அதிர்ஷ்டம் தரும் லாட்டரி யோகம்.

மனித வாழ்க்கையில் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கதவைத் தட்டும் ‘அதிர்ஷ்டம்’ என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்ததாமே!” என்ற செய்தியைக் கேட்கும்போது, “நமக்கும் அந்த யோகம் இருக்குமா?” என்ற எண்ணம் தோன்றுவது இயல்பானது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவர் கோடீஸ்வரர் ஆவதற்கு வெறும் உழைப்பு மட்டும் போதாது; அதற்குப் பின்னால் வலிமையான கிரக நிலைகளும், பூர்வ புண்ணிய பலன்களும் இருக்க வேண்டும். திடீர் பணவரவு, சூதாட்டம், லாட்டரி மற்றும் பங்குச்சந்தை போன்றவற்றின் மூலம் வரும் லாபத்தை ஜோதிடம் ‘திடீர் தன லாபம்’ என்று அழைக்கிறது.

அரபிய தேசம் தந்த அதிர்ஷ்டம்: ஓர் உண்மைச் சம்பவம்

சிங்கப்பூரில் வசிக்கும் எனது வாடிக்கையாளர் ஒருவர், என்னிடம் பேசும்போதெல்லாம் “எனக்கு லாட்டரி யோகம் உள்ளதா?” என்ற கேள்வியைத் தவறாமல் கேட்பார். நம் ஊர் கேரளா போல மலேசியா, சிங்கப்பூரில் லாட்டரி சீட்டு ஆர்வலர்கள் ஏராளம்.

சமீபத்தில் வேலைக்காக வளைகுடா சென்ற இளைஞன் ஒருவன், தற்காலப் போர்ச் சூழலால் வேலை கிடைக்காமல் நாடு திரும்ப எண்ணிய நிலையில், அரபிய தேசத்தில் வாங்கிய லாட்டரி மூலம் ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு அதிபதியானார். “நாங்களெல்லாம் இங்குப் படாத பாடுபட்டும் கிடைக்காத அதிர்ஷ்டம், அந்த இளைஞனுக்கு மட்டும் எப்படிக் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது?” என்பதே எனது நண்பரின் ஆதங்கமான கேள்வி. அந்த ரகசியத்தை ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் இங்கே ஆராய்வோம்.

பொருளாதார அதிர்ஷ்டத்தின் காரணிகள்:

  1. புத்தி சாதுர்யம் (புதன்): உழைக்காமல் புத்திசாலித்தனம் மூலம் பணம் ஈட்ட மிதுன ராசியும், அதன் அதிபதி புதனும் முக்கியக் காரகர்களாவர். பாவங்களில் மூன்றாம் வீடு இதற்கு வலு சேர்க்கும்.
  2. பூர்வ புண்ணியம் (5-ம் வீடு): அதிர்ஷ்டம் இருந்தால்தான் முயற்சி பலிதமாகும். 5-ம் வீடு ஒருவரது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் அவர் பெறும் அதிர்ஷ்டத்தை குறிக்கும்.
  3. திடீர் தனம் (8-ம் வீடு): தான் உழைக்காமல், பிறர் உழைப்பின் மூலம் (லாட்டரி, உயில்) வரும் பணத்தை 8-ம் வீடு குறிக்கும். (2-ம் வீடு என்பது சொந்த உழைப்பால் வரும் வருமானம் மட்டுமே).
  4. மகிழ்ச்சியான பணவரவு (11-ம் வீடு): லாப ஸ்தானமான 11-ம் வீடு மகிழ்ச்சியான அணைத்துவிதமான சம்பவங்களையும் குறிப்பிடும்.
  5. கிரகங்களின் பங்கு: சிறிய பணவரவை சுக்கிரனும், பெரிய தனவரவை குருவும், அளப்பரிய (மெகா) தனவரவை ராகுவும் வழங்குகிறார்கள்.

மேற்கண்ட காரணிகள் ஒன்றோடொன்று தொடர்பாகி, தசா-புத்தி மற்றும் கோட்சாரம் சாதகமாக அமையும் போது ஒருவருக்கு லாட்டரி யோகம் கிடைக்கிறது.

ஜாமக்கோள் பிரசன்ன ஆய்வு:

  • உதய அமைப்பு: பிரசன்னத்தில் உதயமே மிதுனமாக அமைந்தது மேற்சொன்ன விதிகளுக்குப் பொருத்தமாக உள்ளது.
  • பரிவர்த்தனை யோகம்: உள்வட்ட புதன் 9-ம் வீடான கும்பத்தில் ராகுவுடன் இணைந்து நின்று, உதயத்தில் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் நிற்கும் ஜாமச் சனியுடன் (வெளிவட்டச் சனி) பரிவர்த்தனையாவது மிகச்சிறந்த அமைப்பு.
  • வெளிநாட்டு யோகம்: உதயாதிபதி புதன் ராகு தொடர்புடன் 9-ம் வீட்டில் பரிவர்த்தனையாவது, அந்த இளைஞன் தொலைதூர தேசம் செல்கையில் அதிர்ஷ்டத்தை அடைவார் என்பதைக் காட்டுகிறது.
  • அரசு வழி லாட்டரி: 8-ம் அதிபதி சனி, உள்வட்டத்தில் 10-ம் வீட்டில் (மீனம்) செவ்வாய் மற்றும் சூரியனுடன் இணைந்து நிற்பது, வெளிநாட்டில் வேலை தேடும் முயற்சியில் இருந்தபோது அங்கு அரசு லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. (மீனம் – வெளிநாடு, சனி – வேலை, சூரியன் – அரசு)

பலம்பெற்ற உதயம்:

உதயமும், உதயத்தில் திக்பலம் பெற்று நிற்கும் குருவும் புனர்பூசத்தில் நிற்க, உதய சனியுடன் பரிவர்த்தனையாகி மிதுனத்திற்கு வரும் புதனும் ராகுவின் சாரத்தில் (திருவாதிரை) உதயத்தில் திக்பலம் பெறுகிறார். இதனால் உதயம் அதீத வலிமை அடைகிறது. உதய குரு 5-ம் வீட்டையும், 9-ம் வீட்டு ராகு-புதனையும் பார்ப்பது சிறந்த அமைப்பென்றால், ஆரூடத்தில் நிற்கும் அதிர்ஷ்ட ஸ்தான ஜாம குரு (வெளிவட்ட குரு) ஒன்பதாமிடத்துடன், லாப ஸ்தானத்தில் நிற்கும் 5-ம் அதிபதி சுக்கிரனையும், உதயத்தை நோக்குவது பூர்வ புண்ணிய அதிர்ஷ்டத்தைக் கூட்டுகிறது.

திடீர் அதிர்ஷ்டத்தை குறிப்பிடும் 8-ம் வீட்டில் கவிப்புஅமைந்து, அங்கு நின்ற சூரியனே 10-ம் வீட்டில் திக்பலம் பெற்றதும், அந்த இளைஞனுக்குத் திடீர் அதிர்ஷ்ட வரவு அரசு மூலம் வருவதை குறிப்பிடுகிறது.

மேற்கண்ட பிரசன்ன விளக்கங்களைக் கேட்ட எனது சிங்கப்பூர் நண்பர், “எனக்கெல்லாம் இது கிடைக்காது போலிருக்கிறது” என்று ‘திருவிளையாடல்’ தருமி போலப் பெருமூச்சு விட்டாலும், ஜோதிட விதிகள் எவ்வளவு துல்லியமாகச் செயல்படுகின்றன என்பதை எண்ணி வியந்தார்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு சுவாரசியமான பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

சோற்றுக் கூட்டணி தேறுமா?

நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு.

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

அதிர்ஷ்டம் தரும் லாட்டரி யோகம்.

மனித வாழ்க்கையில் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கதவைத் தட்டும் ‘அதிர்ஷ்டம்’ என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்ததாமே!” என்ற செய்தியைக்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

சுயதொழில் எனும் புதிய பயணம்: அடிமைத் தளையிலிருந்து ஆளுமைப் பாதைக்கு!

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிப் பயணிக்கத் தொடங்குகிறான். வேறொருவரின் கனவுகளுக்காக உழைப்பதைக் காட்டிலும், தனது சொந்த உழைப்பும் திறமையும் நேரடிப் பலன் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது

Loading

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

🎓 படித்தவுடன் பணி தரும் ஜாதக அமைப்புகள்: ஓர் அலசல்! 💼

“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.” ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

பழையன கழிந்து புதியன புகும்!

வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களின் சாவியைப் பிடித்த கைகளுக்கு, இன்று புத்தம் புதிய வாகனத்தின் வாசம் நுகரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பும், பழைய வாகனங்கள் கொடுத்த அனுபவங்களும் இன்று

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கோள்களின் நகர்வும் பொருளாதாரப் பாதுகாப்பும்

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil