வெளிநாட்டு இந்தியர்களின் வாழ்க்கை…

சுழலும் காலச் சக்கரத்தில் சில காலங்கள் இன்பமயமானதாகவும், சில காலங்கள் கடுமையான சோதனைக்காலமாகவும் அமைவது தவிர்க்க முடியாத இயற்கை விதியாகும். காலத்தின் இந்த மாற்றம்தான் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையையும் திசைகளையும் தீர்மானிக்கிறது.

அப்படிப்பட்ட காலச் சக்கரத்தின் சுழற்சியில், சொந்த நாட்டைவிட்டுப் பிழைப்புத் தேடி அந்நிய தேசம் சென்று, அங்கேயே தங்களது அயராத உழைப்பால் வேரூன்றி, பிரம்மாண்டமான சொத்துக்களைச் சேர்த்து, வசதியானதொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். ஆனால், அன்று இருந்த சாதகமான சூழல் இன்று மாறிவிட்டது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பில் ஏற்படும் எதிர்பாராத வீழ்ச்சிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் இந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களை உலுக்கி எடுக்கின்றன.

தீர்க்க முடியாத தவிப்புகளும், உலுக்கும் கேள்விகளும்!

“அந்நிய மண்ணில் நாம் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய உத்தியோகம் இனியும் நிலைபெறுமா?”

“கடின உழைப்பில் வாங்கிய சொத்துக்களுக்கான பெருங்கடனை சரியான நேரத்தில் அடைத்து முடிக்க இயலுமா?”

“இங்கு தொடர்ந்து போராடுவதா அல்லது எல்லாவற்றையும் விடுத்துச் சொந்த நாட்டுக்கே திரும்பி விடுவதா?”

இத்தகைய ஆயிரத்தெட்டு கேள்விகள் இன்று பல வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் (NRIs) நிம்மதியைக் கெடுத்து, அவர்களின் இரவுத் தூக்கத்தைக் பறித்துள்ளன. என்ன முடிவு எடுப்பது, எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் தவிப்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. பொருளாதாரச் சுமை ஒருபுறம் என்றால், எதிர்காலம் குறித்த பயம் மறுபுறம் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

ஜாமக்கோள் பிரசன்னம் காட்டும் தெளிவான வெளிச்சம்!

மனிதனின் தர்க்கப் புத்திக்குப் புரியாத சிக்கல்களுக்கும், கணிக்க முடியாத எதிர்காலத் திசைகளுக்கும் சரியான வழியை வழங்குவது தெய்வீக ஜோதிடக் கலை. அதுவும் குறிப்பாக, தற்போதைய சூழலின் துல்லியமான பலன்களைத் தாங்கி நிற்கும் ‘ஜாமக்கோள் பிரசன்னம்’ இத்தகைய இக்கட்டான தருணங்களில் ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது.

இத்தகைய ஆழ்ந்த கவலைகளுடனும், தவிப்புகளுடனும் என்னைச் சமீபத்தில் தொடர்புகொண்ட மத்திய வயது வெளிநாட்டுவாழ் ஆண் ஒருவருக்காகப் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னத்தின் பிரத்யேக கிரக நிலைகளும், அதற்கான எதார்த்தமான பலன்களும் கீழே விரிவாகப் பகிரப்படுகின்றன.

ஜாமக்கோள் பிரசன்ன ஆராய்தல் மற்றும் கிரக நிலைகள்:

  • வேலை மற்றும் தற்போதைய சூழல்: கேள்வியாளர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருப்பதை கும்ப உதயத்திற்கு 6-ம் பாவகமும் நீர் ராசியுமான கடகத்தில் உதயாதிபதியான ஜாமச் சனி (வெளிவட்டச் சனி) நிற்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். உள்வட்டச் சனி உதயத்திற்கு 2-ல் மீனத்தில் சூரியனுடன் இணைந்து அமைந்துள்ளது. இது கேள்வியாளர் வெளிநாட்டில் செய்யும் வேலையில் அரசுத் தொடர்பும் இருக்குமென்பதை குறிப்பிடுகிறது.
  • கேள்வியாளர் கனடாவில் அரசு நிறுவனம் ஒன்றில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். உள்வட்டச் சூரியன் பாதக ஸ்தானமான துலாத்தில் நீசம். ஜாமச்  சூரியனும் மீனத்தில் வக்கிர சனியோடு இணைவு. இது கேள்வியாளர் வேலையில் திருப்தியற்ற, நெருக்கடியான சூழலில் பணிபுரிவதை குறிப்பிடுகிறது.
  • கேள்வியாளருடன் பணிபுரிந்த சிலருக்கு ஆட்குறைப்பை முன்னிட்டு பணியாற்றும் நிறுவனம் பணி விலக உத்தரவிட்டுள்ளது. இதனால் தனது பணிக்கும் ஆபத்து வருமோ என்று கேள்வியாளர் கவலைப்படுகிறார். உதயத்தில் நிற்கும் ராகுவும், 7-ல் கவிப்புடன் நிற்கும் கேதுவும், 2, 11-க்கு அதிபதி குருவும் பணிநெருக்கடி கேள்வியாளருக்கு அதிகம்மென்பதும், அதனால் வருமானம் பாதிக்கப்படுமோ என்ற பயமும், கவலையும், கடன் நிலைமைகளும் இவரை பயமுறுத்துகின்றன.

கடன் மற்றும் சொத்து விவகாரங்கள்:

  • உதயத்திற்கு 7-மிடத்தில் தனகாரகர் குருவும், கடன் காரகர் கேதுவும் இணைந்து கவிப்பால் பாதிக்கப்படுவது கடன் பற்றிய கேள்வியாளரது கவலைகளை சுட்டிக்காட்டுகிறது. எதனை முன்னிட்ட கவலைகள் என்பதை 10-ஆம் ஆமிடம் சுட்டிக்காட்டும். அதன் தாக்கங்களை பிரசன்னத்தில் உச்ச, நீச கிரகங்கள் சுட்டிக்காட்டும் என்ற விதிப்படி, சூரியன் நீசமானது அரசுவகை சாதகங்களை குறிப்பிடவில்லை.
  • அதே சமயம் 10-ல் அமைந்த ஆரூடத்தில் செவ்வாய்-சந்திரன் இரண்டும் நீச பரிவர்த்தனை பெறுவது நேரடியாகவே என்ன கவலை என்பதை சுட்டிக்காட்டுகிறது. வீடு காரகர் செவ்வாய் உள்வட்டத்தில் நீசமாகவும், வெளிவட்டத்தில் உச்சமாகவும் அமைந்துள்ளதை கவனிக்க வேண்டும்.
  • 6-10 பாவக பரிவர்த்தனை வேலை பற்றிய கவலைகளை குறிப்பிட்டாலும், காரக அடிப்படையில் செவ்வாய் வெளிநாட்டில் வாங்கிய வீட்டை முன்னிட்டான கவலைகளை குறிப்பிடுகிறது. வீடு பாவகமான உதயத்திற்கு 4-ஆமதிபதியும், மற்றொரு வீடு காரகருமான சுக்கிரன் உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் நீசமாகி 8-ல் மறைந்துள்ளதிலிருந்து இது உறுதியாகிறது.

தீர்வும் வழிகாட்டுதலும்:

  • விரைவில் உதயத்தைவிட்டு ராகு-கேதுக்கள் விலகவுள்ளது சாதகமான அமைப்பே. பத்தாமிடமான விருச்சிகத்தில் சனி சாரத்தில் ஆரூடம் அமைந்து, அங்கு 6-ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று கடக செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுகிறார். இது வேலை மாற்றத்தை குறிக்கிறது. அதாவது கேள்வியாளர் வேலை மாறுவது தவிர்க்க இயலாதது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இதனால் கேள்வியாளரை வேலை மாற்றத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினேன்.
  • அதே நேரம் வீடு விஷயத்தில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. காரணம் விரைவில் கால புருஷனுக்கு வீட்டை குறிப்பிடும் கடகத்திற்கு கடனை குறிப்பிடும் கேது மாறவுள்ளது உலகளாவிய நிலையில் சொத்துக்கள் கடன் நெருக்கடிகளுக்கு உள்ளாவதைக் குறிக்கும்.
  • இதனால் வீடு பல ஆண்டுகள் EMI கட்டவுள்ள நிலையில், தவிர்க்க இயலா சூழலில் வீட்டை விற்றுவிடுவதே நிம்மதி தருவதாக இருக்கும் என்பதை கூறினேன். காரணம் வீடு விஷயத்தில் கேள்வியாளர் Risk எடுத்தால் நிம்மதி இழந்து ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை நிம்மதி ஸ்தானமான 12-ஆமிடத்தில் உச்சம் பெற்ற செவ்வாயும், ஆரோக்கிய ஸ்தானமான 6-ஆமிடத்துடன் மனோ காரகர் சந்திரனும், வீடுகாரகர் செவ்வாயும் பரிவர்த்தனையாவதை சுட்டிக்காட்டிக் கூறினேன்.

வீட்டை இழப்பது கடினமான முடிவுதான். ஆனால் வாழ்க்கை அதைவிடப் பெரிது. சிறப்பான வாழ்விற்காக சில இழப்புகளைப் பொறுத்துக்கொள்வது இன்றியமையாதது. விரும்பும் அனைத்தையும் பற்றிக்கொண்டால் அதுவே பெரும் சுமையாகி மொத்த வாழ்வையுமே இழப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். இதை உணர்த்துவது நமது முன்னோர்கள் அருளிய அற்புதக் கலைகளுள் ஒன்றான ஜாமக்கோள் பிரசன்னமாகும்.

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இந்தியா

வெளிநாட்டு இந்தியர்களின் வாழ்க்கை…

சுழலும் காலச் சக்கரத்தில் சில காலங்கள் இன்பமயமானதாகவும், சில காலங்கள் கடுமையான சோதனைக்காலமாகவும் அமைவது தவிர்க்க முடியாத இயற்கை விதியாகும். காலத்தின் இந்த மாற்றம்தான் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையையும் திசைகளையும் தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட காலச்

மேலும் படிக்க »
இல்லறம்

உறவுகளும் கர்ம வினைகளும்!

மனித உறவுகள் எப்போதுமே தற்செயலாக அமைவதில்லை. ஒவ்வொரு உறவும், நட்பும், தொடர்பும் காரண காரியமின்றி நம் வாழ்வோடு இணைக்கப்படுவதில்லை. அவை நமது  முற்பிறவி மற்றும் நடப்புப் பிறவிக் கர்ம வினைகளின் அடிப்படையில்தான் நம்மோடு தொடர்பு

மேலும் படிக்க »
இந்தியா

உறவுத் திருமணங்களுக்கு பொருத்தம் அவசியமா?

பாதுகாப்பும் பரஸ்பர அரவணைப்பும் கருதி, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊருக்குள் அருகருகே வாழ்ந்த காலம் கடந்த நூற்றாண்டு வரை நம் கண்முன்னே பழக்கத்தில் இருந்தது. அந்தந்த சமூகத்திற்கே உரித்தான பாரம்பரியத் தொழில்கள், ஆழமான உறவுப்

மேலும் படிக்க »
இந்தியா

வில்லாளன்

பண்டைய காலத்தில் அரச குமாரர்களுக்குப் பால்ய பருவம் கடந்த பிறகு குதிரையேற்றம், யானையேற்றம், வில்வித்தை போன்ற தற்காப்பு மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை முறைப்படி கற்பிப்பது வழக்கமாக இருந்தது. இன்றைய நவீன காலத்தில், மேல்தட்டு மற்றும்

மேலும் படிக்க »
Advanced Atrology

எலியும் பொறியும்! – உங்கள் வேலை நிலை எப்படி?

இன்றைய சவாலான பொருளாதாரச் சூழலில் ‘வேலை மாற்றம்’ (Job Change) என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சியை நோக்கியோ அல்லது தற்போதைய பணியிடத்தில் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தத்தின்

மேலும் படிக்க »
இல்லறம்

காதல், மரபு மற்றும் காலத்தின் மாற்றம்!

ஆசையும் காதலும் இல்லையேல் இந்த உலகத்தில் ஏது வளர்ச்சி? ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைவரையும் இங்கு வளர்த்தெடுத்து வழிநடத்துவது காதலின் பேராற்றலே ஆகும். கடந்த நூற்றாண்டு வரை நமது இந்தியச்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil