ஏறக்குறைய சொர்க்கம்!

சிலரது நடை, உடை, பாவனை, தொழில், கல்வி போன்ற ஏதோ சில விஷயங்கள் நம்மை ஈர்க்கும். அவரை போல நாம் மாற வேண்டும் என ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தும். மாறாக வேறு சிலரை காண்கையில் இவரைப்போல இருக்ககூடாது எனும் எண்ணமும்  ஏற்படும். சிலரது வாழ்வை பார்க்கையில் ஆச்சரியங்கள் ஏற்படுவது உண்டு. மொத்தத்தில் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நம்மை பாதிக்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் உலகில் தனித்துவம் மிக்கவனே. ஒரு ஜாதகனின் வாழ்க்கையை போல மற்றொருவர் வாழ்வு இல்லை. ஒரு மனிதனுக்கு இருக்கும் தனிச் சிறப்பு மற்றோருவரிடம் இல்லை. மனிதரிடம் காணப்படும் இத்தகைய தனிச் சிறப்பான பண்புகளே அவர்களை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. பொதுவாக எந்தவொரு ஜாதகத்தை நான் ஆராய்ந்தாலும் அதில் தனிச் சிறப்பான அமைப்பு ஏதேனும் உள்ளதா? என ஆராய்ந்து பார்க்கும் குணம் என்னிடம் உண்டு.

ஜோதிட யோகங்கள் பல நூறு. அவற்றை எல்லாம் என்னிடம் வரும் ஜாதகங்களுடன் ஒப்பிட்டு அவை ஜாதகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டு நான் அதிசயித்து வருகிறேன். ஜோதிட யோகங்களில் சதுர் சாகர யோகம் என்றொரு யோகம் உண்டு. மிகச் சிறந்த சுப யோகங்களில் ஒன்று இது. ஒரு ஜாதகத்தில் லக்னம் முதல் 4 கேந்திரங்களிலும் ராகு-கேதுக்களை தவிர்த்து இதர கிரகங்களிருப்பது சதுர் சாகர யோகமாகும். சதுஸ் சாகர யோகம் என்றும் இதை அழைப்பது உண்டு. இப்படி 4 கேந்திரங்களிலும் அமையும் கிரகங்கள் ஆட்சி, உச்சம், திக் பலம் போன்ற வகையில் வலுக் கூடியிருப்பின் ஜாதகருக்கு யோக பலன் மேலும் கூடும். இந்த யோகத்தை பல ஜாதகங்களில் கண்டு அதிசயித்திருக்கிறேன்.

இந்த யோகத்தில் பலனாவது இந்த யோகத்தை பெற்ற ஜாதகர்கள் கௌரவமானவர்களாகவும், மதிப்பு மிக்க நடத்தை உள்ளவர்களாகவும், நாடாளும் தகுதி உள்ளவர்களாகவும், சிறந்த பொருளாதார வளத்தை பெற்றவர்களாகவும், நல்ல குண நலன்களுடனும், நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடனும் வாழுபவர்களாகவும் இருப்பர். இவர்கள்  வாழுமிடத்தைக் கடந்து வெளிதேசங்களிலும் புகழ் பெறுபவர்களாகவும் இருப்பர் என்று மூல நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

4 கேந்திரங்களிலும் இருக்கும் கிரகங்கள் சுபர்களானாலும் பாவர்களானாலும் மேற்சொன்ன பலனுண்டு என்றாலும் சில ஜாதகங்களில் 4 கேந்திரங்களிலும் பாவர்கள் அமைந்தால் ஒரு விதமாகவும், சுபர்கள் அமைந்திருந்தால் வேறு விதமாகவும் செயல்படும் அமைப்பை கண்டு நான் ஆச்சரியப்பட்டுள்ளேன். 4 கேந்திரங்களிலும் பாவர்கள் அமைவது ஜாதகர் கடுமையாக உழைத்து வாழ்வில் சிறப்பான நிலைக்கு உயர்வதையும்,  4 கேந்திரங்களிலும் சுபர்கள் அமைந்தவர்கள் அதிக உடலுழைப்பின்றி தனது புத்தி சாதுர்யத்தால்  வாழ்வில் சிறப்பான இடத்தை அடைபவர்களாகவும் இருப்பதை காண முடிகிறது. 4 கேந்திரங்களிலும் சுபர்களும் பாவர்களும் கலந்து அமைந்திருப்பவர்கள் உழைப்பு மற்றும் சாதுர்யம் இரண்டையும் கலந்து தங்கள் வாழ்வில் உயர்பவர்களாக இருப்பதை காண முடிகிறது. அப்படி நான் கண்டு ஆச்சரியப்பட்ட சதுர் சாகர அமைப்பில் 4 கேந்திரங்களிலும் சுபர்கள்  தொடர்புகொண்ட ஒரு ஜாதகத்தை இன்று உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.

மீன லக்ன ஜாதகம். லக்னத்தில் குரு திக்பலம் பெற்றிருப்பது சகல தோஷ நிவர்த்தி எனும் அமைப்பைக்கொடுக்கும். லக்ன கேந்திரத்தைவிட சதுர்த்த கேந்திரமெனும் 4 ஆமிடம் வலுவானது. அதனினும் வலுவானது சப்தம  கேந்திரமெனும் 7 ஆமிடம். அனைத்திலும் வலுவானது தசம கேந்திரமெனும் 1௦ ஆமிடமாகும். 4 ஆமிடத்தில் வளர்பிறைச் சந்திரன் திக்பலம் பெற்று நிற்பது மிக மிகச் சிறப்பு. இதனால் இவருக்கு சுக வாழ்வு அமையும். வேலை வாய்ப்புகளும் எளிதில் அமைவதோடு அவை உடலுழைப்பற்றதாகவும் அமையும். 4 ல் சுபர் அமைந்தால் இவர் வசிக்கும் வீடு நீர் நிலைக்கருகில் மரம் செடி, கொடிகளுடன் கூடியதாக இருக்கும். லக்னமான மீனமே நீர் ராசிதான் என்பதை கவனிக்க. ஜாதகர் பெரும்பாலான தமிழகத்திற்கு நீர் ஆதாரத்தை வழங்கும் மிகப் பெரிய அணைக்கட்டு ஒன்றின் அருகில் வசிக்கிறார். 7 ஆமிடமான சப்தம கேந்திரத்தில் கிரகங்கள் ஏதுமில்லை. 5 ஆமிட சனியின் மூன்றாவது பார்வை 7 ஆமிடத்திற்கு கிடைத்தாலும், மிதுனத்தை நோக்கி திரும்பியுள்ள வக்கிரச் சனியின் 3 ஆம் பார்வை வலுவற்றது.  ஆனால் 7 ஆமிடத்தை லக்னத்திலிருந்து திக்பல குரு நேர் பார்வை பார்ப்பதால், இந்த ஜாதகத்திலும் சதுர் சாகர யோகம் முழுமையாக செயல்படும் என்பதை அறிக. 1௦ ஆமிடமான தனுசில் சுக்கிரன் அமைந்துள்ளார். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு ஆட்சி பெற்றுள்ளதால் இவர் தொழில் செய்யுமிடம் சகல வசதிகளுடன் சிறப்பாக இருக்கும். 1௦ ஆமதிபதி வலுபெற்றதாலும், குரு லக்னத்தில் அமைந்தாலும் ஜாதகர் சுயதொழில்தான் செய்வார் என்றபடி இவர் சுய தொழில் செய்கிறார்.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இந்த ஜாதகத்தில் நான்கு கேந்திரங்களிலும் சுபர்கள்தான் தொடர்பு கொள்கிறார்கள். (7 ஆமிடத்திற்கு கிடைக்கும் சனியின் 3 ஆம் பார்வையை அவர் வக்கிரமாகிவிட்டதால் கணக்கிட வேண்டியதில்லை). ஒரு ஜாதகத்தில் சனி வக்கிரமானால் ஜாதகர் நுட்பமான தொழில் அறிவை பெற்றவராக இருப்பார். ஆனால் அவரது தொழில் அறிவுக்கேற்ற அங்கீகாரம் பணிபுரியுமிடத்தில் கிடைக்காது. இங்கு ஜாதகர் சுய தொழில் செய்வதால் இவரது தொழிலுக்கான அங்கீகாரத்தை யாரிடமும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. லக்னத்தில் குருவும் 1௦ ல் சுக்கிரனும் ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமைந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. இப்படி 4 கேந்திர சுபர்கள் தொடர்பு ஜாதகரின் வாழ்வில் கல்வி, திருமணம், தொழில், வீடு, வாகனம் போன்ற அனைத்து வகையிலும் சிறப்பை கொடுத்து ஜாதகருக்கு ராஜ யோகத்தை தர வேண்டும். தந்துள்ளதா? என்றால் ஜாதகர் கல்வியில் வெளிநாட்டிற்கு சென்று முனைவர் பட்டம் PhD பெற்றவர். நல்ல வாழ்க்கைத் துணை வாய்க்கப் பெற்றவர். சொந்தமாக மருத்துவ பரிசோதனைக்கூடம் வைத்துள்ளார். இவரது பரிசோதனைக் கூடம் சகல வசதிகளுடன் குளிரூட்டப்பட்டுள்ளது. இதனால் இவரைத் தேடி வாடிக்கையாளர்கள் வந்து தங்கள் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க கூறுகிறார்கள். அலைச்சல் இல்லை, மன உழைச்சல் இல்லை. நல்ல வருமானம். கௌரவமான பணி. தொழிலில் திறமையானவர், கெளரவமானவர் எனும் பெயருண்டு. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு நல்ல வாய்ப்புகளை வழங்கினாலும் அதை தக்கவைத்துக்கொள்ள நல்ல தசா-புக்திகள் நடப்பில் இருப்பின் சிறப்பு. இல்லாவிட்டால் அதிகம் இல்லாவிட்டாலும் சிரமங்கள் ஏற்படுவது இயல்பு. 

ஜாதகர் தனது குளிரூட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில், இளையராஜா பாட்டை ரசித்துக்கொண்டே ஜன்னலை தட்டி மனைவி தரும் தேநீரை அருந்திக்கொண்டே தனது பணியை நிறைவாக செய்கிறார். ஏறக்குறைய சொர்க்கம் எனலாம்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil