வணங்கிவரும் குல தெய்வம் சரியா?

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் நாமனைவரும் பூர்வீக இருப்பிடத்தை விட்டு பல்வேறு ஊர்களுக்கு மாநிலங்கள் கடந்தும், தேசங்கடந்தும் சென்று  சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் பூர்வீக சொந்தங்களைவிட்டு, தங்கள் குலம் வணங்கி வந்த தெய்வங்களை விட்டு தூர இருப்பிடங்களுக்கு செல்கையில் இவற்றுடனான தொடர்புகள் குறைந்துவிடுவது இயல்பு. புதிய இடங்களுக்கு சென்று வாழ்வில் முன்னேறிய பிறகு தங்கள் குல தெய்வத்திற்கு வாழும் இருப்பிடங்களிலேயே கோவில் அமைத்து வழிபடுவது நடை முறை. இத்தகையோர் வாய்ப்பு கிடைக்கையில் பூர்வீக இருப்பிடத்திற்கு வந்து தங்கள் குல தெய்வத்தை வழிபட்டால் போதும். அதுவரை இருப்பிடத்தில் அமைத்துக்கொண்ட குல தெய்வத்தையே வணங்கினால் போதுமானது. ஆனால் இதிலும் பல பிரச்சனைகள் உள்ளன. வாழும் ஊர்களில் தங்களது குலதெய்வத்திற்கு கோவில் அமைத்துக்கொள்ள வசதியற்றோர் என்ன செய்வது? என்பதுதான். அத்தகையோர் குல தெய்வத்தை தங்கள் வீட்டிலேயே அதற்குரிய அடையாளங்களுடன் குல தெய்வத்தையே குடும்ப தெய்வமாக வழிபடுவது ஒரு மரபு. ஆனால் இத்தகைய குடும்பத்தினரின் வாரிசுகள் இன்றைய நிலையில் இதை தொடர்வார்களா? என்பது கேள்விக்குறிதான். அப்படி தொடர்ந்த வழிபாடு தடைபட்டு நின்றால் நாளடைவில் இவர்களுக்கு தங்கள் குல தெய்வம் மறந்துவிடும் அல்லது வணங்கிவரும் குல தெய்வம் சரியானதுதானா? என்ற சந்தேகம் வரும். ஏனெனில் இவர்களது சந்தேகத்தை போக்கும் சொந்த பந்தங்களைளின் தொடர்புகள் இவர்களுக்கு அறுபட்டிருக்கும். இத்தகையோரில் ஒரு குடும்பத்திற்கு தாங்கள் வணங்கிவரும் அங்காளம்மன்தான் தங்கள் குல தெய்வம் என்பது சரியா? என்ற கேள்வியுடன் பார்க்கப்பட்ட பிரசன்னமே இன்றைய பதிவாக வருகிறது.

யார் வந்தாலும் முதலில் அப்போதைய நேரத்திற்கு ஒரு ஜாமக்கோள் பிரசன்னத்தை கணினியில் பதிவு செய்து வைத்துவிடுவது எனது பழக்கம். ஜாமக்கோள் பிரசன்னம் இவர்களது குல தெய்வ நிலையை தெளிவாக கூறிவிட்டது எனினும் அவர்கள் கொண்டு வந்திருந்த பழங்கள், பூ, வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தீப தாம்பூலப் பிரசன்னம் பார்க்கப்பட்டு பலன் கூறப்பட்டது. எனினும் இங்கு நான் பதிவிடுவது ஜாமக்கோள் பிரசன்னமாகும்.

கீழே ஜாமக்கோள் பிரசன்னம்.

தெய்வ விஷயங்களுக்கு பிரசன்னத்தில் குருவும், குல தெய்வத்திற்கு சனியும் உதயத்துடன் தொடர்பாக வேண்டும். மேற்கண்ட ஜாமக்கோள் பிரசன்னத்தில் குருவின் ராசிகளுள் ஒன்றான மீனமே உதயமானதால் இது தெய்வ காரியம் என்ற அமைப்பிலும், உதயப்புள்ளி சனியின் உத்திரட்டாதியில் அமைந்து ஜாமச் சனி (வெளிவட்ட சனி)  துலாத்தில் உச்சம் பெற்றுள்ளதால் இது குல தெய்வ பிரசன்னம் என்பதையும் குறிப்பிடுகிறது. உதயத்தை கடந்து சென்ற கிரகம் சனி என்பதால் கேள்வியாளர் தொழில் நிலை கருதி குல தெய்வம் பற்றிய சந்தேகத்தை பிரசன்னம் மூலம் போக்கிக்கொள்ள வந்துள்ளார். உதயத்தில்லேயே உதயாதிபதி குரு ராகுவுடன் இணைந்து குலதெய்வத்தை குறிப்பிடும் 5 ஆமிடத்தை பார்ப்பதால் இவரது குல தெய்வத்திற்கு ராகுவின் அம்சமும் நிச்சயம் இருக்கும். உள்வட்ட குரு உதயத்திற்கு 3 ல் ரிஷபத்தில் சுக்கிரனின் வீட்டில் நின்றது கேள்வியாளரது குல தெய்வம் பெண் அம்சமுடையது என்பதை தெரிவிக்கும்.

லாப ஸ்தானமான 11 ல் கணக்கன் எனப்படும் புதனுடன் அமைந்த ஆரூடம் மகரத்தில் சூரியனின் உத்திராடத்தில் நிற்க, உள்வட்ட சூரியன் 7 ல் உச்ச புதனுடனும் கேதுவுடனும் இணைந்து உதயத்தை தொடர்புகொள்வதால் இவரது கோவில் கணக்கு வழக்குகளை அரசு கண்காணிக்கும் எனலாம். அதாவது இவரது குல தெய்வ கோவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலாக இருக்கலாம். மேலும் பெரிய வணிக தொடர்புள்ள ஊரில் இருக்கும் எனலாம். புதன் இரட்டைத்தன்மை உள்ள கிரகம் என்பதால் அது ஒன்றை வேறொன்றாக மாற்றிகாட்டும் கிரகமாகும் என்பதாலும், வணங்கி வரும் குல தெய்வம் வேறாக இருக்குமோ என்ற எண்ணத்தில் பிரசன்னம் பார்க்க வந்துள்ளனர்.

குல தெய்வத்தை குறிக்கும் 5 ல் கவிப்பு அமைந்தது பிரசன்னம் குல தெய்வம் சம்பந்தமானது என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. கவிப்பின் அதிபதி சந்திரன்  உள்வட்டத்தில் உதயத்திற்கு 8 ல் மறைந்துவிட்டார். ஜாமச் சந்திரன் பாதக ஸ்தானமான கன்னியில் 8 ஆமதிபதி சுக்கிரனின் பூரத்தில் நிற்பதாலும் இவருக்கு குல தெய்வ அனுக்கிரகம் இல்லை. 8 ஆமிடம் கோபத்தை குறிப்பதால் இவரது குல தெய்வம் கேள்வியாளர் குடும்பம் மீது கோபமாக உள்ளதை அறிய முடிகிறது. 5 ஆமிடம் நீர் ராசி என்பதாலும் சந்திரனே நீர் கிரகம்தான் என்பதாலும் கேள்வியாளது குல தெய்வக் கோவில் நீர் நிலை அருகில் இருக்கும். கவிப்பின் வெளிவட்டத்தில் பாம்பு நிற்க, சந்திரன் துலாத்தில் ராகு சாரமான சுவாதியில் நிற்பதால் முன்பு கூறியதுபோல இவரது குல தெய்வ கோவிலில் சர்ப்ப வழிபாடு இருப்பது உறுதியாகிறது. 5 ன் அதிபதி சந்திரன் துலா ராசியில் சுக்கிரனுடன் இணைந்து நிற்பதால் கேள்வியாளர் குடும்பத்தினர் பொருளாதார வளமை வேண்டி துலா ராசி குறிக்கும் பெரியதொரு வியாபார ஊருக்கு குடிபெயர்ந்ததால் குல தெய்வ வழிபாட்டை முழுமையாக செய்ய இயலாமல் போயிருக்கும். நாளடைவில் குலதெய்வமே அதுதானா? என்று சந்தேகம் வந்துள்ளதை அறிய முடிகிறது. 8 ல் ஆட்சி சுக்கிரனுடன் 5 ஆமதிபதி சந்திரன் நிற்பதால் இவர்களது குல தெய்வம் துவக்கத்தில் நீர் நிலையருகில் இருந்துள்ளதும் பிற்காலத்தில் அவ்விடம் பெரியதொரு வியாபார ஸ்தலமாக கடைவீதியாக இருக்கும் என்று அனுமானிப்பது சரியாக இருக்கும். முன்பே அனுமானித்தபடி உதயத்தின் 5 ஆமதிபதியும் பெண் கிரகமான சந்திரனாகி அவர் இணைந்ததும் பெண் கிரகம் சுக்கிரனுடன் என்பதால் கேள்வியாளரது குல தெய்வம் பெண் தெய்வம்தான் என்பது முன்பு கணித்தபடி உறுதியாகிறது. பிரசன்னம் பார்த்தது சனிக்கிழமை, அம்பாள் ஆட்சி செய்யும் நவராத்திரி  நாளில் என்பது இதை உறுதி செய்யும் கூடுதல் அமைப்பு. 5 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்த சுக்கிரன் ஆட்சி பெற்று வலிமையாகவும் குருவின் விசாக நட்சத்திரத்திலும் நிற்பதால் கேள்வியாளர் குல தெய்வத்திற்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்பட்டுக்கொண்திருக்கும் நிலையில் இருப்பதை அறியலாம். சுக்கிரன் நீச்ச வீட்டை கடந்து ஆட்சி வீட்டில் நிற்பதால் கடந்த காலங்களில் அபிஷேக ஆராதனைகளில் குறைபாடுகள் இருந்திருக்கும். உதய குரு ராகுவுடன் இணைந்திருக்க, உள்வட்ட குரு 3 ல் மறைந்துள்ள நிலையில் 7 ல் உச்சம் பெற்ற புதனும், 8 ல் ஆட்சி பெற்ற சுக்கிரனும் இருப்பதால், கேள்வியாரை விட வீட்டின் பெண்கள் குல தெய்வ வழிபாட்டிற்கு முக்கியம் கொடுப்பதையும் கேள்வியாளருக்கு குல தெய்வ வழிபாடுகளில் பெரிய ஈடுபாடு இல்லா நிலையையும் தெரிவிக்கிறது. குல தெய்வ கோபத்திற்கு இதுவும் காரணமாக இருக்கும்.

மேற்கண்டவற்றை கணித்துவிட்டு கேள்வியாளரிடம்

உங்கள் குல தெய்வம் முதலில் நீர்நிலை அருகில் இருந்திருக்கும் தற்காலத்தில் அது கடை வீதியாக இருக்கும். உங்கள் குல தெய்வத்திற்கு தற்போது அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடந்துகொண்டுள்ளன. உங்கள் குல தெய்வம் அலங்காரமான ஆடையுடுத்திய அங்காளம்மன்தான். உதயத்தின் 5 ஆமதிபதி சந்திரன் நின்ற துலா ராசியை அடுத்த ராசி அசுத்த நீர்நிலையை குறிக்கும் விருட்சிக ராசி என்பதால் குல தெய்வ கோவிலை அடுத்து அசுத்த நீர்நிலை இருக்கும் என்றேன்.  கோவிலில் கட்டாயம் சர்ப்ப வழிபாடு இருக்கும். இத்தகைய அமைப்புகளில் நீங்கள் வணங்கிவரும் குல தெய்வம் இருப்பின் அதுவே உங்கள் குல தெய்வம். ஆனால் தற்போது குல தெய்வம் உங்களுக்கு அனுக்கிரகம் செய்யும் நிலையில் இல்லாமல் கோபமாகவே உள்ளது. தொடர்ந்த ஆத்மார்த்தமான வழிபாடு பலனளிக்கும் என்று கூறினேன். வீட்டின் பெண்கள் குல தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்குமளவு உங்களுக்கு அதில் ஆத்மார்த்தம் இல்லை என்பதை பிரசன்னம் தெரிவிக்கிறது என்றேன்,. (கேள்வியாளரது மனைவிதான் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தார்.)

இவற்றை கேட்ட கேள்வியாளர் கூறிய பதிலாவது

நாங்கள் வழங்கிவரும் அங்காளம்மன் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற ஒரு வணிக நகரின் முக்கிய பகுதியில் உள்ளது. அது சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படும் தெய்வம்தான் என்றார். அம்மனின் புகைப்படத்தை தனது கைபேசியிலிருந்து காண்பித்தார். மஞ்சள் நிறப்பட்டாடையில் சிறந்த அலங்காரத்துடன் அம்பாள் அங்காளம்மன் காட்சி தந்தாள். (மஞ்சளும், பட்டும் குருவிற்குரியது பிரசன்னத்தில் துலாத்தில் சுக்கிரன் குருவின் நட்சத்திரத்தில் நிற்பதை கவனிக்க.) தங்கள் கோவிலை அரசு நிர்வாகம் செய்வதாகவும் ஆனால் நிர்வாகம் சிறப்பில்லை என்றும் கூறி வருத்தபட்டார். கோவிலை அடுத்து ஒரு அசுத்த நீர்நிலை உள்ளது என்றார். கோவிலில் இருந்த பாம்புப் புற்றையே அங்காளம்மனாக ஏற்றுக்கொண்டு தங்கள் சமூகத்தார் வழிபட்டு வருவதாகவும் கூறியபோது எனக்கே சிலிர்த்தது. அங்காளம்மன் இந்த எளியோனின் பிரசன்னத்தில் தன்னை வெளிப்படுத்தியதற்கு மானசீகமாக வணங்கிக்கொண்டேன்.

உதயத்தில் குரு நிற்பதால் கேள்வியாளருக்கு குல தெய்வ கொடுப்பினை உள்ளது. ஆத்மார்த்தமாக வழிபடத்தான் அறிவியல் அறிவும், பொருளாதார வளமும் தடுக்கின்றன. கேள்வியருக்கு குல தெய்வ அனுக்கிரகத்தை பெருக்கிக்கொள்ள உரிய ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தேன்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil