Work Life Balance!

பணியிடத்தில் நல்ல மதிப்புடனும், புகழுடன் திகழ்பவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலோனோர்  தங்களது  தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க இயலாமல் குடும்பத்தில் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பணியிடத்தில் சிறப்பாகத் திகழ இயலாமல் தவிக்கிறார்கள். இரண்டையும் சரியாகக் கையாள்வதைத்தான் Work Life Balance என்கிறார்கள். Work Life Balance ல் தேர்ந்தவர்கள் தங்கள் நேரத்தை எதற்கு எப்போது, எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும். இவர்களுக்கு பணியிலோ, குடும்பத்திலோ சிரமங்கள் ஏற்பட்டாலும் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். இத்தகையவர்கள் கடுமையான பணிச் சூழல்களை தங்கள் திறமையால் மாற்றியமைக்க முயல்வர். அது முடியாவிட்டால் பணிபுரியுமிடத்தில் No, முடியாது என்ற வார்த்தைகளை அவசியமான சூழ்நிலைகளில் பயன்படுத்த தயங்காதவர்களாக இருப்பர். இவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக இருப்பர். வாழ்க்கைக்காகத்தான் வேலை. வேலைக்காக வாழ்க்கை அல்ல என்ற தெளிவு  கொண்டவர்கள். இவர்கள் தங்கள் பணிபுரியும் நிறுவனத்தை தேவைபட்டால்  மாற்றிக்கொள்ள தயங்காதவர்களாக இருப்பர். இவர்களில் சிலர் பணியை முன் அனுமானித்து செயல்படுபவர்களாகவும் இருப்பர். பொதுவாக பிறந்த ஜாதகத்தில் சனி வக்கிரமானவர்கள் தங்கள் வேலையில் திறமையானவர்களாகவும், வேலையில் ஏற்படும் பாதிப்புகள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். இத்தகையவர்களுக்கு பணியில் திறமை இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு வேலையைவிட அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஆயுள் மற்றும் ஜீவனம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தும் சனி ஜனன காலத்தில் நேர்கதியில் இருந்து அதன் மீது கோட்சாரத்தில் ராகு வருகையில் ஒருவருக்கு வேலையிலோ அல்லது ஆயுளிலோ பாதிப்பு ஏற்படும். வேலையில் பாதிப்பு ஏற்பட தசா-புக்திகள் 1, 2, 5, 6, 9, 1௦ ஆகிய பாவகங்களுடன் தொடர்புடையாதாக இத்தகைய கோட்சாரத்தில் நடக்க வேண்டும். ஆயுளில் பாதிப்பு ஏற்பட இத்தகைய கோட்சாரத்தில் தசா-புக்திகள் 2, 3, 8, 11, 12 ஆகிய பாவகங்களுடன் தொடர்புடையதாக பெரும்பாலும் இருக்கும். இன்று கார்பரேட் உலகில் பேசு பொருளான Work Life Blance பற்றி இன்றைய பதிவு வருகிறது. .

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

கும்ப லனத்தில் லக்னாதிபதி சனி வக்கிரம் பெற்றுள்ளார். ஜனன ஜாதகத்தில் சனி வக்கிரம் பெற்றவர்களுக்கு வேலையை மட்டுமல்ல வாழ்க்கையையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் இருக்கும். ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் ராகு அமைந்துள்ளார். ராகு அமைந்தது வக்கிரம் பெற்ற சனி சாரம் என்பதால்  வேலை இவரது கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் 1௦ ஆமதிபதி செவ்வாய் பாதக ஸ்தானமான துலாத்தில் அமைந்து அவரை ராகு முதலில் தொடுவதால் இவர் வேலையில் சிரமங்களை எதிர்கொள்வது தவிர்க்க இயலாததாகும். 1௦ ன் பாவத் பாவமான 7 ஆமிடத்தில் சுக்கிரன் அமைந்தது நன்மையே. ஆனால் இங்கு காரகோ பாவ நாசம் எனும் விதி செயல்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கு ஜாதகருக்கு சுக்கிர தசை நடக்க வேண்டும். ஜாதகத்தில் சுக்கிர தசை நடப்பில் இல்லை என்பதால் 7 ஆமிட சுக்கிரன் பாதிக்க மாட்டார். ஆனால் பாதகாதிபதி சுக்கிரன் 7 ல் அமைந்து அவரை வக்கிர சனி பார்ப்பதால் மனைவியால் வேலையில் இவருக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். 7 ஆமதிபதி சூரியன் 8 ல் அமைந்தது சிறப்பல்ல எனினும் அவர் 8ல் ஆட்சி பெற்ற 8 ஆமதிபதி புதனுடன் இணைந்ததால் பெரிய பாதிப்பில்லை. அதாவது இவரது வேலையில் முதலாளி வகையில் சிரமங்கள் ஏற்படும். அப்படியே ஏற்பட்டாலும் இவர் அதை சமாளிக்கும் சக்தியுடன் இருப்பார் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. லக்கினத்தில் அமைந்த  வக்கிர சனி 12 ஆமிடத்தை நோக்கி திரும்பியுள்ளார். அதே சமயம் லக்னத்தை சுக்கிரன் நேர் பார்வை பார்க்கிறார் என்பது இவர் வேலையைவிட மனைவிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை குறிப்பிடுகிறது. இவ்வமைப்பை இன்னும் துல்லியமாக நவாம்சத்தில் காண்போம் வாருங்கள்.

நவாம்சத்தில் உச்ச புதன் வர்கோத்தமம் பெற்றுள்ளார். நவாம்சத்தில் 9 ஆமதிபதி இப்படி வலுப்பெறுவது இவருக்கு படித்த, சாதுர்யம் மிக்க, நகைச்சுவை உணர்வுள்ள, பணிபுரியும் பெண்ணாகவும் காதலித்து திருமணம் புரியும் அமைப்பையும் காட்டும். மேலும் மனைவி வாக்குவன்மை, கணிதம், மருத்துவம் சார்ந்த துறைகளுள் ஒன்றுடன் தொடர்பு பெற்றவராக இருப்பதை குறிப்பிடும். ராசிச் சக்கரத்தைப் போலவே நவாம்சத்திலும் சுக்கிரன் லக்னத்திற்கு 7 ல் கால புருஷ சுக ஸ்தானமான 7 ல் அமைந்தது மனைவி ஆரோக்கியம் தொடர்புடைய துறையை சார்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளதையும் அவர் கடகம் குறிப்பிடும் சென்னையில் வசிப்பவராக இருப்பார் என்பதை குறிப்பிடும். சுக்கிரனுக்கு ராகுவுடன் இணைந்த சனியின் 1௦ ஆம் பார்வை உள்ளதால் மனைவி நிச்சயம் பணிபுரிபவர் என்பது புரிகிறது. 1௦ ல் வக்கிர சனி ராகுவுடன் இணைந்தது பணியிட சிரமங்கள் தனது குடும்பத்தை பாதிக்க ஜாதகர் அனுமதிக்கமாட்டார் என்பதையும் காட்டுகிறது. இவர் ராகு தசையில் சுக்கிர புக்தியில் நாம் அனுமானித்தபடி ஒரு ஆங்கில மருத்துவம் பயின்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். நவாம்சத்தில் தசாநாதர் ராகு காதல் பாவகமான 5 க்கும் 1௦ க்கும் உரிய சுக்கிரன் வீட்டில் அமைந்து காதலை ஏற்படுத்த, 5 ஆமதிபதி சுக்கிரனே 7 ல் நின்று புக்தி நடத்திய காலத்தில் இவருக்கு காதலியே மனைவியாக வந்தார். மனைவியால் பணியில்  சிரமங்கள் வரும் வாய்ப்பு உண்டு என்று ராசிச் சக்கரத்திலேயே பார்த்தோம். அதன்படி திருமணமானபின் இவரது பணியில் என்ன நடக்கிறது என்பதை அதற்கான வர்க்கச் சக்கரம் தசாம்சத்தில் காண்போம் வாருங்கள்.

ரிஷப லக்னத்திற்கு 1௦ ல் சனியோடு புதன். லக்னத்தில் கேது நிற்க, 1௦ ன் பாவத் பாவமான 7 ல்  ராகு, சுக்கிரன், செவ்வாய் நிற்க இவர்களை 1௦ ஆமிட சனி பார்க்கிறார். இவ்வமைப்பால் ஜாதகர் மென்பொருள் துறையில் Network Security விஷயங்களை கவனிக்கிறார். தனித்துவம் மிக்க மதிப்பான துறை. 1௦ ல் தனது மூலத் திரிகோண வீட்டில் சனி வக்கிரமடைந்ததால் பணியில் கண்டிப்பாக சிரமங்கள் வரும். ராகு தசை சுக்கிர புக்தியில் ஜாதகர் இருக்கிறார். 6 ஆமதிபதி 7 ல் அமைவது வேலை விஷயங்களுக்கு சிறப்பு. ஆனால் மனைவியால் சிரமங்கள் வரும். லக்னாதிபதி சுக்கிரன் 7 ஆமதிபதி செவ்வாயுடனும் லக்னத்துடனும் தொடர்பாவதால் வேலை விஷயத்தில் ஒருங்கினைந்து செயல்படும் அமைப்பு உள்ளது. ஆனால் இவர்கள் இருவருடனும் ராகு தொடர்பாகி வக்கிர சனியின் பார்வையை பெறுவதால் வேலையில் பாதிப்பு வருவதை தவிர்க்க இயலாது. 1௦ ல் நிற்கும் புதன் பணியில் சாதுர்யமாக செயல்படும் அமைப்பை சுட்டிக்காட்டுகிறது. லக்ன கேது ஜாதகர் நுட்பமான வேலைக்காரர் என்பதை குறிப்பிடுகிறது. லக்ன கேது  தனது பணியில் மனைவி வந்த பிறகு ஏற்படும் பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர் என்பதை தெரிவிக்கிறது. அதாவது ஜாதகர் வேலையையும் வாழ்க்கையையும் திறம்படக் கையாளும் Work Life Balance மிக்கவர்.

இந்த ஜாதகர் நல்ல சம்பாத்தியத்தில் உள்ளவர். பெங்களூரில் பணிபுரிகிறார். இவரது காதல் மனைவி மருத்துவ உயர் கல்வியை சென்னையில் தொடர்கிறார். தற்போது மனைவி கர்ப்பமாக இருப்பதால் மனைவியை கவனித்துக்கொள்ள தனது நிறுவனத்தில் கேட்டுக்கொண்டு பெங்களூரிலிருந்து சென்னை வந்து வீட்டிலிருந்தே பணிபுரிகிறார். வீட்டிலிருந்தே பணிபுரிய ஜாதகர் தனது சம்பாத்தியத்தில் சுமார் 40 சதவீதத்தை விட்டுக்கொடுத்துள்ளார். அதே சமயம் வேலையையும் இழக்காமல் மனைவியையும் பிரியாமல் சாதுர்யமாக செயல்படுகிறார். Work Life Balance என்பது இதுதான். எது முக்கியம்?. எதற்காக எது? என்ற தெளிவு மிக்கவர்கள் சாதுர்யமாகச் செயல்பட்டு தனது தொழிலையும் வாழ்க்கையையும் சிறப்பாகக் கையாள்கிறார்கள்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil