முதுகலைக் கல்வியில் பாடத்துறை மாற்றம்!

சிறந்த திட்டம் பாதி வெற்றி என்பர். உயர் கல்வியை சரியாக ஒருவர் திட்டமிட்டுவிட்டால் அது அவரது வாழ்க்கையில் பாதி வென்றதற்கு சமமாகும். ஒருவரது எண்ணங்களை அவரது தசா-புக்தி கிரகங்களே பெருமளவில் ஆளுமை செய்யும். கல்வி பயின்று பொருளீட்டும் காலத்தில் வரும் தசா-புக்திகள் அவரது வாழ்க்கைப் பயணத்தை நிர்ணயிக்கும். குறிப்பாக உயர்கல்வி கற்கும் காலத்தில் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும்  துறையில் மிக கவனமாக செயல்படுவது அவசியம். இளங்கலையில் ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து பயின்றுவிட்டு முதுகலையில் பாடம் மாறுவோர் இன்று அதிகரித்து வருவதை காண முடிகிறது. ஒருவர் எத்தகைய உயர் கல்வியை பயின்றாலும் அது அவருக்கு பொருளீட்ட உதவுமா என்பதை கவனிப்பது அவசியம். பல்துறை அறிவை பெற விரும்புபவர்களுக்கு இது பொருந்தாது என்றாலும் ஏனையோருக்கு இது விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. ஒரு தேர்ந்த ஜோதிடரால் இது விஷயத்தில் ஜாதகருக்கு உதவ இயலும். இன்றைய பதிவு இதை ஆய்வு செய்வதே.

ஜாதகி 1994 ல் பிறந்த ஒரு முதுகலை பொறியியல் பட்டதாரி. இவர் இளநிலை பொறியியலில் கட்டுமான பொறியியல் (Civil Engineering) பயின்றார். பொதுவாகவே ஜாதகத்தில் சனி-செவ்வாய் தொடர்பு பொறியியல் கல்வியைக் குறிப்பிடும்.  இளநிலை கல்வி பயின்ற காலத்தில் ஜாதகி சுக்கிர தசா-சனி புக்தியில் இருந்தார். ஜாதகத்தில் திக்பலம்  பெற்ற சனி, வீடு-கட்டுமானத்தை குறிக்கும் செவ்வாயின் அவிட்டம்-4 ல் இருந்து  புக்தி நடத்திய காலம் கட்டுமான பொறியியலை தேர்ந்தெடுத்துள்ளார்.

உயர்கல்விக்கு ஆராய வேண்டிய சதுர்விம்சாம்சத்தில் (ஒரு ராசியை 24 பிரிவுகளாக பிரித்து ஆராய்வது), புக்தி நாதன் சனி முதுநிலைக் கல்வி பாவமான  9 ஆம் பாவம் செவ்வாயின் மேஷத்தை பார்ப்பது ஜாதகி கட்டுமான பொறியியல் பயில்வதை உறுதி செய்கிறது. சனி புக்தியை அடுத்து வந்த புதன் தசை, ஜாதகியின் எண்ணத்தை மாற்றியுள்ளது. காரணம் சதுர்விம்சாம்சத்தில் சூரியனும் புதனும் பரிவர்த்தனை ஆவதுதான். இதனால் புதன் தனது மூலத்திரிகோண உச்ச வீட்டிற்கு சென்று அதீத வலுவாகிறார். சூரியன்-புதன் பரிவர்த்தனை ஜாதகிக்கு திட்டமிடலில் தேர்ந்த நுட்பத்தையும், இவற்றோடு அதிக பட்ச உயர்கல்வியை குறிக்கும். 11 ஆமிட சுக்கிரன், ராகு-கேதுக்கள் தொடர்பு பெறுவது, முன்மாதிரி வடிவமைப்பு போன்றவற்றில் புதுமைகளையும், நவீனத்துவத்தையும் புகுத்தும் அமைப்பாகும். இதனால் ஜாதகி முதுகலையில் இளநிலையில் பயின்ற, கட்டுமான பொறியியலை கைவிட்டு புதன், சுக்கிரன் குறிக்கும் முன்மாதிரி வடிவமைப்பு மற்றும் மின்னணு தயாரிப்பு நுட்ப பொறியியல் (Prototyping& Digital Manufacturing Engineering) பயின்றார். 

தொழிலுக்கு ஆராயவேண்டிய தசாம்சத்தில், தற்போதைய தசாநாதன் சூரியன், 5,1௦ க்கு உரிய சுக்கிரனின் வீட்டில் நின்று தசை நடத்துகிறார். சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியுள்ளதை கவனியுங்கள். இதனால் தசாநாதன் சூரியனோடு பரிவர்த்தனை பெற்ற சுக்கிரன், புதன் ஆகியோர் தொடர்புகொள்கிறார்கள். சதுர்விம்சாம்ச கிரக தொடர்புகளே இங்கும் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. ஜாதகி உயர்கல்வியில் பயின்ற கல்விக்கேற்ற பணி புரிவார் என்பதை இது குறிக்கிறது. பரிவர்த்தனைக்குப்பிறகு செவ்வாய் 1௦ ஆம் பாவத்தை பார்ப்பார். இதனால் செவ்வாய் தொடர்பான பணி ஜாதகிக்கு அமையுமா என்றொரு கேள்வி எழும். 6 ஆம் பாவம் மற்றும் அதன் திரிகோணமான 1௦ ஆகிய பாவங்கள் பணி புரிவதை குறிக்கும். 5 ஆமிடம் என்பது நேரடியாக பணி புரியாமல் சௌகரியமாக செயல்படுவதை குறிக்கும். அதாவது 5 ல் அமைந்த தசாநாதன் சூரியன் 6 ஆமிடம் குறிக்கும் கடும் உழைப்பிற்கு எதிராக சுகமாக ஓரிடத்தில் இருந்துகொண்டு வேலைக்கேற்ற திட்டங்கள் வகுப்பதை குறிக்கும்.

ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பால் ஜாதகி திட்டமிடல் மற்றும் வேலைக்குரிய முன்மாதிரி நுட்பங்களை தேர்வு செய்து அளிக்கும் பணியில் ஒரு மின்னணு பொறியியல் (Electronics) நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஜீவன காரகன் சனியோடு குருவும், ராகு-கேதுக்களும் தொடர்புகொள்கிறார்கள். சனியோடு ராகு கேதுக்களின் தொடர்பு, ஜீவன விஷயத்தில் நவீன மின்னணு சாதனங்களின் தொடர்பை ஏற்படுத்தும். மீனத்தில் இக்கிரக சேர்க்கை ஏற்பட்டு  உடன் குரு இருப்பது, ஜாதகியின் பணி வெளிநாடு சார்ந்த நிறுவனம் ஒன்றில் அமையும் என்பதையும், உழைப்பிற்கேற்ற வருமானத்தை ஜாதகி அடைவார் என்பதையும் குறிக்கிறது. ஜாதகி தற்போது சூரிய தசா-சனி புக்தியில் உள்ளார்.

இரண்டாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.

இந்த ஜாதகி பள்ளி முடித்து கல்லூரியில் இளங்கலையில் விலங்கியல் படித்தார். அப்போதைய தசை, சுக்கிர தசை. சனி புக்தி. சுக்கிரன் அந்தரமாகும்.  வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் விலங்குகளை குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். ஜாதகத்தில் 2 ஆமதிபதி குரு உச்சம் பெற்றுள்ளார். உச்ச குருவால் குருவின் ராசிகளும், குரு நின்ற வீட்டோன் சந்திரனும் வலுவடைவர் இதன்படி 2 ஆவது பாவமும், அங்கு அமையப்பெற்ற கிரகங்களும், சந்திரனும் வலுவடைவர்.  சுக்கிரனும் கால புருஷனுக்கு 2 ஆம் பாவத்தில் ஆட்சியுடன் திக்பலமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தில் இரண்டாவது பாவமும், கால புருஷனுக்கு 2 ஆவது பாவமான ரிஷபத்தில் உச்சமடையும் சந்திரனும் மொழியியலை குறிக்கும். இதன்படி இளங்கலையில் விலங்கியல் பயின்ற ஜாதகி, உச்ச குருவால் நீச பங்கமடைந்த புதன் புக்தியில், சந்திரன் அந்தரத்தில் முதுகலையில் ஆங்கில இலக்கியம் பயின்றார்.

சதுர்விம்சாம்சத்திலும் சுக்கிரன் திக்பலம் பெற்றிருந்தாலும் நீசம் பெற்றுள்ளது. இது சுக்கிரனுக்கு  (கல்வியை பொருத்தவரை மட்டும்) சிறந்த அமைப்பு அல்ல. ஆனால் விம்சாம்சத்தில் உயர்கல்விக்குரிய பாவமான 9 ல் சந்திரன் உள்ளார். சந்திரனின் வீட்டில் ராகு-கேதுக்கள் உள்ளனர். ராசியிலும் சதுர்விம்சாம்சத்திலும் லக்னத்திற்கு 2 ல் பாவிகள் அமைந்ததால் ஜாதகி ஆங்கில இலக்கியம் பயின்றார். 

தசாம்சத்தில் ராசிக்கு 1௦ ல் குரு ஆட்சி பெற்றுள்ளது. 2 ஆம் பாவமான குருவின் மூலத்திரிகோண வீடு தனுசை சந்திரன் பார்ப்பதை கவனியுங்கள். (வர்க்க சக்கரங்களில் கிரகங்களுக்கு அரை பங்கு பார்வை உண்டு) இத்தகைய அமைப்புகள் ஜாதகிக்கு கல்வித்துறையில் பணிபுரிய வாய்ப்பை கொடுத்தது. ஜாதகி சுக்கிர தசையை கடந்து தசாம்சத்தில் திக்பலம் பெற்ற சூரிய தசையை கடந்துள்ளார். ராகுவோடு இணைந்த சூரியன், ராகுவின் காரகத்தை ஏற்று செயல்பட்டுள்ளது. அதனால் சூரியன் தனது தசையில் ராகுவின் அந்நிய மொழியை பயிற்றுவித்து பொருளீட்ட மட்டுமே உதவி செய்தது. அரசுப் பணியை வழங்கவில்லை. சூரிய தசைக்கு பிறகு வந்த சந்திரனும், செவ்வாயும் ராசிக்கட்டத்தில் ராகு-கேதுக்களோடு தொடர்புகொண்டதாலும் அரசுப்பணியை வழங்காவிட்டாலும் அந்நிய மொழியான ஆங்கிலத்தை பயிற்றுவிக்க தடை ஏற்படுத்தவில்லை. செவ்வாய் தசைக்கு பிறகு வந்த ராகு தசை, ஜாதகிக்கு அரசுப்பணியை வழங்கியது. சூரியனின் காரகத்தை தனதாக்கிக்கொண்டு ராகு, ஜாதகிக்கு அரசுப்பணி வழங்கியுள்ளது புரிகிறது.

இந்த ஜாதகி சுக்கிர தசையில் ஏற்றுக்கொண்ட இளங்கலை விலங்கியலை முதுகலையிலும் தொடர்ந்திருந்தால் அது தொடர்பான பணி கிட்டியிருக்காது. காரணம், ராசியில் மட்டும் 1௦ ஆமிடத்தோடு தொடர்பான சுக்கிரன், தசாம்சத்தில் 2, 6, 1௦ பாவங்களோடு தொடர்பாகவில்லை என்பதும், ஜாதகியின் 22 ஆவது வயதோடு கல்லூரிக்காலத்திலேயே சுக்கிர தசை முடிந்துவிட்டது என்பதும்தான்.

கல்லூரியில் எதிர்கால வாய்ப்புகளை அறிந்து அதற்கேற்ப தனது முதுகலை கல்வியை மாற்றிக்கொள்வது சாமர்த்தியம் என்றாலும், அதற்கான வர்க்க சக்கர காரணிகள் ஜாதகரை அனுமதிக்கிறதா என்பதை கவனிப்பதும், முக்கியமாக, தசா-புக்திகள் படித்ததும் தொடர்புடைய கல்விக்குரிய வேலை வாய்ப்பை வழங்குமா? அல்லது தாமதிக்குமா? என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் தசா-புக்திகள் அனுமதிக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் கல்வியை தேர்வு செய்வதே இன்றைய அவசர யுகத்தில் புத்திசாலித்தனம். அதற்கு ஜோதிடம் உதவி புரிய காத்துக்கொண்டுள்ளது.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Loading

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil