
காலம் சுழன்றுகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையும் புதுப்புது சவால்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் களத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உண்மை, நேர்மை, உழைப்பு இவற்றைவிட, இவற்றால் அடையும் பலன் என்ன? என்பதே தற்காலத்தில் அனைவரின் கேள்வியாக உள்ளது. எனவே தாங்கள் நேர்மையாக, உண்மையாக இருப்பதாக கூறிக்கொள்வது அர்த்தமற்றதாகிறது. பணியிடத்தில் இதன் தாக்கத்தை தெளிவாக உணரலாம். வாழ்க்கைக்காக வேலையா? வேலைக்காக வாழ்க்கையா? எனும் கேள்வி எழுகையில் பாதி வாழ்க்கையை இழந்துவிட்ட வேதனை வாட்டுகிறது. இந்நிலையில் தங்கள் திறமைக்கும், நேர்த்திக்கும் மதிப்பில்லையா? என்றால் அவை தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு அவசியம் தேவைப்படுபவையே. பணியிடத்தில் பிறரோடு குழுவாக இணைந்து இயங்குகையில் தேவைப்படும் இணக்கமான மனப்பான்மை இல்லையெனில் தனிப்பட்ட நற்குணங்கள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்.
சொந்த வாழிடத்தை விட்டு வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு மதம், மொழி, இனம் போன்ற பிற காரணிகளும் தற்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. உலகம் அமைதியாக இயங்குகையில் பாதிப்புகள் வெளியில் தெரியாமல் இருக்கும். ஆனால் அமைதியற்ற உலகில் போட்டிகளும், பொறாமைகளும் நம்மை வீழ்த்தக் காத்திருக்கின்றன என்பதை அறிவது அவசியம். இன்றைய பதிவு வெளிநாட்டில் பணிபுரியும் நம்மவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சூழல் பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே.
வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு பெண்மணி வேலை தொடர்பாக ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதற்குமுன் உங்கள் ஆலோசனை தேவை என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க பார்க்கப்பட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

தொலைதூர வாழ்வை குறிப்பிடும் தனுசு ராசியே உதயமாகி, அங்கு கடல் கடந்து வாழ்வதற்கான அமைப்பை ஏற்படுத்தும் நீர் கிரகமான குரு திக்பலத்தில் அமைந்துள்ளதால் கேள்வியாளர் வெளிதேசம் சென்று வாழும் அமைப்பு ஏற்படுகிறது. தன காரகர் உதயத்தில் நிற்க, 7 ஆமிடம் மிதுனத்தில் அமைந்த உள்வட்ட குரு உதயத்தை சந்திரனுடன் இணைந்து பார்ப்பது இதை உறுதி செய்கிறது. பாதக ஸ்தானத்தில் உதயாதிபதியுடன் 8 ஆமதிபதி சந்திரன் இணைந்து நிற்பது கேள்வியாளருக்கு மறைபொருள் ஞானத்தை வழங்கும். இந்தியாவை சேர்ந்த கேள்வியாளப் பெண்மணி அமெரிக்காவில் ஒரு நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றுகிறார். வரவு-செலவுப் பதிவேடுகளில் மறைந்திருக்கும் கணக்கியல் குற்றங்களை கண்டுபிடித்து சரி செய்வதுதான் இவரது பணி. ஆனால் எட்டாமிடம் மறைபொருளை மட்டுமல்ல அவமான ஸ்தானமும் கூட என்பதால் நிதி ஏடுகளில் உள்ள குற்றங்களை குறிப்பிடும்போது அவமானங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தப் பிரசன்னத்தில் கணக்கன் என்று கூறப்படும் புதன் சுக்கிரனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு கன்னியில் உச்சமடைகிறார். இது கேள்வியாளரது கணக்காளர் தொழிலை குறிப்பிடுகிறது. தனுசு உதயத்திற்கு பாதகாதிபதியான புதனே, 10 ஆமிடத்திற்கும் அதிபதியாகிறார். இதனால் கேள்வியாளர் தொழிலில் உச்ச நிலையை அடையும்போது பாதகமும் உச்ச கதியில் வரும். லாப ஸ்தானமான 11 ஆமிடத்தில் ஆரூடம் அமைந்து, 11 ஆமிட புதன் 10 ஆமிட சுக்கிரனுடன் பரிவர்த்தனையாவது, கேள்வியாளர் பணியில் நேர்த்தியை காட்டி வரவு செலவு பதிவேடுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும்போது அவர் லாப நோக்கம் கருதி செயல்படுவதாக பொருள்படும். 10 ஆமிடத்தில் திக்பல சூரியனுடன் சுக்கிரன் இணைவு இவருக்கு உயர்நிலை அதிகாரி ஒரு பெண்மணியாக இருப்பதையும் அவரது தேச மக்களின் மனநிலைக்கேற்ப அவரே இவரது திறமைகளை கட்டுப்படுத்துவதையும் குறிப்பிடுகிறது.
எட்டாமிடத்தில் கவிப்பு சனியுடன் இணைந்து அமைந்துள்ளது கேள்வியாளர் குறிப்பிட்ட உயரதிகாரி பெண்மணியால் தொழிலில் அவமானப்படுத்தப்படுவதையும் குறிப்பிடுகிறது. உதயாதிபதி குரு 7 ஆமிடமான மிதுனத்தில் நிற்கிறார். இதனால் கேள்வியாளர் மிதுன ராசி குறிப்பிடும் அமெரிக்காவில் நிதி நிறுவனம் ஒன்றி பணிபுரிகிறார். கடினமாக உழைத்தாலும் உயரதிகாரிகளால் தான் அவமானப்படுத்தப்படுவதாக கூறுகிறார். காரணம் ஏதுமின்றியே இப்படி நடப்பதாக கூறுகிறார்.
குறை இவரது வேலையில் இல்லை. கேள்வியாளர் இந்தியர் என்பதும், கறுப்பர் என்பதாலும் கடின உழைப்புடைய இவர்களால் தங்களது பணி பறிபோகிறது என்ற எண்ணமுமே அமெரிக்க ஆதிக்க வெள்ளையர்களால் இவர் எதிர்கொள்ளும் அவமானங்களுக்கு காரணம். வருமான ஸ்தானமான 2 ஆமிட உச்ச செவ்வாயை அவமான ஸ்தானமான 8 ஆமிடத்தில் கவிப்புடனமைந்த சனி பார்ப்பதிலிருந்து இவரது கடின உழைப்பும், அதனால் இவர் எதிர்கொள்ளும் அவமானங்களும் தெரிகிறது. உதயத்தை மீனச் சனி 10 ஆம் பார்வையாக பார்ப்பதனாலும், உதயத்தை நோக்கி ராகு வருவதாலும் இந்நிலை மாற தற்போது வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. வேறு வேலைக்கு இவர் மாறினாலும் பொதுவான பிற தேச மக்களை குறிப்பாக இந்தியர்களை வெறுக்கும் அமெரிக்க மனநிலை மாறாது. இந்தக் கடினமான சூழலை புயலை எதிர்கொள்ளும் மனநிலையுடன் அமைதியாகவும், பொறுமையாகவும் கடப்பதுதான் சரி என்று கேள்வியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501