நண்பர் ஒருவர் அந்நிய தேசத்திலிருந்து அழைத்தார். இந்தியா திரும்ப எண்ணமில்லை என்றாலும் தற்போது உடனடி தீர்வு காண்பதற்கான சூழலில் உள்ளேன். உங்கள் ஆலோசனை தேவை என்று கேட்டார். பொதுவான பலன்களை காண்பதற்கு ஜாதக ஆய்வே சிறந்தது. ஆனால் ஒருவரின் அப்போதைய சூழலை ஜாதகத்தைவிட பிரசன்னமே துல்லியமாக படம் பிடித்துக்காட்டுகிறது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் கேள்வி கேட்ட அன்பருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.
மீன உதயத்தில் உதயாதிபதி குரு ஆட்சி. ஜாம குரு கடகத்தில் உச்சம் பெற்று உதயத்தை பார்க்கிறார். உதயத்திற்கு 12 ல் ஆரூடம் இவை கேள்வியாளர் வெளிநாட்டில் உள்ளதை உறுதி செய்கிறது. உதயத்திற்கு 6 ஆமதிபதி சூரியன் உச்சம் பெற்று ராகுவுடன் உதயத்திற்கு 2 ல் நிற்கிறார். இது ஜாதகரின் வெளிநாட்டு வேலையின் சிறப்பை கூறுகிறது. ஆனால் ஜாம சுக்கிரனும் இவர்களுடன் கூடி, 2 ஆமதிபதி செவ்வாய் உதயத்திற்கு 12 ல் சனியோடு இணைவு பெற்றுள்ளதால் கேள்வியாளர் குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்வதையும் அது ஜாதகரின் குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதையும் கூறுகிறது. “உங்கள் குடும்பம் உங்களுடன் வெளிநாட்டில் இல்லை” என்று கூறியதை ஜாதகர் ஒப்புக்கொண்டதுடன் “தனது மிகப்பெரிய மன வேதனை அதுதான் என்றார். உதய சனியை 7 ஆமிட செவ்வாய் பார்க்கிறார். உதயத்திற்கு 12 ல் சனி, செவ்வாய் சேர்க்கை. இது கேள்வியாளர் தற்போது பணி முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை தெளிவாக காட்டுகிறது. கேள்வியாளர் “எங்களது தற்போதைய பணி முடிந்து விட்டது அடுத்த பணி (Project) துவங்க இன்னும் 4 மாத காலம்” ஆகும் என்றார்.
ஜாம உதயாதிபதி குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ளார். எனினும் அவர் உதயத்திற்கு 8 ல் அமைந்த கேதுவின் சாரத்தில் உள்ளார். இரு சூரியன்களும் ராகு-கேதுக்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலை. 4 ல் புதன் ஆட்சி பெற்றாலும் அவர் செவ்வாய் சாரம் பெற்ற கவிப்புடன் இணைந்துள்ளார். இவை கேள்வியாளரின் பூர்வீக நிலம் தந்தை வழி கர்மாவால் ஜாதகர் அனுபவிக்க இயலாத நிலையில் உள்ளதை கூறுகிறது. மேலும் இது கேள்வியாளரின் தாயார் தற்போது உடல்நலம் குன்றியுள்ளதையும் குறிப்பிடுகிறது. இதை கூறியதும்தான் கேள்வியாளருக்கு ஜாமக்கோள் பிரசன்னத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. பொதுவாக பிரசன்னம் ஜாதகரின் சூழலை சுட்டிக்காட்டினாலும் அது கேள்வியை சுட்டிக்காட்டினால்தான் அது வெற்றிகரமான பிரசன்னமாக அமையும். கேள்வியாளர் இந்தியாவில் தனது தாயார் உடல் நலம் குன்றி உள்ளார். தன்னால் தனது பூர்வீகத்தில் வாழ இயலாது. எனவே பூர்வீக நிலத்தை விற்பது பற்றித்தான் கேட்க உங்களை தொடர்புகொண்டேன் என்றார்.
பிரசன்னத்தில் 4 ல் உள்ள கவிப்பு கேள்வியாளரின் நிலம் விற்கப்படும் நிலையில் உள்ளதாலும் தாய்க்கு அந்திம காலம் என்பதாலும் கேள்வியாளர் உடனடியாக இந்தியா திரும்பி அதற்கான செயல்களில் ஈடுபடலாம் என்று அறிவுரை வழங்கினோம்.
மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501