சுதந்திரம் கிடைத்ததா?  

நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும், திருடியும் தங்களை வலுவாக்கிக்கொண்டுவிட்டன. ஆனால் சுதந்திரம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு உள்ளாகவே பல நிலைகளில் நம்மோடு சுதந்திரம் பெற்ற பிற நாடுகளைவிட நாம் முன்னணியில் இருக்கிறோம். பாரதம் வளர்ந்த நாடாக இன்னும் இரு தசாப்தங்களுக்கு மேலாகக்கூடும் என்பது எனது கணிப்பு. கடந்த பத்தாண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து பெருமளவு வெளியே வந்துவிட்டோம் என்பது உண்மை. கல்வியறிவு, ஆரோக்கியம், உட்கட்டமைப்புகள், பாதுகாப்பு, தொழில்நுட்பம்  போன்ற நாம் முன்னேற வேண்டிய பல படிநிலைகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. ஜாதீயம், தீவிரவாதம், லஞ்சம், குண்டாயிசம், மோசமான அரசியல் நிலை போன்றவை இன்னும் நம்மை பாதித்துக்கொண்டுதான் உள்ளன. இவற்றிலிருந்தெல்லாம் நாம் விடுதலை பெற்றுவிட்டோமா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. இவை நம் அனைவரையும் பாதிக்கவில்லை என்றாலும் சமூகத்தில் கடைக்கோடி மனிதனை இன்னும் கடுமையாக பாதித்துக்கொண்டுதான் உள்ளன. ஜாதீயக் கொலைகளும், காவல்துறையே கொலைகாரத் துறையாக செயல்படுவதையும் இன்னும் நாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். நீதி அனைவருக்கும் பொதுவானதாக இல்லை என்பது கசப்பான உண்மையே. சமீபத்தில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம், நீதி பணம் படைத்தவர்களுக்கே எனும் விரக்தியை ஏற்படுத்துகிறது. அனைத்து மக்களும்  இத்தகைய லஞ்சம், ஊழலால் பாதிக்கபடுவதில்லை என்றாலும் கணிசமானோர் இன்னும் பாதிக்கபட்டுக்கொண்டுதான் உள்ளனர் என்பது தெளிவு. அப்படியானால் பாதிக்கப்படுபவர்கள் யார்? எனும் கேள்விக்கு  ஜோதிட ரீதியான பதிலை இப்பதிவு ஆராய்கிறது.

மகர லக்ன ஜாதகம். ஜாதகர் ஒரு ஆண். உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் மகர லக்னத்தவர்கள். சனியின் லக்னமானாலும் லக்னத்தில் சூரியன் நிற்பதால் அடிமை வேலை செய்யாமல் மதிப்பான சுயதொழில் செய்யவே விருப்பமிருக்கும். லக்னத்தில் நிற்கும் சூரியனால் அரசுத்துறை வாய்ப்புகள் வரும். ஆனால் சூரியன் 8 ஆமதிபதியாவதாலும் 1௦ ஆமதிபதி சுக்கிரனை அஸ்தங்கப்படுத்துவதால் அரசு வகை தொழிலால் வருமானங்கள் இருந்தாலும் 8 ஆமிடம் குறிப்பிடும் வேதனைகளும் அவமானங்களும் உண்டு. லக்னத்தில் புதன் திக்பலம் பெற்றிருப்பதால் தனது சாதுர்யமான திட்டமிடுதலால் தனக்கு வரக்கூடிய பாதிப்புகளை ஜாதகர் தவிர்ப்பார். 2 ல் சனி தனது மூலத்திரிகோண வீட்டில் 1௦ ஆமிட குருவின் 5 ஆம் பார்வையில் உள்ளார். இதனால் இவருக்கு பொதுவாக தொழில் சிறப்பாக இருக்கும். லக்னத்திற்கு 4 ஆமதிபதி செவ்வாய் கால புருஷ 4 ஆமிடமான கடகத்தையும் 8 ஆம் பார்வையாகவும், அதன் அதிபதி சந்திரனையும் 12 ஆமிடத்திலிருந்து 4 ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு 4 ஆமிடமும் செவ்வாயும் குறிக்கும் கட்டுமானத்துறையில் ஈடுபாடு ஏற்படும்.

ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் தனித்து நிற்கும் குருவால் ஜாதகருக்கு தொழில் விஷயத்தில் குருவின் காரகமான பொருளாதார விஷயங்களில் பாதிப்பு ஏற்படும். லக்னாதிபதி சனியின் அனுஷத்தில் விருட்சிகத்தில் நிற்கும் ராகு, தனது சாரம் சுவாதியில் 1௦ ஆமிடமான துலாத்தில் நிற்கும் குருவை நோக்கி வருகிறார். இதனால் இவர் தொழில் செய்தால் அதில் இவருக்குரிய வருமானத்தை பெற ராகு தடை செய்வார். தொழில் வருமானத்தில் எப்படி தடைகள் வரும்? என்பதை அதற்கான வர்க்கச் சக்கரம் தசாம்சம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.  

லக்னமும் புதனும் ராசிச்சக்கரத்தில் நின்ற மகரத்திலேயே தசாம்சத்திலும் அமைந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது. இதனால் ஜாதகர் தொழிலில் தெளிவான நோக்கத்துடன் செயல்படுபவராக இருப்பார். ராசியில் லக்னத்தில் நின்ற சூரியன் இங்கு 1௦ ல் திக்பலம் பெற்றாலும் வலு குறைந்துள்ளார். துலாத்தில் நீசம் பெற்ற சூரியனை அங்கு ஆட்சி பெற்று நிற்கும் சுக்கிரன் நீச பங்கப்படுத்துகிறார். 1௦ ஆமிட திக்பல சூரியனால் ஜாதகருக்கு அரசு சார்ந்த தொழில் வாய்ப்புகள் ஏற்படும். ஆனால் சூரியன் 8 ஆமதிபதியாவதால் அரசு வகை தொழிலால் 8 ஆமிடம் குறிப்பிடும் மனக்கசப்பும் அவமானமும் சேர்ந்தே ஏற்படும். சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் ஆட்சி பெற்று சூரியனுக்கு நீச பங்கத்தை ஏற்படுத்துவதால் அரசு வகை வருமானத்தில் தடை ஏற்பட்டாலும் கிடைத்தே தீர் வேண்டும். 1௦ ஆமிட சூரியனையும் சுக்கிரனையும் விரையாதிபதி (12 ஆமதிபதி) குரு 4 ஆமிடமான மேஷத்திலிருந்து பார்ப்பதால் அரசு வகையில் தொழிலில் ஏற்படும் பாதிப்புகளை பண விரையம் மூலம் ஜாதகர் சரிசெய்வார் எனலாம்.

இந்த ஜாதகர் அரசுத்துறையில் ஒப்பந்தம் எடுத்து அரசுக்கு கட்டுமானங்கள் செய்து தருகிறார். ஆனால் தான் உழைத்த உழைப்பிற்குரிய வருமானத்தை பெற கால விரையமாகிறது. அரசுத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துத்தான் தனது உழைப்பிற்கான வருமானத்தை பெறுகிறார். இன்று தமிழகம் மட்டுமல்ல பெரும்பாலான இந்திய மாநிலங்களில் இதுதான் நிலைமை.

சுதந்திரத்தை வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்றுவிட்டோம். ஆனால் இது போன்று பிறரது உழைப்பை சுரண்டி வாழும் தீய அரசியல்வாதிகளிடம் இருந்து நாம் சுதந்திரம் பெறுவது எப்போது? 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்.

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி:+91 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

சுதந்திரம் கிடைத்ததா?  

நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil