செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு வாழ்வோர் இவர்கள். இத்தகையவர்களின் வாழ்வில் போராட்டங்களும் இருக்கும், வசந்தங்களும் இருக்கும். தங்களுக்குக் கிடைக்கும் வாழ்வை எவ்வித ஆட்சேபனையுமின்றி பெரிய மாற்றங்களை செய்யாமல்  நீரில் செல்லும் இலை போல வாழ்பவர்கள் இரண்டாவது வகை. இவர்களது வாழ்வில் பெரிய சுவாரஸ்யங்கள் இல்லாவிட்டாலும் நிம்மதிக்குப் பஞ்சமிருக்காது. அமைந்த  வாழ்வில் உள்ள குறைகளை சரிசெய்துகொண்டு வாழப் போராடுவோர் மூன்றாவது ரகம். இந்த மூன்றாவது ரகத்தினரின் நிலைதான் பரிதாபமானது.  வாழ்க்கை அனைவருக்கும் அனைத்தையும் கொடுத்துவிடுவதில்லை. நம் அனைவரின் போராட்டங்களும் வேறு வேறானவை. ஆனால் போராட்டம் என்பது பொதுவானது. குடும்ப வாழ்வில் குழந்தையின்மையால் போராடுவோரின் போராட்டங்கள் கொடுமையானது. மருத்துவ உலகம் இதற்கு இயற்கையை விட்டு பெரிதும் விலகிவிட்ட  வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்க மாறுபாடு, காலநிலை வேறுபாடு, மரபுரீதியான பாதிப்புகள் என்று பல காரணங்களை கூறினாலும் வாரிசுகள் எனும் வாழ்வின் அர்த்தங்களை பெற இயலாத இவர்களின் வேதனைகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை. பொருளாதார வசதிகள் இருந்தும் வாரிசு இல்லையே என்போர் ஒரு வகை. செயற்கை கருத்தரிப்பிற்கு சில லட்சங்கள் செலவாகிறது எனும் சூழலில் ஏழ்மையில் குழந்தை ஏக்கத்துடன் துயருறுவோர் பலர். காலங்கள் கடந்துகொண்டே இருக்கிறது என்று கூறி  பொறுமையின்மை காரணமாக செயற்கை கருதரிப்பிற்கு பலமுறை முயன்று  அதில் வெற்றி கிடைப்பதில்லை என்று விரக்தியில் தவிப்போர் ஒரு சிலர்.  இன்றைய பதிவில் செயற்கை கருத்தரிப்பிற்கு சென்று குழந்தை பெறும் ஜாதக அமைப்பு என்ன? எப்போது முயற்சித்தால் அதில் வெற்றி கிடைக்கும்? என்பது பற்றி உதாரண ஜாதகங்களுடன் ஆராய்வோம். 

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

செயற்கை கருவூட்டலுக்கான ஜாதக அமைப்பு.

செயற்கை எனும் சொல்லுக்கு ராகு-கேது ஆகிய இரு கிரகங்களே காரக கிரகங்களாகும். ராகுவும்-கேதுவும் ஒன்றைவிட்டு ஒன்று விலகாதது என்பதால்   ராகுவுடன் ஒரு கிரகம் தொடர்பாகிறது எனில் அது கேதுவுடனும் தொடர்பாகிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  செயற்கை கருவூட்டலுக்கு ராகு-கேதுக்களுடன் குரு தொடர்பு காரணமாகிறது. குறிப்பாக ராகு-குரு தொடர்பு முதன்மை காரணமாகும். இரண்டாவதாக லக்னத்திற்கு 5 ஆமதிபதி அல்லது 5 ல் நிற்கும் கிரகம் ராகுவுடன்   தொடர்பாக வேண்டும். இந்த தொடர்பு கிரக இணைவாகவோ அல்லது நட்சத்திர தொடர்பாகவோ இருக்கலாம். மேலும் ராகுவின் திரிகோணத்தில் குருவோ, 5 ஆமதிபதியோ, 5 ஆமிடமோ அமையலாம். ஆனால் தொடர்புடைய தசா-புக்தியும் கோட்சாரமுமே செயற்கை கருவூட்டல் வெற்றியடைய வழிவகுக்கும்.

மேற்கண்ட ஜாதகிக்கு 36 வயதாகிறது. திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. இதுவரை குழந்தையில்லை. ஜாதகிக்கு ராகு தசை திருமணதிற்கு ஒரு வருடம் முன்பு துவங்கியது. சுபரோ, பாவியோ ஒரு கிரகம் தனது தசா-புக்தியில் தான் நின்ற வீட்டுப் பலனை தந்தே தீரும் என்ற கருத்தின்படி களத்திர பாவகத்தில்,  களத்திர காரகர் செவ்வாயின் அவிட்டத்தில் நிற்கும் ராகு, தசை துவங்கிய ஒரு வருடத்திற்குள்ளாக திருமணத்தை செய்து வைத்துவிட்டார். ராகுவிற்கு 5 ஆமிட தொடர்பு இல்லை. ஐந்தில் நிற்கும் சனியின் தொடர்பும் இல்லை. ஆனால் 5 ஆமதிபதி குரு, ராகுவிற்கு திரிகோணத்தில் மிதுனத்தில் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் நின்று, ராகுவை 9 ஆம் பார்வையாக பார்கிறார். ஆனால் தசாநாதர் ராகு குரு சாரத்தில் இல்லை. 5 ல் நிற்கும் சனி சாரத்திலும் இல்லை. ராகு 5 ன் விரையாதிபதி செவ்வாய் சாரத்தில்தான் நிற்கிறார். இதனால் ராகு தசையில் ஜாதகிக்கு செயற்கை கருவூட்டல் முயற்சிகள் பலனளிக்காது. ஆனால் ராகு சாரத்தில் 11 ஆமிடத்தில் நின்று 5 ஆமிடத்தை பார்க்கும் 5 ஆமதிபதி குருவின் தசையில்தான் ஜாதகிக்கு செயற்கை கருவூட்டல் முயற்சிகள் பலனளிக்கும். செயற்கை கருவூட்டல் முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்பற்ற 7 ஆமிட ராகு தசையில் இந்த ஜாதகி 7 முறை செயற்கை கருவூட்டல் முயற்சிகள் செய்து ஏழிலும் தோல்வியடைந்தது மற்றுமின்றி இதற்காக ரூபாய் 4௦ லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார். தசாநாதர் ராகுவின் சாரநாதர் செவ்வாயும், 5 ல் நிற்கும் சனியும் சுக்கிரனின் முறையே பூரம், பூராடத்தில் நிற்பதால் செயற்கை கருவூட்டல் முயற்சியை செய்ய வைக்கும். ஆனால் தசாநாதர் ராகு செயற்கையை கருவூட்டலுக்கு உதவும் கிரகமானாலும் அவருக்கு 5 ஆமிட தொடர்பு இல்லாததால் ஜாதகியின் முயற்சிகள் பலனைத் தரவில்லை. இதனால்  ஜாதகி மனதிலும் உடலிலும் மிகப்பெரும் வேதனைகளை சுமந்துகொண்டு வாழ்ந்து வருகிறார். 

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.

மிதுன லக்ன ஜாதகத்தில் குரு 11 ல் நின்றது மிகச் சிறப்பு என்றாலும் அவர் வக்கிரம் பெற்று தனியாக பிறர் தொடர்பற்று அமைந்தது குருவின் காரகம் ஒன்று பாதிப்பதை குறிப்பிடுகிறது. திருமணமாகி 14 ஆண்டுகளான ஜாதகிக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பதிலிருந்து வக்கிர குரு குழந்தை வகையில் பாதிப்பை தந்துகொண்டுள்ளார் என்பது தெரிகிறது. லக்னாதிபதி புதனும், ஐந்தாமதிபதி சுக்கிரனும் அஸ்தங்கம் பெற்று குருவும் வக்கிரமானதால் ஜாதகிக்கு கருவுறும் ஆற்றல் குறைவு.

வக்கிர கிரக காரகங்கள் தடை தாமதத்திற்கு பிறகே பலனளிக்கும். 11 ஆமிட குரு இங்கு 5 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகிக்கு நிச்சயம் குரு தசையில் புத்திரமுண்டு. மேஷத்தில் நிற்கும் புத்திர காரகர் குருவும், சிம்மத்தில் நிற்கும் ஐந்தாமதிபதி சுக்கிரனும் முறையே கேதுவின் அஸ்வினி, மகத்தில் நிற்கின்றனர். இப்படி காரகரும், பாவாதிபதியும் செயற்கை கிரகமான கேதுவின் சாரம் பெற்றால் ஜாதகிக்கு புத்திரம் செயற்கையாகத்தான் அதாவது மருத்துவ சிகிச்சையினால்தான் வாய்க்கும். இயற்கையாக அமைய வழியில்லை. வக்கிர கிரகங்கள் ராகு-கேதுக்களுடன் இணைந்து செயல்படும் என்பதற்கேற்ப குரு இங்கு வக்கிரமாகி கேது தொடர்பு பெறுவதால், குருவின் காரகமான குழந்தை அமைய, இயல்புக்கு மாறுபட்ட செயற்கை எனும் முறையின் காரக கிரகமான கேது செவி சாய்ப்பார். புத்திர ஸ்தானம் 5 க்கு விரையத்தில் 4 ல் கேது நிற்பது பாதிப்பு என்றாலும் அவர் 5 க்கு லாப ஸ்தனாதிபதியான சூரியனின் உத்திரம்-4 நிற்பதால் இந்த ஜாதகிக்கு மருத்துவ சிகிச்சையில்தான் குழந்தை பிறக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்.

எப்போது செயற்கை கருத்தரிப்பிற்கு செல்லலாம்?

5 ஆமிடத்துடன் தொடர்புடைய கிரக தசா-புக்திகள் அல்லது காரகர் குரு இவர்கள் ஜனன ரீதியாக ராகுவுடன் தொடர்பில் இருந்து, கோட்சாரத்திலும் ராகுவுடன் தொடர்பாகி 5 ஆமிடம், ஐந்தாமதிபதியை தொடர்புகொள்ளும் காலமே செயற்கை கருத்தரிப்பிற்கு ஏற்ற காலம். இப்படி அமையாவிட்டால் செயற்கை கருத்தரிப்பிற்கு செல்வது வீண் வேலை என்பதை அறிக. 

குழந்தை பிறப்பை 5 ஆமிடத்துடன் தொடர்புடைய கிரகங்களே முடிவு செய்யும் என்று பார்த்தோம். 2௦11 ல் திருமணமான ஜாதகிக்கு 2௦16 ல் 5 ஆமிடத்தை பார்க்கும் குரு தசை துவங்கியது. ஆனால் குரு தசையின் சுய புக்தி முடிந்து 6 ஆமிட சனி புக்தியும், 3 ஆமிட புதன் புக்தியும், 4 ஆமிட கேது புக்தியும் புத்திர பாக்கியத்தை வழங்க இயலவில்லை. காரணம் புத்திர காரக  கிரகங்கள் 5 ஆமிடத்துடன் தொடர்பாகவில்லை. ஆனால் தற்போதைய 5 ஆமதிபதி சுக்கிரன் தனது புக்தி காலத்தில் ஜாதகிக்கு புத்திரத்தை வழங்கியாக வேண்டும். சுக்கிரன் அஸ்தங்கமானது பாதிப்பா? என்றால் சூரியன் கேது சாரம் மகம், கேது சூரியன் சாரம் உத்திரத்தில் நின்று சாரப் பரிவர்த்தனை பெறுவதால் இங்கு சூரியன் கேதுவிற்கு கட்டுப்பட்டவராகிறார். எனவே இங்கு ராகு-கேதுக்கள் வழங்கும் அனுமதியை சூரியன் உள்ளிட்ட பிற கிரகங்கள் கிரகங்கள் தடுக்க இயலாது என்பதை அறிக.  தற்போது ஜாதகி புத்திரப் பேறுக்கான மருத்துவ சிகிச்சை எடுத்தால் பலனுண்டு. புத்திர காரகர் குரு கோட்சாரத்தில் ராகுவின் திருவாதிரை கடந்து சுய சாரம் புனர்பூசத்தில் நிற்பதால் ஜாதகி செயற்கை கருத்தரிப்பிற்கு முயன்றிருந்தால் தற்போது கருதரித்திருப்பார். தசா-புக்திகள் சாதகமாக உள்ள சூழலில் ஜனன ராகுவுடன் இணைந்தோ அல்லது அதன் திரிகோணத்திலோ கோட்சார குரு செல்லும் காலம் செயற்கை கருதரிப்பிற்கு ஏற்ற காலம். இந்த ஜாதகத்தில் ஜனன ராகுவின் திரிகோணத்தில், ராகுவின் திருவாதிரையில் கோட்சார குரு ஜனன ராகுவின் பாகைக்கு நெருக்கமான பாகையில் செல்லும் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து செயற்கை கருவூட்டலுக்கு முயன்றால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் உண்டு.  

மருத்துவ சிகிச்சையில் செயற்கை கருவூட்டலில் ஜாதகிக்கு கரு உண்டாகிவிட்டதை எப்படி அறிவது? என்பதை கோட்சார கிரக நிலைகள் சுட்டிக்காட்டிவிடும். ஜாதகம் பார்த்த நாளில் கோட்சார லக்னம் ஜனன லக்னமான மிதுனத்திற்கு 5 ல் குருவின் விசாகம்-1 ல் நிற்பதிலிருந்து ஜாதகி கருத்தரித்துள்ளது உறுதியாகிறது. ஜனன லக்னத்திற்கு எத்தனையாவது பாவகத்தில் கோட்சார லக்னம் அமைகிறதோ அந்த பாவக பலனை ஜாதகர் அனுபவித்துக்கொண்டிருப்பதை குறிப்பிடும். கோட்சார லக்னம் 5 ஆமிடமான துலாத்தில் செயற்கையை குறிப்பிடும் ராகுவின் சுவாதியை நட்சத்திரத்தை கடந்து குருவின் விசாகத்தில் நிற்பதால் ஜாதகிக்கு செயற்கை கருவூட்டலில் குழந்தை உருவாகிவிட்டது தெரிகிறது.

இன்று செயற்கை கருவூட்டலுக்கு பல லட்சங்கள் செலவாகும் சூழலில், எந்தக் காலத்தில் அதற்காக முயற்சி செய்தால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதை ஜாதக ரீதியாக அறிந்து செயல்படுகையில் பல முறை முயன்றும் கருக்கூடவில்லை, பல லட்சங்கள் இழந்ததுதான் மிச்சம் என்று புலம்புவதை தவிர்க்கலாம்.

மீண்டும் உங்களை மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »
இந்தியா

Run… Run….

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய  காலத்தில் ஓய்வெடுத்தால்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுதந்திரம் கிடைத்ததா?  

நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil