திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல நன்மைகள் இருப்பது நிஜமே என்றாலும், ‘பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது’ என்ற யதார்த்தம் மெல்ல மெல்ல சுடத் தொடங்குகிறது.

கூண்டுக்கிளிகளாகத் தவிக்கும் தம்பதியர்

வாழ்க்கையின் இதர விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழும்போதுதான், உணர்வுபூர்வமான வெற்றிடத்தை இருவருமே உணரத் தொடங்குகின்றனர். அதன் பிறகு, குடும்ப வாழ்வில் இருந்து முழுமையாக விலகவும் முடியாமல், துணைவருடன் இணைந்து பயணிக்கவும் இயலாமல் தவிக்கும் தம்பதியர் இன்று ஏராளம். குறிப்பாக, குழந்தைகளுக்காகத் தங்களது சொந்த விருப்பங்களை சமரசம் செய்துகொண்டு இயந்திரத்தனமாக வாழும் இத்தகைய தம்பதியர், சமீப காலங்களில் மனப்போராட்டங்களுக்குத் தீர்வு தேடி ஜோதிட ஆலோசனையை நாடுவது அதிகரித்துள்ளது.

சுய விருப்பமும், புரிதலும்

மறுபுறம், இல்லற வாழ்வை இன்று பெரும்பாலோர் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அமைத்துக்கொள்கின்றனர். வெறும் ஈர்ப்பில் மட்டும் முடிவெடுக்காமல், சில காலம் பழகி, வருங்காலத் துணைவரை முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு, ஒத்துவந்தால் மட்டுமே திருமணம் என்ற தெளிவான மனநிலையுடன் இருக்கும் புத்திசாலிகளும் கணிசமாக உள்ளனர்.

பிரிவு என்பது முடிவல்ல; புதிய தொடக்கம்

பழக்கத்தின்போது இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்ற நிலை வந்தால், இன்றைய நகரங்களில் ‘Break-up’ என்பது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது. முந்தைய தலைமுறையைப் போல இதற்காகவே இடிந்து போய் முடங்கிவிடாமல், மிகுந்த மனவுறுதியுடன் தங்களது அடுத்த நகர்வைத் தொடங்குபவர்களாக இன்றைய தலைமுறையினர் விளங்குகிறார்கள்.

பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் கிரகங்களும், மனதை ஆளும் சந்திரனும் இக்காலகட்டத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன? இந்த நவீன உறவுச் சிக்கல்களுக்கும், அதிலிருந்து மீண்டு வரும் மனத்திட்பத்திற்கும் ஜோதிட ரீதியான கிரக அமைப்புகள் எவ்வாறு காரணமாகின்றன?

சில சுவாரஸ்யமான உதாரண ஜாதகங்கள் மற்றும் துல்லியமான கிரக நிலைகளின் விரிவான அலசல்களுடன் வாருங்கள் ஆராயலாம்.

மனைவியின் ஜாதக அலசல்

  • லக்னம்: துலாம்
  • ராசி: கன்னி
  • நட்சத்திரம்: ஹஸ்தம்

கிரக நிலைகளும் பலன்களும்:

களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளார். லக்னத்தை செவ்வாய் மட்டுமே பார்ப்பதால் ஜாதகிக்கு செவ்வாயின் போர்க்குணமும், கணிதப் புலமையும், வீடு, வாகன வசதிகளும், கோப குணமும், ஆராய்ச்சி அறிவும் ஏற்படும். ஆனால் செவ்வாய் 7-ல் தனது மூலத் திரிகோண வீட்டில் ஆட்சி பெற்று நிற்பதால், ஜாதகியைவிட மேற்சொன்னவை கணவருக்கே அதிகம் அமையும்.

2-ல் புதன் நின்று செவ்வாயின் 8-ஆம் பார்வையைப் பெறுவதால், கணித அறிவு, தகவல்களை ஆராயும் பணி சார்ந்த வகையில்தான் குடும்ப வருமானம் வரும். ஜாதகியும், கணவரும் CA படித்து தணிக்கையாளர்களாக (Auditors)  தங்களின் சொந்த நிறுவனத்தில் இணைந்து செயல்படுகின்றனர்.

4-ஆமிடம் மகரத்தில் திக்பலம் பெற்ற லக்னாதிபதி சுக்கிரனுடன் குரு இணைந்து தொழில் ஸ்தானமான 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். பணத்துடன் தொடர்புடைய இருவரும் 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் இவர் பொருளாதாரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதே சமயம் 7 க்கு 10-ஆமிடமான 4-ஆமிடத்தில் குரு-சுக்கிர இணைவு ஜாதகியின் கணவருக்கும் பொருளாதாரம் சார்ந்த வகையில்தான் தொழில் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

குடும்ப ஸ்தானத்தில் நிற்கும் வாக்கு காரகர் புதனின் மீது செவ்வாயின் கடுமையான 8-ஆம் பார்வை விழுவது பொருளாதார வருமானத்திற்கு நன்மை என்றாலும், குடும்பத்தில் பேச்சு வார்த்தைகளில் கடும் சொற்களால் கணவன்-மனைவி இணக்கம் பாதிக்கப்படும். செவ்வாயும்-கேதுவும் நட்சத்திரப் பரிவர்த்தனை பெற்றிருப்பது ஆராய்ச்சி அறிவைக் கொடுத்து குடும்பத்தைப் பாதிக்கும் அமைப்பு.

கணவருடனான ஜாதகியின் திருமண உறவின் இணக்கத்தை நவாம்சம் மூலம் துல்லியமாக ஆராயலாம்.

நவாம்ச நிலை:

நவாம்சத்தில் கால புருஷனுக்கு தன ஸ்தானமான ரிஷபம் 7-ஆமிடமாக அமைந்து, அங்கு ராகு-கேதுக்கள் தொடர்பில் லக்னாதிபதி செவ்வாய் இருப்பது பொருளாதார விஷயங்களை ஆய்வு செய்ய நல்ல அமைப்பு. ஆனால் களத்திர காரகர் செவ்வாய் ராகு-கேதுக்களுடன் 7-ல் அமைவது கடுமையான களத்திர தோஷத்தை இல்லற விஷயத்தில் ஏற்படுத்தும். இது பொருளாதாரத்திற்கு நன்மையான அமைப்பு, ஆனால் இல்லறத்திற்குத் தீமை செய்யும் நிலை.

கணவரின் ஜாதக அலசல்

  • லக்னம்: ரிஷபம்
  • ராசி: கும்பம்
  • நட்சத்திரம்: சதயம்

கிரக நிலைகளும் பலன்களும்:

கால புருஷனுக்கு பொருளாதாரத்தைக் குறிக்கும் ரிஷபமே லக்னமாக அமைந்து, லக்னத்தில் நிற்கும் சனி 10-ஆமிட சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். தன ஸ்தானமான 2-ஆமிடத்தை தனகாரகர் குரு, கணக்கன் எனப்படும் தன ஸ்தானாதிபதி புதனுடன் இணைந்து பார்க்க, புதன் சாரத்தில் லாப ஸ்தானத்தில் நிற்கும் செவ்வாயும் 2 ஆமிடத்தை பார்க்கிறார். இதனால் ஜாதகரும் மனைவியைப் போலவே CA படித்து தணிக்கையாளராக உள்ளார்.

7-க்கு 2-ல் நிற்கும் புதனும் குருவும் ஜாதகரின் மனைவிக்கும் வருமானம் பொருளாதாரம் சார்ந்த வகையில்தான் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. 7-ஆமதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் நிற்பது நன்மையே. ஆனால் வக்கிர சனி பரிவர்த்தனைக்கும் முன்னும், பரிவர்த்தனைக்குப் பின் கும்பத்திலிருந்து 10-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் ஜாதகரின் மனைவியுடனான இணக்கம் பாதிக்கப்படும். 1–10 பரிவர்த்தனையில் ஜாதகரும் மனைவியும் இணைந்து தொழில் செய்யுமிடத்தில் பாதிப்பு இருக்காது. ஆனால் 7-ஆமிடம் வக்கிர சனியால் பாதிக்கப்படுவதால் தொழில் விஷயங்களைத் தவிர இதர விஷயங்களில் மனைவியோடு இணக்கம் இருக்காது. இதை மேலும் விளக்கமாக நவாம்சத்தில் ஆராய்வோம்.

நவாம்ச நிலை:

நவாம்சத்தில் லக்னத்தில் உச்ச செவ்வாயுடன் 7-ஆமதிபதி சந்திரன் இணைந்திருப்பதால் ஜாதகரும் மனைவியும் செவ்வாய் குறிப்பிடும் கணித ஆய்வுகளில் தேர்ந்தவர்களாக (புதன்-கணிதம், செவ்வாய்-கணித ஆய்வு) இருப்பர். 10-ஆமிட கேதுவை 4-ஆமிடத்திலிருந்து ராகுவோடு இணைந்த குரு பார்ப்பதால் இவரது பொருளாதாரம் சார்ந்த தணிக்கைத் தொழில் சிறப்பாகவே இருக்கும்.

ஆனால் குடும்ப காரகர் குரு ராகுவுடன் இணைந்து குரு-சண்டாள யோகம் ஏற்படுவது ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்தும். அதனால் ஜாதகரின் மதிப்பும் கௌரவமும் பாதிக்கப்படும். 2-ல் 8-ஆமதிபதி சூரியன் வக்கிர சனியுடன் இணைந்து நிற்பதால் பொருள் காரகமான சம்பாத்தியம் பாதிக்கப்படாது. அதேசமயம் உயிர் காரகமான குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதைக் குறிப்பிடுகிறது. ஏனெனில் 2-ஆமிட சனி இங்கு வக்கிரம் பெற்றுவிட்டதால் 8-ஆமதிபதி சூரியன் ஏற்படுத்தும் பாதிப்பைத் தடுக்க இயலாது. இதே சனி இங்கு நேர்கதியில் இருந்தால் சூரியனால் குடும்பத்திற்கு வரும் பாதிப்பைத் தடுக்க இயலும் என்பதை அறிக.

தசா-புக்திகளின் விளையாட்டும் யதார்த்தமும்

மேற்கண்ட இருவரும் CA படித்து தணிக்கையாளர்களாக (Finance Auditors) உள்ளதால் கல்வியும், கௌரவமும் ஒன்று சேர்ந்துவிட்டது. இதனால் இவர்கள் இருவரும் இல்லற உறவில் இணைந்து இன்றுவரை தங்களது சொந்த தணிக்கை நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இருவர் ஜாதகத்திலும் சனி வக்கிரம் என்பதைக் கவனிக்க. இப்படி ஜீவன காரகர் கணவன்-மனைவி இருவர் ஜாதகத்திலும் வக்கிரம் பெற்றிருந்தால் ஒருவரது தொழிலறிவு மற்றவருக்குப் புரியும். இது சிறப்பான அமைப்பு.

ஆனால், இருவரின் நட்சத்திரங்களான ஹஸ்தமும், சதயமும் 6/8 ராசிகளாக சஷ்டாஷ்டகத்தில் அமைந்துள்ளதைக் கவனிக்க. இதனால் தொழில் விஷயங்கள் தவிர இதர விஷயங்களில் இருவருக்கும் ஒருங்கிணைவு இருக்காது. மேலும் குறிப்பிட்ட இரு நட்சத்திரங்களுக்கும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை. இதனால் ஒரு கணவன்-மனைவி பந்தத்தை இணைக்கும் அடிப்படையான அன்பு, காதலைவிட மனதின் அடியாழத்தில் வெறுப்பு அதிகமிருக்கும்.

இத்தகைய ஜாதகங்களை இணைக்கக் கூடாது. இணைந்ததால் என்ன நடக்கும் என்றால்… வசதியும், பொருளாதாரமும் ஒரு தம்பதிக்குச் சில நாட்கள் மட்டுமே மதிப்பைத் தரும். பிறகு புரிதலில் பிரச்னை ஏற்பட்டுவிட்டால் மோசமான தசா-புக்தி வராதவரை அனுசரித்து வாழ்கின்றனர். மோசமான தசா-புக்திகள் வந்தால் எத்தனை வயதானாலும் மனம் வெறுத்துப் பிரிவினையை நாடுகின்றனர்.

இதுவரை இவர்களைப் பிணைத்திருப்பது வசதி-வாய்ப்புகளைவிட குழந்தைகளும், சகிப்புத் தன்மையுமே. ஆனால் இந்த சகிப்புத் தன்மையையும் மோசமான தசா-புக்திகள் தவிடுபொடியாக்கிவிடும் என்பதை அறிக. மேற்கண்ட தம்பதிகள் இருவரும் நல்ல வசதி-வாய்ப்புகளுடனும், வளர்ந்த குழந்தைகளுடனும் இருந்தாலும், 50 வயதுகளைக் கடந்த நிலையில் இனியும் சகித்துக்கொள்ள இயலாது என்ற நிலையில் பிரிய முயல்கின்றனர்.

மீண்டும் உங்களை மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இல்லறம்

திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல

மேலும் படிக்க »
கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »
Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil