்தில் கேது நிற்பதால் கணவருக்கு அமெரிக்கா செல்ல தடை உள்ளது. உலகின் முதன்மையான நாட்டை குறிக்கும் காரக கிரகம் சூரியனாகும். பரிவர்த்தனையில் சூரியன் தொடர்பாவதால் ஜாதகி அமெரிக்கா சென்றுள்ளார். ஜாதகி எப்போது அமெரிக்கா செல்வார்? என்பதையும் ஜாதகத்தில் சூரியனின் நிலையே காட்டுகிறது. சூரியன் நீசம் பெற்று உச்ச சனியுடன் இணைந்து நிற்பதால் உலகின் முதன்மை தேசமான அமெரிக்கா சனி குறிக்கும் தாழ்வான நிலையில் இருக்கும்போதுதான் ஜாதகி அமெரிக்கா செல்வார். ஆனால் பரிவர்த்தனைக்குப் பிறகும் திக்பலத்துடன் ஆட்சி பெறும் சூரியனுடன் சிம்மத்தில் தற்போது கோட்சார கேது இணைவு பெறுவதால் அமெரிக்க அரசு கடன் பாதிப்பில் தவிக்கும் சூழலில் கட்டுப்பாடுகளை விதிக்கும். கட்டுப்பாடுகளை குறிக்கும் கிரகம் கேதுவாகும். அதாவது ஜாதகி அமெரிக்கா சென்ற பிறகு அங்கு அமெரிக்க அரசாங்கம் தற்போது விதிக்கும் பணி மற்றும் குடியேற்ற கட்டுப்பாடுகளால் கணவரை ஜாதகி அழைத்துச் செல்ல இயலா நிலை ஏற்படும். தற்போது அதுதான் நடந்துகொண்டுள்ளது.

வெளிநாட்டில் குடியேற்றம் என்பதை 12 ஆமிடம் குறிக்கிறது. 12 ல் உள்ள சனி வெளிநாட்டுப் பணியை குறிக்கிறது. வெளிநாட்டுப் பணியில் கட்டுப்பாடுகளுக்கு ஜனன 12 ஆமிட சனிக்கு பாதகத்தில் கோட்சாரத்தில் நிற்கும் கட்டுப்பாட்டுக் கிரகம் கேது காரணமாகிறார்.

கிரகங்கள் ஆட்டுவிக்கின்றன. நாம் ஆடுகிறோம். கட்டுப்பாடுகளை டிரம்ப் விதிக்கிறார் என்பதால் இது

கிரகங்களின் ஆட்டமா? டிரம்பின் ஆட்டமா?

விரைவில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மணந்தால் மகாதேவி!

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக, தான் படித்த படிப்பிற்கு ஏற்ற, அந்தஸ்துள்ள ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் பலர் மிக உறுதியாக இருக்கிறார்கள். “தகுதியான வேலை கிடைக்கும் வரை

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil