கைநிறையச் சம்பளம், காணாமல் போன தூக்கம்: ஜாதகக் கட்டங்கள் உணர்த்தும் கார்ப்பரேட் உண்மைகள்!

குளிரூட்டப்பட்ட அறைகள், கைநிறையச் சம்பளம், ‘கார்ப்பரேட்’ உலகின் கம்பீரமான பதவி என பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) வேலை பலருக்கும் ஒரு மிகப்பெரிய கனவாகவே இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு ஆடம்பரமான வாழ்க்கையாகத் தெரிந்தாலும், அந்த உயர் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களின் உண்மையான மனநிலை பல நேரங்களில் “கத்தி மேல் நடப்பது” போலவே இருக்கும்.

பதவியும் பொறுப்பும் எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களும் அதிகம். ஒரு சின்னஞ்சிறு கவனக்குறைவு, ஒரு மின்னஞ்சலில் ஏற்படும் சிறு பிழை அல்லது ஒரு சிறிய கணக்கீட்டுத் தவறு நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திவிடும்; சில நேரங்களில் அவர்களின் வேலையையே பறித்துவிடும். இப்படி ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு முடிவையும் பதைபதைப்போடு கடக்கும் உயர் அதிகாரிகளை நாம் பார்த்திருப்போம்.

கிரகங்களின் விளையாட்டு

திறமையும், உழைப்பும் மட்டுமே ஒருவரை இந்த இடத்திற்குக் கொண்டு செல்வதில்லை. ஒருவருக்கு இந்த அளவுக்குப் பிரம்மாண்டமான பொறுப்புகளும், அதற்கிணையான மன அழுத்தங்களும் ஏன் கிடைக்கின்றன? இதற்குப் பின்னால் உள்ள ஜோதிடக் காரணங்கள் என்ன?

  • ராகுவின் ஆதிக்கம்: பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் பிரம்மாண்டமான கட்டமைப்புகளைக் குறிக்கும் ராகுவின் பங்கு இதில் என்ன?
  • சனியின் அழுத்தம்: பொறுப்புகளையும், அதற்கான சுமையையும், சில நேரங்களில் வேலையில் ஏற்படக்கூடிய சிறு தவறுகளுக்குக் கிடைக்கும் பெரிய தண்டனைகளையும் தீர்மானிக்கும் கர்ம காரகனான சனியின் நிலை எப்படி இருக்கும்?
  • சூரியன் மற்றும் செவ்வாய்: அதிகாரத்தைக் கொடுக்கும் சூரியனும், துரிதமான முடிவுகளை எடுக்க வைக்கும் செவ்வாயும் இத்தகைய சவாலான சூழ்நிலைகளை எப்படி உருவாக்குகிறார்கள்?

சிலர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் மிகச் சாதாரணமாக அதைக் கையாள்வதும், வேறு சிலர் பதவி உயரும்போதே நிம்மதியைத் தொலைத்துவிட்டுத் தவிப்பதும் ஏன் என்பதை ஜாதகக் கட்டங்கள் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

வாருங்கள், அபாயங்களும் சவால்களும் நிறைந்த இந்தப் பெருநிறுவன உயர் பொறுப்புகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஜோதிட ரகசியங்களையும், அதற்கான தீர்வுகளையும் விரிவாகப் பார்ப்போம்!

கீழே பன்னாட்டு வங்கியில் பணிபுரியும் ஒரு ஆணின் ஜாதகம்.

மிதுன லக்னத்திற்கு 10-ல் சூரியன் திக்பலம் பெற்றுத் தனது உச்ச வீட்டை நெருங்கிய நிலையில் உள்ளார். இது தொழில் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பிற்கான அமைப்பு. மீனத்தில் வலுவான கிரகச் சேர்க்கைகள் அமைந்தது வெளிநாட்டு நிர்வாகத்திற்குச் சிறப்பான அமைப்பாகும். லக்னாதிபதி புதன், 10-ஆம் அதிபதியான குருவின் சாரம் (பூரட்டாதி) பெற்று, சேமிப்பைக் குறிக்கும் 5-ஆம் அதிபதியுடன் இணைந்து 9-ல் நிற்கிறார். ஜாதகர் பன்னாட்டு வங்கி ஒன்றில் பணிபுரிகிறார்.

10-ல் ஆட்சி பெற்ற குருவும், திக்பலம் பெற்ற சூரியனும் இருந்தாலும், கூட்டுக் கிரகச் சேர்க்கையில் ராகு-கேதுக்களே வலுவானவை எனும் அடிப்படையில், ராகு குறிக்கும் தொழில்நுட்பப் பிரிவில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றுகிறார். ராகு இஸ்லாமியர்களைக் குறிக்கும் கிரகம் என்பதாலும், ஜாதகர் வளைகுடா நாடு ஒன்றில் உள்ளார். வேலையைக் குறிக்கும் 6-ஆம் அதிபதி செவ்வாய், வெளிநாட்டைக் குறிக்கும் 12-ல் அமைந்து, 6-ல் அமைந்த ஜீவன காரகன் சனியின் பார்வையைப் பெறுவதால் ஜாதகருக்கு வேலை வெளிநாட்டில் கிடைத்துள்ளது.

லக்னாதிபதி புதன் (கணக்கன்) அதிக பாகை பெற்றுள்ளதால், புதனின் காரகப் பணியான வங்கித்துறை ஜாதகருக்குச் சிறப்பைத் தரும். அதேசமயம் 12-ல் அமைந்த 6, 11-ஆம் அதிபதியான செவ்வாய் ஜாதகத்தில் குறைந்த பாகை பெற்று, புதனுக்குக் கேந்திரத்தில் நிற்பதால், வெளிநாட்டு வேலையில் ஜாதகருக்கு லாபங்கள் இருந்தாலும் அதில் கடுமையான மேலாண்மை இல்லையேல் பாதிப்புகளும் இழப்புகளும் கடுமையாகவே இருக்கும்.

லக்னாதிபதி புதன் இங்குத் தனது நீச வீடான மீனத்தை நோக்கிச் செல்கிறார். அங்கு ஆட்சி பெற்ற குருவின் தொடர்பால் தனது வலுவைத் தக்க வைத்துக்கொண்டாலும், குரு மிதுனத்திற்குப் பாதகாதிபதி என்பதை மறக்கக் கூடாது. மேலும் அங்கு குருவை அடுத்து ராகு நிற்பதால், தலைமைப் பொறுப்பில் ஜாதகர் பணிபுரிந்தாலும் அதைத் தக்கவைக்கக் கடுமையாகப் போராட வேண்டும். 10-ஆம் இடம் மீனம் என்பதால், தூக்கத்தை மறந்து தனது வேலையைத் தக்கவைக்கவும், தவறுகள் நேராவண்ணம் பணிபுரிய வேண்டிய நிலையும் உள்ளது. தூக்கத்தைக் குறிக்கும் சந்திரன் ஆட்சி பெற்றுச் சிறப்பாகவே உள்ளார். எனினும் அவர் சனியின் சாரம் (பூசம்) பெற்று நிற்பதால், ஜாதகருக்குத் தூக்கக் குறைவால் அசதியும் அலுப்பும் ஏற்படும்.

தசாம்ச (D10) ஆய்வு

இவரது வேலைச் சூழலைத் தசாம்சம் மூலம் இன்னும் நுட்பமாக ஆராயலாம். துலா லக்னத்துடன் சர்ப்பக் கிரகங்கள் தொடர்பாகி, குரு, சனியின் தொடர்பையும் லக்னம் பெறுவது, நிதி சார்ந்த துறையில் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் அமைப்பைக் காட்டுகிறது. 10-ஆம் இடமான கடகத்தில் திக்பலம் பெற்ற சூரியன் அமைந்தது, வெளிநாட்டு வேலையில் முதன்மைப் பொறுப்பில் ஜாதகர் பணிபுரிவதைக் குறிப்பிடுகிறது. 10 இன் பாவத் பாவகமான 7 ஆமிடத்தில், 6 ஆமதிபதி குரு 7 ஆமதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனையாகியிருப்பது வேலைக்காக வெளிநாடு சென்றால்தான் ஜாதகர் மதிப்பான நிதி சார்ந்த துறையில் பணியை பெற இயலும் என்பதை குறிப்பிடுகிறது. 9, 12-ஆம் அதிபதியான புதன் 2-ல் நிற்பது வெளிநாடு சார்ந்த கணக்குப் பதிவுகள் தொடர்பான துறையில் ஜாதகர் பணிபுரிவார் என்பதைக் குறிப்பிடுகிறது.

ராசிச் சக்கரப்படி 10 ஆமிட சூரியன் அதிகாரப் பதவியை தந்தாலும், 10 ஆமிட ராகு அதை பிரம்மாண்டமானதாக்கித் தருகிறார். ஆனால் கோட்சாரத்தில் 10 ல் நிற்கும் புக்திநாதர் சனி பணியில் மிகுந்த அழுத்தத்தை தருகிறார். ஜாதகர் தற்போது சுக்கிர தசையில் சனி புக்தியில் உள்ளார். ராசிப்படி சந்திரனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பால், அதிக வேலைப்பழுவால் ஜாதகருக்கு அசதியும் அலுப்பும் ஏற்படும். கோட்சாரப்படி புக்திநாதர் சனி, இரவுப் பொழுதை குறிக்கும் மீனத்தில் ஜனன கால குரு, ராகு, சூரியன் மீது நிற்கிறார். இதனால் தூக்கத்தை மறந்து இரவு பகலாகப் பணிபுரிய வேண்டிய நிலையில் ஜாதகர் உள்ளார். தசாம்சத்தில் 6-ஆம் இடச் செவ்வாய் மீது கோட்சார சனி நிற்பதால், வங்கிப் பணியில் கண்காணிப்பு இல்லாவிட்டால் பாதிப்புகளும் கடுமையாக இருக்கப்போவதைக் காட்டுகிறது.

பணியின் தன்மை மற்றும் சவால்கள்

இந்த ஜாதகர் ATM, UPI, கைபேசி போன்ற வழிகளிலான பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார். இதில் நவீன காலத்திற்கேற்ற மின்னணு மென்பொருட்களைப் பயன்படுத்தித் திருட்டுகளோ, இழப்புகளோ ஏற்படாவண்ணம் பரிவர்த்தனைகள் சிறப்பாகச் செயல்படவும், நாளும் எதிர்கொள்ளும் புதிய சவால்களுக்குத் தேவையான கண்காணிப்பு மற்றும் தடுப்பு அமைப்புகளை உருவாக்கி வங்கிக்கு அளிப்பதுமே இவரது வேலை.

சம்பளமும் பெரிது, பொறுப்பும் பெரிது, சவால்களும் பெரிது. இதனால் 24 மணிநேரமும் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது கடுமையான நிலை. சோம்பல் கிரகமான சனியே புக்தி நாதனாக வந்து, கோட்சாரத்தில் இரவு ராசியான மீனத்தில் நிற்பதால், தூக்கத்தை மறந்து பணிபுரிய வேண்டிய பெரிய பொறுப்பால் உடல் சோர்வாலும், மனச் சோர்வாலும் ஜாதகர் பாதிக்கப்படுகிறார்.

தீர்வும் ஆலோசனையும்

இதற்குத் தீர்வு என்ன என்பது எளிதானது. வேலையைப் பகிர்ந்தளித்து ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். லக்னாதிபதி புதன் நேர்கதியில் உள்ளார். ஆனால் பணியாளர்களைக் குறிக்கும் சனி வக்கிர கதியில் உள்ளதால், தனது பணியாளர்களின் கடந்த காலத் தவறுகளால் அவர்களை முழுதாக நம்ப முடியாத சூழலில் ஜாதகர் உள்ளார். சனி புக்தி முடியும்வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மேற்கண்டவற்றை ஜாதகரிடம் கூறி, வேலையில் செயல்பாட்டு ரீதியாகவும், வழிபாட்டு ரீதியாகவும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மீண்டும் உங்களை விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துகளுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

கைநிறையச் சம்பளம், காணாமல் போன தூக்கம்: ஜாதகக் கட்டங்கள் உணர்த்தும் கார்ப்பரேட் உண்மைகள்!

குளிரூட்டப்பட்ட அறைகள், கைநிறையச் சம்பளம், ‘கார்ப்பரேட்’ உலகின் கம்பீரமான பதவி என பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) வேலை பலருக்கும் ஒரு மிகப்பெரிய கனவாகவே இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு ஆடம்பரமான வாழ்க்கையாகத்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

பதில் சொன்னது டாரோட்… திருப்திப்படுத்தியது ஜாதகம்! – ஒரு ஜோதிட அனுபவம்

ஜோதிடக் கலையில் மனிதர்களின் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் விடையளிக்கப் பல அற்புதமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று, மேலை நாடுகளில் பெரிதும் கொண்டாடப்படும் டாரட் (Tarot) முறை. “எனக்கு வேலை மாறுமா? எடுக்கப்போகும் முடிவு சரியா?”

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil