திருமணத் தடைக்கு காரணம்?

ஆண்களுக்கு இன்று திருமணத்திற்கு பெண் கிடைப்பது கடினமாகிவிட்டது. அதே அளவு பெண்களுக்கும் தகுதியான வரன் கிடைக்கவில்லை என திருமணம் தாமதப்படுவதை என்னிடம் வரும் ஜாதகங்கள் மூலம் அறிய முடிகிறது. திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கிறது. கடந்த காலங்களில் வரதட்சினை, ஜாதீயம், அந்தஸ்து என்று பல காரணங்கள் திருமணத்தடை, தாமதத்திற்கு காரணமாக இருந்தன. ஆனால் இன்று ஆண்களுக்குச் சமமாக பெண்களும் சம்பாதிக்கும் சூழலில் தங்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வரனை தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளனர். பெற்றோர் காட்டிய பையனை மணப்பது என்பது இன்றைய படித்த பெண்களிடம் காண முடியாது. பொதுவாக இன்றைய எதிர்பார்ப்புகளில் காலத்திற்கேற்ற நல்ல கல்வி, கௌரவமான உத்தியோகம், மதிப்பான குணங்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. பணியில் உச்சம் தொடும் பலருக்கு குடும்ப வாழ்வு தடைபடுவதை காண முடிகிறது. சம்பாத்திய வலு வந்தபிறகு கூடவே தங்களுகேற்ற துனையை தேர்ந்தெடுப்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுவது இயல்பு. குறிப்பாக இன்றைய பெண்களிடத்தில் இது ஆண்களைவிட அதிகம். பல்லாண்டுகளாக ஆண்களுக்கு ஜாதி, உறவு, சொத்து என்று இருந்த காலத்தில், இன்றைய பெண்கள் வரனின் தகுதி பற்றிய எதிர்பார்ப்பு ஆண்களை திணறடிக்கிறது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் படித்து அமெரிக்காவில் பணிபுரியும் தங்கள் மகனுக்கு பல ஆண்டுகளாக திருமணதிற்கு பெண் பார்க்கிறோம் அமையவில்லை. பல ஜோதிடர்களிடம் காட்டி பல பரிகாரங்களையும் செய்து பார்த்துவிட்டோம். அவற்றால் இதுவரை  பலனில்லை. பிரசன்னத்தில் நீங்கள் தெளிவாக உரிய காரணத்தை கூறுவீர்கள் என்று கேள்விப்பட்டோம். எனவே திருமணத் தடைக்கு என்ன காரணம்? என்பதையும், என்ன பரிகாரம் செய்தால் திருமணத் தடை நீங்கும் என்றும் முதலில் பிரசன்னம் பார்த்து கூறுங்கள், பிறகு பையனின் ஜாதகத்தை பார்க்கலாம் என்று  வந்திருந்தவர்கள் கூறினார். வந்தவர்கள் கேள்வியை தெளிவாக கூறிவிட்டதால் மேற்கொண்டு விபரங்கள் எதுவும் கேட்காமல் பிரசன்னம் என்ன சுட்டிக்காட்டுகிறது என்று பார்க்கலாம் என்று மேற்கண்ட கேள்விக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

கேள்வி மகனின் திருமணம் தொடர்பானது என்பதால் மகனை இங்கே கேள்வியாளர் என்று குறிப்பிடலாம். சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் அமைந்த உதயம் கேள்வி திருமணம் தொடர்பானது என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஜாமக்கோள் பிரசன்னத்தில் உச்ச-நீச்ச கிரகங்கள் கேள்வியின் பின்னணியை சுட்டிக் காட்டும் என்பதற்கேற்ப மீனத்தில் உச்சம் பெற்ற உள்வட்ட சுக்கிரன் திருமணத்திற்கு பெண் தேடும் பிரசன்னம் என்பதை கூறுகிறது. சுக்கிரனே உதயாதிபதியாகி அவர் நீர் ராசியான மீனத்தில் உள்வட்டத்தில் அமைந்துள்ளதாலும் வெளிவட்டத்தில் சுக்கிரன், அமெரிக்காவை குறிக்கும் மிதுனத்தில் நிற்கும் சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் அமைந்ததால் கேள்வியாளர் கடல் கடந்த தேசத்தில் அமெரிக்காவில் இருக்கிறார் என்பது உறுதியாகிறது.

மீனச் சூரியனும் கன்னிச் சந்திரனும் ராகு-கேதுக்களுடன் தொடர்பாகி கிரகண தோஷம் பெற்றிருப்பதை கவனியுங்கள். இது ஜாதகருக்கு உள்ள பித்ரு தோஷத்தை குறிப்பிடுகிறது. உதயத்திற்கு 5 ல் அமைந்த கேதுவும், உள்வட்டத்தில் 12 ல் அமைந்த குருவும் ஜாதகருக்கு குரு தோஷம் புத்திர வகையில் வெளிப்படும் என்பதை குறிப்பிடுகிறது. ராகுவுடன் மீனத்தில் இணைந்த உச்ச சுக்கிரனும் ஜாதகருக்கு பெண்வகை தோஷம் உள்ளது குறிப்பிடுகிறது. ஆனால் அது 11 ஆமிடமாகி சுக்கிரன் உச்சம் பெற்றதால் ஜாதகருக்கு தனது இன வகையை தவிர்த்த வேறு இன மணப் பெண்ணே மனைவியாக வாய்ப்பு உள்ளதை தெரிவிக்கிறது.  12 ல் நிற்கும் குரு, அடுத்த மாதம் உதயத்திற்கு வந்து 7 ஆமிடத்தை பார்க்கவுள்ளார். உதயாதிபதி சுக்கிரனும் மீனத்திலிருந்து உதயத்தை நோக்கி வருகிறார். இதனால் ஜாதகருக்கு திருமணத்திற்காண வாய்ப்பு உள்ளது. ஆனால் சுக்கிரன் 8 ல் கவிப்புடன் மறைந்து நிற்பது தற்போது திருமணத்திற்கு கடும் தடை உள்ளதை தெரிவிக்கிறது.

திருமணத் தடைக்கு காரணம் என்ன?

ஆரூடம் 6 ல் துலாமில் சனியுடன் அமைந்துள்ளதை கவனியுங்கள். ஆரூடத்தில் உச்சம் பெற்ற சனி தனுசில் அமைந்த ஜாமச் சுக்கிரனை 3 ஆம் பார்வையாக பார்ப்பது  கேள்வியாளரின் வேலை நிலவரமே திருமணத்தடைக்கு காரணமாக இருக்கும் என்பதை தெரிவிக்கிறது. 6 ஆமதிபதி சுக்கிரன் 8 ஆமிடத்தில் கவிப்புடன் அமைந்தது கேள்வியாளர் சுக்கிரனும், 8 ஆமிடமும் குறிக்கும் சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருப்பதை தெரிவிக்கிறது. கேள்வியாளர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருப்பார் என்று கூறக் காரணம் துலாம் ராசியையும், தனுசில் அமைந்த ஜாம சுக்கிரனையும் குரு பார்ப்பதுதான். கேள்வி நேரடியாக கேட்கப்பட்டுவிட்டதால் பதிலை உதயமே நேரடியாக தெரிவிக்கும் என்ற வகையில் ரிஷப உதயத்தை ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் சனியோடு இணைந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். செவ்வாய் சனியோடு நெருங்கிய பாகையில் கிரக யுத்தத்தில் அமைந்து ராகுவை நோக்கிச் செல்வது கேள்வியாளருக்கு ஜீவன வகையில் பாதிப்பு உள்ளதை தெரிவிக்கிறது செவ்வாயோடு இணைந்த சனி, 1௦ ஆம் பார்வையாக கேள்வியின் காரக பாவமான 7 ஆமிடம் விருட்சிகத்தை பார்க்கிறார். இது கேள்வியாளரின் ஜீவன விஷயமே திருமணத் தடைக்கு காரணம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. ஏனெனில் உதயத்தின் 1௦ ஆமிடம் கேள்விகாண காரணத்தை தன்னகத்தில் வைத்திருக்கும்.

மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்துவிட்டு தங்கள் மகன் வெளிநாட்டில் நல்ல பணியில்  இருப்பதாக கூறுகிறீர்கள் ஆனால் இவருக்கு வேலையில் பாதிப்பு உள்ளதை பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. அவர் சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டிருப்பார். பெண் வீட்டார் பையனைப் பற்றி விசாரிக்கையில் பையனின் வேலை நிலவரங்கள் திருப்தியாக இருக்காது என்பதே திருமணத் தடைக்கு முக்கிய காணம் என்று கூறினேன். எதிர்முனையில் சற்று நேரம் அமைதி நிலவியது. பிறகு அவர்கள் கூறியது. பையனுக்கு சிறுநீர் வெளியேறுவதில் பாதிப்பு இருந்தது உண்மை. அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிட்டோம். மகன்  அமெரிக்காவில் நல்ல வேலை பார்த்தான். ஆனால் சில வருடங்களுக்கு முன் வேலை இழப்பு ஏற்பட்டுவிட்டது. தற்போது கிடைத்த வேலையில் இருந்துகொண்டு நல்ல வேலைக்கு முயற்சித்துக்கொண்டுள்ளான் என்றனர்.

இதற்கு நல்ல வேலையை தேடிக்கொள்வதே சிறந்த பரிகாரமாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நல்ல வேலை கிடைக்க சில தெய்வ வழிபாடுகள் பரிந்துரைக்கப்பட்டன.  “உத்தியோகம் புருஷ லக்ஷணம்”

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil