2ஆம் பாவகம் என்பது தனம், வாக்கு, குடும்பம், வலது கண், போன்ற பல்வேறு வகை காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஜாதகத்தில் ஒரு பாவகம் மற்றொரு பாவகத்துடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளின் அடிப்படையில்தான் குறிப்பிட்ட அந்த பாவகத்தின் செயல்பாடு அமையும். 2 ஆம் பாவகத்தின் எதிர் பாவகம் 8 ஆம் பாவகமாகும். இந்த வகையில் 2 ஆம் பாவகத்தின் நிவர்த்தி பாவகமாக 8 ஆம் பாவகம் வருகிறது. 2ஆம் பாவகம் ஒருவரது வளர்ச்சியை கூறினால் 8 ஆம் பாவகம் நமது தொடர்பாளரின் வளர்ச்சியை கூறும். 2 ஆமிடம் ஒருவரது குடும்ப பாரம்பரியத்தை கூறினால் 8 ஆம் பாவகம் அவரது வாழ்க்கை துணையின் குடும்ப பாரம்பரியத்தை கூறும். இப்படி மாறுபட்ட தன்மைகள் உள்ள இவ்விரு பாவகங்களும் ஜாதகத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகள் ஒருவரின் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுகின்றன என்பதை ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
இரண்டாமிடம் தனம்.
ரிஷப லக்னத்திற்கு இரண்டாமதிபதி புதன் ராசிக்கு 6 ல், லக்னத்திற்கு 7 ல் திக்பல சனியோடு இணைவதால் இவரது ஜீவனம், 2 ஆமிட சந்திரன் குறிக்கும் கடல்கடந்த தொடர்புடைய, வெளிநாடு சார்ந்த, தகவல் தொடர்புடையதாக இருக்கும். நீர்க்கிரகமான சந்திரன் மற்றொரு நீர் கிரகமான 9 ல் அமைந்த குருவின் புனர்பூசத்தில் நிற்கிறார். இது மேற்சொன்ன கருத்தை உறுதி செய்கிறது. ஜாதகர் ஒரு கப்பல் நிறுவனத்தில் தகவல் தொடர்புகளை நிர்வகிக்கிறார். 8 ஆமதிபதி குரு பாக்ய ஸ்தானத்தில் நீசம் பெற்று தனது உச்ச வீட்டை பார்ப்பதால் பொருளாதாரத்தை தடை செய்ய மாட்டார். ஆனால் ஜாதகரின் பாக்கியத்தில் குறை வைப்பார். 1௦ ஆமதிபதி சனி, 1௦ க்கு 1௦ ல் திக்பலத்தில் நிற்பதால் இவரது வேலை சிறப்பாக உள்ளது.
இரண்டாமிடம் வாக்கு.
இரண்டாமதிபதி புதன் 2 க்கு 6 ல் மறைவு. எனவே இரண்டாவது பாவகத்தை சந்திரனும், இரண்டாமிடத்தை பார்வை செய்யும் சூரியனும் சுக்கிரனும்தான் இயக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகத்தில் 8 ஆமிட கிரகங்கள் அதன் அதிபதி குருவை சார்ந்தே இயங்கும். ஜாதகத்தில் குரு நீசம். 2 ஆமிட சந்திரன் நவாம்சத்தில் உச்சமாகி 2 ஆவது பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். வாக்கு காரகர் புதனின் வீட்டில், பேச்சு காரகர் சந்திரன் நீச குரு சாரத்தில் நிற்பதால், இவரது பேச்சில் ஒரு குறை இருக்க வேண்டும். 2 ஆமதிபதி புதன் சந்திரனின் நீச வீட்டில் நிற்பது இதை தெளிவாக்குகிறது. இதன்படி 36 வயதான ஜாதகரது பேச்சு பாதிக்கப்படவில்லை. ஆனால் வயதுக்கேற்ற முதிர்ச்சி இல்லாமல் குழந்தைத்தனமாகவே பேசுகிறார். குரு குழந்தையை குறிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. குருவின் நீசம் பேச்சில் வெளிப்படுகிறது.
இரண்டாமிடம் குடும்பம்.
களத்திர பாவகமான 7 ஆமிடம், களத்திர பாவாதிபதி, களத்திர காரகர் மற்றும் குடும்ப காரகர் குரு ஆகியோர் ஒரு ஜாதகத்தில் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு திருமணம் நடப்பது கடினம். குரு ஜாதகத்தில் நீசம், 7 ஆமதிபதி செவ்வாயும், களத்திர காரகர் சுக்கிரனும் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளனர். 7 ஆமிடத்திற்கு பாவ கர்த்தாரி யோகமும் உள்ளது. இதனால் ஜாதகருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. 2 ல் அமையும் தேய்பிறை சந்திரன், மூன்றாம் அதிபதி என்பதால் தனது காரக அடிப்படையில் பாதிக்கும். தாயை குறிக்கும் 4 ஆமதிபதி சூரியன், 8 ஆமிடத்தில் நின்று தேய்பிறை சந்திரனை பார்ப்பதால் தாயாரால் ஜாதகருக்கு தீமையும் கிடைக்கும். இதன்படி தாயின் பாசத்திற்கு அடிமையான ஜாதகர் தனக்கு தாய் போன்ற பெண் அமைந்தாலன்றி திருமணமே வேண்டாம் என்று கூறுகிறார். அதிக பாகை பெற்ற தேய்பிறை சந்திரன் குடும்ப பாவகத்தில் நின்று, சந்திரனுக்கு எதிர் பாவகத்தில் களத்திர காரகர் சுக்கிரன் குறைந்த பாகை பெற்று 4 ஆமதிபதி சூரியனால் அஸ்தங்கப்படுவது ஜாதகர் இப்படி எண்ணுவதற்கு காரணமாகியுள்ளது.
இரண்டாமிடம் உணவு.
தாயை குறிக்கும் உணவு காரகர் சந்திரன், உணவு பாவகமான 2 ல் அமைந்து நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் தாயார் 36 வயதான ஜாதகருக்கு இன்னும் உணவு ஊட்டி விடுகிறார். உணவு பாவகத்தில் நிற்கும் உணவு காரகர் சந்திரன் நீசன் குரு சாரம் பெறுவதால் இவர் உண்ணும் உணவு அசைவமாக இருக்குமா? எனில் இருக்காது. காரணம் குரு நீசம் பெற்றாலும் சுபத்தன்மையை இழக்க மாட்டார். பாவிகளோடு இணைந்தாலன்றி பாவிகளின் பார்வையை மீறி செயல்படும் தன்மை குருவிற்கு உண்டு. இங்கு குரு சனி, செவ்வாயின் பார்வை பெறுவது ஜாதகரின் குடும்ப வாழ்வை பாதிக்குமே அன்றி உணவை அல்ல. ஜாதகர் சைவ உணவை மட்டுமே உண்பவர்.
பெற்றோரால் திருமணம் செய்து வைக்க இயலாத ஜாதக அமைப்பு.
களத்திர பாவகத்தில் சனியும், புதனும் தங்களது சுய சாரத்திலே அமைந்துள்ளனர். சனி, புதன் சேர்க்கை ஒரு ஜாதகத்தில் இணைந்திருந்தால் அவை தொடர்புடைய பாவக வகையில் ஜாதகர் ஏமாற்றப்படுவார். தற்போதைய புதன் தசை ஜாதகருக்கு 45 வயது வரை நடக்கிறது. தற்போது திருமண காலமே. ஆனால் திருமண விஷயத்தில் கிரகங்கள் ஜாதகரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகின்றன. 2 ஆமிடத்தை கட்டுப்படுத்தும் சந்திரன் நீசம் சாரம் பெறுவதால் குறைபாடுடைய வாழ்க்கைத்துணையை ஏற்றுக்கொள்வது ஜாதகருக்கு திருமண வாய்ப்பை வழங்கும். கௌரவ காரகர் சூரியன் களத்திர காரகர் சுக்கிரனை அஸ்தங்கப்படுதியுள்ளதால் குறைபாடுடைய ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். காரணம் சூரியன் 8 ல் நிற்பதும், சந்திரன் 8 ஆமதிபதி சாரமும் பெறுவதுதான். தசா நாதன் புதன், தாயான சந்திரனுக்கு 6 ல், தந்தையான சூரியனுக்கு 12 ல் நின்று தசை நடத்துகிறார்.இதனால் ஜாதகருக்கு திருமண வாய்ப்பு பெற்றோர்களாலேயே மறுக்கப்படுகிறது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.
அதுவரை வாழ்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 830012401.