கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால், அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் மனிதர்களில் ஒரு விசித்திரமான, அதே சமயம் சுவாரசியமான வகையினர் உண்டு. அவர்களைப் பற்றிய ஒரு ஜோதிடப் பார்வைதான் இப்பதிவு.

அந்த ‘இரண்டு முகக்’ கணக்குப்பிள்ளைகள்!

அலுவலகத்தில் இவர்களை நாம் அன்றாடம் பார்க்க முடியும். இவர்களிடம் ஒரு தனித்துவமான குணம் இருக்கும்:

  • அலுவலகப் பணிகளில் லாப நஷ்டக் கணக்கு: மேலதிகாரி கூப்பிட்டு ஒரு புதிய பொறுப்பையோ, புராஜெக்ட்டையோ கொடுத்தால், உடனே இவர்களின் மூளை கணக்குப்போடத் தொடங்கும். “இதனால் நமக்கு என்ன லாபம்? சம்பள உயர்வு கிடைக்குமா? ப்ரமோஷனுக்கு வழிவகுக்குமா? அல்லது வெறும் வேலைப்பளு மட்டும்தானா?” என்று அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து, தங்களுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே அதை ஏற்பார்கள்.
  • யூனியன் பதவிகளில் அந்தஸ்து வேட்கை: ஆனால், இதே நபர்களிடம் அலுவலக வேலைக்கு அப்பாற்பட்ட தொழிலாளர் சங்கங்களிலோ (Unions) அல்லது அசோசியேஷன்களிலோ ஒரு பதவி வருகிறது என்றால், அங்கே எந்தப் பொருளாதார லாபமும் இல்லை என்றாலும், வெறும் ‘மதிப்பிற்காகவும்’ ‘கௌரவத்திற்காகவும்’ ஓடிச் சென்று அந்தப் பொறுப்பைத் தங்களின் தோள்களில் சுமந்து கொள்வார்கள்.

இங்கேதான் ஒரு முரண்பாடு எழுகிறது: தன் சொந்த வேலை என்று வரும்போது ‘சுயலாபம்’ பார்க்கும் மனம், பொதுவான ஒரு சங்க அமைப்பில் பொறுப்பு கிடைக்கும்போது மட்டும் ‘மதிப்பை’ எதிர்பார்ப்பது ஏன்? இதற்குப் பின்னால் இருக்கும் ஜோதிட ரகசியம் என்ன?

கிரகங்களின் பங்களிப்பும் கிரக நிலைகளும்

ஒரு மனிதனின் தொழில், சிந்தனை மற்றும் சமூக அங்கீகாரத்தைத் தீர்மானிப்பதில் கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது.

  • புதனின் கணக்கு (லாப நஷ்டம்): புதிய பொறுப்புகளில் லாப நஷ்டம் பார்க்கும் புத்திசாலித்தனத்தைக் கொடுப்பது புதன் மற்றும் 11-ஆம் வீடான லாப ஸ்தானம்.
  • சனியின் ஆதிக்கம் (சங்கங்கள்/Union): தொழிலாளர்களை ஒன்றிணைப்பதும், சங்கங்களை வழிநடத்தும் பக்குவத்தையும் தருபவர் ‘மந்தன்’ என்ற சனி பகவான்.
  • சூரியனின் கௌரவம் (மதிப்பு): பதவியும், அதன் மூலம் கிடைக்கும் சமூக மரியாதையையும் விரும்புவது ‘அரச கிரகமான’ சூரியனின் வேலை.

ஒரு ஜாதகத்தில் இந்த கிரகங்களின் சேர்க்கையும், 10-ஆம் வீடான கர்ம ஸ்தானமும் எப்படிப்பட்ட அமைப்பில் இருந்தால் ஒருவருக்கு இந்த இரட்டை மனநிலை உருவாகிறது? சுயநலமும் பொதுநலமும் கலந்த இந்த ‘யூனியன் லீடர்களின்’ ஜாதக ரகசியங்களை ஓர் உதாரண ஜாதகம் மூலம் இனி விரிவாகக் காண்போம்.

ராசிச் சக்கர ஆய்வு: கன்னி லக்னமும் சேவை மனப்பான்மையும்

கன்னி லக்னம் என்பது பொதுப் பணி மற்றும் சேவை செய்யவே பிறவி எடுத்த லக்னம் எனலாம். ஏனெனில், அது கால புருஷனுக்குச் சேவையைக் குறிக்கும் 6-ஆம் இடமாகும். பொதுச்சேவை செய்ய வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்கான காரக கிரகம் சந்திரனாகும். இந்த ஜாதகத்தில் லக்னமும் ஹஸ்த நட்சத்திரத்தில் அமைந்து, சந்திரனும் அதே ஹஸ்தத்தில் சுய சாரம் பெற்று அமைந்தது, இந்த ஜாதகர் தனது சுய வேலையைத் தவிர்த்துப் பொதுச்சேவையில் ஈடுபட வந்ததற்கு முக்கிய காரணமாகும். அதே சமயம் லாபாதிபதி சந்திரன் லக்னத்தில் வந்தமர்ந்ததால் தனக்கு லாபகரமானதாக இருந்தால்தான் எந்த வேலையை முழு மூச்சுடன் செய்வர்.

  • அரசு வேலை: 2-ஆம் இடத்தில் உள்ள சூரியன் ஜாதகருக்கு அரசு வேலையை வழங்கியுள்ளார்.
  • நிதித்துறை வேலை: லக்னத்தில் திக்பலம் பெற்ற குரு, ஜாதகருக்கு நிதி சார்ந்த துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
  • பிறருக்கான உழைப்பு: லக்னத்தில் சனி நிஷ்பலம் (திக்பலத்திற்கு நேர் எதிர் நிலை) பெற்றது, பிறருக்காக உழைக்கும் நிலையைத் தரும். இதனால் தொழிலாளர் சங்கத்தில் ஜாதகர் ஒரு முக்கியப் பொறுப்பில் உள்ளார்.
  • புதனின் வக்கிரம்: லக்னாதிபதி புதன் வக்கிரமாகி திக்பல வலுவை இழந்தாலும், புதனுக்கு அடுத்து நிற்கும் குரு புதனைத் தாங்கிப் பிடிக்கிறார். புதனின் வக்கிரம் கணக்கு வழக்குகளில் நுண்ணறிவை வழங்கி, அதுவே ஜாதகர் நிதித்துறையில் சிறப்பாகச் செயல்படவும் உதவுகிறது. இரட்டை ராசியான 10 ஆமிடம் மிதுனாதிபதியாகவும், இரட்டை கிரகமாகவும் லக்னாதிபதி புதன் வருவதால் தனக்கு லாப நோக்கம் பார்க்கும் அதே சமயம் லாபமில்லாவிட்டாலும் அந்தஸ்தை எதிர் பார்க்கும் இரட்டை மனோபாவத்தை தருகிறார். புதின் வக்கிரன் அதில் தீவிர நிலையை தரும்.

தசாம்சச் சக்கர ஆய்வு (D-10): பணியிடக் கர்மாவும் யூனியன் தொடர்பும்

ஒருவரை அவர் சம்பாதிக்குமிடத்தில் மற்றவர்கள் எப்படி அணுகுவார்கள் என்பதைத் தசாம்சம் மூலம் காணலாம்.

  • தசாம்சத்தில் சேவை மனப்பான்மையைக் குறிக்கும் சந்திரன், ராசிச் சக்கரத்தைப் போன்றே லக்னத்தில் அமைந்துள்ளார்.
  • ஒரு இயக்கம் சார்ந்து பணியிடத்தில் ஒருவர் செயல்படுவதை, தசாம்ச லக்னத்தில் 10-ஆம் அதிபதி சந்திரனுடன் இணைந்து நிற்கும் இயக்கத்தின் காரக கிரகமான கேது குறிப்பிடுகிறார். இதனால்தான் இவர் பணியிடத்தில் Union தொடர்பான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
  • பணியிட நிறை-குறைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் நீதி ராசியான துலா லக்னத்தில் சந்திரன் + கேது இணைவு பெற்றது, இது ஜாதகரது பணியிடக் கர்மா என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
  • 10-ஆம் இடத்தை 4-ஆம் இடத்தில் உள்ள புதன் பார்ப்பது, ஜாதகர் நிதித்துறையில் கணக்கு வழக்குகளைக் கையாளுபவர் என்பதை உறுதி செய்கிறது.
  • உப தனகாரகர் எனப்படும் லக்னாதிபதி சுக்கிரன் 6-ஆம் இடமான மீனத்தில் உச்சம் பெற்று நிற்பதும், இவர் நிதி சார்ந்த துறைகளில் சிறப்பாகச் செயல்படுபவர் என்பதைப் பறைசாற்றுகிறது.

பரிவர்த்தனை தரும் பதவி யோகம்:

தசாம்சத்தில் ஒருவரது சுய விருப்பங்களைக் குறிப்பிடும் 5-ஆம் இடத்தில் அமைந்த குரு 3 ஆமிட சனியோடு பரிவர்த்தனை பெறுகிறார். இது தனது விருப்பப்படி தொழிலாளர் யூனியன் போன்ற அமைப்புகளில் ஜாதகர் ஈடுபடுவார் என்பதைக் காட்டுகிறது.

இந்தப் பரிவர்த்தனையில் குருவும் சனியும் சூரியனுடன் தொடர்பாவதைக் கவனியுங்கள். இது, தனக்கு யூனியன் சேவையில் ஈடுபடுவதால் மதிப்பும் கௌரவமும் கிடைக்க வேண்டும் என்று ஜாதகர் விரும்புவதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. தொழிலாளர் யூனியன் போன்றவற்றில் ஈடுபடுவதால் அதிகப்படியான வருவாய் கிடைக்காது என்ற நிலையில், இதுபோன்ற இயக்கங்களில் ஈடுபடுவது புகழுக்காகவே என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தசா புத்தி பலன்கள்:

ஜாதகருக்கு தற்போது குரு தசையில் ராகு புக்தி நடப்பில் உள்ளது. இதனால் ஜாதகர் தற்போது யூனியனில் ஒரு சாதாரண பொறுப்பில் உள்ளார். அடுத்து இவருக்குக் குருவுடனான பரிவர்த்தனையில் 5-ஆம் இடமான கும்பத்திற்கு இடம் பெயரும் சனி தசை துவங்கவுள்ளது.

பரிவர்த்தனைக்கு முன் சூரியனோடு இணைந்த சனி, பரிவர்த்தனைக்குப் பிறகு சூரியனின் வீட்டை நேர் பார்வை பார்க்கிறார். இதனால் இவருக்கு யூனியனில் ‘துணைத் தலைவர்’ (Vice President) எனும் பெரிய பொறுப்பு கிடைக்கக் கூடிய சாதகமான சூழல் உள்ளது. இந்த 3 மற்றும் 5-ஆம் இடப் பரிவர்த்தனை ஜாதகருக்குத் தற்போதைய சாதாரண பொறுப்பு மாறி, மதிப்பிற்குரிய பெரிய பொறுப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது.

ஆனாலும், இந்த பொருளற்ற மதிப்புமிகு பதவியால் ஜாதகருக்கு உண்மையான புகழும் அங்கீகாரமும் கிடைக்குமா? என்பதை அதற்கான வர்க்கச் சக்கரமான பஞ்சமாம்சம் (D-5) மூலம் ஆராய்வோம்.

பஞ்சமாம்சம் (D-5): புகழா? மனநிறைவா?

பஞ்சமாம்சத்தில் மீன லக்னத்தில் சேவை மற்றும் விருப்பங்களைக் குறிப்பிடும் 5-ஆம் அதிபதி சந்திரன் அமைந்தது, ஜாதகர் யூனியன் வேலைகளைத் தான் விரும்பி ஏற்றுக்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது.

லக்னாதிபதி குரு, புகழின் காரக கிரகமான சுக்கிரனுடன் 9-ஆம் இடத்தில் இணைந்து லக்னத்தைப் பார்ப்பதால், யூனியன் வேலைகள் மூலம் புகழை ஜாதகர் விரும்புவது தெளிவாகிறது. ஆனால், சுக்கிரன் மீன லக்னத்திற்கு அஷ்டமாதிபதி (8-ஆம் அதிபதி) ஆகிறார்; புதன் பாதகாதிபதி (7-ஆம் அதிபதி) ஆகிறார். இவர்களுடன் லக்னாதிபதி குரு இணைந்திருப்பதால், யூனியன் வேலைகளால் ஜாதகர் புகழை அளவுக்கு அதிகமாக விரும்பினாலும், அது எதிர்பார்த்த அளவில் அவருக்குக் கிடைக்காது.

இருப்பினும், லக்னத்தில் அமைந்த 5-ஆம் அதிபதி சந்திரனையும், 5-ஆம் இடத்தையும் குரு பார்ப்பதால், இந்தச் சேவையின் மூலம் ஜாதகருக்குப் புகழைத் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான மனநிறைவு மட்டுமே முழுமையாகக் கிடைக்கும்.

முடிவுரை:

“கடமை செய், பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் வரிகளுக்கு ஏற்ப, இந்த ஜாதகரின் கிரக அமைப்புகள் அவரைப் பொதுப்பணியில் ஈடுபட வைக்கின்றன. சுய தொழிலில் லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் இவருடைய புத்தி, யூனியன் என்று வரும்போது கௌரவத்தையும், அங்கீகாரத்தையும் தேடி ஓடுகிறது.

வரவிருக்கும் சனி தசை இவருக்கு ‘துணைத் தலைவர்’ போன்ற பெரிய பதவிகளையும், சமூகத்தில் நல்ல மதிப்பையும் தேடித்தந்தாலும், பஞ்சமாம்சத்தின் அஷ்டமாதிபதி மற்றும் பாதகாதிபதி தொடர்புகளால் உலகப் புகழோ அல்லது பெரிய பொருளாதார லாபமோ கிடைக்கப் போவதில்லை. எனினும், குருவின் சுப பார்வையால், சக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிப் பெறும் வெற்றியும், அதன் மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியும், மனநிறைவுமே இந்த ‘இரட்டை முகக் கணக்குப்பிள்ளைக்கு’ கிரகங்கள் தரும் ஆகச்சிறந்த பரிசாகும்!

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான இடைவெளி

வாழ்வில் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் — வெற்றியாளர்கள் தங்களின் பலத்திற்கு ஏற்ற சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; தோல்வியாளர்களோ தங்களின் பலமறியாமல் தவறான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தங்களையே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க »
Advanced Atrology

Option Buying vs Option Selling: ஜோதிட ரீதியான ரகசியம்

வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் பங்குச்சந்தை, இன்று அனைவரையும் ஈர்க்கும் ஒரு காந்தமாக மாறியுள்ளது. உள்ளங்கையில் உலகத்தைச் சுருக்கும் எளிய ஸ்மார்ட்போன் செயலிகளும், டிஜிட்டல் கட்டமைப்புகளும் பங்கு வர்த்தகத்தைச் சாமானியர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு

மேலும் படிக்க »
இல்லறம்

திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல

மேலும் படிக்க »
கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil