வாக்கியம் VS திருக்கணிதம் – ஒரு நீயா நானா

வாக்கிய பஞ்சாங்கம் சரியா அல்லது திருக்கணித பஞ்சாங்கம் சரியா?
இந்தக் கேள்வி எழாத ஜோதிட விரும்பிகளே இருக்க இயலாது. ஜோதிடத்தில் மிகவும் ஊறியவர்களால் கூட இதற்கு விடை கூற இயலவில்லை.காரணம் இரண்டிலுமே சிறப்பும் உண்டு தவறுகளும் உண்டு என்பதுதான்.

இந்துக்களின் காலக்கணக்கு.

இந்து தர்மத்திலேயே தனித்த சிறப்புடையவர்கள் தமிழர்கள்.
பெரும்பான்மையான சைவ மரபு இந்துக்கள் சிவனை வழிபட்ட போது. நாங்கள் சிவனின் செல்வனான முருகனையே முதல்வனாகக்கொண்டு வழிபடுவோம் என்று தனித்து நின்றவர்கள்.


தமிழர்களின் காலக்கணக்கு

யுகக்கணக்குவேதங்களில் முதன்மை வேதமான ரிக் வேதத்திலும் அனைத்து நமது புராணங்களிலும் சப்தரிஷிகள் பற்றி குறிப்பிடப்படுகிறது. சூரியனுக்கு ஒளி வழங்குபவர்கள். இவர்களை முதன்மையாகக் கொண்டே தேவர்கள் இயங்குகிறார்கள். எனவே தேவர்களுக்கு தந்தை இவர்களே. இந்த சப்த ரிஷிகளுக்கு தந்தை பிரம்மன் ஆவார்.

சப்த ரிஷி மண்டலம்.


ஆங்கிரஸ், க்ரது, மரீசி, வசிஷ்டர், புலஹர், புலஸ்த்யர், அத்ரி என்ற பெயருடன் புராணங்களில் இந்த ஏழு ரிஷிகளும் குறிப்பிடப்படுகின்றனர். சப்த ரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டரையும் அதற்கு இணை நட்சத்திரமான  வசிஷ்டரின் மனைவியான அருந்ததியையும் அருகருகே காணலாம். சித்திரை வைகாசி மாதங்களில் சூரியன் மறைந்ததும் வடக்கு வானில் இந்த சப்தரிஷி மண்டலத்தை காணலாம்.  ஒரு பெரிய கரடியைப் போன்ற தோற்றமுடையது என்பதால் ஆங்கிலேயர் இதை GREAT BEAR என அழைக்கின்றனர். இந்த நட்சத்திர மண்டலத்தின் வானியல் பெயர் URSHA MAJOR என்பதாகும். இதத் தவிர 7 SISTERS எனவும் ஒரு பெரிய கரண்டியைப்போன்று இருப்பதால்   BIG DIPPER  எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த சப்த ரிஷி மண்டலம் வானில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு வருவது ஒரு சப்த ரிஷி மண்டல சுழற்சியாகும். இந்த ரிஷி மண்டலத்தின் இத்தகைய 1600 சுழற்சிகள் கொண்ட கால அளவையே (4,32,000 வருடங்கள் கொண்டது) ஒரு  யுகம் என்கிறோம். இக்கால அளவிலும் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு மன்வந்தரத்திலும்  ஒவ்வொரு ரிஷிகளின் ஆளுமை உண்டு. இவர்களில் வசிஷ்டரின் மனைவியான அருந்ததியை கற்புக்கரசியாகக் கொண்டு திருமண நாளில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறோம். ஏனென்றால் இவை இரண்டின் சுழற்சியும் ஒன்றாக இருப்பதால் இரண்டும் இணைந்து ஒன்றாக சுற்றுவது போன்று தோன்றுவதால் இந்த வஷிடரும் அருந்ததியும் போன்று தம்பதியர் இணைபிரியாமல் வாழவேண்டும் என்ற நோக்கில் இந்த சடங்கை வைத்தார்கள் அன்றைய ஆன்றோர். ஒரு சில நாட்களாக நடக்கும் அன்றைய திருமண நிகழ்வில் இரவு வானில் இதனை காண்பித்தனர். ஆனால் பாதி நாளில் முடிந்துவிடும் இன்றைய திருமண சடங்கில் இரவில் காண வேண்டிய அருந்ததியை பகலிலேயே பார்த்ததாக ! மண்டப கூரையை பார்த்து முடித்துவிடுகின்றனர். 
அயனாம்சத்தை பற்றி விளக்கமாக அறியும் முன் இதன் அடிப்படையை புரிந்துகொள்ளுங்கள். இதுவே ஜோதிடத்தின் அடிப்படை என்பதால் கவனமாக படியுங்கள்.

பூமியின் நீள்வட்டப்பாதை – Ecliptic:

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் ஒரு நீள் வட்டப்பாதையில் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றிவருகிறது. பூமியிலிருந்து இந்த நிகழ்வை அன்றாடம் காணும் நாம் சூரியன்தான் பூமியை சுற்றிவருவதுபோல் தோன்றும். எனவே ஒரு வசதிக்காக நாம் காண்பது படியே சூரியன் பூமியை சுற்றுவதாகக் கொள்வோம். சூரியன் பூமியை சுற்றுவதாகக்கொள்ளும் இந்த நீள் வட்டப்பாதையே வானியலில் ECLIPTIC  என அழைக்கப்படுகிறது.

அட்ச ரேகை

பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண கற்பனையாக கிழக்கு மேற்காக வரையப்பட்ட கோடுகளுக்கு அட்ச ரேகைகள் (LATTITUDE) எனப்பெயர். இதில் பூமியை வடக்கு தெற்காக இரு பிரிவுகளாக பிரிக்கும் கோடு பூமத்திய ரேகை (EQUATOR)  ஆகும். இந்த பூமத்திய ரேகை ௦ பாகை LATTITUDE  ல் அமைந்துள்ளது. அட்ச ரேகையின் ௦ பாகையிலிருந்து வடக்கில் வடதுருவம் அமைந்துள்ள 90 பாகை வரை உள்ள பகுதிகள் NORTH LATTITUDE எனவும் தெற்கே 9௦ பாகைகள் வரை அமைந்துள்ள பகுதிகள் SOUTH LATTITUDE எனவும் அழைக்கப்படுகின்றன.

 தீர்க்க ரேகை

பூமியை சுற்றி தெற்கு வடக்காக மேலும் கீழுமாக வரையப்பட்ட கற்பனை கோடுகளுக்கு தீர்க்க ரேகைகள் (LONGITUDE) எனப்பெயர். இதில் ௦ பாகையில் உள்ள PRIME MERIDIAN எனப்படும் இடம் லண்டனில் கிரீன்விச் எனும் இடத்திற்கு அருகில் உள்ளதாகும். இங்கிருந்து கிழக்கே உள்ள பகுதிகள் EAST LONGITUDE எனவும் மேற்கில் உள்ள பகுதிகள் WEST LONGITUTDE எனவும் அழைக்கப்படுகிறது. வான மண்டலத்தில் EQUATOR ரின் நீட்சி (extension) celestial equator என அழைக்கப்படுகிறது. பூமியிலிருந்து நாம் காணும் நட்சத்திரங்கள் வரை இந்த celestial equator ஐ கற்பனை செய்துகொள்ளுங்கள். இதே போன்றுதான் celestial longitude ம் உள்ளது.Equinoxசூரியனை பூமி சுற்றிவரும் வட்டப்பாதையின் பின்னுள்ள பிரபஞ்சமானது வட்ட வடிவமாக கற்பனை செய்யப்பட்டு அவை 3௦ பாகைகள் கொண்ட மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனை சுற்றிவரும் பூமி தன் அட்சிலிருந்து 23.5 பாகைகள் சாய்வாக அமைந்துள்ளது. Ecliptic ஆனது celestial equitor  ஐ சந்திக்கும் இடமே Equinox  எனப்படுகிறது. இது இரு இடங்களில் ஏற்படும். கீழுள்ள படத்தை கவனித்தால் புரியும்.

சூரியன் equator ஐ தெற்கிலிருந்து வடக்காகக் கடக்கும்போது மார்ச் 21 அன்று ஒருமுறை ஏற்படும். இதை vernal equinox  என அழைக்கிறார்கள். இந்நாளில் சூரியன் நிலநடுக்கோட்டுக்கு நேர் மேலே வருகிறது. அன்று இரவும் பகலும் சமமாக இருக்கும். மற்றொன்று சூரியன் வடக்கிலிருந்து தெற்காக equiator ஐ  கடக்கும்போது ஏற்படுகிறது. இது atumnal equinox எனப்படுகிறது. செப்டம்பர் 22 அன்று ஏற்படும் இந்த இடமே ராசி மண்டலத்தின் ௦ பாகையான மேஷ ராசி மண்டலத்தின் துவக்கமாகும்.பூமி தன் அச்சில் தானே சுழல்கிறது என்பதை நாம் அறிவோம். அதுவும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழல்கிறது. இந்த அச்சு 72 வருடத்தில் ஒரு பாகை அளவு  நகர்கிறது.  அதாவது ஒரு வருடத்திற்கு 50.3 விகலை அளவு முன்னோக்கி  நகர்கிறது. (1/6௦ பாகை=1 கலை, 1/6௦ கலை=ஒரு விகலை ஆகும்). இந்த அளவில் நகரும்போது 25800 ஆண்டுகளில் (இதனை 25920 எனவும் 26000 சிலர் குறிப்பிடுகிறார்கள்)  360 பாகைகள் நகர்ந்து மீண்டும் தனது துவக்க நிலையை அடைகிறது. பூமியின் இந்த மேற்கு நோக்கிய நகர்வு காரணமாக vernal equinox  நிகழ்வு முன் கூட்டியே நடந்துவிடுகிறது.

Sidereal வருடத்திற்கும் Tropical வருடத்திற்கும் உள்ள வேறுபாடு


நிராயான முறைப்படி ௦ பாகை மேஷம் வானில் நிலையாக உள்ள நட்சத்திர அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சூரியன் முழு சுழற்சியை முடித்து மீண்டும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் அருகில் வருவதையே ஒரு siderial year என்கிறோம். இது நட்சத்திர அடிப்படியிலான வருடமாகும். ஒரு vernal equinox க்கும் அடுத்த vernal equinox க்கும் இடைப்பட்ட காலம் ஒரு Ttropical வருடமாகும். இது Sidereal   வருடத்தைவிட 2௦ நிமிடங்கள் குறைவு. 2௦ நிமிடங்கள் என்பது 25800 வருடத்தில்  ஒரு வருட அளவாகும்.   எனவே இந்த vernal equinox ஆனது 25800 வருடத்தில் ஒரு முழு சுற்று சுற்றி மீண்டும் ௦ பாகை  மேஷத்திற்கு வந்துவிடுகிறது. இந்த முன்னோக்கிய நகர்வு procession of equinox எனப்படுகிறது.

இப்போது அயனாம்சத்திற்கு வருவோம்.
அயனாம்சம்

பூமியின் சுய அச்சு ஒரு வருடத்திற்கு 50.3 விகலை அளவு முன்னோக்கி  நகர்கிறது என பார்த்தோமல்லவா?. பூமியின் இந்த 50.3 விகலை அளவு முன்னோக்கி  நகர்வினால் உண்மையில் மேஷம் வர சூரியன் மேலும் வருடத்திற்கு 50.3 பாகை நகர வேண்டும். கி.பி 293 ல் sidereal zodiac க்கும்  Tropical Zodiac க்கும் ஒரே இடத்தில் இருந்ததாக கணித்திருக்கிறார்கள். எனவே கி.பி 293 ல் அயனாம்சம் ௦ பாகை என எடுத்துக்கொண்டால் தற்போது 2016 ல் அயனாம்சம்:  (2016 – 293) = 1723 X 50.3 = 86666.9 விகலை. 86666.9/60 = 11444.448333333333 கலை. 11444.448333333333/60=24.07413888888889 பாகை.

ஜோதிட அடிப்படையில் மேலை நாட்டு ஜோதிடனர் நகரும் zodiac ஐ பின்பற்றுகின்றனர். அதில் அயனாம்சம் இல்லை. அதாவது எப்போது vernal equinox ஏற்படுகிறதோ அதுதான் ௦ பாகை மேஷம். சாயன முறை என இதற்குப்பெயர்.

இந்திய வேத ஜோதிட முறையில் நாம் நிலையான zodiac முறையில் அதாவது நிலையான பிரபஞ்சத்தில் அயனம் (நகர்வு) இல்லாத கிரக நிலைகளாக எடுத்துக்கொண்டு அயனாம்சத்தை கழித்துக்கொள்கிறோம். இதற்கு நிராயன முறை எனப் பெயர்.

நாம் பின்பற்றும் நிராயன முறையில் அயனாம்சத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. வெவ்வேறு ஜோதிட நிபுணர்களின் கணிப்பில் அயனாம்சம் வெவ்வேறு விதமாக உள்ளது.

அந்நியர்களால் ஜோதிடத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பேரிழப்புகள்.

பண்டைய காலத்தில் சூரிய சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்து ஒரே முறையில் அயனாம்சத்தை கணக்கிட்டுள்ளனர். அப்போது குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை (4 வருடங்களுக்கு ஒருமுறை இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்) 56 இந்து தேச பஞ்சாங்க அறிஞர்களையும் அழைத்து அயனாம்சம் மற்றும் கிரக சஞ்சாரத்தில் உள்ள மாறுதல்களை விவாதித்து பஞ்சாங்கத்தை தயாரித்து பின்பற்றியுள்ளனர். பஞ்சாங்க அறிஞர்களை ஒன்று சேர்க்கும் இந்த நிகழ்வுக்கு பஞ்சாங்க சதஸ் என்று பெயர்.

அந்நியர்களின் படையெடுப்பினால் பஞ்சாங்க சதஸ் நிகழ்வுகள் தடுமாற ஆரம்பித்தன. ஒரு மதத்தை அழிக்கவேண்டுமானால் அதன் வழிபாட்டு முறையையும் அதற்கு அடிப்படையான பஞ்சாங்கத்தை கவனித்து செயல்களை செய்யும் முறையையும் அளித்தால் மதம் அழிந்துவிடும் என்ற அந்நியர்களின் எண்ணத்தால் பஞ்சாங்க அறிஞர்களின் தலைகள் சீவப்பட்டன. பஞ்சாங்க அறிஞர்களின் கணக்கீட்டிற்கு அடிப்படையான வேதகால அறிஞர்களால் எழுதப்பட்ட ஆதாரமான பொக்கிஷமான நூல் சூரிய சித்தாந்தம் நமக்கு முழுமையாக கிடைக்காமலேயே போய்விட்டது. மொகலாயர்கள் அழித்தது ஏராளம் என்றால் ஆங்கிலேயர்கள் திருடிச்சென்றதும் அளவில்லாதது. இப்போது நம்மிடம் எஞ்சி இருப்பது சூரிய சித்தாந்தத்தின் பகுதிகள்தான்.

பஞ்சாங்க அறிஞர்கள் காலப்போக்கில் சிற்றரசர்கள், திருக்கோவில்கள்,  ஜமீன்தார்கள், தனவந்தர்கள் ஆகியோரை சார்ந்தும் தங்கள் பணியை தற்போதும் செய்துவருகின்றனர். தஞ்சாவூர் பாம்பு பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் திருக்கோவில் பஞ்சாங்கம், காஞ்சி மற்றும் சிருங்கேரி மடத்துப் பஞ்சாங்கங்கங்கள், ராமநாதபுரம் பஞ்சாங்கம், மதுரை பஞ்சாங்கம் உள்ளிட்ட ஏறக்குறைய 30 க்கும் மேற்பட்ட பஞ்சாங்கங்கள் தற்போது கிடைக்கின்றன. 


பஞ்சாங்க சதசை மீண்டும் துவங்குவதன் அவசியம்.

பல நூற்றாண்டுகளாக சிறு சிறு குழுக்களாக நடைபெறும் பஞ்சாங்க சதசை மீண்டும் பெரிய அளவில் ஒருங்கிணைந்து துவக்குவதன் மூலம் கிரக சஞ்சார நிலைகளையும் அயனாம்சத்தையும் ஒரே மாதிரியாகக் கொண்டு பலன் காண வசதியாக இருக்கும்.

 இன்று பல்வேறு ஜோதிட அறிஞர்கள் பல்வேறு விதமான அயனாம்சங்களை வைத்து பலன் காண்கின்றனர். கிரக சஞ்சார நிலைகளை உண்மை நிலை, சராசரி நிலை என்று எடுத்துக்கொள்கின்றனர். இவ்விரு நிலைகளை கையாள்வதில்  ஜோதிட உலகம் பெருமளவு பிளவு பட்டுள்ளது.

மேலும் கிரக சஞ்சார நிலைகளைப்போன்றே அயனாம்சக்கணக்கீட்டிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் அறிஞர்களுக்கிடையே நிலவுகிறது.ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை கொண்டு அயனாம்சம் கணிக்கும் போது உதாரணமாக சித்திர பக்ஷ அயனாம்சத்தில் Spica  எனப்படும் புள்ளியை நிலையாக எடுத்துக்கொள்கின்றனர் சிலர். வேறு சிலர் சராசரிபுள்ளி என எடுத்துக்கொள்கின்றனர். சித்திர பக்ஷ அயனாம்சத்தையே இப்படி அவரவர் வசதிக்கு தகுந்தபடி வேறுபாடுகளுடன் பயன்படுத்துகின்றனர் ஜோதிடர்கள்.

நிராயன முறையை பின்பற்றி sidereal zodiac ஐ எடுத்துக்கொண்டு  அயனாம்சம் கணக்கிடுவதே பல்லாண்டுகளாக நம் வழக்கமாக இருக்கிறது. இப்போது இதில் மேலை நாட்டினர் பயன்படுத்தும் Tropical Zodiac ஐ புகுத்தி அயனாம்சம் கணக்கிட்டு பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு முறையிலும் சில சாதகங்களும் சில தவறுகளும் இருக்கவே செய்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதுபோன்றவற்றை அனைத்து ஜோதிட அறிஞர்களும் ஒன்றுகூடி விவாதித்து அதில் முடிவுகண்டு பிறகு இதுவே கிரக சஞ்சாரங்களுக்கும் அயனாம்சத்திற்கும் பொருத்தமான விதிகள் என முடிவு காண வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பண்டைய மன்னர்கள் காலத்தில் நடந்தது போன்று 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவைகளை ஆராய்ந்து தேவைப்படும் திருத்தங்கள் செய்யவேண்டும். 

தமிழ்நாட்டில் சரபோஜி மன்னர் 17 ஆம்  நூற்றாண்டின் இறுதியில் பஞ்சாங்க  சதஸ் நடத்தில் அயனாம்சத்தை ஜோதிட அறிஞர்களைக்கொண்டு ஆராய்ந்து வகுத்தளித்த அயனாம்சமே இன்றும் தென் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான தஞ்சை பாம்பு பஞ்சங்கமாகும். இதுவே வாக்கிய பஞ்சாங்கம் எனப்படுகிறது. இன்று வரும் அனைத்து வாக்கிய பஞ்சாங்கங்களுக்கும் இதுவே ஆதாரம்.

பிறகு 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் , கல்கத்தா கோளரங்கத்தில் பணிபுரிந்த ஆங்கிலேயர் N.C.லஹரி ஜோதிடத்தின் மீதான ஈடுபாடு காரணமாக கிரக நிலைகளை தொலைநோக்கி மூலம் ஆராய்ந்து அயனாம்சத்தை வகுத்தளித்தார். நாம் பாரம்பரியமாக கணக்கிடும் முறையிலான  அயனாம்சத்திலிருந்து மாறுபட்டு கணிக்கப்பட்ட அயனாம்சமான இதுவே திருக்கணித அயனாம்சம் எனப்படுகிறது. நாம் பாரம்பரிய முறைப்படி கணக்கிடும் அயனாம்சமுறை வாக்கியம் எனப்படுகிறது. இந்திய அரசின் அதிகாரவ பூர்வ பஞ்சாங்கம் லகரி அயனாம்சத்தை அடிப்படியாகக் கொண்டுள்ளது. இன்று நம்மில் பெரும்பான்மையினர் திருத்தப்பட்ட கணிதம் (திருக்கணிதம்) என்ற முறையில்  பயன்படுத்துவது லஹரி அயனாம்சத்தைத்தான். 18 ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் அப்போதைய காஞ்சி மடாதிபதியும் 1949 கால கட்டத்தில் காஞ்சி மகா பெரியவரும் பெருமுயற்சி எடுத்து பஞ்சாங்க சதஸ் நடத்தியுள்ளனர்.

அதன்பிறகு ஜோதிடத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல் எனில் K.P (கிருஷ்ணமூர்த்தி பத்ததி) முறை எனப்படும் புரபசர் கிருஷ்ணமூர்த்தியின் முறைதான்.

திருக்கணித முறையில் கிரக நிலைகள் சரியாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஆனால் வாக்கிய முறை பலன்களுக்கு சரியாக வருவதாகவே நினைக்கிறேன். இந்த வித்தியாசங்களை பல்வேறு நட்சத்திரங்களிலிருந்து அயனாம்சத்தை கணிப்பதன்மூலம் சரி செய்ய ஜோதிட அறிஞர்கள் முயன்றுகொண்டுள்ளனர். உதாரணமாக ரோகிணி பக்ஷ அயனாம்சம், மூல பக்ஷ அயனாம்சம், பூச பக்ஷ அயனாம்சம் என்ற வகையில் இவை நீள்கிறது.

இத்தகைய அயனாம்ச குழப்பங்களுங்களுக்கு தீர்வு காண ஜோதிட ஆராய்ச்சியாளர்களும் பஞ்சாங்க அறிஞர்களும் ஒன்று கூடி முயற்சிப்பது அவசியம். முதற்கட்டமாக அந்தந்த பகுதியை சார்ந்த இந்து தர்மத்தை சார்ந்த மடாதிபதிகள் இதை செய்யலாம். பிறகு தமிழ் நாட்டின் முதன்மை மடமான காஞ்சி மடம் இதை செய்யலாம். பிறகு அகில இந்திய அளவில் என்று கருத்துரைகளை எடுத்துச் சென்றால் தெளிவு கிடைப்பது உறுதி என அடியேன் கருதுகிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன். 

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil