உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

வாசக அன்பர்களுக்கு ஆசிரியரின் இதயங்கனிந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

சுழி போட்டு செயல் எதையும் துவங்கு என்பது முன்னோர் வாக்கு.

அதன் அடிப்படையில் பல நாட்களாக பல்வேறு வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது வலைதளத்திற்காக பகிரி வழி தொடர்புக்குழு  (Whatsapp Group) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. “ஜோதிட சாகரம்”  என்ற பெயரில் அடியேனை நிர்வாகியாகக்கொண்டு  இயங்கி வருகிறது. இந்தக்குழுவில் ஜோதிடக்கருத்துக்கள், ஆய்வுச் செய்திகள், ராசி பலன்கள் வழங்க உத்தேசம். தனிப்பட்ட தங்களது ஜாதகத்தை ஆய்வு செய்துகொள்ள அல்ல என்பதை அறியவும். ஜோதிடத்தை உண்மையாக நேசிக்கும் ஆர்வலர்களும், ஜோதிடர்களும், ஆய்வாளர்களும் பங்குகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.  . விருப்பமுள்ள அன்பர்கள் தங்களைப்பற்றிய முழுவிபரங்களுடன் ஜோதிடத்திற்கும் தங்களுக்குமான தொடர்பு பற்றி சுருக்கமாக விளக்கி தங்கள் பகிரி (Whatsapp)  அலைபேசி எண்ணை குறிப்பிட்டு புகைப்படத்துடன் feedbackjn@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யவும். 
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்:7871244501

Leave A Comment

WhatsApp