திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…

வெற்றிகரமான மனிதராகத் திகழும் எனது நண்பர் ஒருவர் கைபேசியில் தொடர்பு கொண்டார். விரைவில் வரவுள்ள தங்களது திருமண நாளை முன்னிட்டு, தம்பதி சமேதராக எந்தத் தெய்வத்தை வழிபடுவது சிறப்பாக இருக்கும் என்று என்னிடம் ஆலோசனை கேட்டார்.

பொதுவாக, ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் 7-ம் பாவம், களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றின் கிரக காரகத்துவங்களை ஆராய்ந்து, ஜோதிட விதிகளின்படி எந்தத் தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை மிக எளிதாகக் கூறிவிட முடியும். நானும் அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து, அதற்குரிய கிரக காரக தெய்வத்தைக் குறிப்பிட்டேன்.

ஆனால், அடுத்ததாக நண்பர் கேட்ட கேள்விதான் என்னைச் சற்று சிந்திக்க வைத்தது! “நீங்கள் குறிப்பிட்ட இந்த இறைவனுக்குத்தான் ஊருக்கு ஊர் பல கோவில்கள் இருக்கின்றனவே… இதில் எந்த ஊரிலுள்ள கோவிலுக்குச் சென்று வழிபடுவது எங்களுக்குச் சிறப்பைத் தரும்?” என்பதே அந்தக் கேள்வி.

உண்மையில், ஒரு ஜோதிடரைச் சற்று திகைக்க வைக்கக்கூடிய நுணுக்கமான கேள்வி இது. பொதுவாக, இத்தகைய கேள்விகளுக்கு ‘பிரசன்ன ஜோதிட’ முறையில், ஆருடம் மற்றும் உதய ராசிகளைக் கொண்டு, ‘ராசிகளுக்கான ஊர் மற்றும் திசை’ என்ற வரையறையின் அடிப்படையில் துல்லியமாகப் பதில் கூறிவிட இயலும்.

ஆனால், “பிரசன்னத்தின் துணையின்றி, ஒருவரது பிறப்பு ஜாதக விதிகளுக்குள்ளேயே இதற்கான விடையை ஏன் தேடக்கூடாது?” என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஜாதகத்தில் உள்ள பாவாதிபதிகள், நட்சத்திர பாதங்கள் மற்றும் ராசி தத்துவங்களைக் கொண்டே ஒருவருக்குரிய புண்ணிய தலத்தைக் கண்டறிய முடியுமா என்று நான் மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடே இன்றைய பதிவு.

ஜாதக அமைப்பும் 32-வது திருமண நாள் கணக்கும்:

1960-களின் இறுதியில் பிறந்த தனுசு லக்ன ஆணின் ஜாதகம் இது. கேள்வி கேட்ட நேரத்தில் கோட்சார சந்திரனும், கோட்சார லக்னமும் மேஷத்தில் சென்றுகொண்டுள்ளது.

ஜோதிட விதிப்படி, ஆட்சி பெற்ற கிரகம் இரு மடங்கு வலுவானது என்றால், உச்சம் பெற்ற கிரகம் மூன்று மடங்கு வலுவானது. இந்த விதியின்படி:

  • உச்சம் பெற்ற சூரியனின் தசை 6 வருடங்களை மூன்று மடங்காகக் கணக்கிட்டால் 18 ஆண்டுகள்.
  • ஆட்சி பெற்ற செவ்வாயின் தசை 7 ஆண்டுகளை இரு மடங்காக்கினால் 14 ஆண்டுகள்.
  • இரண்டையும் கூட்டினால் 18 + 14 = 32.

ஜாதகர் 1995-ல் திருமணமானவர். திருமணமாகி 31 ஆண்டுகள் முடிந்து, இம்மாதம் கார்த்திகை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று இன்னும் ஓரிரு நாட்களில் இவருக்கு 32-வது திருமண நாள் வரவுள்ளது. தனது 32-வது திருமண நாளுக்கு எந்தக் கோவிலுக்குச் செல்வது என்பதே ஜாதகரின் கேள்வி.

தெய்வத்தைத் தீர்மானித்த கிரக நிலை:

ஜாதகரின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடமான மேஷத்தில் ஜனன சூரியனும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர். தற்போது கோட்சார சந்திரனும், கோட்சார லக்னமும் அதே மேஷத்தில் சூரியன், செவ்வாய் மீது சென்றுகொண்டுள்ளதால் ஜாதகர் முருகப்பெருமானை வழிபடுவதே மிகச் சிறப்பு எனக் கூறினேன்.

இதை நான் கூறியதும் ஜாதகர், “நான் திருச்செந்தூர் அருகில்தான் வசிக்கிறேன். எனவே முருகன் கோவில்களில் எந்த ஊர் முருகனை வழிபடுவது சிறப்பு?” என்று அடுத்த கேள்வியை எழுப்பினார்.

இது சற்று திகைக்க வைத்த கேள்வி என்றாலும், மேஷம் என்பது மலைப்பகுதிகளைக் குறிக்கும் ராசி என்பதால், மலை மீது அமைந்துள்ள முருகனை வழிபடுவது சிறப்பு என்றேன். ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்’ என்பது போல, திருச்செந்தூர் போன்ற கடற்கரைக் கோவில் தவிர, முருகனின் பெரும்பான்மையான பண்டைய கோவில்கள் மலை மீது அமைந்தவைகளே.

உடனே நண்பர், “அப்படியென்றால் மலை மீதுள்ள அறுபடை வீட்டு முருகன் கோவில்களில் பழமுதிர்ச்சோலையா அல்லது திருப்பரங்குன்றமா?” என்று மீண்டும் ஒரு நுணுக்கமான கேள்வியை எழுப்பினார். இது ஒரு சுவாரசியமான ஆய்வைத் தூண்டிய கேள்வி என்பதால், “சற்று ஆய்வு செய்து கூறுகிறேன்” என்று கூறிவிட்டு ஜாதகத்தையும் கோட்சாரத்தையும் மீண்டும் உற்று நோக்கினேன்.

திருத்தலத்தைத் துல்லியமாகக் காட்டிய ஜோதிட சூட்சுமங்கள்:

  1. சிறிய மலை vs பெரிய மலை: ஜாதகரின் ஜனன லக்னமான தனுசுக்கு களத்திர ஸ்தானமான 7-ம் இடம் மிதுனமாகும். மேஷத்தில் நிற்கும் சூரியன், செவ்வாய் ஆகியோரை சிம்மத்திலிருந்து ஜனன மற்றும் கோட்சார குரு ஆகிய இருவரும் பார்க்கிறார்கள். குருவோடு சிம்மத்தில் கோட்சார கேதுவும், கோட்சார செவ்வாயும் இணைந்துள்ளார்கள். கோட்சாரத்தில் சிம்ம செவ்வாயுடன் விருட்சிக சூரியன்  பரிவர்த்தனையாவதால், சூரியன் மற்றும் செவ்வாய் இருவருக்குமே கேது, குரு தொடர்பு ஏற்படுகிறது. ஜோதிடத்தில் ராகுவே பிரம்மாண்டமான மலைப்பகுதிகளைக் குறிப்பிடும்; கேது சிறிய மலைப்பகுதிகளைக் குறிப்பிடும். பழமுதிர்ச்சோலையை விடத் திருப்பரங்குன்றம் சிறிய குன்று என்பதால், ஜாதகர் திருப்பரங்குன்றம் முருகனை வழிபடுவதே சரி என்று முடிவு செய்தேன்.
  2. மிதுன தொடர்பு: கூடுதலாக, சுக்கிரனின் வீட்டிலமைந்த செவ்வாய் பழமுதிர்ச்சோலையைக் குறிக்கும் என்றால், மிதுன தொடர்பு பெற்ற செவ்வாய் திருப்பரங்குன்றத்தை குறிக்கும். கோட்சாரத்தில் மிதுனாதிபதி புதன் துலாத்திலிருந்து மேஷ சூரியன் + செவ்வாயைப் பார்ப்பதும் திருப்பரங்குன்றத்தையே உறுதிப்படுத்துகிறது.
  3. சித்தர் ஜீவசமாதி தொடர்பு: 5-ம் இடத்து சூரியன், செவ்வாய் மீது கோட்சார லக்னமும், கோட்சார சந்திரனும் செல்லும் மேஷத்தில், கோட்சார மாந்தியும் நிற்பதைக் கவனிக்க வேண்டும். இது திருப்பரங்குன்றம் மலை மீதமைந்த 18 சித்தர்களுள் ஒருவரான மச்சமுனியின் ஜீவசமாதியைக் குறிப்பிடுகிறது.
  4. கோவில் நடைமுறைச் சிக்கல்கள்: கோட்சார சூரியன், செவ்வாய் தொடர்பு சிம்மத்தில் கேதுவுடன் ஏற்படுவது, ஜாதகர் வழிபடத் திருப்பரங்குன்றம் செல்லும் காலகட்டத்தில் கோவில் நடைமுறைகளில் சில சட்டக் குறுக்கீடுகள் அல்லது கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதையும், குருவின் பார்வை அந்தத் தடைகளைச் சரிசெய்து நல்ல தரிசனத்தைத் தரும் என்பதையும் உணர்த்துகிறது.

மறைந்த நெல்லை வசந்தன் ஐயா முறையிலான ஒரு ஆச்சரியம்!

இறுதியாக, 5-ம் இடத்தை மறைந்த ஜோதிட மேதை நெல்லை வசந்தன் அவர்களின் முறைப்படி நோக்கியபோது மற்றொரு சுவாரசியமான உண்மை புரிந்தது.

5-ம் இடத்தில் உச்சம் பெற்ற சூரியன், ஆட்சி பெற்ற செவ்வாயை புதன் பார்ப்பதால், ஜாதகருக்கு இருவேறு பெயர்கள் இருக்கும் என்ற விதி இங்கே பொருந்திப் போனது. ஆம், ஜாதகரது சான்றிதழ் பெயர் வேறு; ஆனால் அனைவரும் அவரை அழைக்கும் பெயர் ‘முருகன்’!

இத்தனை கிரக அமைப்புகளும் ஒருசேர ஒத்துப்போனதால், ஜாதகர் தனது 32-வது திருமண நாளுக்குத் திருப்பரங்குன்றம் முருகனை வழிபடுவதே மிகச் சிறந்தது எனக் கணித்துத் தெரிவித்தேன்.

மீண்டும் உங்களை மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…

வெற்றிகரமான மனிதராகத் திகழும் எனது நண்பர் ஒருவர் கைபேசியில் தொடர்பு கொண்டார். விரைவில் வரவுள்ள தங்களது திருமண நாளை முன்னிட்டு, தம்பதி சமேதராக எந்தத் தெய்வத்தை வழிபடுவது சிறப்பாக இருக்கும் என்று என்னிடம் ஆலோசனை

மேலும் படிக்க »
இந்தியா

வெளிநாட்டு இந்தியர்களின் வாழ்க்கை…

சுழலும் காலச் சக்கரத்தில் சில காலங்கள் இன்பமயமானதாகவும், சில காலங்கள் கடுமையான சோதனைக்காலமாகவும் அமைவது தவிர்க்க முடியாத இயற்கை விதியாகும். காலத்தின் இந்த மாற்றம்தான் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையையும் திசைகளையும் தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட காலச்

மேலும் படிக்க »
இல்லறம்

உறவுகளும் கர்ம வினைகளும்!

மனித உறவுகள் எப்போதுமே தற்செயலாக அமைவதில்லை. ஒவ்வொரு உறவும், நட்பும், தொடர்பும் காரண காரியமின்றி நம் வாழ்வோடு இணைக்கப்படுவதில்லை. அவை நமது  முற்பிறவி மற்றும் நடப்புப் பிறவிக் கர்ம வினைகளின் அடிப்படையில்தான் நம்மோடு தொடர்பு

மேலும் படிக்க »
இந்தியா

உறவுத் திருமணங்களுக்கு பொருத்தம் அவசியமா?

பாதுகாப்பும் பரஸ்பர அரவணைப்பும் கருதி, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊருக்குள் அருகருகே வாழ்ந்த காலம் கடந்த நூற்றாண்டு வரை நம் கண்முன்னே பழக்கத்தில் இருந்தது. அந்தந்த சமூகத்திற்கே உரித்தான பாரம்பரியத் தொழில்கள், ஆழமான உறவுப்

மேலும் படிக்க »
இந்தியா

வில்லாளன்

பண்டைய காலத்தில் அரச குமாரர்களுக்குப் பால்ய பருவம் கடந்த பிறகு குதிரையேற்றம், யானையேற்றம், வில்வித்தை போன்ற தற்காப்பு மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை முறைப்படி கற்பிப்பது வழக்கமாக இருந்தது. இன்றைய நவீன காலத்தில், மேல்தட்டு மற்றும்

மேலும் படிக்க »
Advanced Atrology

எலியும் பொறியும்! – உங்கள் வேலை நிலை எப்படி?

இன்றைய சவாலான பொருளாதாரச் சூழலில் ‘வேலை மாற்றம்’ (Job Change) என்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சியை நோக்கியோ அல்லது தற்போதைய பணியிடத்தில் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தத்தின்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil