திரிகோண நுட்பங்கள்

திரிகோண நுட்பங்கள்

ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி எந்த கிரக சாரத்தில் அமைகிறதோ அதே கிரக சாரம்தான் அந்த பாவகத்தின் 5 மற்றும் 9 ஆவது பாவக புள்ளியாகவும் அமையும். இப்படி அமைவதை ஜென்மம், அனுஜென்மம், திரிஜென்மம் என ஜோதிடத்தில் அழைக்கிறோம். 12 பாவங்களையும் மேற்கண்ட அடிப்படையில் நான்கு வகையில் பிரிக்கலாம். இந்த அடிப்படையில் லக்ன திரிகோணங்களை தர்ம திரிகோணங்கள் என்றும் 2 ஆம் பாவ திரிகோணங்கள் கர்ம திரிகோணங்கள் எனவும் மூன்றாம் பாவ திரிகோணங்கள் காம திரிகோணங்கள் எனவும் நான்காம் பாவ திரிகோணங்கள் மோட்ச திரிகோணங்கள் எனவும் அழைக்கிறோம். இவை ஒருவர் கடைப்பிடிக்கும் தர்மம், பொருளீட்டளுக்கான அவரது கர்மம், அவரது இல்லற ஈடுபாடு, இறுதியாக அவரது மோட்ச நிலை ஆகியவற்றை ஆராய இந்த திரிகோணங்கள் உதவுகின்றன.
முதலாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.

ஜாதகத்தில் 1, 5, 9 பாவங்கள் தர்ம திரிகோணங்கள் எனப்படும். ஒருவரது சிந்தனையும் செயல்களும் எதை நோக்கிய வகையில் இருக்கும் என்பதை இதனைக்கொண்டு அளவிடலாம். ராகு கேதுக்களுக்கு தனிப்பட்ட காரகங்கள் கிடையாது அவை நின்றபாவப்படியும் அவை இணைந்த கிரகங்களின் காரகங்களையும் கிரகித்தே அவை செயல்படும். தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னம் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது சூரியனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் நிற்கிறது. இந்த அமைப்பால் ஜாதகர் அரசின் உயர்பதவியை நோக்கிய சிந்தனையை ஏற்படுத்திகொண்து ஒரே குறிக்கோளாக செயல்பட்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் (IAS) வென்றிபெற்றார்.
இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

ஜாதகத்தில் பொருளாதாரத்தை குறிக்கும் கர்மத்திரிகோணங்கள் எனப்படுபவை 2 ம் அதன் திரிகோணங்களான 6, 1௦ ஆகும். ரிஷப லக்னத்திற்கு 2 ஆம் பாவாதிபதியும் முதல் கர்மத் திரிகோணாதிபதியுமான புதன் உச்ச சுக்கிரன், ஆட்சி குரு மற்றும் ராகுவுடன் இனைந்து நீச பங்கம் பெறுகிறார். லக்னாதிபதியே இரண்டாவது கர்ம திரிகோணமான துலாமின் அதிபதியும் ஆகி உச்சமாகி லாப ஸ்தானத்தில் குரு, புதன், ராகு தொடர்பு பெறுகிறார். மூன்றாவது கர்ம திரிகோணத்தில்தான் இதர 2 திரிகோணாதிபதிகள் தொடர்பு பெறுகிறார்கள். ஜாதகர் குரு, புதன் குறிப்பிடும் ஆசிரியராக பணிபுரிந்து பொருளீட்டுகிறார். இதற்கு லக்னாதிபதி சுக்கிரன் குருவின் வீட்டில் குருவின் பூரட்டாதியில் நின்று உச்சமானதும், ஜீவன காரகன் சனி விருட்சிகத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்பதும் ஒரு காரணம்.
மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.

மகர லக்ன ஜாதகம். லக்னத்திற்கு 3, 7, 11 ஆகிய பாவங்கள் காமத்திரிகோணங்கள் எனப்படும். முதலாவது காமத்திரிகோணமான மீனத்தின் பாவக துவக்கப்ப்புள்ளி புதனின் ரேவதி நட்சத்திரத்திலும்  2 ஆவது காமத்திரிகோணமான கடகத்தின் துவக்கப்புள்ளி புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலும் மூன்றாவது காமத்திரிகோணமான விருட்சிகத்தின் துவக்கப்புள்ளி புதனின் கேட்டை நட்சத்திரத்திலும் அமைந்துள்ளது. புதன் 2 ஆவது காமத்திரிகோணமான கடகத்தில் லக்னத்திற்கு இரண்டில் நிற்கும் குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. காதலை குறிக்கும் 5 ஆம் பாவாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியும் குடும்ப பாவாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் காதல் காரகன் புதனுடன் இணைந்து களத்திர ஸ்தானத்தில் நிற்கிறது.
ஜாதகி காதல் திருமணம் புரிந்துகொண்டவர்.
நான்காவதாக கீழே ஆணின் ஒரு ஜாதகம்.

கன்னி லக்னம். லக்னாதிபதி புதன் கால புருஷனுக்கு  8 ஆமிடத்தில் சுக்கிரனுடன் இணைந்து நிற்கிறது. 8 ஆமிடம் என்பது மறைபொருள் என்பதையும் அது கால புருஷனின் 2 ஆவது மோட்ச பாவம் என்பதையும் நாம் அறிவோம். இப்படி கால புருஷனின் இரண்டாவது மோட்ச பாவத்தில் அமைந்த லக்னாதிபதி புதனை லக்னத்தின் இரண்டாவது மோட்ச பாவாதிபதியும் புதனின் ராசிநாதனுமான செவ்வாய் மேஷத்தில் ஆட்சிபெற்று ௮ ஆவது பார்வையால் பார்க்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. இது மோட்சம் நோக்கிய ஜாதகரின் உறுதியை தெரிவிக்கும். லக்னத்திற்கு மோட்ச பாவங்கள் எனப்படுபவை 4, 8, 12 ஆகியவை ஆகும். முதல் மோட்ச திரிகோணமான தனுசுவில் மறை பொருளை குறிப்பிடும் ராகுவுடன் மூன்றாவது மோட்ச பாவமான 12 ஆமிடாதிபதி சூரியன் இணைந்துள்ளது. 2 ஆவது மோட்ச பாவமான 8 ஆமிடத்தில் அதன் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது.  மூன்றாவது மோட்ச பாவமான 12 ஆமிடத்தை ஆன்மீக கிரகங்களில் ஒன்றான பரம சுபன் குரு பார்க்கிறார். இரண்டாவது மோட்ச பாவம் மேஷத்தையும் மூன்றாவது மோட்ச பாவமான சிம்மத்தையும் ஞான காரகன் கேது தனது மூன்றாவது பார்வையால் கட்டுப்படுத்துகிறார்.
ஜாதகர் உலகம் போற்றும் மிகச்சிறத்த ஆன்மீக குரு பகவான் ரமண மகரிஷி ஆவார்.
மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 08300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
இந்தியா

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
இந்தியா

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil